Friday, August 31, 2012

நபிமார்களின் வாரிசுகளை உருவாக்கும் அரபுக் கல்லூரிகள் துவங்கியது!!!முதஅவ்விதன்!முபஸ்மிலன்!! முஹம்திலன்!! முஸல்லியன்!! வமுஸல்லிமா!!!
  
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையால்அரபுக் கல்லூரிகள்,புனிதம் வாய்ந்த  ரமழான் மாத விடுமுறைக்குப் பிறகு ஆறம்பம்ஆகிவிட்டது. மார்க்கக்  கல்வியை தேடிப் பெறுவது முஸ்லிமான ஆண்கள், பெண்களின் மீது கட்டாய கடமை என எம்பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஆனால், முஸ்லிமான நம்மவர்கள் சமீப காலமாக தங்களது குழந்தைகளுக்கு மார்க்க கல்வியை வழங்காமல்,அதாவது காலை மதரஸாக்களுக்கு கூட (மக்தப்) அனுப்பாமல் உலகக் கல்வியை மட்டும் வழங்குவதில் அதிக கவனம் எடுத்துக்கொண்டு அழிவிலே இருக்கிறார்கள். மார்கக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்காத காரணத்தினால் இன்று இஸ்லாமிய சமுதாயத்தில் வழிகெட்ட, நரகவாதிகளின் குழப்பங்கள் அனாச்சாரங்கள்,தீமைகள்,  அதிகமான பிரச்சினைகள்  காணப்படுகிறது.

சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னால் வரை  மார்கக் கல்வியுடன் உலகக் கல்வியையும்  நமது இஸ்லாமிய பெற்றோர்கள்  தனது பிள்ளைகளுக்கு வழங்கினார்கள்.இதன் காரணமாக தங்களது பிள்ளைகளை கண்ணிய மிகுஆலிம்களாகவும், கண்ணியமிகு  ஹாஃபிழ்களாகவும்,பட்டதாரிகளாகவும்,  உருவாக்கினார்கள். இஸ்லாமிய சமுதாயம் ஒற்றுமையாகவும், அமைதியாகவும்.தீமைகளைவிட்டும் விலகி வாழ்ந்தார்கள். 

ஆகவே சீனா தேசம் சென்றாலும் மார்க்க கல்வியை தேடிப் பெற்றுக் கொள்ளுங்கள். என நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.அதன் அடிப்படையில் இஸ்லாமிய பெற்றோர்களே! தங்களது சிறு பிள்ளைகளுக்கு (மக்தப்) இஸ்லாமிய ஆரம்பக் கல்வியையும்.பருவம் அடைந்த பிள்ளைகளுக்கு அரபுக் கல்லூரிகளில் உலகக்கல்வியுடன் ஐந்து ஆண்டுகள், அல்லது ஏழு ஆண்டுகள்,அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையின் படி,
மார்க்க கல்வியை வழங்கினால், இன்ஷா அல்லாஹ்  பெருமானாரின்  ஷஃபாஅத்தையும், வல்ல நாயனின் அன்பையும்,அருளையும், பெற்றுக்கொள்வீர்கள். நமது இஸ்லாமிய பெற்றோர்களை தனது குழந்தைகளுக்கு உலகக்  கல்வியுடன்  மார்க்க  கல்வியை  வழங்கிய
உயர்ந்த பெற்றோர்களாக  வல்ல அல்லாஹ் ஆக்குவானாகஆமீன். இன்ஷா அல்லாஹ் அரபுக்கல்லூரிகள்; ஷவ்வால்பிறை 15-ல்  துவங்க  இருக்கிறது  பயணடைந்து கொள்வீர்களாக! எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்குநல் உதவி  செய்வானகவும்  ஆமீன்.. வஸ்ஸலாம்.

வெளியீடு;-

மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க  வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

Saturday, August 18, 2012

இனிய நோன்பு பெருநாள் நல் வாழ்த்துக்கள்முதஅவ்விதன் ! முபஸ்மிலன் !! முஹம்திலன்!!! 
முஸல்லியன் !!!வமுஸல்லிமா!!!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 
அன்பார்ந்த பெரியோர்களே! இளைஞர்களே! அருமைத் தாய்மார்களே! சகோதர சகோதரிகளே! பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து வணக்கம் செய்தால் உயர் பதவி கிடைக்கும் என்பார்கள்.இம் மூன்றையும் கடைபிடிக்கிற நல் வாய்ப்பினை எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த ரமழான் மாதத்திலே நமக்கு வழங்கினான்.

பகலெல்லாம் நோன்பு வைத்து,இரவிலே இருபது ரக்கஅத்துகள் தொழுது, அல்லாஹ்வுடைய அளப்பெரும் அன்பையும், அருளையும் பெற்ற எங்கள் இஸ்லாமிய அன்பு நெஞ்செங்களே! உங்கள் அனைவர்களுக்கும் இனிய நோன்பு பெருநாள் நல் வாழ்த்துக்களையும்,இன்னும் ஆறு நோன்புகள் நோற்க இருக்கின்ற, உயர்ந்த சீதேவிகளுக்கு ஆறு நோன்புப் பெருநாள் நல் வாழ்த்துக்களையும்,சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினர் சார்பாக அகமுவந்து தெறிவித்துக் கொள்கிறோம் வஸ்ஸலாம்…..

வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்கள் .

Friday, August 17, 2012

ஷஅபான் பிறை 10 முதல் -- ஷஅபான் பிறை 28 வரை நடைபெற்ற சிறப்பு வாய்ந்த மஜ்லிஸ்கள்

முதஅவ்விதன்!முபஸ்மிலன்!!முஹம்திலன்!!! முஸல்லியன் !!!வமுஸல்லிமா!!!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)  
ஆலிம்களின் சிறப்பு பயிற்சி முகாம் 13-06-2012 அன்று புதன் கிழமை காலை 9 மணிமுதல்  2 மணி வரை சென்னை-இராயபுரம் போலிஸ் ஸ்டேசன் எதிரில் உள்ள,ஜெய் பேலஸ் திருமண மண்டபத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இம்முகாமில் கூட்டு துஆ,கழாத் தொழுகை,தராவீஹ் தொழுகை,தற்கொலை செய்து கொண்டவர்களுக்கு ஜனாஸா தொழுகை,தொழுகையில் விரல் அசைத்தல்,தொழுகையில் நெஞ்சின்மீது கை கட்டுதல்,பெருநாளில் திடல் தொழுகை,தொழுகைக்காக பெண்கள் பள்ளிவாசலுக்கு செல்லுதல்,பெருநாள் தொழுகையில் தக்பீர் எண்ணிக்கை,பராஅத் இரவு, மேற்கண்ட தலைப்புகளில் நமது நிலைப்பாட்டிற்கான குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்கள் என்ன? வஹ்ஹாபிகள் அவர்களின் நிலைப்பாட்டிற்கு எதை சான்றாக காட்டுகிறார்கள்?அவற்றிற்கு நமது தரப்பின் பதில் என்ன? இவைகளை உள்ளடக்கிய புத்தக வடிவிலான ஏடு ஒன்று உலமாப் பெருமக்களுக்கு வழங்கப்பட்டு,சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்கத்தின் தலைவர் மௌலானா மௌலவி அல் ஹாஃபிழ் அபுத்தலாயில் எம்.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி MA ஹஜ்ரத் அவர்களால் மிகத் தெளிவான விளக்கமும் அளிக்கப்பட்டது.இதில் ஏராளமான உலமாப் பெருமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். இம் முகாமினை மாநில சுன்னத் ஜமாஅத் பேரியக்கத்தினர்கள்  மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.

காயல் பட்டினம் முஅஸ்கருர் ரஹ்மான் மகளிர் அரபுக் கல்லூரியின்  வெள்ளி விழா மற்றும்  மாணவியர் விடுதி திறப்பு விழா ஜூலை 1 ஆம் தேதி, காயல் பட்டினத்தில் புனித மஜ்லிஸுல் புஹாரிஷ் ஷரீஃப் ஸபையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.இலங்கை மேல் மாகாண கவர்னர் மாண்பு மிகு அல்ஹாஜ் அஸ்ஸெய்யிது அலவி மௌலானா அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.இலங்கை மேல் மாகாண கவர்னரின் தனிச்செயலாளர் அல்ஹாஜ் அஸ்ஸெய்யிது அஹ்மது நகீப் மௌலானா விடுதியை திறந்து வைத்தார்கள்.சென்னை பல்கலைக்கழக,அரபித்துறை பேராசிரியர்,டாக்டர்,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் வி.எஸ்.அன்வர் பாதுஷா உலவி ஹஜ்ரத் அவர்கள் சிறப்புப்பேருரையாற்றினார்கள்.

ஈரோடு பெரிய அக்ரஹாரம் பெரிய பள்ளிவாசல் புதுப்பிக்கப்பட்ட பள்ளி வளாக திறப்பு விழா ஜூலை 6 ஆம் தேதி நடைபெற்றது.ஈரோடு தாவூதியா அரபுக்கல்லூரியின் துணை முதல்வர் மௌலானா பி.எம்.ஜியாவுத்தீன் பாக்கவி ஹஜ்ரத் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.பெங்களூர் ஸபீலுர்  ரஷாத் அரபுக்கல்லூரியின் முதல்வர் மௌலானா மௌலவி முஃப்தி ஏ.முஹம்மது அஷ்ரஃப் அலி பாக்கவி ஹஜ்ரத் அவர்கள் பள்ளி வளாகம்,ஹவுழ் மற்றும் கணினி அறையை திறந்து வைத்து,சிறபுப்பேருரையாற்றினார்கள்.

முஸ்லிம் மாணவர் பேரவை சார்பாக மாநிலம் தழுவிய மாணவ மாணவரிடையே நடைபெற்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த நாள் கட்டுரைப் போட்டி, பரிசளிப்பு விழா ஜூலை 14-ஆம் தேதியில் சென்னையில் நடைபெற்றது.தாய்ச் சபைத் தலைவர்,பேராசிரியர் கே.எம்.காதிர் முஹைதீன் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.இஸ்லாமிய தமிழ் இலக்கிய கழகத்தின் பொதுச்செயலாளர்,பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.சென்னை-அடையாறு பெரிய பள்ளிவாசலின் தலைமை இமாம் மௌலானா மௌலவி சதீதுத்தீன் பாக்கவி ஹஜ்ரத் அவர்கள் சிறப்புப்பேருரையாற்றினார்கள்.

சென்னை-வியாசர்பாடியில் காயிதே மில்லத் ஜும்ஆ மஸ்ஜித்தின்  அடிக்கல் நாட்டு விழா ஜூலை 9 ஆம் தேதி நடைபெற்றது.வீரசோழன்-ஹைராத்துல் இஸ்லாம் அரபுக் கல்லூரியின் முதல்வர் மௌலானா மௌலவி ஓ.எம். அப்துல் காதிர் பாக்கவி ஹஜ்ரத் கிப்லா அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.

தஞ்சை மாவட்டம்-முஹ்யித்தீன் ஆண்டகை ஹனஃபி புதிய பள்ளிவாசல் திறப்பு விழா ஜூலை 13 ஆம் தேதி நடைபெற்றது.கரம்பக்குடி அல் பத்ரிய்யா அரபுக்கல்லூரியின் முதல்வர் மௌலானா எஸ்.ஸதகத்துல்லாஹ் ஆலிம்,ஆலிம் கவிஞர் மௌலானா மௌலவி தேங்கை  ஷரபுத்தீன் மிஸ்பாஹி ஹஜ்ரத் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.தஞ்சாவூர்-ஆற்றங்கரை ஜும்ஆப் பள்ளி தலைமை இமாம் மௌலானா மௌலவி எம்.சைய்யது அஹ்மது மிஸ்பாஹி ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.வேலூர்  தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்,அல்ஹாஜ் எம்.அப்துர் ரஹ்மான் எம்.பி அவர்கள் புதிய இறை இல்லத்தை திறந்து வைத்தார்கள். அய்யம் பேட்டை மௌலானா மௌலவி பி.எம்.ஜியாவுத்தீன் பாக்கவி ஹஜ்ரத் அவர்கள் ஜும்ஆ குத்பா பேருரை வழங்கி,தொழுகை வைத்தார்கள்.

ராத்திபத்துல் ஜலாலிய்யா கிதாபு & கேரள முறை திக்ரு மஜ்லிஸ் குறுந்தகடு வெளியீட்டு விழா ஜூலை 14 ஆம் தேதி சென்னை-நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றது.முனீருல் மில்லத்,பேராசிரியர் காதிர் முஹைதீன் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.மௌலானா மௌலவி எம். ரஃபீக் அஹ்மது உலவி ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். மூன் டி.வி தலைமை நிகழ்ச்சி ஆலோசகர்,மௌலானா அல்ஹாஃபிழ்  எம். சுலைமான் லெப்பை மஹ்ழரி ஹஜ்ரத் அவர்கள்,புதிய பொலிவுடன் ராத்திபத்துல் ஜலாலிய்யா கிதாபு & டிவிடியின் அறிமுகவுரை வழங்கினார்கள்.

தஞ்சை-விளார் பைபாஸ்,கிரீன் சிட்டி அல் குர்ஆன் ராஹத் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா ஜூலை 20 ஆம் தேதி நடைபெற்றது.தஞ்சை-ஆற்றங்கரை ஜும்ஆப் பள்ளி தலைமை இமாம்,மௌலானா எம்.சைய்யது அஹ்மது மிஸ்பாஹி ஹஜ்ரத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.தாய்ச் சபைத்தலைவர்,பேராசிரியர்  கே.எம்.காதிர் முஹைதீன் அவர்கள் விழா நிறைவுரையாற்றினார்கள்.அய்யம் பேட்டை சுபுலுஸ் ஸலாம் அரபுக் கல்லூரியின் முதல்வர்,மௌலானா மௌலவி பி.எம்.ஜியாவுத்தீன் பாக்கவி ஹஜ்ரத் அவர்கள் சிறப்புப்பேருரையாற்றினார்கள்.

வெளியீடு--மன்பஈ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

சென்னை அண்ணா சாலை மக்கா பள்ளியின் கலகம்

சென்னை அண்ணா சாலை மக்கா பள்ளியின் இமாமாக செயல் பட்டு வரும் திரு.ஷம்சுத்தீன் காஸிமியை ''கிறுக்கன்'' என்று செல்லமாக குறிப்பிடுவது, தமிழக ஆலிம்களின் பழக்கம்

தலையில் அட்டகாசமாக ஒரு துண்டை போட்டுக்கொண்டு,பெரிய மனித தோரணையில் எதையாவது உளறிக்கொட்டுவது,அவனது வாடிக்கை.தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என்று தூண்டுவது,இடஒதுக்கீடு கேட்கக்கூடாது,சாதிவாரி கணக்கெடுப்புக்கு வந்தால் தகவல் சொல்லாதீர்கள் என்பது,(நபி யூசுப்) ஜுலைகா அம்மையாரை 'நடத்தை கெட்ட பெண்மணி'என்பது,ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டார் என அமெரிக்காகாரன் சொன்னதை நம்பி,அவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தியது என பரபரப்புக்காக எதையாவது செய்து கொண்டிருப்பது இவனது வழக்கம்.
மக்கா பள்ளிவாசலின் நிர்வாகத்தில் இருக்கும் பலருக்கும்,அந்த பொறுப்பு கிடைப்பதற்கே இவன்தான் காரணம் என்பதால் அவர்கள்''பேசாமடந்தை''களாக இருக்கிறார்கள்.
பள்ளிவாசலின் முக்கிய நிர்வாகி,சுன்னத் ஜமாஅத்தின் மீது நம்பிக்கை அற்றவன் என்பதால் அவன் ஷம்சுத்தின் செய்யும் அத்தனை குழப்பங்களுக்கும்,அலப்பறைகளுக்கும் முழு உடந்தையாக இருக்கிறான்.
ஏன் இவன் இப்படியெல்லாம் நடந்துகொள்கிறான் என்பது புரியாத புதிராக இருக்கிறது.உண்மையில் பல்வேறுபட்ட அமைப்புகளில் பங்கெடுத்து அதிலிருந்தெல்லாம் துறத்தியடிக்கப்பட்ட அவனுக்கு,தற்போது ஆதரவாக இருப்பது திரு பி,ஜே.விடமிருந்து துறத்தியடிக்கப்பட்ட சில குழுவினராவர்.அவர்களை குஷிப்படுத்தினால் தான் காரியம் நடக்கும் என்பதால்,அவன் இவ்வாறு தடாலடியாகப் பேசிக்கொண்டிருகிறான்.
அதனால்... பலரும் 'காஸிமி' என்பதற்குப் பதிலாக ''பொய்யன் விஷமி'' என்று அவனை அழைக்க தொடங்கி இருக்கிறார்கள்.விஷமத்தனத்தில் திரு பி.ஜே.யின் இடத்தைப் பிடித்துவிட வேண்டுமென்று போட்டிபோட்டுக்கொண்டு பேசிவருகிறான்.
பாரம்பரியமிக்க ஒரு சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசலில் இந்த ஷைத்தான் இமாமாக இருக்கும் காரணத்தால்,இவனின் பின்னணியைப் புரியாத சிலர், மீலாது விழாக்களுக்கும்,பிற நிகழ்ச்சிகளுக்கும் அவனை அழைத்து விடுகின்றனர்.அங்கு சென்று இவன் உரையாற்றிய பிறகு ஏற்படுகிற குழப்பங்களைச் சந்திக்கிறபோதுதான் 'அடடா' தவறு செய்து விட்டோமே' என்று ஏற்பாட்டாளர்கள் உணர்கிறார்கள்.
'சுமைக்கு உதாவாது' என்று கழுதையைக் கழற்றி விட்ட வண்ணான், சரி பேச்சுத்துணைக்காவது,கூட வா' என்று அதை மீண்டும் இழுத்துக்கொண்டானாம்.அந்தக் கதையாக தன்னுடைய பழைய மாணவரான ஷைத்தான் ஷம்சுத்தீன் காஸிமியிடமிருந்து இது காறும் விலகியிருந்த சென்னை பூந்த மல்லியில் உள்ள வஹாபிச வழிகேட்டின் கோட்டையான, காஷிபுல் ஹுதா அரபுக் கல்லூரி,சமீபத்தில் அதன் சுயமுகம் வெளிப்பட்டுவிட்ட நிலையில்,பேச்சுத்துணைக்காக ஷைத்தான் காஸிமியின் உதவியை நாடியிருக்கிறது.இதனால் கிலேசமுற்ற ஷம்சுத்தீன்,கடந்த சில வாரங்களாக கண்டபடி பேசிவருகிறான். அது மக்களிடையே பெரும் முக சுளிப்பையும்,ஆத்திரத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
வேலூர் அல்- பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்தின் நிறுவனர் அண்ணல் அஃலா ஹஜ்ரத் அவர்களைப் பற்றி,தமிழகத்துக்கு அறிமுகம் இல்லாத, தன்னை அமீரே ஷரீஅத் என்று தன்னைத்  தானே சொல்லிக் கொண்டு,ஷரீஅத்தை குழி தோண்டி புதைத்துக்கொண்டிருக்கும் திரு .யாகூப் விஷாரமி பேசுவது மோசடியானது என்பது நிரூபணமாகி வருகிறது.அவர் அஃலா ஹஜ்ரத்தின் ஃபத்வாக்களில் கையாடல்களைப் பற்றிய விபரங்களை,தெளிவான சான்றுகளோடு -மறைந்திருக்கும் மாணிக்கம் செய்த மோசடிகளைப் பாரீர் என பாக்கவிகளின் கூட்டமைப்பான 'லிபாஸ்' வெளிக்கொண்டு வந்திருக்கிறது.இதில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை, தவிர்ப்பதற்காகவே காஷிபுல் ஹுதா,பொய்யன் காஸிமியைக் 'கத்தவிட்டு' வேடிக்கை பார்க்கிறது.
தங்களது தகிடுதத்தங்களை மறைப்பதற்காக,அதைப் பற்றி கேட்க வருகின்றவர்களை 'பரேலவிகள்'என்று முத்திரையிட்டு முடித்துவிடப் பார்ப்பது, கேடு கெட்ட காஷிபுல் ஹுதாவின் வழக்கம்.அதே மைதானத்தில் தற்போது பொய்யன் ஷம்சுத்தீன் காஸிமியை வழிகெட்ட காஷிபுல் ஹுதா களம் இறக்கியிருக்கிறது.
காஸிமியின் நோக்கம் பரேலவிய்யத்தை விமர்சிப்பது எனில்,அதற்கு அவனுக்கு உரிமை இருக்கிறது.ஆனால் அவன் ஜும்ஆ உரைகளில் தேவையும் தகுதியும் இல்லாமல்,ஆலிம்களைக் குறைகூறியும், தனிப்பட்ட தாக்குதல்களில் இறங்கியும்,பேசிவருவது, தமிழக ஆலிம்களிடையே பலத்த அதிருப்தியையும்,கோவத்தையும் உண்டுபண்ணி வருகிறது.
பொய்யன் ஷம்சுத்தின் காஸிமியின் வெத்து உளறல்களைக்கண்டு பொறுக்க முடியாத மக்கள்,ஜூலை மாதத்தின் இரண்டாவது வார ஜும்ஆவில் அவனை சந்தித்து கேள்வி கேட்டுள்ளனர்.அவன் பேசியதற்காண ஆதாரத்தைக்
காட்டாமல்,வக்கணையாக பேசியபோது அவனிடம் கேள்விகேட்டவர்களுக்கும், அவனுக்கும் இடையே பலத்த சப்தம் எழுந்திருக்கிறது.
இதன் பிறகு பொய்யன் காஸிமிக்கு துணைக்கு வந்தவர்கள் யார் தெறியுமா? ஒன்று பட்ட சமுதாயத்தை நாசமாக்கிய நாசவாலிகள்,திரு.எஸ்.பாக்கர் (ஐ.என்.டி.ஜே),திரு.ஹைதர் அலி (தமுமுக) அதுபோல் திரு.எஸ்.என்.சிக்கந்தர் (ஜமாஅத்தே இஸ்லாமி) இவர்களோடு சென்னை காஷிபுல் ஹுதாவும் கைகோர்த்துக்கொண்டிருக்கிறது.
கெட்டதிலும் ஒரு நல்லது நடக்கும் என்பார்களே; அது போல இந்த கலகத்தில் ஒரு நல்லது நடந்தது.திரு.எஸ்.எம்.பாக்கரும்,திரு.ஹைதர் அலியும்,ஜமாஅத்தே இஸ்லாமியினரும்தான் பொய்யன் ஷம்சுத்தீன் காஸிமியின் புரவலர்கள் என்பது அம்பலப்பட்டுள்ளது.
ஓர் ஆலிமுக்கு இப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது  என்பதை விசாரிப்பதற்கு,ஆலிம்களின் அமைப்பான ஜமாஅத்துல் உலமா வரவில்லை.ஜமாஅத்துகளின் கூட்டமைப்புகள் வரவில்லை. ஏனென்றால் இவன் ஒரு ஆலிமே கிடையாது.இவனுக்கு ஆலிம்களுக்கு உண்டான எத்தகுதியும் கிடையாது.
மாறாக,சென்னை அரசு தலைமை காஜி,சென்னை மாவட்ட ஜமாஅத்துல் உலமாவினர்,பொய்யன் ஷம்சுத்தீனுக்கு எதிராக சென்னை மாவட்ட போலிஸ் கமிஷனரிடம் மனு அளித்துள்ளனர்.பல மாவட்டங்களிலும்-மாவட்ட ஜமாஅத்துல் உலமா சார்பில் காவல்துறையிடம் இது பற்றி புகார் செய்யப்பட்டுள்ளது.
கோவை மாநகர ஜமாஅத்துல் உலமா,மாவட்ட காவல்துறை ஆணையரிடம் இது குறித்து புகார் தெரிவித்து கடிதம் அளித்த போது, ''இது வரை சுமார் ஏழு மாவட்டங்களிலிருந்து இது போன்ற கடிதங்கள் மாநில காவல்துறைக்கு'' வந்துள்ளதாக செய்தி கிடைத்தது.
பொய்யன் ஷம்சுத்தீன் காஸிமியின் இத்தனை குழப்பங்களுக்கும் மக்கா பள்ளியின் தற்போதைய கேடு  கெட்ட நிர்வாகம் உடந்தையாக இருக்கிறது .
சுன்னத் ஜமாஅத் பள்ளி ஒன்றின் நிர்வாகிகளாக இருப்பவர்கள்,அதன் எதார்த்தத்தையும்,பழக்க வழக்கங்களையும் பேண வேண்டும்.அது முடியாது எனில்,பொறுப்பிலிருந்து விலகி ஓடிட வேண்டும்.
தங்களை மேதாவிகளாக கருதிக்கொண்டு,பணச்செருக்கில் ஒரு சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசலை ஆக்ரமிக்கும் முயற்சியில் தொடர்ந்து இந்த வழிகேடர்கள் ஈடுபடுவார்கள் எனில்,அது அக்கிரமமானது;அதை எப்படியாவது தடுத்து,இந்த வழிகேடர்களை அழிப்பது தமிழக முஸ்லிம்களின் தார்மீக கடமை...

நன்றி-சமநிலைச் சமுதாய மாத இதழ்


வெளியீடு--மன்பஈ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

Monday, August 6, 2012

அருள் நிறை லைலத்துல் கத்ர் இரவில் அனைவரும் ஆற்ற வேண்டிய அமல்கள்லைலத்துல் கத்ர் இரவு வணக்கம் பற்றி
அண்ணலார் (ஸல்அவர்கள் யார் நன்னம்பிக்கையுடனும்,
தூய நிய்யத்துடனும், ''லைலத்துல் கத்ர்'' எனும் இரவில்
விழித்திருந்து இறை வணக்கத்திலே கழிக்கிறாரோ அவரின்
சென்று போன பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.

(1)ரக்கஅத் 4; அல்ஹம்து 1 முறைஅல்ஹாக்கு
முத்தகாதுரு 1 முறைகுல்ஹுவல்லாஹு 3 முறை
ஓதி தொழ வேண்டும்
இதன் பலன்மரண வேதனை இலேசாக்கப்படும்,
மண்ணரை வேதனை குறைக்கப்படும்.

(2) ரக்கஅத் 4; அல்ஹம்து 1 முறை இன்னா அன்ஜல்னா
முறை குல்ஹுவல்லாஹு 27 முறை ஓதி தொழ
வேண்டும் இதன் பலன் அன்று பிறந்த பாலகனைப்
போன்று பாவ மற்றவராகிறார்

(3) ரக்கஅத் 4; அல்ஹம்து 1 முறை இன்னா அன்ஜல்னா
முறை குல்ஹுவல்லாஹு 50 முறை ஓதி தொழ வேண்டும்.
இத் தொழுகை முடிந்தவுடன் ஸஜ்தாவில் 3-ம் கலிமா ஒரு முறை 
ஓதிய பின் துஆ கேட்டால் துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படுகிறது

(4) இரண்டு இரண்டாக  12 ரக்கஅத்துக்கள் அல்ஹம்து 1 முறை 
இன்னா அன்ஜல்னா 3 முறைகுல்ஹுவல்லாஹு 10 முறை
ஓதி தொழ வேண்டும்.

(5) ரக்கஅத் 2 அல்ஹம்து 1 முறை குல்ஹுவல்லாஹு 7 முறை
தொழுகை முடிந்த பின் அஸ்தஃபிருல்லாஹ வஅத்தூபு இலைஹி
 70 முறை ஓத வேண்டும்.

(6) ரக்கஅத் 2 அல்ஹம்து 1 முறை,இன்னா அன்ஜல்னா
முறை குல்ஹுவல்லாஹு 3 முறை ஓதிதொழ வேண்டும்.
இவ்விரவின் நன்மை கிட்டுவதுடன் நோன்புகள் 
ஒப்புக் கொள்ளப்படுகின்றன.

(7) லைலத்துல் கத்ர் இரவின் தொழுகையில் குறைந்தது
நடுநிலை 100, அதிகம் 1000 ரக்கஅத்துக்கள் தொழவேண்டும்.

(8) தஸ்பீஹ் நபில் தொழுகை ரக்கஅத் 4 இதற்கு
அபரிமிதமான நன்மைகள் உண்டு.

(9) இஷா தொழுகைக்குப்பின் இன்னா அன்ஜல்னா 
சூராவை 7 முறை ஓதினால் அல்லாஹ் அவனை
அனைத்துச் சோதனைகளை விட்டும் காப்பாற்றுகிறான்
அவனுக்காக 70,000 மலக்குகள் துஆச்செய்கிறார்கள்

உறங்காது தொழுவோம் உயர்வை பெறுவோம்,
நாயனை தொழுவோம்நன்மை பெறுவோம்.
தொகுத்து வழங்கியவர்கள்.
அல்ஹாஜ் மௌலானா மௌலவி மர்ஹும் S.A.
முஹம்மது ஸலாஹுத்தீன் ஆலிம் ஃபாஜில் மன்பஈ
அவர்கள்
வெளியீடு;- மதரஸா மதாரிஸுல் அரபிய்யாவாழூர்
முக்கிய அறிவிப்பு-
இன்ஷா அல்லாஹ் புனித லைலத்துல் கத்ர் இரவின் சிறப்பு நல்லமல்கள்,
ரமழான் பிறை 27-ல் உலகம் முழுவதும் அனைத்துப் பள்ளிவாசல்களிலும் 
சுப்ஹு வரை நடைபெறும்.அனைவரும் தவறாது கலந்து கொண்டு,
அல்லாஹ்வின் அளப்பெரும்,அன்பையும்,அருளையும்,பெற்றுக்கொள்ளுமாறு சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்கள் அன்புடன் கேட்டுக்கொள்கிறார்கள்.வஸ்ஸலாம்..