Tuesday, December 25, 2012

கலங்கரை விளக்கம் அல்லாமா கலந்தர் மஸ்தான் ஹஜ்ரத் கிப்லா!

வியாழக்கிழமை காலை (20-12-2012) அன்று  அலுவலகம் வந்த உடனே தொலைபேசி வந்தது, இடியென என் நெஞ்சிற்கு செய்தியொன்றும் தந்தது அது நம் நெஞ்சுக்குகந்த பெருமேதை, நாநிலமறிந்த மார்க்க வல்லுநர், தமிழ் இஸ்லாமிய சமூகத்தின் கலங்கரை விளக்கம் மெளலவி எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் சென்னையில் அதிகாலை 2.30 மணி அளவில் ஏகனளவில் ஏகிவிட்டார்கள் என்பது தான், தொலைபேசியில் ஒளித்த குரல் மிக வருத்தப்பட்டு சொன்னது தமிழகத்தில் எத்தனையோ மார்க்க மேதைகள் இருந்தாலும் ரஹ்மானி ஹஜ்ரத் அவர்களும், திருச்சி ரப்பானி ஹஜ்ரத் அவர்களும் பிரதான அறிஞர்களின் மகுடமாக திகழ்தார்கள் ஊருக்கு சென்றால் மனதார பல மார்க்க விளக்கங்களை கேட்டு மன அமைதியடைந்து வருவோம் அவர்களில் ரப்பானி ஹஜ்ரத்தை தொடர்ந்து நம் ரஹ்மானி ஹஜ்ரத் அவர்களும் இறையடி சேர்ந்து விட்டார்களே இனி நாம் ஊருக்கு சென்றால் இது போன்ற மாமேதை யாரை காண்போம்.. என தன் அங்கலாய்ப்பை சொல்லி புலம்பி அழுதார்! அவர் சொன்னது மிக உண்மை தான் தமிழகத்தின் பெரும்பகுதி மக்களுக்கு இஸ்லாமியமார்க்க கருத்தின் ஆழிய கருத்துக்களை அபூர்வ விளக்கங்கள் கொடுத்து இஸ்லாமிய அறிவூட்டியவர்கள்மறைந்த கலந்தர் மஸ்தான் சாஹிப் என்றால் மிகையாகாதுமிக சிறப்பான மனிதர்,கண்ணியமானவர் இவைகளை எல்லாம் அவரது நடை உடை பாவணைகளே சான்றுகள்கூறும்எங்கும் எப்போதும் அல்லாஹ்ரசூலின் பேச்சே இவரது மூச்சுகாவும்ஞானிகளின்ஞானஒளியிலேயே இவரது கணங்கள் என்றும் என இவரது வாழ்வு அற்புதபெருவாழ்வாகவே இருந்தது.




1998 ஆம் ஆண்டு வழுத்தூரில் நாங்கள் நடத்திய மீலாது விழாவிற்குசிறப்புப்பேச்சாளர்களில் பிரதானமானவராக ஹஜ்ரத் பெருந்தகை அவர்களை அழைக்கவேண்டும் என விரும்ப ஹஜ்ரத் பெருந்தகை  அவரக்ளோடு மிக நெருக்கம் கொண்டஎங்களூர் தர்ஹா பள்ளி இமாம் ஹஜ்ரத் ஜாபர் சாதிக் நூரி அவரகள் மூலம் முதலில்தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு ஹஜ்ரத் பெருந்தகை அவர்களின் சூழ்நிலைஅறிந்து கொள்வோம் என அன்றைய செல்போன் வசதிகளெல்லாம் இல்லாத அந்த நேரத்தில்இராஜகிரி பூத்திலிருந்து போன் செய்த போது தான் நான் பார்த்த அந்த நிகழ்வு என்னைமிகவும் நெகிழ்ச்சி அடைய செய்தது…. ஆம்ஹஜ்ரத் பெருந்தகை இருப்பதோ காயல் மாநகர்தர்ஹாபள்ளி இமாம் ஹஜ்ரத் ஜாபர் சாதிக் இருப்பதோ இராஜகிரி.. தொலைபேசி மணிஅடித்ததும் யாரோ எடுக்க பிறகு ஹஜ்ரத் அவர்களின் கரத்திற்கு மாறுகிறது ஹஜ்ரத்அவர்களின் குரல் கேட்டதும் உட்கார்ந்து பேசுங்கள் என சொல்லியும் கேட்காது நின்றுகொண்டே பேச ஆரம்பித்த தர்ஹா பள்ளி இமாமின் உடல் கூனி குறுகி போய் நடுக்கத்துடன்..ஜீஜீஎன மிக மரியாதையுடன் பணிவை வெளிப்படுத்திய வண்ணமாகவே இருந்தது.. பிறகுநான் கேட்டபோது தான் சொன்னார் ஹஜ்ரத் பெருந்தகை அவர்களின் சிறப்பிற்கு முன் நான்மிக எளியவன்அவர்களது பார்வை அல்ல அவர்களது வார்த்தைக்கு முன் கூட என்னால்நின்று பேச முடியாது என சொன்ன போது இவ்வளவு தூர இடைவெளியில் ஹஜ்ரத்பெருந்தகை அவர்களுக்கு எவ்வகையிலும் தெரியாத நிலையிலும் கூட இவரின் செயல் பாடுஎன்னை ஆச்சரிபப்பட வைத்தது ஹஜ்ரத் பெருந்தகையின் மீது இப்படி பலபேர்மரியாதையும்அன்பும் கொண்டிருக்கிறார்கள் என்றால் அவரின் கண்ணியத்தை இதிலிருந்துநாம் அளவிட்டுக்கொள்ளலாம்.

தமிழகத்து ஊர்களில் ஹஜ்ரத் பெருந்தகை செல்லாத ஊர்கள் இருக்குமா என்பது சந்தேகம்தான் அந்த அளவிற்கு எல்லா ஊர்களுக்கும் சென்று இறைப்பணி ஆற்றியுள்ளார்கள்சற்றுமுந்தைய காலங்கள் வரை வழுத்தூரின் எந்த ஒரு விழாவாக இருந்தாலும் அதில் முக்கியபேச்சாளாராக ஹஜ்ரத் பெருந்தகை அவர்கள் இருப்பார்கள்ஹஜ்ரத் பெருந்தகைஅவர்களின் பெயர் இருந்தாலே அவர்களின் பேச்சை கேட்பதெற்கென்றே மிகப்பெரும் கூட்டம்கூடும்அறிஞர்கள் என்றாலே உடன் அழைத்து வாரி அணைத்து புலங்காகிதப்படும் புண்ணியமண்ணான எங்கள் தஞ்சை மாவட்டம் வழுத்தூருக்கு இம்மாபெரும் அறிஞரின் வருகைஅடிக்கடி நிகழும் அந்த வகையில் ஹஜ்ரத் அவர்களிடம் எனக்கு நல்ல பரிச்சயம் உண்டு.எங்கள் ஊரில் ஹஜ்ரத் பெருந்தகை அவர்கள் பேசாத தெருக்களோதிக்குகளோ இல்லைஎனலாம் முக்கியமாக எங்களூர் தர்ஹா பள்ளிக்கு அப்பள்ளியின் இமாம் ஜாபர் சாதிக் நூரிஅவர்கள் அடிக்கடி அழைத்து வந்து உரைநிகழ்த்த வைத்து மக்களுக்குநல்லுணர்வூட்டுவார்கள் என்பதும் இந்த நேரத்தில் நினைவு கூற தக்கது
ஹஜ்ரத் பெருந்தகை ஒவ்வொரு ஆண்டும் கல்கத்தாவில் மாதக்கணக்கில் உர்தூ தொடர்பயான் நிகழ்த்துவார்கள்கேரளாவில் அதிகமதிகம் சென்று மக்களுக்கு மார்க்கசொற்பொழிவாற்றுவார்கள்இன்னும் கடல்கடந்து பல நாடுகள் சென்று தன் செந்தமிழ்ஆளுமையால் செம்பணி செய்தார்கள்மெய்ஞான சொரூபர்களிடம் மிகுந்த கண்ணியம்கொண்டு அவர்களின் வழிநடத்துதலில் தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்ட ஹஜ்ரத் பெருந்தகை அவர்கள் தங்களது எல்லா பேச்சின் தொடக்கத்திலும் அல்லாஹ்வை புகழ்ந்து,அண்ணலாருக்கு சலாம் சொல்லி ஞானியர் திலகமாம் மஹ்பூபு ஸுப்ஹானி முஹையத்தீன்அப்துல் காதிர் ஜீலானி (ரலிஅவர்களை ஷைகாகவும்வழிகாட்டியாகவும் நினைவு கூர்ந்துபின்னரே உரையை துவக்குவது இவர்களது வழக்கம்.

ஹஜ்ரத் பெருந்தகை அவர்களின் பேச்சில் தமிழ் அழகு சிந்தும்அடுக்கு தொடர்கள் முந்தும்,சிலேடைகளும்சிறப்புயர் வாக்கியங்களும் இழையோடும்பேச்சில் கண்ணியம் விஞ்சிநிற்கும்ஹுப்பே ரசூல் மிகுந்து காணப்படும்அவரது நேர்த்தியான பேச்சு பலரின்நேத்திரங்களில் நீர் கசிந்துருக வைத்திருக்கும்எதிர் தரப்பை தாக்கி பேசினாலும் அதில் ஓர்தகைமை இருக்கும் வன்மம் இருக்காதுசாத்வீகம் தான் அவர்களது பாணியே அன்றிமூர்க்கம் இவர்களது அல்லஹஜ்ரத் பெருந்தகை அவர்களின் ஒரு பேச்சை கேட்டு விட்டுஎழும் ஒவ்வொருவரும் நிச்சயம் உள்ள நிறைவுடனும்ஈமான் வழுவுடனும் மட்டுமேஎழுந்து செல்வார் என்பது திண்ணம்இன்றும் இணையத்தின் யூடியூப்-ல் நிறைய பேச்சுக்கள் மக்களெல்லாம் பயனெய்தும் வகையில் காணக்கிடைப்பது தமிழ் இஸ்லாமியர்களுக்கு ஓர் புண்ணிய சொத்தாகும். ஆகவே அன்பர்களே உங்களில் யாரேனும் இன்னும் ஹஜ்ரத் அவர்களின் பயான் நிகழ்வுகளை பதிவு செய்து இருந்தால் தயங்காமல் அதை தமிழ் கூறும் நல்லுலகிற்கு தாரைவார்த்துக் கொடுத்து பயன்யெய்துங்கள், அல்லாஹ் அருள்வான்! உங்களின் செயல் கண்டு மகிழ்வான்!!

 காயல் மஹ்லரா ஹஜ்ரத் பெருந்தகை தவமாய் மார்க்கப்பணி செய்தபதிஅதன் விளைவுதான்  இன்று மக்களால் கொண்டாடி மகிழும் ஹஜ்ரத்அப்துல் காதிர் மஹ்லரி முதல்எண்ணிரந்த உலமாக்கள் உலகத்திற்கு தீன் சேவையாற்ற புறப்பட்டிருக்கிறார்கள் என்றால்மிகையாகதுஇவர்களது தலைமையில் வருடா வருடம் காயல் மஹ்லராவில் நடக்கும்திக்ரும்புகாரி மஜ்லிஸ் விழாவும் மிகப்பிரசித்தி பெற்றவை.

21ம் தேதி வெள்ளிக்கிழமை கடையநல்லூரில் நடைபெற்ற ஹஜ்ரத் பெருந்தகையின் நல்லடகத்தில் பல்லாயிரம் பேர் கலந்து கண்ணீர் மல்க தங்களின் உஸ்தாதும்மார்க்கபோதகருமான அல்ஹாஜ் எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானி ஹஜ்ரத் அவர்களின்ஜனாஸாவில் கலந்து கொண்டு தங்களுக்கு நேர்ந்த ஈடுசெய்ய இயலாத இழப்பினை குறித்துஒருவரோடு ஒருவர் தங்களுக்கு ஆறாகுறையாக ஆகிவிட்ட நிகழ்வினை குறித்து ஆர்த்துஆர்த்து  நினைவு கூர்ந்து வருந்தி வாடினர்இந்தியாவின் பலமுனைகளிலிருந்தும்கடையநல்லூருக்கு வருகை தந்த பெரும் பெரும் மார்க்க மேதைகள்அரசியல் தலைவர்கள்,மற்றும் பொது மக்களுள் தஞ்சை மாவட்டம் எங்கள் வழுத்தூரிலிருந்து இரண்டு வேன்கள்நிறைய சென்ற  ஹஜ்ரத் அவர்களின் நேசர்களும் அடக்கம்.

முக்கியமாக நமது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவர் பேராசிரியர்முனீருல் மில்லத் கே.எம்.காதர் முஹைதீன் சாஹிப் சென்று கலந்து தன் நெஞ்சத்தின்இரங்களை பதிவு செய்து வந்திருப்பது குறிப்பிட தக்கது.  ஏனென்றால் ஹஜ்ரத் அவர்களின்மறைவை குறித்து மணிச்சுடரில் முனீருல் மில்லத் அவர்கள் எழுதிய மிக நீண்ட  இரங்கல்கட்டூரையை நான் படிக்க நேர்ந்தது அதில் பேராசிரியர் அவர்களுக்கு ஹஜ்ரத் அவர்களின்தாக்கம் எந்த அளவுக்கு இருந்திருக்கிறது அவர்களது பிரிவால் எந்த அளவுக்கு அவர்துயருறுகிறார் என்பதை விளங்கிக் கொண்டேன் மேலும் அக்கட்டூரையில் ஹஜ்ரத்தொடர்பான எல்லோரும் அறிந்திடாத ஆனால் அறிய வேண்டிய பல வரலாற்றுதகவல்களையும் ஹஜ்ரத் அவர்களின் மேன்மையையும் பேராசிரியர் சுட்டிக்காடியது மிகஅற்புதமாக இருந்ததுகட்டூரையில் முத்தாய்ப்பாக அரபிப்பழமொழியாம் "மவ்த்துல் ஆலிம்மவ்த்துல் ஆலம்அதாவது ஒரு அறிஞரின் மரணம் என்பது இந்த உலகமேமரணமெய்தியற்கு சமம் என்பதை சுட்டிக்காட்டி இருந்ததை ஹஜ்ரத் அவர்களுக்குபேராசிரியர் செய்த மிகப்பெரிய அரிய சமர்பணமாக கருதினேன்அதற்கு முற்றும் பெரும்தகுதியான பெருந்தகை ஹஜ்ரத் அவர்கள் என்பது பேருண்மை.

வல்ல அல்லாஹ் அவனது ப்ரியமான ஹபீப் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்மற்றும் ஞானிகளின் திலகம் ஹஜ்ரத் முஹையத்தீன் ஆண்டகை அவர்களின் பொருட்டாலும்''அல் உலமாவு வரதத்துல் அன்பியா – (சத்திய) அறிஞர்கள் நபிமார்களின் வாரிசுகளாவர்கள்" என்ற நபிமொழிக்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்த அன்னாரின்ஆன்மாவை மட்டற்ற பேரமைதியிலும்மகிழ்விழும் நீந்த வைப்பானாகஹய்யுல்கய்யுமாகிய வல்லவன் முடிவற்ற பேரின்பத்தை அவர்களுக்கு வழங்குவானாகதாரணியில்அவரது ஓங்கு புகழை என்றும் நிலைக்கச்செய்வானாகஇன்னும் சங்கை படுத்துவானாக! அவரை பிரிந்து வாடும் எல்லா நெஞ்சங்களுக்கும் சப்ரன் ஜமீலாவை கொடுத்தருள்வானாக!.ஆமீன். வஸ்ஸலாம்.

அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தின் தகுதிமிக்க தலைமையை இழந்து வாடும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் அல்லாஹ் அழகிய பொருமையையும்,ஹஜ்ரத் கிப்லா போன்ற   உயர்ந்த மாமேதைகளை இந்த சமுதாயத்துக்கு அதிகமாக  வாரி வழங்க எல்லாம் வல்ல அல்லாஹ்விடத்தில், சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினர்,மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினரும், மனமுருகி துஆச்செய்கிறார்கள்.வஸ்ஸலாம்..

நன்றி ;-- அறிவுத்தடாகம்.

வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்.

Sunday, December 23, 2012

மீலாது விழாக்கள் நடைபெற வேண்டும்!!




பிஸ்மிஹி தஆலா

''சன்மார்க்க உணர்வு மேலோங்கிடவும்''
''சமுதாய ஒற்றுமை வளர்ந்திடவும்''

மீலாது விழாக்கள் நடைபெற வேண்டும்!!

மௌலானா டி,ஜெ,எம். ஸலாஹுத்தீன் ரியாஜி ஹஜ்ரத் கிப்லா அவர்கள்.

அகிலத்தின் அருட்கொடையாம் நமது உயிரினும் மேலான கண்மணி முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பிறந்த மாதம் ரபீயுலவ்வல் வந்து விட்டது
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீதுள்ள நமது அன்பையும், பாசத்தையும், தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டிருப்பது நம்மீது கட்டாய கடைமையாகும்.

எனவே நாடெங்கிலும் எல்லா ஊர்களிலும் மீலாது விழாக்கள் நடத்திட நாம் முன்வர வேண்டும்.புனிதமான இந்த விழாவை பெருமானார் பிறந்தநாள் விழா,உத்தம நபியின் உதய தின விழா,மீலாது விழா என்ற பெயரில் தான் நடத்த வேண்டும்கண்டிக்கப்பட வேண்டிய மற்றய பிறந்த நாள் விழாக்களுடன் நபி (ஸல்) பிறந்த நாள் விழாவாகிய மீலாது விழாவை ஒப்பிட்டு பார்ப்பதோ,விமர்ச்சனம் செய்வதோ அறிவுடைமையாகாது.

மீலாது விழாக்களில்  அனாச்சாரம்,  ஆடம்பரம்,கேளிக்கூத்துகள்  எதுவும் இருக்காது.மனித சமுதாயத்தின் உயர்வுக்கும்,அன்புபண்புபாசம்நேசம் மனிதாபிமானம் வளர்வதற்கும், தேவையான மிக அவசியமான வழிகாட்டல் மட்டும் மீலாது விழாக்களில் இருந்து கொண்டிருக்கும்

பெண்கள் சன்மார்க்க விழிப்புணர்வு பெற்று இறை அச்சத்துடன் வாழவும்மனித நேயம் வளரவும் காரணமாக இருந்த மீலாது விழாக்கள் சமீபகாலமாக குறைந்து விட்டதால் நமது மக்களும்,சமுதாயமும் பல சோதனைகளுக்கும்,வேதனைகளுக்கும் ஆளாக வேண்டிய அவல நிலை ஏற்ப்பட்டுள்ளது

நபி (ஸல்அவர்கள் பிறந்தநாள் பெருவிழாக்கள் மூலமாக நாட்டிற்கும்,மனித சமுதாயத்திற்கும் நல்ல பல செய்திகள் கிடைத்துக் கொண்டிருந்ததுடன், நமது  சமுதாய இளைஞர்களிடம் தீனுல் இஸ்லாத்தின் உணர்வுகள் மேலோங்கி எல்லா வகையிலும் எழுச்சியுடன் செயல்பட மீலாது விழாக்கள் காரணமாக இருந்தன

எனவே மனிதநேயம்மனிதாபிமானம் வளர்ந்திடவும்அமைதியும்,கண்ணியமும் நிறைந்த வாழ்வு அமைந்திடவும்ஒற்றுமை ஓங்கவும்,சமுதாய சாபக்கேடுகள் சாகவும்அல்லாஹ்வின் அருளும்அண்ணல் நபி (ஸல்அவர்களின் ஆசியும்,அன்பும்கிடைக்கவும்நமது வாழ்வு பரக்கத்தான வாழ்வாக அமைந்திடவும்எல்லா ஊர்களிலும்மஹல்லாக்களிலும் மீலாது விழாக்கள் நடத்தப்பட வேண்டும்

சங்கைக்குரிய ஆலிம்களும்,மஸ்ஜிதுகளின் இமாம்களும்பள்ளிவாசல்களின் நிர்வாகிகளும்சமுதாய ஆர்வமும்,துடிப்பும்நிறைந்த இளைஞர்களும்எல்லா பகுதியிலும் மீலாது விழாக்கள் நடத்துவதற்கு ஆவண செய்ய வேண்டும் என்று,மிகவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்அருளாளன் அல்லாஹ் எல்லா நலன்களையும்,பரக்கத்தான வாழ்வையும்,நபி (ஸல்அவர்களின் பொருட்டால் தந்தருல் புரிவானாகஆமீன்வஸஸலாம்.

வெளியீடு;- T-J-M- பாசறை திருநெல்வேலி-4

தொகுத்து வழங்கியவர்கள்-

மன்பயீ ஆலிம்.காம்
சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணையதளம்.
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

Friday, December 21, 2012

தூத்துக்குடிமாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவரும்,காயல்பட்டினம் மஹ்ழரத்துல் காதிரிய்யா அரபுக் கல்லூரியின் முதல்வருமான, மௌலானா மௌலவி அல்லாமா எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானி ஹஜ்ரத் கிப்லா அவர்கள் மறைவு




மௌலானா எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானி ஹஜ்ரத் அவர்கள், சமீபகாலமாக உடல்நலம் குன்றியிருந்து இன்று (20-12-2012) அதிகாலை 2-30 மணியளவில் சென்னை தனியார் மருத்துவ மனையில் மரண முற்றார் என்னும் செய்தி நெஞ்சைப் பிழிந்தது.

அவரின் ஜனாஸா நல்லடக்கம் கடையநல்லூரில் 21-12-2012 காலை 9 மணிக்கு நடைபெற விருக் கிறது என்னும் தகவலும் வந்திருக்கிறது. ஹஜ்ரத் அவர்களின் மகன்களும் மருமகன்களும் உடனிருந்து பலவிதமான நல்ல சிகிச்சைகளையும் செய்து வந்தனர். அல்லாஹ்வின் நாட்டம் ஆலிம் அவர்களின் மறைவு இன்றைக்கு ஏற்படவேண்டுமென விதிக்கப்பட்டுள்ளது என்பதை முஸ்லிம்கள் உணருகிறோம். 

மௌலானா கலந்தர் மஸ்தான் ரஹ்மானி அவர்கள் உலமாகளில் ஒளிவீசும் நட்சத்திரமாகத் திகழ்ந்தவர்; குர்ஆன் ஹதீஸ் ஷரீஅத் சட்ட விளக்கங்களில் ஒளிச்சுடராக விளங்கியவர்; தஸவ்வுஃ என்னும் ஆன்மீக ஞானக்கலையில் ஒரு கலங்கரை விளக்கமாக வாழ்ந்தவர். அவரின் பெயரில் அவரின் தந்தையின் பெயரின் முதல் எழுத்து மூலம்-சையது சுலைமான் கலீபா சாஹிப் என்பதன் மூலம் அவரின் தந்தையவர்களும் ஆன்மீக வழிவாறில் ஆழ்ந்திருந்தவர் என்பதை அறியலாம். அதோடு, 'மஸ்தான்' என்பதும் 'கலந்தர்' என்பதும் சூபிஸக் கொள்கையில் ஊறிப்போனவர்களுடன் தொடர்புடையவை என்பதையும் தெரியலாம். தனது பெயரில் உள்ள சொற்களுக்கு மிகவும் பொருத்தமான வாழ்வு முறையை மேற்கொண்டு வாழ்ந்து வந்த ஹஜ்ரத் அவர்கள் நம்மை விட்டும் பிரிந்திருக்கிறார்கள்.

காயல்பட்டணம் மஹ்ழரதுல் காதிரியா அரபிக் கல்லூரி முதல்வராக முப்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து பணியாற்றி, பன்னூற்றுக் கணக்கான 'மஹ்ழரி'களை உருவாக்கி, நாட்டிலும் அயல்நாடுகளிலும் இஸ்லாமிய சன்மார்க்கப் பிரச்சார பீரங்கிகளாக உலாவரச் செய்துள்ளார்.அண்மையில் அவரது மகனார் இல்லம் (சென்னை வேளச்சேரியில் உள்ளது) சென்று அவரின் உடல் நலம் விசாரித்து வந்தோம். எம்.எஸ்.எஃப். பட்டாணி, காயல் இப்ராஹிம் மக்கீ, எஸ்.டி.யு. நிஜாமுத்தீன் மற்றும் பலரும் சென்றிருந்து ஹஜ்ரத் அவரின் நலன் பற்றி உசாவினோம். உடல் மெலிந்திருந்தது; ஆனால், அவரின் உள்ளம் என்றும் சுறுசுறுப்பாகவே இருந்தது என்பதற்கு அப்பொழுதும் மார்க்க விளக்கம் பற்றியே பேசினார்கள். அப்பொழுது ஒரு பெருங்கூட்டம் கேரளாவில் இருந்து வந்திருந்தனர். அவர்கள் யாவரும் பேட்டா கட்டிய உலமாகளாக மட்டுமல்லாமல், காதிரியா தரீகாவிலும் சங்கைமிக்கவர்களாகவும் இருந்தார்கள். அவர்களுகு ரஹ்மானி ஹஜ்ரத் 'ஷேய்கு' என்னும் அந்தஸ்து உடையவராகப் போற்றப்பட்டுள்ளதை அன்றைக்கு நாங்கள் கண்டோம்.

கலந்தர் மஸ்தான் ரஹ்மானி ஹஜ்ரத் அவர்களைத் தமிழ்கூறும் முஸ்லிம் உலகம் எஸ்எஸ்கே ஹஜ்ரத் என்று பெருமையாக அழைத்தது. அவர் உரையாற்றாத ஊர் தமிழகத்தில் எதுவும் இருக்காது எனலாம். மீலாது விழாக்களிலும், திருக்குர் ஆன் மாநாடுகளிலும், ஷரீஅத் சட்ட கூட்டங்களிலும், மதரஸா பட்டமளிப்பு விழாக்களிலும் ஹஜ்ரத் அவர்கள் மிகச் சிறந்த ஆய்வுரைகளை நிகழ்த்தியிருக்கிறார்கள். அவரின் கொஞ்சும் தமிழில் பொதிகையில் பூத்த சங்கத் தமிழ் மலரின் மணம் வீசும்; மஸ்தான் பாடல், சீறாப்புராணச் செய்யுள் என்று விரவிவரும். குர்ஆன் வசனங்களுக்கு புதியதும் பொருந்தியதும் நவீன விஞ்ஞான உலகம் வியக்குமாறும் விரிவுரை செய்வார்கள்; ஹதீஸ் கலையில், இமாம் கஸ்ஸாலி போன்ற மேதைகளின் வழியில் நின்று விளக்கவுரை தருவதில் வல்லவராகத் திகழ்ந்தார்கள். கடையநல்லூர் சிராஜ் இதழ் ஆசிரியர் அப்துல்ஹை அவர்களின் அத்தியந்த தோழராக இருந்த மௌலானா அவர்கள், அமைதியின் உருவாகவும், அடக்கத்தின் வடிவமாகவும், ஆழமான ஞானக் கடலாகவும் வாழ்ந்து வந்துள்ளார்கள். அவர்களோடு உரையாடுவது மூலம், இஸ்லாமிய வரலாற்றையே நினைவுக்குக் கொண்டுவரும் நிலைமை ஏற்படும். அந்த நல்லவர், சன்மார்க்கத்தில் வல்லவர், எவர் நெஞ்சையும் ஈர்க்கும் சொல் வல்லவர் இப்பொழுது மறைந்துவிட்டார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் காயிதெ மில்லத், சிராஜுல் மில்லத் மற்றும் எல்லாத் தலைவர்களுடனும் நெருக்கமாக இருந்து இயக்கத்திற்கு தூண்டுகோலாகவும் பெருந்துணையாகவும் இருந்தார்கள். சோதனை மிகுந்த காலங்களில் சோர்வைத் துடைப்பதற்கு துணைநின்ற உலமாகளில் ஹஜ்ரத் அவர்கள் மிக முக்கியமானவர் ஆவார்.

தூத்துக்குடி மாவட்டம் உருவாக்கப்பட்டபோது, அதன் முதல் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பொறுப்பை ஏற்றார்; பின்னர், மாநில துணைத் தலைவராகப் போற்றப்பட்டார். முஸ்லிம் லீக் மாநாடுகளில் மார்க்க ஒளியில் அரசியல் விளக்கம் தந்த அந்த வரலாற்று நிகழ்வுகள் என்றும் நினைவில் நிற்கக்கூடியவை. முஸ்லிம் லீக் வரலாற்றில் கடையநல்லூர், அன்சாரிகளைப் போன்றவர்கள் என்று காயிதெ மில்லத் சொன்னார்கள். அதன் ஒட்டுமொத்த உருவமாக இருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு உழைத்துச் சிறந்தவர். கிளியனூர் மதரஸத்துல் ரஹ்மானியா - நமது டாக்டர் ஹாஜா கே.மஜீது-இன்றைய வக்ஃபு வாரிய உறுப்பினர்-அவர்களின் தந்தை நிறுவியதாகும். இப்பொழுது டாக்டர்தான் அந்த கல்லூரியின் நிர்வாகியாக உள்ளார். இந்த மதரஸாவில் ஓதியவர்-பட்டம் பெற்றவர் ஹஜ்ரத்-அதனால்தான் அவருக்கு 'ரஹ்மானி' சேர்ந்திருக்கிறது. இன்றைய மாநில துணைத் தலைவர் மௌலானா தளபதி ஏ.ஷபீகுர் ரஹ்மான் ஹஜ்ரத் ஒன்றைச் சொன்னார்கள்: ரஹ்மானியா மதரஸாவில் கலந்தர் மஸ்தான் இறுதி வகுப்பில் இருந்தார்; அப்பொழுது முதல் வகுப்பில் நான் இருந்தேன். வாரந்தோறும் நடக்கும் பேச்சுப் பயிற்சி வகுப்பில் கலந்தர் மஸ்தான் அவர்களின் பேச்சுத்தான் எல்லோராலும் பாராட்டப்பெறும்; உஸ்தாதுகளே மிக உயர்வாக அவரின் சொற்பொழிவை மதிப்பார்கள் என்று சொன்னார். அத்தகைய மெத்தகு மேதை இன்று நம்மிடம் இல்லை.

தமிழக உலமாகளுக்கு கடல் கடந்த நாடுகளில் பேரும் புகழும் நிறைய உள்ளது. அதில் முதல் தரத்தைப் பெற்றிருந்தவர் மௌலானா கலந்தர் மஸ்தான் அவர்கள்.

35 முறை ஹஜ் செய்துள்ளவர்; ஹஜ்ஜின் போதும் இஸ்லாமிய விரிவுரை ஆற்றியவர். அகில இந்திய உலமாகள் சபையின் துணைத் தலைவராக இருந்தார்; கடையநல்லூர் தங்ஙள் கட்சி என்னும் தரீகாவுக்கு தலைமைப் பொறுப்பேற்றிருந்தார். இறுதிவரை மஹ்ழரத்துல் காதிரியாவின் முதல்வர் பொறுப்பிலே இருந்து, இன்று எல்லாரையும் பிரிந்து அல்லாஹ்வின் சந்நிதானம் நோக்கிப் பயணம் மேற்கொண்டுவிட்டார்.

""""மௌத்துல் ஆலிம் மௌத்துல் ஆலம்-அறிஞரின் மரணம், அகிலத்தின் மரணம்'' என்பது அரபி பழமொழி. ஆம். மனிதர்களின் மனங்களுக்கு ஞான ஒளியை வழங்கி வருபவர்கள் ஆலிம்கள்-அறிஞர்கள். அவர்களின் மறைவு அதிகரிக்கு மானால், ஞானமற்றவரின் கூட்டம் ஞாலத்தில் அதிகரித்துவிடும்-ஞானமற்றவர் பெருகும்போது ஞாய மற்றவர்கள் பெருகுவர்; அதனால் ஞாலம்-உலகம் ஞான சூன்யத்துக்கு ஆட்பட்டுவிடும் எனில், அழிவும் மரணமும் ஏற்படும் என்பது இயற்கை விதியேயாகும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மௌலானா கலந்தர் மஸ்தான் ரஹ்மானி ஹஜ்ரத் அவர்களுக்கு உயர்ந்த உன்னத இடத்தை அளித்து சுவர்க்கப் பூங்காவில் சுகித்திருக்கச் செய்வானாக.

மௌலானா போன்ற மௌலானாகள் தமிழ் மண்ணில் பெருகிட அவன் அருள் புரிவானாக.

ஹஜ்ரத் அவர்களின் மறைவால் வாடியுள்ள அவர்தம் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினருக்கும், அவரின் அன்பு மாணவச் செல்வங்களுக்கும் நமது அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவிப்போமாக. ஆமீன்.வஸ்ஸலாம்.

நன்றி ;;- மணிச்சுடர்

வெளியீடு ;--மன்பயீ ஆலிம்.காம்

சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.