தமிழகத்து ஊர்களில் ஹஜ்ரத் பெருந்தகை செல்லாத ஊர்கள் இருக்குமா என்பது சந்தேகம்தான் அந்த அளவிற்கு எல்லா ஊர்களுக்கும் சென்று இறைப்பணி ஆற்றியுள்ளார்கள். சற்றுமுந்தைய காலங்கள் வரை வழுத்தூரின் எந்த ஒரு விழாவாக இருந்தாலும் அதில் முக்கியபேச்சாளாராக ஹஜ்ரத் பெருந்தகை அவர்கள் இருப்பார்கள். ஹஜ்ரத் பெருந்தகைஅவர்களின் பெயர் இருந்தாலே அவர்களின் பேச்சை கேட்பதெற்கென்றே மிகப்பெரும் கூட்டம்கூடும். அறிஞர்கள் என்றாலே உடன் அழைத்து வாரி அணைத்து புலங்காகிதப்படும் புண்ணியமண்ணான எங்கள் தஞ்சை மாவட்டம் வழுத்தூருக்கு இம்மாபெரும் அறிஞரின் வருகைஅடிக்கடி நிகழும் அந்த வகையில் ஹஜ்ரத் அவர்களிடம் எனக்கு நல்ல பரிச்சயம் உண்டு.எங்கள் ஊரில் ஹஜ்ரத் பெருந்தகை அவர்கள் பேசாத தெருக்களோ, திக்குகளோ இல்லைஎனலாம் முக்கியமாக எங்களூர் தர்ஹா பள்ளிக்கு அப்பள்ளியின் இமாம் ஜாபர் சாதிக் நூரிஅவர்கள் அடிக்கடி அழைத்து வந்து உரைநிகழ்த்த வைத்து மக்களுக்குநல்லுணர்வூட்டுவார்கள் என்பதும் இந்த நேரத்தில் நினைவு கூற தக்கது.

ஹஜ்ரத் பெருந்தகை ஒவ்வொரு ஆண்டும் கல்கத்தாவில் மாதக்கணக்கில் உர்தூ தொடர்பயான் நிகழ்த்துவார்கள், கேரளாவில் அதிகமதிகம் சென்று மக்களுக்கு மார்க்கசொற்பொழிவாற்றுவார்கள், இன்னும் கடல்கடந்து பல நாடுகள் சென்று தன் செந்தமிழ்ஆளுமையால் செம்பணி செய்தார்கள். மெய்ஞான சொரூபர்களிடம் மிகுந்த கண்ணியம்கொண்டு அவர்களின் வழிநடத்துதலில் தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்ட ஹஜ்ரத் பெருந்தகை அவர்கள் தங்களது எல்லா பேச்சின் தொடக்கத்திலும் அல்லாஹ்வை புகழ்ந்து,அண்ணலாருக்கு சலாம் சொல்லி ஞானியர் திலகமாம் மஹ்பூபு ஸுப்ஹானி முஹையத்தீன்அப்துல் காதிர் ஜீலானி (ரலி) அவர்களை ஷைகாகவும், வழிகாட்டியாகவும் நினைவு கூர்ந்துபின்னரே உரையை துவக்குவது இவர்களது வழக்கம்.
ஹஜ்ரத் பெருந்தகை அவர்களின் பேச்சில் தமிழ் அழகு சிந்தும், அடுக்கு தொடர்கள் முந்தும்,சிலேடைகளும், சிறப்புயர் வாக்கியங்களும் இழையோடும். பேச்சில் கண்ணியம் விஞ்சிநிற்கும், ஹுப்பே ரசூல் மிகுந்து காணப்படும். அவரது நேர்த்தியான பேச்சு பலரின்நேத்திரங்களில் நீர் கசிந்துருக வைத்திருக்கும். எதிர் தரப்பை தாக்கி பேசினாலும் அதில் ஓர்தகைமை இருக்கும் வன்மம் இருக்காது. சாத்வீகம் தான் அவர்களது பாணியே அன்றிமூர்க்கம் இவர்களது அல்ல! ஹஜ்ரத் பெருந்தகை அவர்களின் ஒரு பேச்சை கேட்டு விட்டுஎழும் ஒவ்வொருவரும் நிச்சயம் உள்ள நிறைவுடனும், ஈமான் வழுவுடனும் மட்டுமேஎழுந்து செல்வார் என்பது திண்ணம். இன்றும் இணையத்தின் யூடியூப்-ல் நிறைய பேச்சுக்கள் மக்களெல்லாம் பயனெய்தும் வகையில் காணக்கிடைப்பது தமிழ் இஸ்லாமியர்களுக்கு ஓர் புண்ணிய சொத்தாகும். ஆகவே அன்பர்களே உங்களில் யாரேனும் இன்னும் ஹஜ்ரத் அவர்களின் பயான் நிகழ்வுகளை பதிவு செய்து இருந்தால் தயங்காமல் அதை தமிழ் கூறும் நல்லுலகிற்கு தாரைவார்த்துக் கொடுத்து பயன்யெய்துங்கள், அல்லாஹ் அருள்வான்! உங்களின் செயல் கண்டு மகிழ்வான்!!
காயல் மஹ்லரா ஹஜ்ரத் பெருந்தகை தவமாய் மார்க்கப்பணி செய்தபதி, அதன் விளைவுதான் இன்று மக்களால் கொண்டாடி மகிழும் ஹஜ்ரத். அப்துல் காதிர் மஹ்லரி முதல்எண்ணிரந்த உலமாக்கள் உலகத்திற்கு தீன் சேவையாற்ற புறப்பட்டிருக்கிறார்கள் என்றால்மிகையாகது. இவர்களது தலைமையில் வருடா வருடம் காயல் மஹ்லராவில் நடக்கும்திக்ரும், புகாரி மஜ்லிஸ் விழாவும் மிகப்பிரசித்தி பெற்றவை.
21ம் தேதி வெள்ளிக்கிழமை கடையநல்லூரில் நடைபெற்ற ஹஜ்ரத் பெருந்தகையின் நல்லடகத்தில் பல்லாயிரம் பேர் கலந்து கண்ணீர் மல்க தங்களின் உஸ்தாதும், மார்க்கபோதகருமான அல்ஹாஜ் எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானி ஹஜ்ரத் அவர்களின்ஜனாஸாவில் கலந்து கொண்டு தங்களுக்கு நேர்ந்த ஈடுசெய்ய இயலாத இழப்பினை குறித்துஒருவரோடு ஒருவர் தங்களுக்கு ஆறாகுறையாக ஆகிவிட்ட நிகழ்வினை குறித்து ஆர்த்துஆர்த்து நினைவு கூர்ந்து வருந்தி வாடினர், இந்தியாவின் பலமுனைகளிலிருந்தும்கடையநல்லூருக்கு வருகை தந்த பெரும் பெரும் மார்க்க மேதைகள், அரசியல் தலைவர்கள்,மற்றும் பொது மக்களுள் தஞ்சை மாவட்டம் எங்கள் வழுத்தூரிலிருந்து இரண்டு வேன்கள்நிறைய சென்ற ஹஜ்ரத் அவர்களின் நேசர்களும் அடக்கம்.

முக்கியமாக நமது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவர் பேராசிரியர்முனீருல் மில்லத் கே.
எம்.
காதர் முஹைதீன் சாஹிப் சென்று கலந்து தன் நெஞ்சத்தின்இரங்களை பதிவு செய்து வந்திருப்பது குறிப்பிட தக்கது.
ஏனென்றால் ஹஜ்ரத் அவர்களின்மறைவை குறித்து மணிச்சுடரில் முனீருல் மில்லத் அவர்கள் எழுதிய மிக நீண்ட இரங்கல்கட்டூரையை நான் படிக்க நேர்ந்தது அதில் பேராசிரியர் அவர்களுக்கு ஹஜ்ரத் அவர்களின்தாக்கம் எந்த அளவுக்கு இருந்திருக்கிறது அவர்களது பிரிவால் எந்த அளவுக்கு அவர்துயருறுகிறார் என்பதை விளங்கிக் கொண்டேன் மேலும் அக்கட்டூரையில் ஹஜ்ரத்தொடர்பான எல்லோரும் அறிந்திடாத ஆனால் அறிய வேண்டிய பல வரலாற்றுதகவல்களையும் ஹஜ்ரத் அவர்களின் மேன்மையையும் பேராசிரியர் சுட்டிக்காடியது மிகஅற்புதமாக இருந்தது,
கட்டூரையில் முத்தாய்ப்பாக அரபிப்பழமொழியாம் "
மவ்த்துல் ஆலிம்மவ்த்துல் ஆலம்"
அதாவது ஒரு அறிஞரின் மரணம் என்பது இந்த உலகமேமரணமெய்தியற்கு சமம் என்பதை சுட்டிக்காட்டி இருந்ததை ஹஜ்ரத் அவர்களுக்குபேராசிரியர் செய்த மிகப்பெரிய அரிய சமர்பணமாக கருதினேன்.
அதற்கு முற்றும் பெரும்தகுதியான பெருந்தகை ஹஜ்ரத் அவர்கள் என்பது பேருண்மை.

வல்ல அல்லாஹ் அவனது ப்ரியமான ஹபீப் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்மற்றும் ஞானிகளின் திலகம் ஹஜ்ரத் முஹையத்தீன் ஆண்டகை அவர்களின் பொருட்டாலும்''அல் உலமாவு வரதத்துல் அன்பியா – (சத்திய) அறிஞர்கள் நபிமார்களின் வாரிசுகளாவர்கள்" என்ற நபிமொழிக்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்த அன்னாரின்ஆன்மாவை மட்டற்ற பேரமைதியிலும், மகிழ்விழும் நீந்த வைப்பானாக! ஹய்யுல்கய்யுமாகிய வல்லவன் முடிவற்ற பேரின்பத்தை அவர்களுக்கு வழங்குவானாக! தாரணியில்அவரது ஓங்கு புகழை என்றும் நிலைக்கச்செய்வானாக! இன்னும் சங்கை படுத்துவானாக! அவரை பிரிந்து வாடும் எல்லா நெஞ்சங்களுக்கும் சப்ரன் ஜமீலாவை கொடுத்தருள்வானாக!.ஆமீன். வஸ்ஸலாம்.
அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தின் தகுதிமிக்க தலைமையை இழந்து வாடும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் அல்லாஹ் அழகிய பொருமையையும்,ஹஜ்ரத் கிப்லா போன்ற உயர்ந்த மாமேதைகளை இந்த சமுதாயத்துக்கு அதிகமாக வாரி வழங்க எல்லாம் வல்ல அல்லாஹ்விடத்தில், சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினர்,மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினரும், மனமுருகி துஆச்செய்கிறார்கள்.வஸ்ஸலாம்..
நன்றி ;-- அறிவுத்தடாகம்.
வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்.