Tuesday, January 1, 2013

அறிஞர்களின் மறைவும் அகிலத்தின் அழிவும்!



நாடறிந்த பேச்சாளர், ஆன்மீகம், அரசியல் சகல துறைகளிலும் முதிர்ச்சி பெற்ற ஞானி,காயல்பட்டணம் மஹ்லரா அரபுக் கல்லூரி முதல்வர் கடையநல்லூர் S.S.கலந்தர் மஸ்தான் ரஹ்மானி ஹஜ்ரத் அவர்கள் 20.12.121 இரவு 2.00 மணியளவில் சென்னை வேளச்சேரி விஜயா மருத்துவமனையில் மரணமடைந்து விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் 

சமீப காலமாகவே அறிவிற் சிறந்த ஆன்றோர்கள் மூத்த உலமாக்கள் பலரும் அடுத்தடுத்து இறையடி சேர்ந்துகொண்டே இருக்கிறார்கள். பண்பட்ட அறிஞர்கள் பலரும் மறைந்துகொண்டே இருப்பது ஆழ்ந்த துயரை உண்டாக்கி இருக்கிறது۔
அது குறித்து ஒரு கட்டுரை:


 (إنّ من أشراط الساعة أنْ يُرفع العلم ويَثبُتَ الجهلُ) متفق عليه

அறிவு ஞானம் உயர்த்தப்படுவதும் அறியாமை தரிபடுவதும் 
அழிவுநாளின் அடையாளங்களில் ஒன்று'' (புஹாரி. முஸ்லிம்)

அறிவு எவ்வாறு உயர்த்தப்படும்?
அறிஞர்கள் உயர்த்தப்படுவதின் மூலம்தான்.
إن الله لا يقبض العلم انتزاعاً إنما يقبض العلماء حتى إذا لم يبق عالم اتخذ الناس رؤساءً جهالاً، فسُئلوا فأفتوا بغير علم، فضلوا وأضلوا)) [رواه البخاري ح100، ومسلم 2673].

''நிச்சயமாக அல்லாஹ் கல்வியை(த் தன்னுடைய) அடியார்களிடமிருந்து ஒரேயடியாகப் பறித்து விட மாட்டான். ஆயினும் அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைக் கைப்பற்றுவான். கடைசியாக ஓர் அறிஞர் கூட மீதமில்லாமல் ஆக்கிவிட்டதும் மக்கள் அறிவீனர்களைத் தம் தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு அறிவின்றியே மார்க்கத் தீர்ப்பும் வழங்குவார்கள். (இதன் மூலம்) தாமும் வழி கெட்டு(ப் பிறரையும்) வழி கெடுப்பார்கள்' என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'  (புஹாரி. முஸ்லிம்)


இது குறித்து அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் கூறுவது:

قال ابن مسعود: عليكم بالعلم قبل أن يرفع، ورفعه هلاك العلماء، والذي نفسي بيده ليودن رجال قتلوا في سبيل الله أن يبعثهم الله علماء لما يرون من كرامتهم. [مفتاح دار السعادة 1/121].
يقول ابن مسعود: أتدرون كيف ينقص الإسلام؟ يكون في القبيلة عالمان، فيموت أحدهما فيذهب نصف العلم، ويموت الآخر فيذهب علمهم كله.
وعنه رضي الله عنه أنه قال: (أتدرون كيف ينقص الإسلام ؟ قالوا: كما ينقص الثوب، وكما ينقص سمن الدابة، وكما ينقص الدرهم. قال: إن ذلك لمنه. وأكبر من ذلك موت العلماء) [رواه الطبراني، وقال الهيثمي: رجاله موثوقون. مجمع الزوائد 1/202]

அறிவு ஞானம் உயர்த்தப்படுவதற்குமுன் அறிவை அவசியாமாக்கிக் கொள்ளுங்கள். அறிஞர்கள் மறைவதுதான் அறிவு உயர்த்தப்படுவதாகும்.
அல்லாஹ்வின் பாதையில் ஷஹீதான தியாகிகள் கூட மறுமையில் ஆலிம்களாக எழுப்பப்படவேண்டுமென்று மிகவும் விரும்புவார்கள் ஏனெனில் மறுமையில் ஆலிம்களுக்கு அவ்வளவு மரியாதையும் சங்கையும் செய்யப்படும் என்பதை அறிந்துகொண்டதால்.
ஆலிம்கள் மறைவதன் மூலம் இஸ்லாம் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்துவிடும்.

ஆலிம்களின் மறைவு அகிலத்தின் முடிவு:

{أَوَلَمْ يَرَوْا أَنَّا نَأْتِي الْأَرْضَ نَنْقُصُهَا مِنْ أَطْرَافِهَا} [سورة الرعد الآية (41)] قال سيّدنا عبدالله بن عباس رضي الله عنه:نقصانها خرابها، وخرابها بموت علمائها وفقهائها وأهل الخير منها.
''பூமியை அதன் ஓரங்களிலிருந்து குறைத்து வருகிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா?''
என்ற அல்லாஹ்வின் வசனத்திற்கு குர்ஆன் விரிவுரையாளர் இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் விளக்கம் கூறுகிறார்கள்:
பூமியிலுள்ள ஆலிம்களும் சட்டக்கலை நிபுணர்களும் நல்லவர்களும் குறைந்துகொண்டே வருவதுதான் இங்கு குறிப்படப்பட்டுள்ளது.
எனவே،
 ஒரு ஆலிமின் இறப்பு ஈடு செய்யமுடியாத இழப்பாகும்:
((وموت العالم مصيبة لا تجبر، وثلمة لا تسد، ونجم طمس، وموت قبيلة أيسر من موت عالم)) [روى الطبراني في الكبير
நபி ஸல் கூறினார்கள்:
''ஒரு ஆலிமின் இறப்பு ஈடு செய்யமுடியாத இழப்பு; நிரப்பமுடியாத பள்ளம்; ஒளியிழந்த விண்மீன். ஒரு கூட்டம் இறப்பது ஒரு ஆலிமின் இறப்பைவிட லேசானது.''     (தப்ரானி)

 قال رسول الله صلى الله عليه وسلم (فقيه أشد على الشيطان من ألف عابد) رواه الترمذي وابن ماجه وغيرهما. 
''ஆயிரம் வணக்கசாலிகளைவிட ஒரு மார்க்கசட்ட நிபுணர் ஷைத்தானுக்கு மிகக் கடுமையானவர்.'' (திர்மிதி, இப்னுமாஜா)

இந்த நபிமொழிக்கு விளக்கம் தந்த விரிவுரையாளர் இப்னு அப்பாஸ் (ரலி) ஒரு நிகழ்ச்சியை உதாரணமாகக் கூறுகிறார்கள்:


 إنّ الشياطين قالوا لإبليس: يا سيدنا مالنا نراك تفرح بموت العالم ما لا تفرح بموت العابد؟ والعالم لا نصيب منه والعابد نصيب منه؟ قال: انطلقوا، فانطلقوا إلى عابد فأتوه في عبادته، فقالوا: إنا نريد أن نسألك فانصرف، فقال إبليس: هل يقدر ربك أن يجعل الدنيا في جوف بيضة؟ فقال: لا أدري، فقال: أترونه كفر في ساعة، ثم جاؤوا إلى عالم في حلقته يضحك أصحابه ويحدثهم فقالوا: إنا نريد أن نسألك، فقال: سل، فقال: هل يقدر ربك أن يجعل الدنيا في جوف بيضة؟ قال: نعم، قالوا: كيف؟ قال: يقول كن فيكون. فقال: أترون ذلك لا يعدو نفسه، وهذا يفسد عليّ عالماً كثيراً، وفي رواية أخرى قال: فقال: أترون ذلك أترون؟ هذا يهدم في ساعة ما أبنيه في سنين (مفتاح دار السعادة لابن القيّم (2/69)

ஒருமுறை மற்ற ஷைத்தான்களெல்லாம் தலைவன் இப்லீசிடம் வினவினார்களாம்: ''ஒரு ஆபித் இறந்தால் மகிழ்ச்சியடையாத நீ ஒரு ஆலிம் இறந்தால் ஆனந்தத்தில் துள்ளுகிறாயே?''

''அதற்கு காரணம் இருக்கிறது. ஆபிதை (சுலபமாக வழிகெடுத்து ) நாம் நிறைய பலன் பெறமுடிகிறது. ஆனால் ஆலிமிடம் அவ்வாறு முடிவதில்லை. (வாருங்கள் இதைக் கண்கூடாகக் காட்டுகிறேன்)''
முதலில் ஒரு ஆபிதிடம் சென்றார்கள். அவரிடம் வினவினார்கள்:
''அல்லாஹ் இந்த உலகத்தை ஒரு முட்டையின் துளையில் வைக்கமுடியுமா?''
''எனக்குத் தெரியாது'' என்றார்.
''பார்த்தீர்களா? கண நேரத்தில் அவர் காஃபிராகிவிட்டதை (குஃப்ருடைய வார்த்தைகள் அவரிடமிருந்து வெளிப்பட்டதை)!

அடுத்து ஒரு ஆலிமிடம் சென்றார்கள். அவர் தன் சகாக்களிடம் நகைச்சுவையாக உரையாடிக்கொண்டிருந்தார்.
இப்லீஸ் கேட்டான்: ''உம்மிடம் ஒரு கேள்வி. அல்லாஹ் இந்த உலகத்தை ஒரு முட்டையின் துளையில் வைக்கமுடியுமா?''
''நிச்சயமாக முடியும்''
''எப்படி?'' ''
''ஆகு! என்பான் அது ஆகிவிடும்''
''பார்த்தீர்களா? இவர் (எந்த நிலையிலும்) நிலை தவறாமல் இருப்பதை!'' இப்படித்தான் அதிகமான ஆலிம்கள் என்னை நிலைகுலைய வைத்துவிடுகின்றனர். நான் ஆண்டாண்டு காலம் சிரமப்பட்டு அமைத்ததை சிறிது நேரத்தில் தகர்த்துவிடுகின்றனர்'' என்றான் இப்லீஸ்.

அதுமட்டுமல்ல.. அண்ணல் நபி ஸல் அவர்களுக்கும் இப்லீஸுக்கும் நடந்த ஒரு நீண்ட உரையாடலில் ''உன் கோபத்திற்குரிய பிரதான எதிரிகள் யார் யார்? ''என்ற நபிகளாரின் கேள்விக்கு அவன் கூறிய பதிலில் முதலாவது இடம் நாயகம் ஸல் அவர்கள். இரண்டாவது அல்லாஹ்விற்காக தன்னை அற்பணித்த இளைஞன். மூன்றாவது பேணுதலுள்ள ஒரு ஆலிம். அதற்குப் பிறகு அவனது எதிரிகள் என்று ஒரு நீண்ட பட்டியலைத் தருகிறான். அவ்வாறெனில் ஒரு இறையச்சமுள்ள ஆலிம் அல்லாஹ்விற்கு எவ்வளவு நெருக்கமாக உள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.
நன்றி ;--மௌலானா சதக் மஸ்லஹி

வெளியீடு;--  மன்பயீ ஆலிம்.காம்

சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

Sunday, December 30, 2012

இப்போதைக்கு உலகம் அழியாது!



மாயன் இன காலண்டர்.இதுதான் இப்போது உலகெங்கிலும் பேச்சு.மத்திய அமெரிக்காவில் கி.மு.2600 க்கும் கி.பி.900 த்திற்கும் இடையில் வாழ்ந்த ஒரு முன்னேறிய சமூகம் மாயன் இனம்.தொண்மையான நாகரிகத்தைக் கொண்ட இந்த இனம்,கட்டிடக் கலை,வானவியல்,நாள்காட்டித் தயாரித்தல் போன்ற துறைகளில் திறமையுள்ளவர்களாகத் திகழ்ந்தார்கள்.

சூரிய,சந்திர நகர்ச்சியைக் கணக்கிட்டு இரண்டு காலண்டர்கள் தயாரித்து நடைமுறையில் வைத்திருந்தினர்.ஒன்று ஒரு வருடத்திற்கு 360 + 5 நாட்கள்,18 மாதங்களை கொண்டது.இன்னொன்று,ஒரு வருடம் என்பது 260 நாட்கள்,13 மாதங்களாகும்.ஒருமாதம் என்பது இவர்களிடம் 20 நாட்களாகும்.இந்த மாயன் இன காலண்டர்,21,12,2012 என்ற தேதியுடன் முடிவடைகிறது. இதனால் இந்த தினத்தோடு -- அதாவது இன்றோடு இந்த உலகம் அழிந்துவிடும் என புரளி கிளப்பிவிடப்பட்டுள்ளது.

இந்த மூட நம்பிக்கையினால் ஒரு பக்கம் பீதியும்,மறுபக்கம் பிராத்தனை,பாதுகாப்புச்சாதனங்கள் என வியாபாரமும்,சூடுபிடித்துள்ளது.மத அடிப்படையும்,தெளிவும் உள்ளவர்களுக்கு இதில் எந்தக்குழப்பமும்,பயமும் இப்போதும்,எப்போதும் இருந்ததில்லை.இந்த உலகம் முடிவில் ஒருநாள் அழிந்து போகும்.இது முஸ்லிம்களின் உறுதியான நம்பிக்கை.இந்த யுகமுடிவுக்கான தேதிகுறிக்கப்பட்டு விட்டது.ஆனால் அது வெளிப்படையாகவும்,குறிப்பாகவும் அறிவிக்கப்படவில்லை.

ஆகவே யுக முடிவுக்கான 21.12.2012 தேதி உள்ளிட்ட எந்த தேதியும் அடிப்படை ஆதாரமற்றது. மறுமைநாள் மறுப்பாளர்கள் அது பற்றித் திரும்பத் திரும்ப யுக முடிவுநாள் எப்போது வரும் எனக் கேட்டு நச்சரித்தும்,திருக்குர்ஆன் அது பற்றி மூச்சுவிடவில்லை.இது பற்றிச் சொல்வதற்கு நபிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

எனவே இது குறித்து யார் என்ன சொன்னாலும் அது சரிதான் என்பதில் எந்த ஐயமும் இல்லை.'' ( நபியே!) இறுதி நாளைப்பற்றி அது எப்பொழுது வரும் என அவர்கள் உங்களிடம் கேட்கிறார்கள். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்; அதன் அறிவு என இறைவனிடத்தில்தான் இருக்கிறது. அது வரும் நேரத்தை அவனைத்தவிர மற்றெவரும் தெளிவாக்க முடியாது.(அது சமயம்) வானங்களிலும் பூமியிலும் மகத்தான சம்பவங்கள் நிகழும்.திடீரென்றே தவிர (அது) உங்களிடம் வராது... (அல்குர்ஆன்,7 ; 187)

இதல்லாமல் இப்போதைக்கு உலகம் அழிவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.சூரியன் பலகோடி ஆண்டுகள் எரிந்து போயிருந்தாலும்,இன்னும் பல கோடி ஆண்டுகள் பிரகாசிப்பதற்குத் தேவையான எரிபொருள் அதிடம் இன்னமும் மிச்சமிருக்கிறது என விஞ்ஞானிகளும் கோடிட்டுக்காட்டியுள்ளனர்.எனவே உலகம் இப்போதைக்கு அழியாது.அதற்கு முன்பு பயங்கரமான பல சம்பவங்களெல்லாம் நிகழவேண்டியதிருக்கிறது.

வாழ்க்கையின் சகல பரிமானங்களுக்கும் பரிகாரம் சொல்லியிருக்கும் இஸ்லாமிய மார்க்கத்தில்,யுக முடிவு நாளைக்குறித்தும் அதன் அடையாளங்கள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது. எதையும் விட்டும் வைக்காத ஏந்தல் நபி (ஸல்) இது பற்றி  கூறியிருக்கிற விபரங்களை இப்போது தெரிந்து கொள்வது ரொம்ப பொருத்தமாகும்.'' இனி எந்த காலமும் வராது,அதற்குப்பிறகுள்ளது அதை விட மிக மோசமாக இருந்தே தவிர'' (நபிமொழி,புகாரி ;7068) 

ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பேசிக்கொண்டிருந்த தனது தோழர்களிடம் வந்து,என்ன பேசிக்கொண்டிருக்கிறீர்கள்? எனக்கேட்க '' நாங்கள் அழிவு நாளைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம்'' என அவர்கள் பதில்கூறினார்கள்.அதற்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அதற்கு முன் பத்து அடையாளங்களை நீங்கள் காணும் வரை அது வராது என அந்தப்பத்தையும் கூறலானார்கள்.

1.புகை.2,தஜ்ஜால் வருகை.3,கால்நடை வெளிப்படுதல்.4,மேற்கிலிருந்து சூரியன் உதயமாகுதல்.5,ஈஸா நபி இறங்குவது.6,யஃஜுஜ் மஃஜுஜ் கூட்டம்.7,மூன்று நிலநடுக்கம்.ஒன்று கிழக்கில் 8,இன்னொன்று மேற்குலகில்.9,மற்றொன்று அரேபியத் தீபகற்பத்திலும் ஏற்படுவது.10,யமனிலிருந்து தீ பரவி மக்களை மஹ்ஷருக்கு ஒன்று (திரளுமிடத்திற்கு) விரட்டுவது. (முஸ்லிம் ; 2901)

இந்த நபிமொழி சற்று விரிவாக வேறு அறிவிப்பில் வந்துள்ளதைப் பார்ப்போம்.தஜ்ஜால் ; (ஏசுகிறிஸ்து மற்றும் முஸ்லிம்களின் எதிரி) ஒற்றைக்கண்ணன்.அவனது இருகண்களுக்கு மத்தியில்'' இறை மறுப்பாளன்''  என எழுதப்பட்டிருக்கும்.இதை எழுதத்தெறியாத நம்பிகையாளரும் வாசிப்பார். சிரியா, இராக் தேசங்களுக்கிடையிலிருந்து கிளம்புவான்.

பூமியெங்கும் மிகவேகமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு பெருங்குளப்பங்கள் செய்வான்.இவன் பூமியில்  நாற்பது நாட்கள் தங்குவான். இதில் ஒருநாள் ஒரு வருடம் போலவும்  அடுத்த ஒருநாள் ஒருமாதம் போலவும்,அடுத்து வரும் ஒருநாள் ஒரு வாரம் போலவும்,அதற்கடுத்த நாட்கள் சாதாரன மற்ற நாள்களைப் போலவும் இருக்கும்.

 நான்தான் கடவுள் என பிதற்றுவான்.இவனுக்குப்பின் யூதர்கள் அணிதிரள்வார்கள்.இவனது அட்டகாசம் கட்டுக்கடங்காமல் போகும் போது,வானிலிருந்து ஈஸா நபி (அலை) ,சிரியா நாட்டின் ஜாமிஃமஸ்ஜிதின் கிழக்கு வெள்ளை மினராவில் வந்து இறங்குவார்கள்,பைத்துல் முகத்தஸ் அருகிலுள்ள '' பாபுல் லுத்து'' என்னுமிடத்தில் வைத்து தஜ்ஜாலை,ஈஸா நபி கொல்லுவார்கள்.

அடுத்து யஃஜுஜ் மஃஜுஜ் கூட்டம்.இவர்களை எதிர்த்து யுத்தம் செய்ய முடியாது.அதனால் உங்கள் சகாக்களை சேர்த்துக்கொண்டு தூர்சினாய் மலை பொதும்பில் ஒதுங்கி ஒளிந்து கொள்ளுங்கள் என  ஈஸா நபிக்கு அல்லாஹ் வஹி அறிவிப்பான் (காண்க ; 21 ; 96) இக்கூட்டம் புறப்பட்டு வரும்போது,இவர்களின் முதல் பிரிவினர் திப்ரீயஸைக் (கலீலி கடல்) கடப்பார்க்ள். (திப்ரீயஸ் ஏரி,கின்னரெட் ஏரி என்றும் அழைக்கப்படுகிற) இதிலிருந்து அவர்கள் நீர் அருந்துவார்கள். 

அவர்களின் கடைசி பிரிவினர் கடந்து செல்லும் போது இங்கு ஒரு காலத்தில் தண்ணீர் இருந்தது என்று கூறுவார்கள்.இப்பூமியில் உள்ளவர்களைக்கொன்று குவிப்பார்கள்.இப்போது விலைவாசி,தாற்மாறாக ஏறி இருக்கும்.ஒரு மாட்டுத்தலை 100 தீனாரை விட அதிகமாக இருக்கும்.இந்த நேரத்தில் ஈஸா நபியும் தோழர்களும் பிராத்திப்பார்கள்.

அப்போது அல்லாஹ் அந்த யஃஜுஜ் மஃஜுஜ் கூட்டத்தினர் மீது ஒரு விஷப் பூச்சியை அனுப்பி அவர்களை ஒரே நேரத்தில் ஒட்டு மொத்தமாக அழித்தொழிப்பான்.அப்போது பூமியெங்கும் பிணக்காட கிடக்கும்.இராட்சத பறவைகளைக் கொண்டு அப்பிரேதங்கள் அப்புறப்படுத்தப்படும்.அதற்குப் பிறகு இப்பூமியெங்கும் பெரும் மழை பொழிவிக்கப்பட்டு,பூமி கழுவப்பட்டு,கண்ணாடி போல சுத்தமாக்கப்படும்.

மீண்டும் பூமி செழிப்பாகும்.ஒரு மாதுளம் பழத்தை ஒரு கூட்டமே சாப்பிடுவர்.பாலில் அபிவிருத்தி செய்யப்படும்.ஒரு ஒட்டகையின் பால்,பெருங்கூட்டத்திற்கும்,ஒரு மாட்டின் பால் ஒரு கோத்திரத்திற்கும்,ஒரு ஆட்டின் பால்,ஒரு குடும்பத்திற்கும் போதுமானதாக இருக்கும்.இவ்வாறு மக்கள் சுபீட்சமாக இருந்துகொண்டிருக்கையில்,அல்லாஹ் வசந்தக் காற்றை அனுப்புவான்.

அது மக்களுக்கு அக்குலுக்கு கீழே பாதிப்பை ஏற்படுத்தும்.அதில் இறை நம்பிக்கையாளர்களுடைய உயிர் கைப்பற்றப்படும்.அதன் பிறகு தீயவர்கள் மட்டுமே இவ்வுலகில் மீத மிருப்பர்.அப்பொழுது இந்த உலகம் அழியும்.(முஸ்லிம் ; 2937,திர்மிதி 2240)  '' மர்யமுடைய மகன் ஈஸா நிச்சயமாக நீதியான ஆட்சியாளராக உங்களுக்கு மத்தியில் இறங்கி வருவார்.சிலுவைகளை உடைப்பார்.பன்றியைக்கொல்லுவார் '' (புகாரி ; 3438) 

'' ஈஸா நபி இறங்கி வந்து கல்யாணம் முடிப்பார்கள்.அவருக்கு குழந்தை பிறக்கும்.45 வருடம் வாழ்வார்.பிறகு மரணிப்பார்.என்னுடன் எனது கப்றில் அடக்கம் செய்யப்பட்டு நானும்,ஈஸாவும் ஒரே கப்றில் அபூபக்கர்,உமருக்கு மத்தியில் (மறுமையில்) எழுவோம் '' (மிஷ்காத் ;5497) உலகம் அழிவதற்கு முன்பு சூரியன் மேற்கிலிருந்து உதயமாகும்.அதற்குப்பிறகு நம்பிக்கை கொண்டால் ஏற்றுக்கொள்ளப்படாது '' (முஸ்லிம் ;158)

'' ஒரு மனிதன் இறந்து விட்டால் அவனது மறுமை நிலை பெற்றது ''.தேவையில்லாமல் இவ்வுலக அழிவைப்பற்றி சிந்திக்காமல் நமக்கு மரணம் சம்பவித்தால் அதற்குப்பிறகுள்ள வாழ்க்கைக்கு நம் கை வசம் என்ன  அறச்செயல்கள் உள்ளது? என்று யோசிப்போம்.அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்.வஸ்ஸலாம்..




என்றும் தங்களன்புள்ள

மௌலானா மௌலவி அல் ஹாஃபிழ் எஸ்.எஸ்.அஹ்மது ஃபாஜில் பாக்கவி
(தலைமை இமாம், மஸ்ஜித் இந்தியா, கோலாலம்பூர்,மலேசியா.)

வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

Friday, December 28, 2012

ஒடுக்கத்து புதனுடைய முக்கியத்துவம் (ஸஃபர் மாதத்தின் கடைசிப் புதன் கிழமை)




நக்சபந்திய்யா தரீக்காவின் பிரபலமான தலைவர் இமாம் ஷைகு ஃபரீதுத்தீன் (ரலி) அவர்கள் பின் வருமாறு அறிவிக்கிறார்கள்.ஸஃபர் மாதத்தின் கடைசிப்புதன் கிழமையன்று (இதை நமது மக்கள் ஒடுக்கத்துப் புதன் என்பார்கள்) உலகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் வியாதிகளும், முஸீபத்துகளும் இறங்குவதாகவும்,அந்த நாளில் பின் வரும் ஸலாமத்துடைய ஏழு ஆயத்துகளையும் பீங்கான் பாத்திரத்தில் அதற்கான விஷேச மைய்யினால்) எழுதித் தண்ணீர் விட்டுக் கரைத்து குடித்தால் அந்த முஸீபத்துகளிலிருந்து பாதுகாப்புக் கிடைக்கும் எனவும் அறிவிக்கிறார்கள்.


 (ஓதிய நீரை குடித்துவிட்டு நக்சபந்திய்யா ஷைகுமார்கள் மீது ஃபாத்திஹா ஓதிக்கொள்ளவும்) அதோடு பின் வரும் துஆவையும் ஒரு முறை ஓதுவது நல்லது.

(1) ஸலாமுன் கவ்லம் மிர் ரப்பிர் ரஹீம் (36--58)

(2) ஸலாமுன் அலா நூஹின் ஃபில் ஆளமீன் (37--79)

(3) ஸலாமுன் அலா இப்றாஹீம் (37--109)

(4) ஸலாமுன் அலா மூஸா வஹாரூன் (37--120)

(5) ஸலாமுன் அலா இல்யாஸீன் (37--130)

(6) ஸலாமுன் அலைக்கும் திப்தும் ஃபதுஹுலூஹா ஹாலிதீன் (39--73)

(7) ஸலாமுன் ஹிய ஹத்தா  மத்லயில் ஃபஜ்ர் (97--05)

அல்லாஹும்மஃஸிம்னா மினல் பலாயி வதர்க்கிஸ்சகாயி, வசூயில் கலாயி,வஷமாததில் அஃதாயி வமல்ஜூமில் வபாயி, வமவ்த்தி ஃபுஜாஅத்தின்,வமின் ஜவாலில் பரக்கத்தி,வனிஃமத்தி,வமினல் பரஸி,வல்ஜுதாமி,வல்ஜுப்னி, வல்பர்ஸாமி,வல் ஹும்மா,வஸ்ஸகீகத்தி,வமின் ஜமீயில் அம்ராழி,வல் அஸ்காமி,பிஃபழ்ளிக்க,வஜூதிக்க யாதல் ஜலாலி வல்இக்ராம்.பிரஹ்மத்திக்க யா அர்ஹமர் ராஹிமீன். வஸல்லல்லாஹு அலா சைய்யிதினா முஹம்மதின் வஅலா ஆலிஹி வஅஷ்ஹாபிஹி வஸல்லம்.வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.ஆமீன்.


நமது ஊர்களில் அரிசியைக் கரியாக்கி தண்ணீரில் குழப்பி அந்த மையைக்கொண்டு ஆயத்துக்களை நாணல் குச்சியால் எழுவது வழக்கம்.இவ்வாறு அரிசியைக் கரியாக்கி மை உண்டாக்கப்படுவதால் அதைக்குடிப்பதால் தீங்கு இல்லை.

கிராமப் புறங்களில் ஏழை மக்களிடம் பீங்கான் தட்டைகள் இருப்பது அரிது.ஆகவே சில ஆலிம்களும்,லெப்பைமார்களும் வழவழப்பாக இருக்கும் மா இலையில் அந்த ஏழு ஆயத்துக்களையும் எழுதிக் குடிக்கும் பழக்கத்தை ஏற்ப்படுத்தி இருக்கிறார்கள். மா இலை கிடைக்காவிட்டால் வழவழப்பான முந்திரி இலை போன்ற வேறு இலைகளிலும் எழுதிக் குடிக்கலாம்.

ஒடுக்கத்து புதனுடைய தினத்தில் ஸலாத்துல் இஸ்திகாரா என்ற நிய்யத்தில் நான்கு ரக்அத்துகள் தொழுவது விஷேசம்.ஒவ்வொரு ரக்அத்திலும் ஸுரா ஃபாத்திஹா ஒரு தடவையும்,இன்னாஅஉத்தைனா 17 தடவையும்,குல் குவல்லாஹு அஹத் 5 தடவையும்,குல் அஊது பிரப்பில் ஃபலக் ஒரு தடவையும், குல் அஊது பிரப்பின்னாஸ் ஒரு தடவையும் ஓதி தொழவேண்டும் 

இந்த நல்ல காரியங்களைத் தவறு என்றும், பித்அத் என்றும், விபரம் அறியாத சில முல்லாக்கள் பேசுவதும் ஒடுக்கத்துப் புதன்களிலுள்ள துஆ முதலிய நிகழ்ச்சிகளையே ஒட்டுமொத்தமாக இல்லை என்று சொல்வதும் ஸுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல்களிலும் கூட இதைக்கண்டித்து இமாம்கள் பயான் செய்வதும் அறியாமையாகும்.இந்த ஆயத்துக்களைத் தலையில் தேய்த்து குளிப்பது தவறு.காரணம் பரக்கத்தான தண்ணீர் கால்களில் மிதிபட வாய்ப்புண்டு



தொகுப்பு ;; அப்தலுல் உலமா அஷ்ஷெய்கு டாக்டர் தைக்கா ஷுஐபு ஆலிம் B.A.(Hons),M.A..,Ph.D.
நன்றி -- அல் முன்ஜியாத் (உள்ளம் மற்றும் உடல் நோய்களை நீக்கும் அருமருந்து)

வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.