Friday, August 23, 2013

புனித மிகு நபிமார்களின் வாரிசுகளை உருவாக்கும் சிறப்பு வாய்ந்த அரபுக் கல்லூரிகள் துவங்கியது !!!




முதஅவ்விதன்! முபஸ்மிலன்!! முஹம்திலன்!! முஸல்லியன்!! வமுஸல்லிமா!!!

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையால்அரபுக் கல்லூரிகள்,புனிதம் வாய்ந்த ரமழான் மாத விடுமுறைக்குப் பிறகு ஆரம்பம் ஆகிவிட்டது. மார்க்கக் கல்வியை தேடிப் பெறுவது முஸ்லிமான ஆண்கள், பெண்களின் மீது கட்டாய கடமை என எம்பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஆனால், முஸ்லிமான நம்மவர்கள் சமீப காலமாக தங்களது குழந்தைகளுக்கு மார்க்க கல்வியை வழங்காமல்,அதாவது காலை மதரஸாக்களுக்கு கூட ( மக்தப் ) அனுப்பாமல் உலகக் கல்வியை மட்டும் வழங்குவதில் அதிக கவனம் எடுத்துக்கொண்டு அழிவிலே இருக்கிறார்கள். 

மார்கக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்காத காரணத்தினால் இன்று இஸ்லாமிய சமுதாயத்தில் வழிகெட்ட, கொலைகார கும்பல்களின் குழப்பங்கள், அனாச்சாரங்கள்,தீமைகள், அதிகமான பிரச்சினைகள் காணப்படுகிறது.சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னால் வரை மார்கக் கல்வியுடன் உலகக் கல்வியையும் நமது இஸ்லாமிய பெற்றோர்கள் தனது பிள்ளைகளுக்கு வழங்கினார்கள்.இதன் காரணமாக தங்களது பிள்ளைகளை கண்ணிய மிகுஆலிம்களாகவும், கண்ணியமிகு ஹாஃபிழ்களாகவும்,பட்டதாரிகளாகவும், உருவாக்கினார்கள்.

இஸ்லாமிய சமுதாயம் ஒற்றுமையாகவும், அமைதியாகவும்.தீமைகளைவிட்டும் விலகி வாழ்ந்தார்கள். ஆகவே சீனா தேசம் சென்றாலும் மார்க்க கல்வியை தேடிப் பெற்றுக் கொள்ளுங்கள். என நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.அதன் அடிப்படையில் இஸ்லாமிய பெற்றோர்களே! தங்களது சிறு பிள்ளைகளுக்கு (மக்தப்) இஸ்லாமிய ஆரம்பக் கல்வியையும்.பருவம் அடைந்த பிள்ளைகளுக்கு அரபுக் கல்லூரிகளில், ஏழு ஆண்டுகள்,அல்லது உலகக்கல்வியுடன் ஐந்து ஆண்டுகள், அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையின் படி,மார்க்க கல்வியை வழங்கினால், இன்ஷா அல்லாஹ் பெருமானாரின் ஷஃபாஅத்தையும், வல்ல நாயனின் அன்பையும்,அருளையும், பெற்றுக்கொள்வீர்கள். நமது இஸ்லாமிய பெற்றோர்களை தனது குழந்தைகளுக்கு உலகக் கல்வியுடன் மார்க்க கல்வியை வழங்கிய உயர்ந்த பெற்றோர்களாக வல்ல அல்லாஹ் ஆக்குவானாக ஆமீன். இன்ஷா அல்லாஹ் அரபுக் கல்லூரிகள்; ஷவ்வால் பிறை 15-ல் துவங்க இருக்கிறது பயணடைந்து கொள்வீர்களாக! எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு 
நல் உதவி செய்வானகவும் ஆமீன்.. வஸ்ஸலாம்.

வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம்

சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

Tuesday, August 6, 2013

இனிய ஈகைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்


  • முதஅவ்விதன்!! முபஸ்மிலன்!!! முஹம்திலன்!!! முஸல்லியன் !!! வமுஸல்லிமா!!!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 

அன்பார்ந்த பெரியோர்களே! இளைஞர்களே! அருமைத் தாய்மார்களே! சகோதர சகோதரிகளே! பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து வணக்கம் செய்தால் உயர் பதவி கிடைக்கும் என்பார்கள்.இம் மூன்றையும் கடைபிடிக்கிற நல் வாய்ப்பினை எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த ரமழான் மாதத்திலே நமக்கு வழங்கினான்.பகலெல்லாம் நோன்பு வைத்து,இரவிலே இருபது ரக்கஅத்துகள் தொழுது, அல்லாஹ்வுடைய அளப்பெரும் அன்பையும், அருளையும் பெற்ற எங்கள் இஸ்லாமிய அன்பு நெஞ்செங்களே! உங்கள் அனைவர்களுக்கும் இனிய நோன்பு பெருநாள் நல் வாழ்த்துக்களையும்,இன்னும் ஆறு நோன்புகள் நோற்க இருக்கின்ற, உயர்ந்த சீதேவிகளுக்கு ஆறு நோன்புப் பெருநாள் நல் வாழ்த்துக்களையும்,சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினர் சார்பாக அகமுவந்து தெறிவித்துக் கொள்கிறோம் வஸ்ஸலாம்…..

வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம்

சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்கள் .

Friday, August 2, 2013

துபாய் சர்வதேச திருக்குர்ஆன் விருது போட்டி: முதல் பரிசை தட்டிச் சென்ற சவுதி அரேபிய இளைஞர்

துபாய்: துபாயில் ரமலான் மாதம் 1 முதல் 20 தேதி வரை 17வது ஆண்டாக நடைபெற்ற சர்வதேச திருக்குர்ஆன் விருது வழங்கும் போட்டியில் சவுதி அரேபியாவின் ஆதில் முஹம்மது அல் கெய்ர் முதல் பரிசை பெற்றார். அவர் 250,000 திர்ஹமை பரிசுத் தொகையாக பெற்றார். இதனை ஷேக் மக்தூம் பின் முஹம்மது வழங்கினார். இரண்டாம் இடத்தை பெற்ற சாட் நாட்டைச் சேர்ந்த அல்ஹாஜ் மஹம்மத் டிஜிட்டா 200,000 திர்ஹம் பரிசையும், மூன்றாம் இடத்தை பிடித்த லிபியாவின் அப்துல் பாரி ஆர் அலி பிசுப்சு 150,000 திர்ஹம் பரிசுத் தொகையையும் பெற்றனர். 



அதனைத் தொடர்ந்து பெல்லோ அமதா மஹ்மத் (நைஜீரியா), உமர் முஹம்மது ஆதம் கோட் (சூடான்), ஜமாலுதீன் எல் கிக்கி (ஆஸ்திரேலியா), சையத் அலி உமர் பல்கதிஷ் அல் ஜாபரி (ஐக்கிய அரபு அமீரகம்), அஹமது அலி தாஹா (லெபனான்), அப்துல்லா அரிபி (அல்ஜீரியா), பட்டேல் வசில் (பிரான்ஸ்) ஆகியோர் நான்கு முதல் 10 இடங்களைப் பெற்றனர். இவர்களுக்கு 65 ஆயிரம் திர்ஹத்திலிருந்து ஒவ்வொரு தரத்திற்கும் ஐயாயிரம் குறைத்து 35,000 திர்ஹம் வரை வழங்கப்பட்டது. மிகவும் அழகான முறையில் கிராஅத் ஓதிய ஐவருக்கு சிறப்புப் பரிசு வழங்கப்பட்டது. 



அவர்களது விபரம் வருமாறு: 

முஹம்மது நஜ்முஸ் சாகிப் ரும்மான் (வங்கதேசம்) இப்ராஹிம் சயீத் (ஏமன்) முஹம்மது அஷ்ரஃப் (எகிப்து) உலுல் அம்ரி ஜெய்னுதீன் (இந்தோனேசியா) அஹ்மது ஹரிர் (ஆப்கானிஸ்தான்) இவர்கள் முறையே திர்ஹம் 5000, 4000, 3000, 2000 மற்றும் 1,000 பரிசு பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் அமீரக அமைச்சர்கள், ஷேக்குகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.