Monday, April 13, 2015

தலைநகர் மஸ்ஜித் இந்தியாவில்,சங்கைக்குரிய, சமுதாய சங்கநாதம், மௌலானா மௌலவி அல்லாமா A.முஹம்மது ஷப்பீர் அலி பாக்கவி ஹழரத் அவர்களின் மூன்று நாள் சிறப்புத் தொடர் சொற்பொழிவு !!!

முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! வமுஸல்லிமா!!

பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இன்ஷாஅல்லாஹ் வரும் ரஜப் 7 .1436.(26.4.2015) அன்று

நமது தலைநகர் மஸ்ஜித் இந்தியாவில், குத்புல் ஹிந்
ஹழரத் காஜா அஜ்மீர் நாயகம் ரலியல்லாஹு அன்ஹு 
அவர்களின் மவ்லிது ஷரீபு நடைபெறும்.அஸருக்குப்பின் 
மவ்லிது,மக்ரிபுக் குப்பின் சிறப்பு துஆ, இஷாவுக்குப்பின் 
மார்க்க சிறப்புச் சொற்பொழிவு நடைபெறும்.
சிறப்புப் பேருரை:
நாடறிந்த நாவலர்.நற்றமிழ் வேந்தர். தாய்க் கல்லூரி வேலூர் 
அல் பாகியாத்தின்,மூத்த பேராசிரியர்.மஸ்ஜித் இந்தியா 
முன்னாள் தொடர் பேச்சாளர்,சங்கைக்குரிய, சமுதாய 
சங்கநாதம், மௌலானா மௌலவி அல்லாமா 
A.முஹம்மது ஷப்பீர்அலி பாக்கவி ஹழரத் அவர்கள்.

பயான் 26,27,28-4-2015;ஞாயிறு திங்கள் செவ்வாய் 
ஆகிய மூன்று தினங்கள் தினமும் பயான் இஷாவுக்குப்பின் 
ஒரு மணி நேரம் நடைபெறும்.
முதல் நாள் 26.4.2015.
தலைப்பு:இறையழைப்பு பணிியில் இறை நேசர்கள்.

27.4.2015 தலைப்பு;வினோத வின்னேற்றபபயணத்தின் 
முன்னேற்ற அனுபவங்கள்.
28.4.2015.தலைப்பு; ஆரோக்கிய ரமழானின் ஆன்மீககுணங்கள்.

இச்சிறப்புவாய்ந்த மஜ்லிஸில் சுற்றுப்புற மக்கள் கலந்துகொண்டு அல்லாஹ்வின்,அன்பையும்,அருளையும்பெற்றுக்கொள்ளுங்கள்.
வஸ்ஸலாம்.

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.

சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

குத்துபுல் ஹிந் ஹஜ்ரத் கரிப நவாஸ் காஜா முயீனுத்தீன் ஜிஸ்தி அஜ்மீரி, ஹஸனுஸ் ஸன்ஜரி ரலியல்லாஹு அன்ஹுஅவர்களின் சிறப்பு வாய்ந்த மௌலிது ஷரீஃப் !!!


முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! வமுஸல்லிமா!!

வரலாற்றுச் சிறப்பு மிக்க மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் மஸ்ஜித் 
இந்தியாவில், பாரம்பரியமாக தொண்டு தொட்டு,ஒவ்வொரு வருடமும்,
நடைபெற்று வரும் குத்துபுல் ஹிந் ஹஜ்ரத் கரிப நவாஸ் காஜா 
முயீனுத்தீன் ஜிஸ்தி அஜ்மீரி, ஹஸனுஸ் ஸன்ஜரி ரலியல்லாஹு 
அன்ஹு அவர்களின் சிறப்பு வாய்ந்த மௌலிது ஷரீஃப் இவ்வாண்டு,
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 26 -04-2015 ஞாயிற்றுக்கிழமை  
மாலை  ரஜப் பிறை 07-- 1436  அன்று மிக விமர்சையாக நடைபெற 
உள்ளது.என்பதை, மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அல்ஹம்துலில்லாஹ்.வலமை போல் அஸர் தொழுகைக்குப் பின் 
மௌலிது ஷரீபும், மஃரிப் தொழுகைக்குப்பின்  யா நபி பைத்து, 
யாசீன்  மற்றும் சிறப்பு வாய்ந்த துஆ மஜ்லிஸும்,மஸ்ஜித் 
இந்தியாவின் கண்ணியமிகு தலைமை இமாம்,மௌலானா 
மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா.எஸ்.எஸ்.அஹ்மது 
ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத் கிப்லா அவர்களின்,சீரிய தலைமையில்
 நடைபெறும்.மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த மஜ்லிஸில் 
அனைவரும் தவறாது கலந்து கொண்டு,அல்லாஹ்வின் அளப்பெரும்,அன்பையும்,அருளையும்,பெற்றுக்கொள்ளுங்கள்.
வஸ்ஸலாம்....


வெளியீடு ;;- மன்பயீ ஆலிம்.காம்

சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

Wednesday, April 8, 2015

சித்தார் கோட்டை சின்ன ஆலிம் மௌலானா மௌலவி அல்லாமா மர்ஹும் M.அப்துல் ஹை ஆலிம் பாகவி அவர்களின் மருமகன்,அல்ஹாஜ் அ.அபுல் ஹுதா அவர்கள் மறைவு !!!!

பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
சித்தார் கோட்டை சின்ன ஆலிம் மௌலானா மௌலவி 
அல்லாமா, மர்ஹும் M.அப்துல் ஹை ஆலிம் பாகவி 
அவர்களின் மருமகனும், அ.மஜ்மவுல் அஃலம்,
அ.செய்யிது அப்பாஸ் அலி ஆகியோரின் தந்தையுமான,
அல்ஹாஜ் அ.அபுல் ஹுதா அவர்கள் 07-04-2015 அன்று 
தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்து விட்டார்கள். 
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


எல்லாம் வல்ல அல்லாஹ் ஹாஜியவர்களின்,நல்லறங்களை ஏற்றுக் கொண்டு,  குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்றும், அவர்களின்  பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருள 
உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும்  துஆ செய்யும்படி 
அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். வஸ்ஸலாம்...


வெளியீடு ;- குடும்பத்தார்கள்.