Monday, August 1, 2016

இறை நேசர்களின் பிறப்பிடங்கள் !!!


கவ்துல் அஃலம் அப்துல் காதிர் ஜிலானி (ரழி) - ஜீலான் , ஈரான்
இமாம் அபுல் ஹஸன் அலியுஷ்ஷாதிலி (ரழி) - சியுட்டா - மொராக்கோ
கரீப் நவாஸ் அஜ்மீர் காஜா முயீனுத்தீன் சிஷ்தி (ரழி) 
- சிஸ்தான் - கிழக்கு ஈரான்
ஸுல்தானுல் ஆரிபீன் அஹ்மத் கபீர் ரிபாய் (ரழி) - பஸ்ரா - ஈராக்
ஷெய்க் பஹாவுத்தீன் நக் ஷபந்த் புஹாரி(ரழி) - கஸ்ரி ஆரிஃபீன் - உஸ்பெகிஸ்தான்
ஷெய்க் ஷிஹாபுத்தின் யஹ்யா இப்னு ஹபஷ் அஷ்ஷுஹரவர்த்தி (ரழி) - சொஹர்வர்த் (ஜன்ஜான் மாகாணம்) - ஈரான்
இமாம் புஹாரி(ரஹ்) - புஹாரா - உஸ்பெகிஸ்தான் - மத்திய ஆசியா
இமாம் முஸ்லிம்(ரஹ்) - நிஷாப்பூர், ஈரான்
இமாம் அபு தாவூத்(ரஹ்) - ஸிஸ்தான், கிழக்கு ஈரான்
இமாம் திர்மிதி(ரஹ்) - உஸ்பெகிஸ்தான், மத்திய ஆசியா
இமாம் இப்னு மாஜா(ரஹ்) - கஸ்வின், ஈரான்
இமாம் அபுஹனிஃபா(ரஹ்) - குஃபா, ஈராக்
இமாம் ஷாஃபிஈ(ரஹ்) - காஸா, பாலஸ்தீன்
இமாம் அஹ்மது இப்னு ஹன்பல்(ரஹ்) - பாக்தாத் ஈராக்
இமாம் மாலிக்(ரஹ்) - மதீனா - சவுதி அரேபியா
இமாம் கஸ்ஸாலி(ரஹ்) - துஸ் - ஈரான்
மௌலானா ரூமி(ரஹ்) - பலக் - ஆஃப்கானிஸ்தான்.

வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

மகான் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் !!!


காயல்பட்டணம் மொகுதூம் தெருவில் ஹிஜ்ரி 1232 முஹர்ரம் பிறை 18 (கி.பி.1816) செவ்வாய்க் கிழமை அன்று வெள்ளை அஹ்மது லெப்பை ஆலிம் அவர்களின் மகனாக, மாதிஹுர் ரஸூல் சதக்கத்துல்லாஹில் காஹிரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வமிச வழியில் மகான் இமாமுல் அரூஸ் செய்யித் முஹம்மது ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பிறந்தார்கள். இவர்களது இரண்டாம் வயதில் இவர்களின் குடும்பம் கீழக்கரை சென்று குடியேறியது.

ஞான மேதை கீழக்கரை தைக்கா ஸாஹிபு ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மாணவராக விளங்கும் பேற்றினை பெற்றார்கள். தமது பத்தாம் வயதில் திருக்குர்ஆனை மனனம் செய்து, பின் இஸ்லாமியக் கலை ஞானங்களை கற்றுத் தேர்ந்தனர். தமது ஆசிரியரின் மகளான சாரா உம்மாளை மணமுடித்தார்கள். அதனால் மாப்பிள்ளை என்று அழைக்கப்பட்டதால் மாப்பிள்ளை லெப்பை ஆலிமாக-இமாமுல் அரூஸாக அழைக்கப்பட்டார்கள்.

 தமது மாமனாரிடம் பைஅத்தும், கிலாபத்தும் பெற்றார்கள். அரூஸிய்யா மத்ரஸாவை அமைத்து அதில் நூலகம் ஒன்றை நிறுவினார்கள். இவர்களுக்கு கல்வத் நாயகம், சாகுல் ஹமீது என்ற ஜல்வத் நாயகம் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகிய இரு மகன்கள் பிறந்தார்கள்.

இலங்கையிலும், தமிழகத்திலும் இவர்கள் ஆற்றிய மார்க்க சேவை மிக மகத்தானது. இலங்கையில் 355 பள்ளிவாசல்களையும் தைக்காக்களையும் நிறுவினர். இலங்கையில் போர்ச்சிக்கீசியர்கள் மார்க்கத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை தகர்த்து மார்க்கத்தை புணருத்மானம் செய்ய இவர்கள் ஆற்றிய பங்கு மிகவும் மகத்தானது.

மஙானீ, பத்ஹுத் தைய்யான், ஙனீமத்துஸ்ஸாலிஹீன்,மின்ஹத்து ஸரன்தீப், ஹதிய்யா மாலை, ஹத்யா ஷரீப், ராத்திபத்துல் ஜலாலிய்யா போன்ற எண்ணற்ற கிரந்தங்களை நமக்குத் தந்துள்ளார்கள்.

தங்களது 84 ம் வயதில் ரஜப் பிறை 5 ஹிஜ்ரி 1316 சனிக்கிழமை 
மாலை (கி.பி. 1898)யில் மறைந்தார்கள். இவர்களின் 
அடக்கஸ்தலம் கீழக்கரை தைக்காவில் உள்ளது.

வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

புனித மிகு நபிமார்களின் வாரிசுகளை உருவாக்கும் சிறப்பு வாய்ந்த அரபுக் கல்லூரிகள் துவங்கியது !!!

முதஅவ்விதன்! முபஸ்மிலன்!! முஹம்திலன்!! 
முஸல்லியன்!! வமுஸல்லிமா!!!

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையால்அரபுக் கல்லூரிகள்,புனிதம் வாய்ந்த ரமழான் மாத விடுமுறைக்குப் பிறகு ஆரம்பம் ஆகிவிட்டது. மார்க்கக் கல்வியை தேடிப் பெறுவது முஸ்லிமான ஆண்கள், பெண்களின் மீது கட்டாய கடமை என எம்பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஆனால், முஸ்லிமான நம்மவர்கள் சமீப காலமாக தங்களது குழந்தைகளுக்கு மார்க்க கல்வியை வழங்காமல்,அதாவது காலை மதரஸாக்களுக்கு கூட ( மக்தப் ) அனுப்பாமல் உலகக் கல்வியை மட்டும் வழங்குவதில் அதிக கவனம் எடுத்துக்கொண்டு அழிவிலே இருக்கிறார்கள். 


மார்கக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்காத காரணத்தினால் இன்று இஸ்லாமிய சமுதாயத்தில் வழிகெட்ட, கொலைகார கும்பல்களின் குழப்பங்கள், அனாச்சாரங்கள்,தீமைகள், அதிகமான பிரச்சினைகள் காணப்படுகிறது.சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னால் வரை மார்கக் கல்வியுடன் உலகக் கல்வியையும் நமது இஸ்லாமிய பெற்றோர்கள் தனது பிள்ளைகளுக்கு வழங்கினார்கள்.



இதன் காரணமாக தங்களது பிள்ளைகளை கண்ணிய மிகு ஆலிம்களாகவும், கண்ணிய மிகு ஹாஃபிழ்களாகவும்,பட்டதாரிகளாகவும், உருவாக்கினார்கள்.



இஸ்லாமிய சமுதாயம் ஒற்றுமையாகவும், அமைதியாகவும்.தீமைகளைவிட்டும் விலகி வாழ்ந்தார்கள். ஆகவே சீனா தேசம் சென்றாலும் மார்க்க கல்வியை தேடிப் பெற்றுக் கொள்ளுங்கள். என நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.அதன் அடிப்படையில் இஸ்லாமிய பெற்றோர்களே! தங்களது சிறு பிள்ளைகளுக்கு (மக்தப்) இஸ்லாமிய ஆரம்பக் கல்வியையும்.பருவம் அடைந்த பிள்ளைகளுக்கு அரபுக் கல்லூரிகளில், ஏழு ஆண்டுகள்,அல்லது உலகக்கல்வியுடன் ஐந்து ஆண்டுகள், அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையின் படி,மார்க்க கல்வியை வழங்கினால், 


அல்லாஹ்வின்  மாபெரும் கிருபையால் பெருமானாரின் ஷஃபாஅத்தையும், வல்ல நாயனின் அன்பையும்,அருளையும், பெற்றுக்கொள்வீர்கள். நமது இஸ்லாமிய பெற்றோர்களை தனது குழந்தைகளுக்கு உலகக் கல்வியுடன் மார்க்க கல்வியை வழங்கிய உயர்ந்த பெற்றோர்களாக வல்ல அல்லாஹ் ஆக்குவானாக ஆமீன். 

அல்லாஹ்வின்  மாபெரும் கிருபையால்,அரபுக் கல்லூரிகள்; ஷவ்வால் பிறை 15-ல் ஆரம்ப மாகிவிட்டது. பயணடைந்து கொள்வீர்களாக! எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு நல் உதவி செய்வானகவும் ஆமீன்.. வஸ்ஸலாம்.

வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.