Friday, September 30, 2016

சேது நாட்டின் தீன் முத்து சித்தார் கோட்டை பெரிய ஆலிம் ஷாஹிப் அவர்களின் 49 வது நினைவு தினம் மிகச்சிறப்பாக நடைபெற்றது !!


பெரிய ஆலிம் 49 வது நினைவு தினம் - வீடியோ



முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்! 
முஸல்லியன்! வமுஸல்லிமா !!!

அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

'' சூஃபி ஹழரத் '' என்றும் '' சேது நாட்டின் தீன் முத்து 
'' என்றும் புகழ்பெற்ற, சித்தார் கோட்டை பெரிய ஆலிம் 
ஷாஹிப் அவர்களின் 49 வது நினைவு தினம்.
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 
29-09-2016 வியாழக்கிழமை காலை 10-30 மணியளவில்,
சித்தார்கோட்டை,சின்னப் பள்ளிவாசலில்,மிகச்சிறப்பாக 
நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.




                       
ஆரம்பமாக பெரிய ஆலிம் சாஹிப் அவர்களுக்கு 
குர்ஆன் ஷரீஃப் ஓதப்பட்டது, பின்பு மௌலிது ஷரீஃபும்,
மலை பைத்துகளும்,ஓதப்பட்டு,உலக 
மக்களின் நலனுக்காகவும்,ஊர் மக்களுக்காகவும் 
சிறப்பு துஆச்செய்யப்பட்டது.







.'' சூஃபி ஹழரத் '' என்றும் '' சேது நாட்டின் தீன் முத்து '' 
என்றும் புகழ் பெற்ற சித்தார் கோட்டை பெரிய 
ஆலிம் ஷாஹிப் அவர்களைப்பற்றி, சித்தார்கோட்டை 
ஜாமிஆ மஸ்ஜிதின் தலைமை இமாம் மௌலானா 
மௌலவி அல்ஹாஃபிழ் காரீ அப்துல் காதிர் மஹ்ழரி 
ஹழரத் சிறப்பு பயான் செய்தார்கள்.




இறுதியாக சித்தார்கோட்டை ஜாமிஆ சித்தாரிய்யா 
அரபுக் கல்லூரியின் பேராசிரியர்,மௌலானா மௌலவி 
அபூதாஹீர் அரூஸி ஃபாஜில் ஜமாலி ஹழரத் 
அவர்கள் சிறப்பு துஆ ஓதினார்கள்.



இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில், சுற்றுப்புற 
உலமாப் பெருமக்களும்,ஏராளமான முஸ்லிம்களும் 
கலந்து கொண்டு அல்லாஹ்வின் அளப்பெரும் அன்பையும் 
அருளையும் பெற்றுக்கொண்டனர்.

கலந்து கொண்ட அனைவருக்கும் 
ஜீரணிகள் வழங்கப்பட்டது.

விழாவின் அனைத்து ஏற்பாடுகளையும்,சித்தார் கோட்டை 
அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தினர் மிகச்சிறப்பாக 
ஏற்பாடு செய்திருந்தார்கள்.இது போன்ற சிறப்பு மஜ்லிஸ்கள், 
கியாம நாள் வரை உலகம் முழுவதும் நடைபெற, 
அல்லாஹ் பேருதவிசெய்வானாக ஆமீன்.வஸ்ஸலாம்.

தகவல் ;- மௌலவி சுலைமான் 
அலி ஹைரி ஆலிம் வாழூர்.

அவ்லியாக்களை ஞாபகம் செய்யும் இடத்தில் 
அல்லாஹ்வின் பேரருள் இறங்குகிறது. ( நபிமொழி )

வெளியீடு - மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்கம் சித்தார் கோட்டை கிளை.

Sunday, September 25, 2016

சேது நாட்டின் தீன் முத்து பெரிய ஆலிம் சாஹிபு !!!


'' சூஃபி ஹளரத்'' என்றும்,சேது நாட்டின் தீன் முத்து 
என்றும் புகழ் பெற்ற இவர்களின் இயற்பெயர் 
அஹ்மது இப்றாஹீம் என்பதாகும்.இவர்கள் 
இராமநாதபுரம் மாவட்டம் சித்தார் கோட்டையில் 
கி.பி.1882 ல் பிறந்தார்கள்.

தந்தை பெயர் ; சீனி சையீது. பதிமூன்று வயதிலேயே 
வாணிபத்தின் பொருட்டு மலேயா ( மலேசியா ) 
அனுப்பி வைக்கப்பட்ட இவர்கள்,வாணிபத்தில் 
விருப்பமில்லாது ஊர் திரும்பி,கொழும்பு ஆலிம் 
சாஹிபின் ஆதரவில்,அதிராம்பட்டணம் சென்று 
மார்க்க கல்வி பயின்றார்கள்.
பின்னர் வேலூர் மதரஸா அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்தில் 
ஓதித் தேர்ந்தனர்.அங்கேயே ஆசிரியராக பணியாற்றுமாறு,
அக்கல்லூரியின் முதல்வர் இவர்களிடம் கூற,தாம் 
பிறந்த ஊர் மக்களுக்கு சேவை செய்ய விரும்புவதாகக் 
கூறிச் சித்தார் கோட்டைக்கு வந்த இவர்கள்.
அங்கு சின்னப்பள்ளி வாயிலுக்கு அண்மையில்

 '' மதரஸா மல்ஹருஸ் ஸூஅதா '' என்ற 
பெயருடன் ஒரு கல்விக்கூடத்தை நிர்மாணித்து 
மார்க்கப் பணிபுரிந்து வந்தனர்.
'' யா அல்லாஹ்.''  '' யா ரஹ்மான்,''  '' யா ரஹீம்.'' 
என்ற இறைவனின் திருப் பெயர்களை அடிக்கடி 
கூறி வந்த இவர்கள், '' தவகல்து அலல்லாஹ் 
என்பதை அடிக்கடி மொழிந்து வருமாறு நோயாளர்களிடம் பணிப்பதோடு,நோய் வராமல் தடுக்க அதுவே சிறந்த 
மருந்து என்று ஏனையோரிடமும் கூறுவர்.இவர்கள் 
தம் ஊரில் பல சீர்திருத்தங்களை செய்தனர்.திருமணத்தை வெள்ளியன்று ஜூம்ஆவிற்குப்பின் பள்ளியில் வைத்து
 நிறைவேற்ற வேண்டும் என்பதற்கு இவர்கள் கூறிய 
சுருக்கமான வாசகம் '' பள்ளி,வெள்ளி,பகல் '' என்பதாக இருந்தது.
இல்லை என்பார்க்கு இல்லை என்னாது வழங்கி 
வந்த இவர்களின் வரவு,செலவு புத்தகத்தில் 
'' அல்லாஹ்விற்காக அழகிய கடன்கள் '' என்ற தலைப்பில்
 பல்லாயிரக் கணக்கான ரூபாய்கள்,ஏழைப் பெண்களின் திருமணத்திற்காகவும்,பயணம் செல்பவரின் கப்பல் கூலிக்காகவும்,ஏழைகளின் பசிப்பிணி நீக்குவதற்காகவும் செலவழிக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.ஏழை,எளியவர்கள் தலையில் சுமந்து விற்கும் பொருள்களை மொத்தமாக வாங்கிப் பலருக்கும் பங்கிட்டுக் கொடுத்து மகிழ்வார்கள்.
மக்களிடையே நீதிபதி போன்றிருந்து அவர்களின் 
பிரச்சனைகளைத் தீர்த்து வைத்தார்கள் இவர்கள். 
ஷாதலியா தரீக்காவைப் பின்பற்றி வந்த இவர்கள்.அந்தத் 
தரீக்காவின்  திக்ரு முறைகளை நியமமாகப் பின்பற்றி வரும் வழக்கத்தையும் சித்தார் கோட்டையில் ஏற்படுத்தினார்கள்.
இவர்கள் 1967 செப்டம்பர் 29 வெள்ளிக்கிழமை வைகறையில் காலமானார்கள்.இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.இவர்களின் நல்லடக்கத்தில் கலந்து கொண்ட 
ஷைகு நாயகம் அவர்கள். '' நான் என் கண்ணால் கண்ட இரு வலிமார்கள்,பல்லாக்கு வலியுல்லாஹ்வும்,அஹ்மது இப்ராஹீம் வலியுல்லாஹ்வும் ஆவர் '' என்று கூறினார்கள். இவர்களின் 
புனித அடக்கஸ்தலம் சித்தார் கோட்டை சின்னப் 
பள்ளியின் வடபுறத்தில் இருக்கிறது.வஸ்ஸலாம்...

நூல் ஆதாரம் ; இஸ்லாமியக் கலைக் களஞ்சியம், 
நான்காம் பாகம்,பக்கம் -185.

வெளியீடு  ;-- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

Tuesday, September 20, 2016

சித்தாரியா அரபுக் கல்லூரியின் நிறுவனர் புனித ஹஜ்ஜை நிறைவேற்றி இன்று ஊர் திரும்பினார்கள் !!!

முதஅவ்விதன்! முபஸ்மிலன்!! முஹம்திலன்!! 
முஸல்லியன்!! வமுஸல்லிமா!!
அன்புடையீர் ! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இராமநாதபுரம் மாவட்டம் சித்தார் கோட்டை,சித்தாரியா 
அரபுக் கல்லூரியின் நிறுவனர் மௌலானா மௌலவி 
அல்ஹாஜ் I.சைய்யிது முஹம்மது புஹாரி ஆலிம் ஃபாஜில் 
மன்பயீ ஹழரத் அவர்கள், 20-09-2016  இன்று தன்னுடைய 20 வது 
புனித ஹஜ்ஜை நிறைவேற்றி  ஊர்வந்த அவர்கள், இன்று காலை 
சுப்ஹு தொழுகைக்குப்பிறகு, பெரிய பள்ளிவாசலில் சிறப்பு பயான் 
செய்து அனைவருக்காகவும் சிறப்பு பிரார்த்தனை செய்தார்கள்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மௌலானா மௌலவி 
அல்ஹாஜ் I.சைய்யிது முஹம்மது புஹாரி ஆலிம் 
ஃபாஜில் மன்பயீ ஹழரத் அவர்களுக்கு  இன்னும் 
பல ஹஜ்ஜுகள் செய்யக்கூடிய நற்பாக்கியத்தை 
வழங்குவானாக ஆமீன்.

நன்றி ;- செய்யிது இப்றாஹீம் ஆசிரியர்.

வெளியீடு ;-  மன்பயீ ஆலிம்.காம் 
மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் 
மற்றும் மலேசியக் கிளையினர்கள்.