Sunday, February 26, 2017

மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் தென் இந்தியப் பள்ளிவாசலில் நாகூர் நாயகத்தின் மௌலிது ஷரீஃப் !!!!!



முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்! 
முஸல்லியன்! வமுஸல்லிமா!!

வரலாற்று சிறப்பு மிக்க மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவில், பாரம்பரியமாக தொண்டு தொட்டு நடைபெற்று வரும் நாகூர் அல் குத்துபுல் மஜீத் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் சிறப்பு வாய்ந்த மௌலிது ஷரீஃப், இவ்வாண்டு,
இன்ஷா அல்லாஹ் 27 -02 -2017 திங்கள் மாலை,செவ்வாய் இரவு 
( ஜமாதுல் ஆகிர் பிறை 1- 1438 ) மிக விமர்சையாக ஆரம்பமாக இருக்கிறது என்பதை, மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அல்ஹம்துலில்லாஹ்.தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் 
மௌலிது ஷரீஃப் 08-03-2017 (ஜமாதுல் ஆகிர் 
பிறை 10-1438 ) புதன்  கிழமையோடு நிறைவு பெறும்.

ஒவ்வொரு நாளும் அஸர் தொழுகைக்குப் பின் மௌலிது ஷரீபும், 
மஃரிப் தொழுகைக்குப்பின் சிறப்பு வாய்ந்த துஆ மஜ்லிஸும்,மஸ்ஜித் இந்தியாவின் கண்ணியமிகு இமாம்களான,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா.எஸ்.எஸ்.அஹ்மது ஃபாஜில் பாக்கவி ஹழ்ரத் கிப்லா,மௌலானா நிஜாமுதீன் ஹழ்ரத் ஆகியோரின்  
சீரிய தலைமையில் நடைபெறும்.

மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த மஜ்லிஸில் அனைவரும் தவறாது 
கலந்து கொண்டு,அல்லாஹ்வின் அளப்பெரும்,அன்பையும்,
அருளையும்,பெற்றுக்கொள்ளுங்கள்.வஸ்ஸலாம்...



வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

Sunday, December 25, 2016

சித்தார் கோட்டையில்,நடைபெற்ற பெருமானாரின் 1491 வது மீலாதுப் பெருவிழா !!!

முதஅவ்விதன் ! முபஸ்மிலன் !! முஹம்திலன் !!! முஸல்லியன் !!!! 
வமுஸல்லிமா !!!!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால்,
வலமை போல், 21-12-2016 அன்று சித்தார் கோட்டையில், 
மஃரிப் தொழுகைக்குப் பிறகு பெருமானாரின் 1491 வது 
மீலாதுப் பெருவிழா, மிகச்சிறப்பாக நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்.

 


 நடைபெற்ற,மீலாதுப் பெருவிழாவில், 
சித்தார் கோட்டை சின்னப் பள்ளிவாசலின்,இமாம் மௌலானா 
மௌலவி முஹம்மது ஆரிஃப் ஆலிம் மஸ்லஹி அவர்கள், 
கிராஅத் ஓதி விழாவை துவக்கி வைத்தார்கள்.


 நடைபெற்ற,மீலாதுப் பெருவிழாவில், 
சித்தார் கோட்டை ஜும்ஆப் பள்ளிவாசலின்,தலைமை 
இமாம் மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் காரீ 
அப்துல் காதிர் ஆலிம் மஹ்ழரி ஹழ்ரத் அவர்கள்,
துவக்கவுரையாற்றினார்கள்.


 நடைபெற்ற,மீலாதுப் பெருவிழாவில்,தேவி பட்டிணம் 
புஹாரியா மெட்ரிகுலேசன் பள்ளியின் இமாம், 
மௌலானா ராஜா முஹம்மது ஆலிம் 
கைரி அவர்கள், இஸ்லாமிய கீதம் பாடினார்கள்.


நடைபெற்ற,மீலாதுப் பெருவிழாவில், 
சித்தார் கோட்டை மதரஸா மல்ஹருஸ் ஸுஅதா 
மாணவர்கள்,இஸ்லாமிய பாடல் பாடினார்கள்.


இச்சிறப்பு வாய்ந்த மீலாதுப் பெருவிழாவில்
 மேலப்பாளையம், உஸ்மானிய்யா அரபுக் கல்லூரியின் 
பேராசிரியர், சொல்லின் செல்வர்,கலீபத்துஸ் ஷாதுலி, 
மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் 
P,A.ஹாஜா முயீனுத்தீன் பாகவி ஹழ்ரத் அவர்கள் 
மீலாதுப் பெருவிழா சிறப்புப் பேருரையாற்றினார்கள்.   .

நடைபெற்ற,மீலாதுப் பெருவிழாவில்,
சுற்றுப்புற உலமாப் பெருமக்களும்,ஏராளமான முஸ்லிமான 
ஆண் பெண்களும் கலந்து கொண்டு அல்லாஹ்வின் 
அன்பையும்,அருளையும் பெற்றுக்கொண்டனர்,
அல்ஹம்துலில்லாஹ்.

வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்

சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

சித்தார் கோட்டையில் பெருமானாரின் 1491 வது மீலாதுப் பெருவிழா ஊர்வலம் !!!

முதஅவ்விதன் ! முபஸ்மிலன் !! முஹம்திலன் !!! முஸல்லியன் !!!! 
வமுஸல்லிமா !!!!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், 
வலமை போல்,  13-12-2016 அன்று மாலை 5-00 மணியளவில், 
சித்தார் கோட்டை,ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் ஜும்ஆப் 
பள்ளிவாசலில் இருந்து,பெருமானாரின் 1491 வது மீலாதுப் 
பெருவிழாவை முன்னிட்டு,மீலாது ஊர்வலம், மிகச்சிறப்பாக நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.










இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில், சித்தார் கோட்டை மற்றும் சுற்றுப்புற 
முஸ்லிம்கள் கலந்து கொண்டு,அல்லாஹ்வின் அன்பையும்,அருளையும்,பெற்றுக்கொண்டனர்.
வஸ்ஸலாம்.

வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.