Tuesday, May 28, 2013

தமிழக மஸ்ஜிதுகளின் கூட்டமைப்பு துவக்க விழா !!!




அஹ்லுஸ்  சுன்னத் வல் ஜமாஅத் தமிழக மஸ்ஜிதுகளின் கூட்டமைப்பு  துவக்க விழா ( 01.06.2013 ) சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஜமால் முஹம்மது கல்லூரி அருகிலுள்ள, வி.எஸ். எம்.மஹாலில் நடைபெறவுள்ளது.

மௌலானா ஹாபிழ் யூசுப் அலி கிராஅத் ஓதுகிறார். தமிழக மஸ்ஜித் கூட்டமைப்பு அமைப்பாளர் எம். முஹம்மது சிக்கந்தர் தலைமை தாங்குகிறார்.திருச்சி டவுண் காஜி மௌலானா  ஜே. ஜலீல் சுல்தான் மன்பயீ ஆலிம், ஜமாஅத்துல் உலமாப் பொதுச் செயலாளர் திருச்சி  மௌலானா  எஸ்.எம். முஹம்மது மீரான் பாக்கவி, திருச்சி ஐக்கிய ஜமாஅத் தலைவர் எம்.முஹம்மது அன்சார் கும்பகோணம் எம்.ஏ. முஹம்மது ஜியாவுதீன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபைத் துணைத் தலைவர் மௌலானா ரூஹுல் ஹக், மவ்லானா உமர்ஃபாரூக், முஹம்மது ரபிக் (வேலூர்), எம். முஹம்மது பஷீர் (சென்னை), எம்.எஸ்.ஏ.ஷாஜகான் (இராமநாதபுரம்),
எம்.ஏ. இனாயதுல்லா (கோவை),டி.நஜ்முதீன் (மதுரை), எம்.ஏ.ஹாரூன் ரஷீத் (சேலம்), ஹாஜிகே. செய்யது அப்பாஸ், (திருநெல்வேலி ),முஹம்மது சாதிக்,(மாயவரம்) எம்.எஸ். முஹம்மது யூனுஸ் (கடலூர்) ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். எம். முஹம்மது சிக்கந்தர் மஸ்ஜிதுகள் கூட்டமைப்பின்அவசியம் குறித்தும், மௌலானா அபுதாஹிர் பாஜில் பாக்கவி`ஹஜ்ரத் இளைஞர்களும் – மஸ்ஜித் நிர்வாகிகளும்' என்ற தலைப்பிலும், `மௌலானா சதீதுத்தீன் பாக்கவி ஹஜ்ரத், மக்தப் மதரஸாவும் – மத்ஹபும்' என்ற தலைப்பிலும்,  சிறப்புரை நிகழ்த்த உள்ளனர்.

முஹம்மது ரபீக், பி.எஸ்.எம்.சையது அப்துல் காதர், டாக்டர் ஹாஜா மஜீத் உள்ளிட்ட சமுதாயப் புரவலர்கள் வாழ்த்துரை வழங்க உள்ளனர். எஸ்.முஹம்மது பேக் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.புதுக்கோட்டை எம்.ஏ.எம்.ஷபியுல்லா நன்றியுரையாற்றுகிறார்.வஸ்ஸலாம்...

நன்றி ;-- Lalpet express.com

வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

Saturday, May 25, 2013

அல் குத்துபுல் ஹிந் ஹஜ்ரத் கரிப நவாஸ் காஜா முயீனுத்தீன் ஜிஸ்தி அஜ்மீரி, ஹஸனுஸ் ஸன்ஜரி (ரலி) அவர்களின் சிறப்பு வாய்ந்த மௌலிது ஷரீஃப்


முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! வமுஸல்லிமா!!

வரலாற்றுச் சிறப்பு மிக்க மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவில் பாரம்பரியமாக தொண்டு தொட்டு,ஒவ்வொரு வருடமும்,நடைபெற்று வரும் குத்துபுல் ஹிந் ஹஜ்ரத் கரிப நவாஸ் காஜா முயீனுத்தீன் ஜிஸ்தி அஜ்மீரி, ஹஸனுஸ் ஸன்ஜரி (ரலி) அவர்களின் சிறப்பு வாய்ந்த மௌலிது ஷரீஃப் இவ்வாண்டு,இன்ஷா அல்லாஹ் 26--05-2013 ஞாயிற்றுக்கிழமை  மாலை ( ரஜப் பிறை 16 -- 1434 ) அன்று மிக விமர்சையாக நடைபெற உள்ளது.என்பதை, மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.அல்ஹம்துலில்லாஹ்.வலமை போல் அஸர் தொழுகைக்குப் பின் மௌலிது ஷரீபும், மஃரிப் தொழுகைக்குப்பின்  யா நபி பைத்து, யாசீன்  மற்றும் சிறப்பு வாய்ந்த துஆ மஜ்லிஸும்,மஸ்ஜித் இந்தியாவின் கண்ணியமிகு இமாம்களான,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா.எஸ்.எஸ்.அஹ்மது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத் கிப்லா,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,முஹம்மது இஸ்ஹாக் பிலாலி,பைஜி,ஹஜ்ரத் ஆகியோரது சீரிய தலைமையில் நடைபெறும்.மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த மஜ்லிஸில் அனைவரும் தவறாது கலந்து கொண்டு,அல்லாஹ்வின் அளப்பெரும்,அன்பையும்,அருளையும்,பெற்றுக்கொள்ளுங்கள்.வஸ்ஸலாம்....



வெளியீடு ;;- மன்பயீ ஆலிம்.காம்

சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

Thursday, May 16, 2013

லால் பேட்டையில்,புனித மிகு புஹாரி ஷரீஃப் 37 ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் சிறப்பு துஆ மஜ்லிஸ்!!!



லால் பேட்டையில்,புனித மிகு புஹாரி ஷரீஃபின், 37 ஆம் ஆண்டு நிறைவு விழா  மற்றும் சிறப்பு வாய்ந்த துஆ மஜ்லிஸ் 11-05-2013  சனிக்கிழமை மாலை,ஞாயிறு இரவு 9 மணியளவில் ஜாமிஆ மதரஸா மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் தாருத் தப்ஸீர் கலைக்கூடத்தில்,ஜாமிஆவின் முதல்வர் மௌலானா மௌலவி,காரீ.ஏ.நூருல் அமீன் ஃபாஜில் மன்பயீ ஹஜ்ரத் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.மௌலானா மௌலவி ஷைகுல் ஃபிக்ஹ்,முப்தி எஸ்.ஏ.அப்துர் ரப் ஹஜ்ரத் கிப்லா அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.

தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவரும்,ஜாமிஆவின் பேராசிரியர்,ஷைகுல் ஹதீஸ்,அபுல் பயான்.மௌலானா மௌலவி ஏ.இ.எம்.அப்துர் ரஹ்மான் மிஸ்பாஹி ஹஜ்ரத் கிப்லா,தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின்,துணைத் தலைவர் செங்கோட்டைச் சிங்கம், மௌலானா மௌலவி ஆவூர், எம்.அப்துஸ் சுக்கூர் ஃபாஜில் மன்பயீ ஹஜ்ரத்,தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின்,துணைத் தலைவர் செங்கோட்டைச் சிங்கம், மௌலானா மௌலவி ஆவூர், எம்.அப்துஸ் சுக்கூர் ஃபாஜில் மன்பயீ ஹஜ்ரத் அவர்களின் மகனார்,மௌலானா அ.இஸ்மாயீல் ஹஸனி ஹஜ்ரத்,காட்டு மன்னார் கோயில் வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவரும்,ஜாமிஆவின் பேராசிரியர் மௌலானா மௌலவி,காரீ அ.முஹம்மது அஹமது ஹஜ்ரத் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.





மற்றும் ஜாமிஆவின் பேராசிரியப் பெருமக்களும்,உள்ளூர் உலமாப் பெருமக்களும்,உரையாற்றினார்கள்.இறுதியாக ஜாமிஆவின் முதல்வர் மௌலானா மௌலவி,காரீ.ஏ.நூருல் அமீன் ஃபாஜில் மன்பயீ ஹஜ்ரத்  அவர்கள் திக்ரு மஜ்லிஸ் நடத்தி,சிறப்பு  துஆச் செய்தார்கள்.இந்த சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில் ஏராளமானோர் கலந்து கொண்டு அல்லாஹ்வின் அளப்பெரும் அன்பையும்,அருளையும்,பெற்றுக்கொண்டார்கள்.வஸ்ஸலாம்..

வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.