Saturday, December 28, 2013

குடும்ப உறவுகள் சீர்பெற! என்ற தலைப்பில், சென்னையில் மாபெரும் சிறப்புக் கூட்டம் !!!


காலம்: இன்ஷா அல்லாஹ் ஹிஜ்ரீ 1435 ஸஃபர் பிறை 25 (29-12-2013) 
ஞாயிறு மாலை அஸர் முதல் இஷா வரை
 இடம்: ஜாமிஆ மஸ்ஜித், மேற்கு மாதா தெரு, இராயபுரம், சென்னை-13 
தலைமை: மௌலானா எம்.எஸ்.என். சுலைமான் ரியாஜி ஹள்ரத் 
(தலைவர் ஜமாஅத்துல் உலமாப் பேரவை-துறைமுகம்)
 முன்னிலை: அல்ஹாஜ் டாக்டர் கே. மஜீத் அவர்கள்
 (முத்தவல்லி, உறுப்பினர் த.நா. வக்ஃப் போர்டு) 
மற்றும் ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகிகள் 
கிராஅத்: மௌலானா காரீ. அப்துல் ஹலீம் ஹள்ரத் 
(அண்ணா நகர்) 
கீதம்: மௌலானா முஹம்மது யாசீன் பிலாலி
 வரவேற்புரை: மௌலானா முஹம்மது அமீன் பாகவி
 (தலைமை இமாம், ஜாமிஆ மஸ்ஜித், இராயபுரம்)
 அறிமுக உரை: மௌலானா ஓ.எஸ்.எம். முஹம்மது இல்யாஸ் காசிமி ஹள்ரத் (தலைவர் ஜமாஅத்துல் உலமாப் பேரவை சென்னை மாவட்டம்) 
சிறப்புரை ; மௌலானா பீ.எஸ்.பீ. ஜெய்னுல் ஆபிதீன் பாகவி (முன்னாள் முதல்வர், அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத், வேலூர்) 
தலைப்பு: தலாக் ஏன்? 
மௌலானா, அல்ஹாஃபிழ் சதீதுத்தீன் ஃபாஸில் பாகவி எம்.ஏ., எம்.ஃபில்., (தலைமை இமாம், மஸ்ஜித் குராசானீ பீர், அடையாறு) 
தலைப்பு: குடும்ப உறவுகள் சீர்பட! 
மௌலானா, அல்ஹாஃபிழ் எஸ். ஃபக்ருத்தீன், ஃபாஸில் பாகவி 
(துணைச் செயலாளர், ஜ.உலமாப் பேரவை, துறைமுகம் வட்டாரம்)
 தலைப்பு: வரதட்சணை ஒரு சாபக்கேடு!
 மௌலானா முஹம்மது உமர் சிராஜுத்தீன் ஹள்ரத் 
(செயலாளர், நிஸ்வான் மத்ரசா, மண்ணடி) 
தலைப்பு: இன்றைய இஸ்லாமியப் பெண்களின் நிலை
 நன்றியுரை: மௌலானா கே.ஏ. காதிர் முஹ்யித்தீன் மிஸ்பாஹி 
( செயலாளர், ஜமாஅத்துல் உலமாப் பேரவை, துறைமுக வட்டாரம்)
 விழா ஏற்பாடு: துறைமுக வட்டார ஜமாஅத்துல் உலமாப் பேரவை மற்றும் இராயபுரம் ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகக் குழு
 பெண்களுக்கு மஸ்ஜிதின் கீழ்த்தளத்தில் தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது. 
அனைவரும் வருக! அறிவமுதம் பருக!
வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

சேலம் மழாஹிருல் உலூம் அரபு கல்லூரி முன்னாள் பேராசிரியர் சித்தயன் கோட்டை,மௌலானா மௌலவி அல்ஹாஜ் N.ஷாஹுல் ஹமீத் பாகவி ஹழ்ரத் அவர்கள் மறைவு !!!





பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

சேலம் மழாஹிருல் உலூம் அரபு  கல்லூரி முன்னாள் பேராசிரியர் சித்தயன் கோட்டை,மௌலானா மௌலவி அல்ஹாஜ் N.ஷாஹுல் ஹமீத் ஹழ்ரத் பாகவி என்ற சீனிஹஜ்ரத் அவர்கள் திண்டுக்கல்லில் 23-12-2013  மாலை தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். 

அன்னாரின் ஜனாஸா தொழுகை ,24-12-2013 செவ்வாய்க்கிழமை லுஹர் தொழுகைக்குப்பின் திண்டுக்கல் N.G.O.காலணி ஹவ்வா மஸ்ஜித் கபரஸ்தானில் நடைபெற்றது.

  10 நாட்களுக்கு முன்புவரை இவர்களை எனக்கு அறிமுகமில்லை. 18-12-13 புதன்கிழமை அன்று P.S.P ஹழ்ரத் அவர்களின் வகுப்பு என் பள்ளியில் நடப்பது அறிந்து என் பள்ளிக்கு வந்தார்கள். ஹழ்ரத் அவர்களின் வகுப்பில் 2 மணி நேரம் முழுமையாக ஒரு மாணவனைப்போல் அமர்ந்திருந்தார்கள். 
வகுப்பு முடிந்து அனைவரும் சென்றுவிட்ட பின்னரும்,ஹழ்ரத் அவர்களின் கட்டிலில் படுத்திருந்து 1:30 மணிக்கு லுஹர் தொழுத பின்னரே சென்றார்கள். அப்போதுதான் தான் சேலம் மழாஹிருல் உலூமில் 40 வருடங்கள் பேராசிரியராக பணியாற்றியதை சொன்னார்கள். பிறகு பாக்கியாத்தின் விழாவுக்கு வெள்ளிக்கிழமையே வந்துவிட்டார்கள். 

30 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரிந்த பாகவிகள் சிறப்பிக்கப்பட்டதில் இவர்களும் ஒருவர். தான் புறப்படும் முன் மேடை ஏறி எல்லோரிடமும் சொல்லிவிட்டு படிகளில் நின்றபடியே அப்துல் ஹமீது ஹழ்ரத் அவர்களை கட்டியணைத்து அழுது விடை பெற்றார்கள். வீடு சேரும் முன்னரே வஃபாத்தாகி விட்டார்கள். 5நாட்களுக்குள் பழகி மிக விரைவில் அவர்களை இழந்தது மனதுக்கு அதிக வேதனையைத் தருகிறது என்று ஹஜ்ரத் அவர்களைப்பற்றி சென்னை மௌளானா மௌலவி ஃபக்ருத்தீன் பாக்கவி இவ்வாறு கூறினார்கள்.

எல்லாம் வல்ல அல்லாஹ் ஹழ்ரத் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, அப்பழுக்கற்ற மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜ‌ன்ன‌த்துல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மாணவர்கள், ஆலிம் பெருமக்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும்   சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினர்   பிரார்த்தனை செய்கிறார்கள். ஆமீன்!


உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் அன்னாரின் ஹக்கில் துஆ செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். வஸ்ஸலாம்...

நன்றி ;- சென்னை மௌளானா மௌலவி ஃபக்ருத்தீன் பாக்கவி

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
                                                                                                                                                           சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

Tuesday, December 24, 2013

சுந்தர நபிகளாரின் சந்தனப் புகழ்பாடும் மாதம் மற்றும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் 1488 வது மீலாது விழா!!!


முதஅவ்விதன் ! முபஸ்மிலன் !! முஹம்திலன் !!! முஸல்லியன் !!!! வமுஸல்லிமா !!!!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இன்ஷா அல்லாஹ்,அகிலத்தின் அருட்கொடை, நம் உயிரிழும் மேலான, நமது கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின்  பிறந்த புனிதம் நிறைந்த மாதமான,சிறப்பு வாய்ந்த ரபீஉல் அவ்வல் மாதத்தை அடைந்து,பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்  அவர்களின் மீது அதிகமாக ஸலவாத்துகள் சொல்லியும்,பன்னிரெண்டு தினங்கள் சுந்தர
நபிகளாரின் சந்தனப் புகழ்பாடும்,சுப்ஹான மவ்லிது ஷரீஃபை ஓத இருக்கின்றோம்.

மேலும் பெருமானாரின் புனிதம் நிறைந்த வாழ்க்கை வரலாறுகளை,நமது கண்ணியமிகு உலமாப் பெருமக்களால் தொடர் பயானாக கேட்டு அதன்படி அதிகமான நல் அமல்கள் செய்து,அதிகமான நன்மைகள் பெற இருக்கின்றோம். அதுசமயம் இன்ஷா அல்லாஹ் இந்தியா,இலங்கை,மலேசியா,மற்றும் உலகமெங்கும் அனைத்து பள்ளிவாசல்களிலும்,சிறப்புமிகு சுப்ஹான மௌலிது ஷரீஃப் ஓதப்படும்.இன்னும் நமது கண்ணியமிகு உலமாப் பெருமக்களால்,பெருமானாரின்,வாழ்க்கை வரலாறுகளை,பன்னிரெண்டு 
தினங்களும் பயான் செய்யப்படும்,

ஆகவே இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸ்களில் முஃமினான ஆண்கள்.பெண்கள் அனைவர்களும்,தவறாது கலந்து கொண்டு அல்லாஹ்வின் அளப்பெரும்,அன்பையும்,அருளையும் பெற்றுக்கொள்ளுமாறும்,மேலும் பெருமானாரின் 1488 வது பிறந்த நாள் வாழ்த்துக்களைக்கூறி,சித்தார்கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினரும்,சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்களும் அகமகிழ்ந்து துஆச்செய்கிறார்கள்.வஸ்ஸலாம்..

வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்