Sunday, November 1, 2015

ஷஹீத் ஹஜ்ரத் ஹஸன் ( ரலி ) ஷஹீத் ஹஜ்ரத் ஹுஸைன் (ரலி) ஆகியோரைப் பற்றி பாடிய பாடல்கள்.

நாகூர் ஷரீஃபின் தவப் புதல்வர்,இஸ்லாமிய
இன்னிசை உலகின் மன்னர்,அல்ஹாஜ் மர்ஹூம்
நாகூர் E.M.ஹனீஃபா அவர்கள்,  ஷஹீத் ஹஜ்ரத் 
ஹஸன்  ( ரலி ) ஷஹீத் ஹஜ்ரத் ஹுஸைன் (ரலி)
ஆகியோரைப் பற்றி பாடிய  பாடல்கள்.

இரு கண்கள் நம் ஹஸன் ஹுஸைன் வாழ்வே


உன் போல் ஒரு தியாகி உலகில் உதிப்பது ஏது




கண்கள் குளமாகுதம்மா கர்பலாவை நினைக்கியிலே




வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள். 

Saturday, October 31, 2015

அஷ்ஷைகு அல்ஹாஜ் மௌஸூக் ரஹ்மான் அத்தா அவர்களின் மனைவி ரஹ்மா பானு அவர்கள் மலேசியாவில் மறைவு !!!


அஷ்ஷைகு அல்ஹாஜ் மௌஸூக் ரஹ்மான் அத்தா 
அவர்களின் மனைவி ரஹ்மா பானு  அவர்கள், 
30-10 -2015 நேற்று மலேசியாவில் தாருல் ஃபனாவை 
விட்டும் தாருல் பகாவை அடைந்து விட்டார்கள். 
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா 31-10-2015 இன்று  லுஹர் 
தொழுகைக்குப் பிறகு,  கோலாலம்பூரில் 
நல்லடக்கம் செய்யப்பட்டது.


எல்லாம் வல்ல அல்லாஹ்,  தாயாரின்,நல்லறங்களை 
ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய
 'ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய 
வைப்பானாக, என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால்
 துயரப்படும்,  அஷ்ஷைகு அல்ஹாஜ் மௌஸூக் ரஹ்மான் அத்தா அவர்களுக்கும்,குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர்,  
மற்றும் நண்பர்கள் அனைவருக்கும், 'ஸப்ரன் ஜமீலா' எனும் 
அழகிய பொறுமையை தந்தருளவும், சுன்னத் வல் ஜமாஅத் 
வாழூர் இணைய தளத்தினர்   பிரார்த்தனை செய்கிறார்கள். ஆமீன்!

உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் அன்னாரின் 
ஹக்கில் துஆ செய்யும்படி அன்புடன் கேட்டுக் 
கொள்கின்றோம். வஸ்ஸலாம்...


வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள். 

Friday, October 30, 2015

தாஜுல் உலூம் மௌலானா M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி ஹழ்ரத் அவர்களின் தாயார் மறைவு !!!


தமிழ் பேசும் உலகில் புகழ் பெற்ற இஸ்லாமிய மார்க்க 
அறிஞரும், சுன்னத் ஜமாஅத் பேரியக்கத்தின் தலைவருமான,
கண்ணியத்திற்கும், மரியாதைக்குரிய "அஃப்ழலுல் உலமா" 
மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் 
M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A ஹழ்ரத்  அவர்களின்  
தாயார், ரஹ்மத்துல் குபுரா அவர்கள் 29-10 -2015 நேற்று 
இரவு11:30 மணியளவில்  தாருல் ஃபனாவை விட்டும் தாருல் 
பகாவை அடைந்து விட்டார்கள். 
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.



அன்னாரின் ஜனாஸா 30-10-2015 இன்று அஸர் தொழுகைக்குப் பிறகு, ஹழ்ரத் அவர்களின் சொந்த ஊரான, மல்லிப்பட்டினத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

எல்லாம் வல்ல அல்லாஹ், ஹழ்ரத் அவர்களின் தாயாரின்,நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும், தாஜுல் உலூம் உஸ்தாது அவர்களுக்கும்,குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மாணவர்கள், ஆலிம் பெருமக்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும்,சுன்னத் வல் ஜமாஅத் வாழூர் இணைய தளத்தினர்   பிரார்த்தனை செய்கிறார்கள். ஆமீன்!

உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் அன்னாரின் ஹக்கில் துஆ செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். வஸ்ஸலாம்...


வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.