Thursday, June 22, 2017

இஃதிகாஃபில் பேண வேண்டிய ஒழுங்குகள் !!!

பள்ளிவாசலில் இருக்கும் போது மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபடக் கூடாது. பள்ளிவாசல்களில் இஃதிகாஃப் இருக்கும் போது மனைவியருடன் கூடாதீர்கள்! இது அல்லாஹ்வின் வரம்புகள். எனவே அதை நெருங்காதீர்கள்! (தன்னை) அஞ்சுவதற்காக அல்லாஹ் தனது வசனங்களை மக்களுக்கு இவ்வாறு தெளிவுபடுத்துகிறான். (அல்குர்ஆன் 2:187)

·         தேவையில்லாமல் பள்ளியை விட்டு வெளியே செல்லக்கூடாது

ஆயிஷா ரலி கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பள்ளியில் இஃதிகாஃப் இருக்கும் போது தமது தலையை வீட்டிலிருக்கும் என் பக்கம் நீட்டுவார்கள். அதை நான் வாருவேன். இஃதிகாஃப் இருக்கும் போது தேவைப்பட்டால் தவிர வீட்டிருக்குள் வர மாட்டார்கள். (நூல்: புகாரி 2029) இதிலிருந்து தேவையில்லாமல் வெளியில் செல்லக் கூடாது என்பதையும் அவசியத் தேவைக்காக வெளியே செல்லாம் என்பதை அறியலாம்.


மூன்று வகை இஃதிகாஃப்: 1, வாஜிப் [நேர்ச்சையின் இஃதிகாஃப்]
2, சுன்னத் [ரமளான் கடைசிப்பத்தின் இஃதிகாஃப்] 3, நஃபில்

الاول-عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ عُمَرَ رضي الله عنه سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كُنْتُ نَذَرْتُ فِي الْجَاهِلِيَّةِ أَنْ أَعْتَكِفَ لَيْلَةً فِي الْمَسْجِدِ الْحَرَامِ قَالَ فَأَوْفِ بِنَذْرِكَ (بخاري)2043 بَاب الِاعْتِكَافِ لَيْلًا-كتاب الاعتكاف- الثاني عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَعْتَكِفُ الْعَشْرَ الْأَوَاخِرَ مِنْ رَمَضَانَ حَتَّى تَوَفَّاهُ اللَّهُ ثُمَّ اعْتَكَفَ أَزْوَاجُهُ مِنْ بَعْدِهِ (بُخاري( باب الاِعْتِكَافِ فِى الْعَشْرِ الأَوَاخِرِ- -الثالث فَالنَّفَلُ يَجُوزُ بِغَيْرِ صَوْمٍ هُوَ أَنْ يَدْخُلَ الْمَسْجِدَ بِنِيَّةِ الِاعْتِكَاف مِنْ غَيْرِ أَنْ يُوجِبَهُ عَلَى نَفْسِهِ 
فَيَكُونُ مُعْتَكِفًا بِقَدْرِ مَا أَقَامَ فَإِذَا خَرَجَ انْتَهَى اعْتِكَافُهُ (جوهرة النيرة)

ரமளானில் பிந்திய பத்தில் இஃதிகாஃப் இருப்பது சுன்னத் முஅக்கதாவாகும். கடைசிப் பத்தில் மூன்று நாள், அல்லது ஒரு நாள் இஃதிகாஃப் இருப்பது நஃபிலான இஃதிகாஃபில் சேருமே தவிர சுன்னத் முஅக்கதாவை நிறைவேற்றியதாக ஆகாது

قَالَ الزُّهْرِيُّ يَا عَجَبًا لِلنَّاسِ تَرَكُوا الِاعْتِكَافَ وَمَا تَرَكَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُنْذُ دَخَلَ الْمَدِينَةَ إلَى أَنْ تَوَفَّاهُ اللَّهُ وَهُوَ أَشْرَفُ الْأَعْمَالِ لِأَنَّهُ جَمَعَ بَيْنَ عِبَادَتَيْنِ الصَّوْمُ وَالْجُلُوسُ فِي الْمَسْجِدِ وَفِيهِ تَفْرِيغُ الْقَلْبِ وَتَسْلِيمُ النَّفْسِ إلَى بَارِئِهَا وَتَبْعِيدَ النَّفْسِ عَنْ شُغْلِ الدُّنْيَا الَّتِي هِيَ مَانِعَةٌ عَمَّا يَسْتَوْجِبُهُ الْعَبْدُ مِنْ الْقُرْبَى (الجوهرة)

இஃதிகாஃப் இருப்பவருக்கு நோன்பு கட்டாயமாக்கப்பட்டதின் தாத்பரியம். அல்லாஹ்வின் வீட்டில் இருப்பதை தனக்கு அவசியமாக்கிக் கொண்ட ஒருவர் அல்லாஹ்வின் விருந்தாளியாக ஆக வேண்டுமானால் நோன்பு அவசியம்

وَمِنْ مَحَاسِنِهِ أَيْضًا اشْتِرَاطُ الصَّوْمِ فِي حَقِّهِ وَالصَّائِمُ ضَيْفُ اللَّهِ فَالْأَلْيَقُ بِهِ أَنْ يَكُونَ فِي بَيْتِ اللَّهِ (الجوهرة)

நிர்பந்தத்தால் விடுபட்ட இஃதிகாஃபை களா செய்ய வேண்டுமா?

عَنْ عَائِشَةَ رَضِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَكَرَ أَنْ يَعْتَكِفَ الْعَشْرَ الْأَوَاخِرَ مِنْ رَمَضَانَ فَاسْتَأْذَنَتْهُ عَائِشَةُ فَأَذِنَ لَهَا وَسَأَلَتْ حَفْصَةُ عَائِشَةَ أَنْ تَسْتَأْذِنَ لَهَا فَفَعَلَتْ فَلَمَّا رَأَتْ ذَلِكَ زَيْنَبُ ابْنَةُ جَحْشٍ أَمَرَتْ بِبِنَاءٍ فَبُنِيَ لَهَا قَالَتْ وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا صَلَّى انْصَرَفَ إِلَى بِنَائِهِ فَبَصُرَ بِالْأَبْنِيَةِ فَقَالَ مَا هَذَا قَالُوا بِنَاءُ عَائِشَةَ وَحَفْصَةَ وَزَيْنَبَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَالْبِرَّ أَرَدْنَ بِهَذَا مَا أَنَا بِمُعْتَكِفٍ فَرَجَعَ فَلَمَّا أَفْطَرَ اعْتَكَفَ عَشْرًا مِنْ شَوَّالٍ (بخاري)

ஆயிஷா ரழி கூறினார்கள் நபி ஸல் அவர்கள் ரமழானில் கடைசிப் பத்தில் இஃதிகாஃப் இருக்கப் போவதாக கூறினார்கள் அப்போது நானும் மஸ்ஜிதில் இஃதிகாஃப் இருக்கிறேன் என்று கூற நபி ஸல் எனக்கு அனுமதி கொடுத்தார்கள் அங்கே ஒரு கூடாரத்தை அமைத்துக் கொண்டேன் இதைக் கேள்விப்பட்ட ஹஃப்ஸா ரழி அவர்கள் என்னிடம் தமக்காகவும் அனுமதி கேட்குமாறு கோரினார் அவ்வாறே செய்தேன் இதைக்கண்ட ஜைனப் பின்து ஜஹ்ஷ் ரழி ஒரு கூடாரம் அமைக்க உத்தரவிட்டார் அவ்வாறே செய்யப்பட்டது.

 நபி ஸல் அவர்கள் தொழுகை முடிந்து தன் கூடாரத்திற்கு சென்ற போது அங்கே பல கூடாரங்களைக் கண்டு இவை என்ன என்று கேட்டார்கள் அதற்கு நபித் தோழர்கள் இவை ஆயிஷா ,ஹஃப்ஸா, ஜைனப் ரழி ஆகியோரின் கூடாரங்கள் என்று கூற, இதன் மூலம் நன்மையைத் தான் இவர்கள் நாடுகிறார்களா? என்று கேட்டு விட்டு இவற்றை நான் காணாதவாறு அப்புறப் படுத்துங்கள் என்றார்கள் உடனே அவைகள் அப்புறப்படுத்தப்பட்டன. பின்பு நபி (ஸல்) அவர்கள் நான் இஃதிகாஃப் இருக்கப் போவதில்லை என்று கூறி விட்டு ஷவ்வால் மாதத்தின் கடைசி பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்தார்கள் (புஹாரீ – 2041, 2045, 2031)


இந்த ஹதீஸை வைத்து இஃதிகாஃபை ஆரம்பித்து நடுவில் விட்டு விட்டால் பின்னர் வேறொரு நாளில் நிறைவேற்ற வேண்டுமென சில அறிஞர்கள் கூறுவர். ஆனால் வேறு சிலர் வேறொரு நாளில் அதை நிறைவேற்றத் தேவையில்லை என்று கூறி, அதற்கு ஆதாரமாக பின்வரும் விளக்கத்தை கூறுகிறார்கள் நபி ஸல் அவர்கள் ஷவ்வால் மாதம் இஃதிகாஃப் இருந்த போது தம் மனைவியரை இஃதிகாஃப் இருக்குமாறு கூறவில்லை. மேலும் நபி (ஸல்) அவர்கள் ரமழானில் கைவிட்ட இஃதிகாஃபை ஷவ்வால் மாதத்தில் நிறைவேற்றுவது கூடும் என்பதை காட்டுவதற்காகவே இவ்வாறு செய்தார்களே தவிர கட்டாயம் என்பதற்காக அல்ல..


அந்த வருடம் மட்டும் ரமழானில் இஃதிகாஃபை விட்டதற்கு காரணம் என்ன? கூடாரங்கள் அதிகமானதால் பள்ளிவாசலில் தொழுகையாளிகளுக்கு இட நெருக்கடி ஏற்படும் நிலை உருவானது மூன்று மனைவியரும் பள்ளிவாசலில் இருக்கும் நிலை ஏற்பட்டதால் வீட்டில் மனைவியருடன் இருப்பதைப் போன்றே சூழல் உருவாகி விடும். இஃதிகாஃபின் நோக்கமே சிதைந்து விடும் என்பதால் தம் மனைவியரையும் சங்கடப்படுத்தாத வகையில் ரமழானில் இஃதிகாஃபை கைவிட்டார்கள் (ஃபத்ஹுல் பாரீ)

இந்த இஃதிகாஃபின் முக்கிய நோக்கம் லைலத்துல் கத்ரு இரவை அடைவதாகும். ஒரு வருடத்தில் நபி ஸல் லைலத்துல் கத்ரு இரவைத் தேடி ரமழானின் மூன்று பத்து நாட்களும் இஃதிகாஃப் இருந்தார்கள். முதல் பத்து முடிந்த போது அதில் லைலத்துல் கத்ரு இல்லை என அறிவிக்கப்பட்டு இரண்டாம் பத்திலும் இஃதிகாஃப் இருந்தார்கள். பின்பு அதிலும் லைலத்துல் கத்ரு இல்லை என்று அறிவிக்கப்பட்டு கடைசிப் பத்தில் அந்த இரவு உண்டு என்பதை உறுதி செய்தார்கள்.


عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ اعْتَكَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَشْرَ الْأُوَلِ مِنْ رَمَضَانَ وَاعْتَكَفْنَا مَعَهُ فَأَتَاهُ جِبْرِيلُ فَقَالَ إِنَّ الَّذِي تَطْلُبُ أَمَامَكَ فَاعْتَكَفَ الْعَشْرَ الْأَوْسَطَ فَاعْتَكَفْنَا مَعَهُ فَأَتَاهُ جِبْرِيلُ فَقَالَ إِنَّ الَّذِي تَطْلُبُ أَمَامَكَ فَقَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطِيبًا صَبِيحَةَ عِشْرِينَ مِنْ رَمَضَانَ فَقَالَ مَنْ كَانَ اعْتَكَفَ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلْيَرْجِعْ فَإِنِّي أُرِيتُ لَيْلَةَ الْقَدْرِ وَإِنِّي نُسِّيتُهَا وَإِنَّهَا فِي الْعَشْرِ الْأَوَاخِرِ فِي وِتْرٍ وَإِنِّي رَأَيْتُ كَأَنِّي أَسْجُدُ فِي طِينٍ وَمَاءٍ وَكَانَ سَقْفُ الْمَسْجِدِ جَرِيدَ النَّخْلِ وَمَا نَرَى فِي السَّمَاءِ شَيْئًا فَجَاءَتْ قَزْعَةٌ فَأُمْطِرْنَا فَصَلَّى بِنَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى رَأَيْتُ أَثَرَ الطِّينِ وَالْمَاءِ عَلَى جَبْهَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَرْنَبَتِهِ تَصْدِيقَ رُؤْيَاهُ وفي رواية فَأَبْصَرَتْ عَيْنَايَ رَسُولَ اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَى جَبْهَتِهِ أَثَرُ الْمَاء وَالطِّين مِنْ صُبْحِ إِحْدَى وَعِشْرِينَ (بخاري)

இஃதிகாஃபின் ஒழுக்கங்கள்- ஐந்து வேளை தொழுகை நடைபெறும் மஸ்ஜிதில் மட்டுமே ஆண்கள் இஃதிகாஃப் இருக்க வேண்டும்
.
عن ابن عباس والحسن رض قالا لاَ اعْتِكافَ إِلاَّ فِى مَسْجِدٍ تُقَامُ فِيهِ الصَّلاَةُ (سنن الكبري للبيهقي) عَنْ عَائِشَةَ رض أَنَّهَا قَالَتِ السُّنَّةُ عَلَى الْمُعْتَكِفِ أَنْ لاَ يَعُودَ مَرِيضًا وَلاَ يَشْهَدَ جَنَازَةً وَلاَ يَمَسَّ امْرَأَةً وَلاَ يُبَاشِرَهَا وَلاَ يَخْرُجَ لِحَاجَةٍ إِلاَّ لِمَا لاَ بُدَّ مِنْهُ وَلاَ اعْتِكَافَ إِلاَّ بِصَوْمٍ (ابوداود)

المعتكف إذا أتى كبيرة فسد اعتكافه لأن الكبيرة ضد العبادة كما أن الحدث ضد الطهارة والصلاة وترك ما حرم اللّه أعلى منازل الاعتكافِ في العبادة (قرطبي)

வியாபாரப்பொருட்களை பள்ளிக்குள் கொண்டு வராமல் வியாபாரத்தை பேசி முடிப்பது நிர்பந்தமான சூழ்நிலையில் மட்டும் கூடும்.
பள்ளிக்கு வெளியே நோயாளிகளை நலம் விசாரிப்பதாக இருந்தால் நடந்து கொண்டே நலம் விசாரிக்கலாம்.

أَنْ لاَ يَعُودَ مَرِيضًا: عَنْ عَائِشَةَ رضي الله عنها قَالَتْ كَانَ النَّبِىُّ صلى الله عليه وسلم يَمُرُّ بِالْمَرِيضِ وَهُوَ مُعْتَكِفٌ فَيَمُرُّ كَمَا هُوَ وَلاَ يُعَرِّجُ يَسْأَلُ عَنْهُ (ابوداود) عَنْ عَمْرَةَ أَنَّ عَائِشَةَ رضي الله عنها كَانَتْ إِذَا اعْتَكَفَتْ لاَ تَسْأَلُ عَنِ الْمَرِيضِ إِلاَّ وَهِىَ تَمْشِى لاَ تَقِفُ (مؤطا)

மலம்,ஜலம் கழித்தபின் உடனே திரும்பி விடுவது நல்லது

وَلَا يَخْرُجُ مِنْ الْمَسْجِدِ إلَّا لِحَاجَةِ الْإِنْسَانِ وَهِيَ الْغَائِطِ وَالْبَوْلِ لِأَنَّهُ مَعْلُومٌ وُقُوعُهَا فَلَا بُدَّ مِنْ الْخُرُوجِ لِأَجْلِهَا وَلَا يَمْكُثُ بَعْدَ فَرَاغِهِ مِنْ الطَّهُورِ (الهداية)

கழிவறையில் நெருக்கடி இருந்தால் வேறு நேரத்தில் செல்வது நல்லது. அல்லது இஃதிகாஃப் இருப்பவருக்காக பிறர் விட்டுக் கொடுப்பது நல்லது. புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர் கழிவறையில் அதற்காக நேரத்தை செலவழித்துக்கொண்டிருப்பது கூடாது.


ரமளானில் இஃதிகாஃப் இருக்கும் போது  
குர்ஆனை முழுவதும் ஓதுவது

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْتَكِفُ كُلَّ عَامٍ عَشْرَةَ أَيَّامٍ فَلَمَّا كَانَ الْعَامُ الَّذِي قُبِضَ فِيهِ اعْتَكَفَ عِشْرِينَ يَوْمًا وَكَانَ يُعْرَضُ عَلَيْهِ الْقُرْآنُ فِي كُلِّ عَامٍ مَرَّةً فَلَمَّا كَانَ الْعَامُ الَّذِي قُبِضَ فِيهِ عُرِضَ عَلَيْهِ مَرَّتَيْنِ 
(ابوداود- بَاب مَا جَاءَ فِي الِاعْتِكَافِ- كِتَاب الصِّيَامِ)

இஃதிகாஃப் இருக்கும்போது குர்ஆனை அதிகம் ஓத வேண்டும் என்ற படிப்பினையும் மேற்படி ஹதீஸில் உண்டு.

வீண்பேச்சுக்களால் இஃதிகாஃபின் நன்மை கிடைக்காது

عَمْرُو بْنُ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ: { نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الْبَيْعِ وَالشِّرَاءِ فِي الْمَسْجِدِ، وَأَنْ تُنْشَدَ فِيهِ الْأَشْعَارُ، وَأَنْ تُنْشَدَ فِيهِ الضَّالَّةُ، وَعَنْ الْحِلَقِ يَوْمَ الْجُمُعَةِ قَبْلَ الصَّلَاةِ (مسند أحمد)

இஃதிகாஃப் இருப்பவர் தேவையானதை பேசிக்கொள்ளலாம்

فَإِمَّا تَرَيِنَّ مِنَ الْبَشَرِ أَحَدًا فَقُولِي إِنِّي نَذَرْتُ لِلرَّحْمَنِ صَوْمًا فَلَنْ أُكَلِّمَ الْيَوْمَ إِنْسِيًّا (مريم-26) فهذا النذر الذي نذرته مريم ألا تكلم اليوم إنسياً كان جائزاً في شريعتهم أما في الشريعة التي جاءنا بها نبينا صلى الله عليه وسلم فلا يجوز ذلك النذر ولا يجب الوفاء به.
 (اضواء البيان)

எனவே, இஃதிகாஃபின் சிறப்புகளையும் சட்டங்களையும்சரியான முறையில் விளங்கி அதன்படி இஃதிகாஃப் இருந்துஅல்லாஹ்வின் அருளை பெறக்கூடிய நன்மக்களாகஅல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள்வானாக! நமதுஇஃதிகாஃபில் குறை இருப்பினும் அதை பொருத்து மன்னித்துஅதை ஒப்புக்கொள்வானாக! அவனது பிரத்தியோக அருளுக்குசொந்தக்காரர்களோடு நம்மையும் இணைத்துவாழச்செய்வானாக! ஆமீன் யாரப்பல் ஆலமீன்!!

தகவல் வழங்கியோர்: 
நஸீர் மிஸ்பாஹி, முஹம்மது ஆரிஃப் மன்பஈ, மற்றும் 
மேலதிக தகவலோடு தொகுத்து வழங்கியவர்ஹனீப் ஜமாலி. 

நன்றி ;- வரஸத்துல் அன்பியா இணையதளம்.
வெளியீடு :- சுன்னத் ஜமாஅத் பேரியக்க சித்தார் கோட்டை கிளை.

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!


அல்குர்ஆனும் அஸ்ஸுன்னாவும் கூறிய வணக்க வழிபாடுகளில் ஒன்றே இஃதிகாஃபாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமழானுடைய காலங்களில் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள் என்று உறுதியான ஹதீஸ்களில் பதிவாகியுள்ளது.

இஃதிகாஃப் இருப்பவர் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகள் மற்றும் இஃதிகாஃபுடன் தொடர்புடைய சட்டங்கள் பற்றிய விளக்கங்களை எம்மில் பலர் அறியாதவர்களாக உள்ளனர். எனவே, இச்சிறு தொகுப்பில் இஃதிகாஃப் தொடர்பான மார்க்கச் சட்டங்களைக் கேள்வி பதில் அமைப்பில் மிகச் சுருக்கமாக தொகுத்திருக்கின்றோம். அல்லாஹ் இதன் மூலம் எம்மனைவருக்கும் பயனளிப்பானாக! அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!

1. இஃதிகாஃப் என்றால் என்ன?

பதில்: அரபு மொழியில் இஃதிகாஃப் என்ற வார்த்தைக்கு ஒரு இடத்தைப் பற்றிப்பிடித்திருத்தல் என்று பொருள் வழங்கப்படுகின்றது. மார்க்க அடிப்படையில் இஃதிகாஃப் என்பது: பள்ளிவாசலில் குறிப்பிட்ட அமைப்பில் அல்லாஹ்வுக்காகத் தங்கியிருத்தல் ஆகும்.

2. இஃதிகாஃபின் சட்டம் என்ன?

பதில்: குர்ஆன், ஸுன்னா, இஜ்மா உடைய ஆதாரங்களைக் கொண்டு இஃதிகாஃப் இருப்பது வலியுறுத்தப்பட்ட சுன்னத்தான காரியமாகும். அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்:“பள்ளிவாசல்களில் நீங்கள் இஃதிகாப் இருக்கும்போது அவர்களுடன் ஒன்று கூடதீர்கள்.” (அல்பகறா: 187)

ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள்: “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அல்லாஹ் அவரை மரணிக்கச் செய்யும் வரை ரமழானின் இறுதிப் பத்தில் இஃதிகாப் இருந்தார்கள். பின்பு அவரது மனைவிமார்கள் அவரது மரணத்திற்குப் பின்பு இஃதிகாப் இருந்தார்கள்.” (புஹாரி, முஸ்லிம்) இப்னுல் முன்திர், இப்னு குதாமா, நவவி(ரஹிமஹுமுல்லாஹ்) ஆகியோர் இஃதிகாஃப் இருப்பது சுன்னத்தான காரியம் என்பது அறிஞர்களால் ஏகோபித்த முடிவு என்று கூறியிருக்கின்றார்கள்.

3. இஃதிகாப் இருப்பவர் தான் நாடிய போது இஃதிகாஃபை 
துண்டித்து விட்டு வெளியேறலாமா?

பதில்: இஃதிகாஃப் இருப்பவர் தனது இஃதிகாஃபைத் துண்டித்து விட்டு தான் நாடிய போது வெளியேறிச் செல்லலாம். இஃதிகாஃபைப் பூரணப்படுத்திய பின்பே வெளியேறிச் செல்ல வேண்டும் என்பதற்கான ஆதாரங்கள் காணப்படவில்லை.

4. இஃதிகாஃப் இருப்பவர் நோன்பாளியாக இருப்பது அவசியமா?

பதில்: சுன்னத்தான இஃதிகாஃப் (ரமளான் கடைசிப் பத்து நாட்கள் மேற்கொள்ளப்படுகின்றத இஃதிகாஃப்) இருப்பவர் நோன்பாளியாக இருக்க வேண்டும் என்பது அவசியமாகும்.

5. பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருப்பது அவசியமா?

பதில்: அல்லாஹுத்தஆலா பள்ளிவாசலைக் கொண்டே இஃதிகாஃபைக் குறிப்பாக்கியுள்ளான். அல்லாஹுதஆலா கூறுகின்றான்: “பள்ளிவாசல்களில் நீங்கள் இஃதிகாஃப் இருக்கும் போது அவர்களுடன் ஒன்று கூடாதீர்கள்.” (அல்குர்ஆன் 2:187)எனவே, இஃதிகாஃப் பள்ளிவாசலில் மாத்திரமே அமைந்திருக்க வேண்டும்.

6. எவ்வாறான பள்ளிவாசல்களில் இஃதிகாஃப் இருக்க முடியும்?

பதில்: ஜமாஅத் தொழுகை நடைபெறும் அனைத்துப் 
பள்ளிவாசல்களிலும் இஃதிகாப் இருக்கலாம்.
அல்லாஹுத்தஆலா இவ்வசனத்தில் பள்ளிவாசல்கள் 
எனப் பொதுப்படையாகவே கூறியுள்ளான். 

இமாம் புஹாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது ஸஹீஹில் “அனைத்துப் பள்ளிவாசல்களிலும் இஃதிகாஃப் இருக்கலாம்” எனத் தலைப்பிட்ட பின்பு மேற்குறிப்பிடப்பட்ட அல்குர்ஆன் (2:187) வசனத்தை இடம்பெறச் செய்துள்ளார்கள்.

7. இஃதிகாஃபின் குறைந்த காலம் எவ்வளவு?

பதில்: இஃதிகாஃபின் குறைந்த காலம் ஒரு நிமிடமோ, ஒரு 
மணி நேரமோ, ஒரு நாளோ (24 மணி நேரமோ) இருக்கலாம்.

8. இஃதிகாஃப் இருப்பவர் மலம்ஜல தேவைகளுக்காகப் 
பள்ளிவாசலை விட்டு வெளியேறலாமா?

பதில்: மலம்ஜல தேவைகளுக்காக இஃதிகாஃப் இருப்பவர் பள்ளிவாசலை விட்டு வெளியேறலாம் என்பது குறித்து இப்னுல் முன்திர், இப்னு குதாமா ரஹிமஹுமல்லாஹ் ஆகியோர் அறிஞர்களின் ஒன்றுபட்ட முடிவைக் குறிப்பிட்டுள்ளார்கள்.

9. ஏனைய தேவைகளுக்காகப் பள்ளிவாசலை விட்டு வெளியேறலாமா?

பதில்: பள்ளிவாசலில் நிறைவேற்ற முடியாத அவசியத் தேவைகளுக்காகப் பள்ளிவாசலை விட்டு இஃதிகாஃப் இருப்பவர் வெளியேறிச் செல்லலாம். மேலும், அல்லாஹ் கட்டாயப்படுத்திய காரியங்களைச் செய்வதற்கும் வெளியேறிச் செல்லலாம். அது நீண்ட இடைவெளியை ஏற்படுத்தாதவாறு இருக்க வேண்டும்.

10. இஃதிகாஃப் இருப்பவர் தனது மனைவியுடன் உறவில் 
ஈடுபட்டால் அவரது இஃதிகாஃபின் நிலை என்ன?

பதில்: இஃதிகாஃப் இருப்பவர் தனது மனைவியுடன் உறவில் 
ஈடுபட்டால் அவரது இஃதிகாஃப் முறிந்து விடும்.

நன்றி ;- வரஸத்துல் அன்பியா இணையதளம்.

வெளியீடு :- சுன்னத் ஜமாஅத் பேரியக்க சித்தார் கோட்டை கிளை.

முன்னாள் ஜனாதிபதி மர்ஹூம் அப்துல் கலாமின் நினைவகம் !!!


முன்னாள் ஜனாதிபதி மர்ஹூம் அப்துல் கலாம் அவர்களின் நினைவகம் 
வரும் ஜூலை மாதம் 27-ம் தேதி அவரது பிறந்த ஊரான இராமேஸ்வரம் அருகிலுள்ள பேய்கரும்பில் திறப்பு விழா காண உள்ள நிலையில், இந்த நினைவகத்தின் பல்வேறு சிறப்பம்சங்களை பற்றிய அரிய தகவல்கள் தெரியவந்துள்ளது.

பிறந்த நாள், நினைவு நாளில் மர்ஹூம் அப்துல் கலாம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் சூரிய கதிர்கள்: நினைவகத்தில் பிரம்மாண்ட ஏற்பாடு

முன்னாள் ஜனாதிபதி மர்ஹூம்அப்துல் கலாம் அவர்களின் இரண்டாவது நினைவு நாளன்று இராமேஸ்வரத்தில் உள்ள அவரது நினைவகத்தின் திறப்புவிழா நடைபெறவுள்ள நிலையில், இந்த நினைவிடத்தின் சிறப்பம்சங்கள் பற்றிய அறிந்து கொள்வோமா..? 

“தோன்றின் புகழோடு தோன்றுக! அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று” என்று வள்ளுவப் பெருந்தகை தனது உலகப் பொதுமறையான திருக்குறளில் பதிவிட்ட உவமைக்கு எடுத்துக்காட்டாக இந்த பூவுலகில் வெகு சிலரே தோன்றியுள்ளனர்.

கம்சனின் அடக்குமுறை ஆட்சிக்காலத்தில் சிறைச்சாலையில் பிறந்த கண்ணன், பிற்காலத்தில் கீதா உபதேசம் என்னும் பகவத் கீதையின் மூலம் இந்த உலகில் தர்ம நியாயங்களை நிலைநாட்டும் வகையில் பகவத் கீதையை எடுத்துரைத்தார்.

ஜெருசலேம் நாட்டில் கொடுங்கோல் ஆட்சியாளராக செங்கோல் செலுத்திய எரோது மன்னன் காலத்தில் பெத்லகேம் நகரில் உள்ள ஒரு மாட்டுத் தொழுவத்தில் அவதரித்த இயேசு பிரான், பிற்காலத்தில் உலகளாவிய அளவில் கிறிஸ்தவம் என்னும் புதிய மார்க்கத்தை உருவாக்கினார்.

நேபாள மண்ணை ஆண்ட சுத்தோத்தன மன்னரின் செல்வ மகனாக இந்த பூமியில் பிறந்த இளவரசர் சித்தார்த்தன், தனது மெய்ஞானத் தேடலின் வாயிலாக உலக இச்சைகளை துறந்து, புத்தபிரான் என்ற மாமனிதராக உயர்ந்தார்.

இவர்கள் எல்லோருமே ஏதோ ஒரு காரண-காரியத்துக்காக இந்த பூவுலகில் பிறந்து, பூதவுடல் மறைந்தாலும் புகழுடல் அழியாத வரலாற்றுப் புருஷர்களாக மக்களின் இதயங்களில் வாழ்வாங்கு வாழ்ந்து வருகின்றனர்.

அவ்வகையில், கடந்த நூற்றாண்டில் எந்த ஒரு மகாபுருஷராவது இந்த பூமியில் அவதரித்துள்ளாரா..? என்ற தேடலில் நாம் ஈடுபட்டால் அதற்கு பதிலாக நமக்கு கிடைக்கும் ஒரே பதில் மர்ஹூம் "அவ்வுல் பக்கிர் ஜைனுல் ஆபிதீன் அப்துல் கலாம்" என்பதாகதான் இருக்கும்.

தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மிகச்சிறிய நகரமான இராமேஸ்வரத்தில்,ஒரு எளிய இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் அக்கினி குஞ்சுகளான பல்வேறு அதிநவீன ஏவுகணைகளை உருவாக்கி நமது தாய்நாட்டை உலகின் வல்லரசு நாடுகளின் பட்டியலில் இணைத்த அறிவியலாளராக இருந்த அமரர் அப்துல் கலாம், “பொக்ரான்” அணுகுண்டு சோதனையின் மூலம் ஒட்டுமொத்த உலகத்தையும் இந்தியாவின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் என்பதை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.



அரசியல் கட்சிகளின் சாயமோ, அடையாளமோ இல்லாத இந்தியாவின் முதல் ஜனாதிபதி என்ற மிகப்பெரிய சிறப்புக்குரிய மேதையாக திகழ்ந்த மர்ஹூம் அப்துல் கலாம் தனது பதவிக் காலத்தில் எவ்வளவு எளிமையான - இனிமையான - தன்னடக்கமான வாழ்முறையை மேற்கொண்டார் என்பது நாளிதழ் செய்திகளாகவும், ஒரு உயரிய மனிதரின் எளிமையான வாழ்வு என்ற வகையில் பலநூறு புத்தகங்களாகவும், காலத்தால் அழிக்க இயலாத வரலாற்றுச் சான்றாகவும் பதிவாகியுள்ளது.

இப்படிப்பட்ட தன்னிகரற்ற வரலாற்றுக்கு சொந்தக்காரரான முன்னாள் ஜனாதிபதி மர்ஹூம் அப்துல் கலாம் பிறந்த மண்ணில் அவரின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவகத்தின் திறப்புவிழா அவரது இரண்டாவது மறைவு தினமான 27-7-2017 அன்று நடைபெறவுள்ளது.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்றுவரும் நிலையில் இந்த நினைவிடத்தின் சிறப்புகளைப் பற்றி பல முக்கிய தகவல்கள் தெரியவந்துள்ளது. 

மத்திய பாதுகாப்பு துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் சுமார் ரூ.15 கோடி ரூபாய் செலவில் இந்த நினைவிடத்தின் முதற்கட்ட பணி நிறைவடைய உள்ளது. 



நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் மக்களுக்கிடையேயான சமத்துவம், சகோதரத்துவத்தை தனது வாழ்நாள் முழுவதும் வலியுறுத்தி வந்த அப்துல் கலாமின் நினைவிடத்தை அமைப்பதற்காக இந்தியாவின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கட்டுமானப் பொருட்கள் தருவிக்கப்பட்டுள்ளன என்பது மிக குறிப்பிடத்தக்க அம்சமாகும். இந்த பொருட்களை எல்லாம் பல பகுதிகளில் இருந்து கப்பலின் மூலம் இராமேஸ்வரத்திற்கு கொண்டு வரப்பட்டது. 

குறிப்பாக, நினைவகத்தின் நிலைக்கதவுகள் மரவேலைப்பாட்டிற்கு பேர் போன தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது. பளிங்குக்கல் சிற்பங்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சால்மர் மற்றும் ஆக்ரா நகரில் இருந்து வந்து சேர்ந்துள்ளது. 

கர்நாடக மாநிலத்தில் இருந்து பளிங்கு கற்களும், பெங்களூர் நகரில் இருந்து வலிமையான கல் தூண்களும் வந்து சேர்ந்துள்ளன. சுவர்களை அலங்கரிக்கும் எழில்மிகு சுவரோவியங்கள் ஐதராபாத், மேற்கு வங்காளத்தின் பிர்பம் மாவட்டத்தில் உள்ள சாந்தி நிகேதன் ஆசிரமம், கொல்கத்தா மற்றும் சென்னையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

இந்த நினைவகத்தை நிர்மாணம் செய்யும் பணிகளில் பீகார், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், கர்நாடகம், ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சுமார் ஐநூறு தொழிலாளர்கள் இரவு, பகலாக ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நினைவகத்தின் சிறப்பு அம்சங்களுள் முக்கியமானதாக முகப்பில் உள்ள அலங்கார வளைவு டெல்லியில் உள்ள இந்தியா கேட் அலங்கார நுழைவு வாயிலின் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நினைவகத்தின் மேற்புறத்தில் உள்ள கூம்பு வடிவ கோபுரங்கள் ஜனாதிபதி மாளிகையில் உள்ள கோபுரங்களின் சாயலில் அமைக்கப்பட்டுள்ளது. 

மர்ஹூம் அப்துல் கலாமின் வாழ்க்கையை புகைப்படங்கள் மற்றும் ஓவியங்களால் நான்கு கட்டங்களாக விளக்கும் வகையில் நான்கு பிரம்மாண்ட அரங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.



தற்போதைய திட்டத்தின்படி, இதில் முதலாவது அரங்கம் அப்துல் கலாமின் மழலைப்பருவம் மற்றும் மாணவப்பருவத்தை சித்தரிக்கும் வகையில் அமையும். இரண்டாவது அரங்கம் அவர் ஜனாதிபதியாக பணியாற்றிய காலத்தையும் பாராளுமன்றம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையில் சிறப்புரையாற்றிய காலங்களையும் நினைவு கூரும் வகையில் அமையும். 

மூன்றாவது அரங்கம் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ மற்றும் இந்திய பாதுகாப்பு துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் அவர் பணியாற்றிய காலகட்டங்களை நினைவு கூரும் வகையில் அமைந்திருக்கும். ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் அவர் ஆற்றிய கல்விப் பணிகள், மற்றும் இதர சமுதாய தொண்டுகள், ஷில்லாங் நகரில் தனது மூச்சை அவர் நிறுத்திக்கொண்ட காலகட்டம் வரையிலான அவரது இறுதி நாட்களை விளக்கும் வகையில் அமைக்கப்படவுள்ளது. 

மேலும், மர்ஹூம் அப்துல் கலாம் தனது வாழ்நாளில் பயன்படுத்திய மிக அரிய வகை கலைப்பொருட்கள் இந்த நினைவகத்தில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. குறிப்பாக, அவர் மிகவும் நேசித்த ‘ருத்ர வீணை’, ஜனாதிபதியாக பதவி வகித்தபோது தனது வயதையும் பொருட்படுத்தாமல் அதி நவீன சக்தி வாய்ந்த ‘மிக் SU-30’ ரக போர் விமானத்தில் அவர் பறந்த போது அணிந்திருந்த பாதுகாப்பு ‘சூட் ’  ஆகியவை இந்த கண்காட்சியில் இடம்பெறும். 

அவரது வாழ்க்கையின் மிக உன்னதமான தருணங்களை விளக்கும் வகையில் 12 சுவர்களில் கலைநயம் மிக்க ஓவியங்கள் மற்றும் சுவரோவியங்கள் இடம்பெறும். 

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, மிக முக்கியமான சிறப்பம்சமாக மர்ஹூம் அப்துல்கலாமின் பிறந்தநாளான அக்டோபர் மாதம் 15-ந்தேதி மற்றும் நினைவு நாளான ஜூலை மாதமான 27-ந்தேதி அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள சமாதியின் (ஃகப்ர்) மீது சூரிய கதிர்கள் நேரடியாக ஒளிபாய்ச்சும் வகையில் அதிநுட்பம் மிக்க கட்டுமானத் திறனுடன் இந்த நினைவிடம் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

பல்வேறு சிறப்புக்குரிய மர்ஹூம் அப்துல் கலாமின் இரண்டாவது நினைவு நாளான 27-7-2017 அன்று இந்த நினைவிடத்தின் திறப்பு விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 

நன்றி மாலை மலர்.