Thursday, June 22, 2017

ஈத் முபாரக் !!!

புனித  ஈகைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்

முதஅவ்விதன்!!   முபஸ்மிலன்!!!  முஹம்திலன்!!!   முஸல்லியன் !!!வமுஸல்லிமா!!!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 

அன்பார்ந்த பெரியோர்களே! இளைஞர்களே! 
அருமைத் தாய்மார்களே! சகோதர சகோதரிகளே! 
பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து 
வணக்கம் செய்தால் உயர் பதவி கிடைக்கும் என்பார்கள்.இம் மூன்றையும் கடைபிடிக்கிற நல் வாய்ப்பினை எல்லாம் வல்ல 
அல்லாஹ் இந்த ரமழான் மாதத்திலே நமக்கு வழங்கினான்.

பகலெல்லாம் நோன்பு வைத்து,இரவிலே இருபது ரக்கஅத்துகள் 
தொழுது, அல்லாஹ்வுடைய அளப்பெரும் அன்பையும், 
அருளையும் பெற்ற எங்கள் இஸ்லாமிய அன்பு நெஞ்செங்களே! 
உங்கள் அனைவர்களுக்கும் இனிய நோன்பு பெருநாள் நல் வாழ்த்துக்களையும்,இன்னும் ஆறு நோன்புகள் நோற்க இருக்கின்ற, 
உயர்ந்த சீதேவிகளுக்கு ஆறு நோன்புப் பெருநாள் நல் வாழ்த்துக்களையும்,
சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினர் சார்பாக அகமுவந்து தெறிவித்துக் கொள்கிறோம் வஸ்ஸலாம்…..

வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்கள் .

பெருநாள் அன்று பேன வேண்டியவை !!!


1.அதிகாலையில் பேரீச்சம் பழம் சாப்பிடுவது.
2.மிஸ்வாக் செய்து வாயைச் சுத்தப் படுத்துதல்.
3.ஈது தொழுகைக்காக குளிக்கிறேன் என்ற 
நிய்யத்துடன் குளித்தல்.
4.உணவு உண்டுவிட்டுத் தொழுகைக்கு வருதல்.
5.ஆகுமான நல்ல ஆடைகளை அணிதல்.
6.நறுமணம் பூசுதல்,சுருமா இடுதல்.
7.பெருநாள் தொழுகையை மகிழ்வுடன் நிறைவேற்றுதல்,
8.சந்தோசத்துடன் இருத்தல்,சந்தோசத்தை வெளிப்படுத்துதல்,
9.முஸாபஹா,முஆனகா செய்து வாழ்த்துக்களைப் 
பறிமாறிக்கொள்ளுதல்.
10.தர்மங்கள் அதிகமாக செய்தல்.
11.உறவுகளைச் சந்தித்து அன்பை பறிமாறுதல்.
12.அனாதைகள்,ஏழைகள்,நோயாளிகளுக்கு உதவிகள் புரிதல்.
13.அல்லாஹ்வின் அன்பும்,நட்பும், நெருக்கமும் தரும் 
காரியங்களை எப்பொழுதும் செய்தல்.

14.பெருநாள் வந்துவிட்டால் நபி ஸல்லல்லாஹு 
அலைஹிவ ஸல்லம் அவர்கள் போவதற்கும் 
வருவதற்கும் பாதைகளை மாற்றிக்கொள்வார்கள். 
ஆதாரம் ; புகாரி.
வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்கள்.

சித்தார் கோட்டையில் ரமழானில் கஸீதத்துல் வித்ரிய்யா ஷரீஃப் மஜ்லிஸ் !!!


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

சித்தார் கோட்டை ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் 
சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசலில்,புனித ரமழான் மாதம்
முழுவதும் ஹிஜ்புல் குர்ஆன் ஓதியதற்கு 
பின்னால், கஸீதத்துல் வித்ரிய்யா ஷரீஃப் 
ஓதப்படுகிறது. அல்ஹம்துலில்லாஹ்.
.
கஸீதத்துல் வித்ரிய்யா ஷரீஃப்,சித்தார் கோட்டையில், 
நூற்றாண்டுகளுக்கு மேல் ஓதப்பட்டு வருகிறது.

இந்த சிறப்பு வாய்ந்த மஜ்லிஸ் மதரஸா மல்ஹருஸ் ஸுஅதாவின் 
முன்னால் இன்னால் மாணவர்களாலும்,பெரிய சீதேவிகளாலும் 
இன்று வரை ஓதப்பட்டு வருகிறது.இதை ஓதக்கூடியவர்களுக்கு 
அல்லாஹ் எல்லாச் சிறப்பையும் வழங்குவானாக.ஆமீன்.

இந்த சிறப்பு வாய்ந்த மஜ்லிஸை பல மஹான்மார்கள் 
தலைமை யேற்று நடத்தி இருக்கிறார்கள்.

அல்லாஹ் அந்த மஹான்மார்களுக்கு நாளை 
மறுமையில் உயர் பதவி வழங்குவானாக ஆமீன்.

யா அல்லாஹ் இந்த சிறப்பு வாய்ந்த கஸீதத்துல் 
வித்ரிய்யா ஷரீஃப் மஜ்லிஸ்,கியாம நாள் வரை 
நடைபெறுவதற்கு பேருதவி செய்வாயாக ஆமீன்.
வஸ்ஸலாம்...

வெளியீடு ;-  சுன்னத் ஜமாஅத் பேரியக்க சித்தார் கோட்டை கிளை.