Showing posts with label இஸ்லாமிய இன்னிசை உலகின் மன்னர் அல்ஹாஜ் நாகூர் E.M.ஹனீஃபா அவர்கள். Show all posts
Showing posts with label இஸ்லாமிய இன்னிசை உலகின் மன்னர் அல்ஹாஜ் நாகூர் E.M.ஹனீஃபா அவர்கள். Show all posts

Wednesday, April 15, 2015

நாகூர் ஷரீஃபின் தவப்புதல்வர்,இஸ்லாமிய இன்னிசை உலகின் மன்னர் அல்ஹாஜ் நாகூர் E.M.ஹனீஃபா (ரஹ்) அவர்கள்,சென்னையில் மறைவு !!!


பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
  இஸ்லாத்தையும், இறை ஞானத்தையும் பாடல்களின் 
மூலம் உலகிலுள்ள தமிழ் பேசும் மக்களின் உள்ளத்திற்குள் 
கொண்டு சென்ற, நாகூர் ஷரீஃபின் தவப்புதல்வர்,இஸ்லாமிய 
இன்னிசை உலகின் மன்னர் அல்ஹாஜ் 
நாகூர் E.M.ஹனீஃபா (ரஹ்) அவர்கள்,08-04-2015 அன்று,
சென்னையில்,கோட்டூர் சேரி இல்லத்தில்  தாருல்
ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்து விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

09.04.2015 அன்று வியாழன் மாலை 4 மணிக்கு,நாகூர் தர்கா 
ஷரீஃபில் தொழுகைவைத்து நாகூர் தர்கா ஷரீஃப்,சின்ன 
மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 


எல்லாம் வல்ல அல்லாஹ்,நாகூர் ஷரீஃபின் தவப்புதல்வரின்
நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, அப்பழுக்கற்ற மார்க்கச்
சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து
தன்னுடைய 'ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன்,நாகூர் ஷரீஃபின் 
தவப்புதல்வரின் ,பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், 
உற்றார், உறவினர், ஆலிம் பெருமக்கள் மற்றும் நண்பர்கள்
அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை
தந்தருளவும்   சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல்
ஜமாஅத் இணைய தளத்தினர்   பிரார்த்தனை செய்கிறார்கள். ஆமீன்!

உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும்,
நாகூர் ஷரீஃபின் தவப்புதல்வரின்,ஹக்கில் துஆ 
செய்யும்படி அன்புடன்கேட்டுக் கொள்கின்றோம். வஸ்ஸலாம்...


வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.