Showing posts with label ஏர்வாடி தர்ஹா ஷரீஃப். Show all posts
Showing posts with label ஏர்வாடி தர்ஹா ஷரீஃப். Show all posts

Monday, August 1, 2016

யார் வாடி நின்றாலும் ஏர்வாடி வாருங்கள்


யார் வாடி நின்றாலும் ஏர்வாடி வாருங்கள்.
அங்கு வந்து அங்கு அடங்கி இருக்கும் இறை நேசர்களின் பொருட்டால் அல்லாஹ்விடம் கேளுங்கள்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழ்க்கரையிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது ஏர்வாடி தர்கா. இங்கு சுல்தான் சையிதுஇபுராகீம் ஷஹீது (வலி) என்ற பாதுஷா நாயகம் உள்பட பல மகான்கள் அடங்கப்பட்டிருக்கிறார்கள். மதீனா நகரிலிருந்து இறைப்பணி ஆற்ற வந்த ஏர்வாடி பாதுஷாநாயகம் இறைவனடி சேர்ந்து ஏர்வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

மகிமை:

ஞானப்பாதையில் உதித்த பாதுஷாநாயகம் என்று போற்றப்படும். அல்குத்புல் அக்தாப் சுல்த்தான்ஸய்யிது இபுராகீம் ஷஹீது வலியுல்லா (ரலி) மதீனாவிலிருந்து இந்தியா வந்தார்கள். தங்களின் அன்பு உபதேசங்களினால் மக்களை நேர்வழியில் அழைத்தார்கள். இந்தியாவின் முதல் முஸ்லீம் மன்னர் என்ற பெருமையும் பெறுகிறார்கள்.




மக்பராக்கள்:

ஏர்வாடி தர்காவில் அடங்கப்பட்டிருக்கும் பாதுஷா நாயகம் சமாதியின் (மக்பராவின்) இடப்புறமாக அவர்கள் மைந்தர் சையிது அபுத்தாகிர் (வலி) அடக்க ஸ்தலத்தை காணமுடியும், ஏர்வாடி வளாகத்துக்குள்ளேயே பாதுஷா நாயகமவர்களின் தாயார் சையிது பாத்திமா, துணைவியர் சைய்யிது அலிபாத்திமா என்னும் ஜைனப், தங்கை சையிது ராபியா, மைத்துனர் சையிதுஜெய்னுல் ஆப்தீன் ஆகியோர்களின் சமாதிகளும் காணமுடியும்.

நோய் தீர்க்கும் தலம்:

ஏர்வாடி தர்கா வளாகத்தில் ஜாதிமத பேதமின்றி நோய்வாய்ப்பட்டவர்கள் இங்கு வந்து தங்கி பிணி நீங்கிசெல்கின்றனர். ராமநாதபுரத்தை ஆண்ட முத்துக்குமாரசுவாமி ரகுநாதசேதுபதியின் மாமனார் முத்து விஜயன் என்பவருக்கு தீராத வியாதி இருந்து வந்தது. ஏர்வாடி தர்காவில் அடங்கப்பட்டிருக்கும் பாதுஷா நாயகத்தின் மகிமையை அறிந்த முத்துவிஜயன் ஏர்வாடி தர்காவிற்கு சென்றுள்ளார். பாதுஷா நாயகத்தின் மகிமையால் முத்துவிஜயன் நோய் முற்றிலுமாக நீங்கியுள்ளது. ஏர்வாடி தர்காவின் மகிமையை தனது மருமகனான மன்னர்சேதுபதியிடம் கூறியுள்ளார். 

மன்னரும் தனது மனைவிக்கு ஆண்வாரிசில்லை என்று கூறி மனைவி பானுமதி நாச்சியாருடன் ஏர்வாடி தர்கா சென்று பாதுஷா நாயகம் சமாதிமுன் முறையிட்டுள்ளனர். அடுத்த ஆண்டே அவர்களுக்கு ஆண்வாரிசு கிட்டியது. இதற்கு பகரமாக ராமநாதபுரம் மன்னர் ஏர்வாடியை சுற்றியுள்ள நஞ்சை, புஞ்சை நிலங்களை தானமாக வழங்கினார். மதநல்லிணக்கத்திற்கு இதைவிட சான்று தேவையில்லை.

சந்தனக்கூடு திருவிழா: 

சேதுபதி மன்னர் இணைந்து ஆரம்பித்து வைத்ததுதான் உரூஸ் எனும் சந்தனக்கூடு திருவிழா. ஒவ்வொரு ஆண்டும் துல்கஃதா பிறை 1 ல் புனித மௌலீது ஷரீப் ஆரம்பித்து அடிமரம் ஏற்றுதல், கொடியேற்றம், சந்தனக் கூடு திருவிழா போன்ற வைபவங்கள் நடைபெறும் சந்தனக் கூடு திருவிழா அன்று புனித மௌலீது நிறைவடைந்து சிறப்பு துஆ ஓதப்படும். சந்தனக்கூடு ஊர்வலத்துடன் பாதுஷா நாயகம் மக்பராவிற்கு (சமாதிக்கு) சந்தனம் பூசும் புனித நிகழ்ச்சிநடைபெறும், துல்கஃதா பிறை 30 அன்று புனிதகுர்ஆன் ஷரீப் ஓதி தமாம் (நிறைவு) செய்து கொடி இறக்கப்படும்.

சந்தனக்கூடு செய்வதில் இந்து மதத்தினருக்கு பங்களிப்பு உள்ளது. யார்வாடி நின்றாலும் ஏர்வாடி வந்தால் நலம் பெறலாம் என்று ஏர்வாடி தர்கா அருகில் உள்ள கடல் அலைகள் முழங்கிக் கொண்டே இருக்கின்றன.


வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

Wednesday, September 19, 2012

ஏர்வாடி தர்ஹா ஷரீஃப் வாழும் இஸ்லாத்தின் தீபம்


இஸ்லாத்தைப் பரப்புவதற்காக இந்தியா வந்த ஏர்வாடி ஸஹீத் சையித் இப்றாஹீம் பாதுஷா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள்,நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் 18- வது தலைமுறையில் மதீனாவில் பிறந்த ஏர்வாடி ஷஹீத் சையித் இப்றாஹீம் பாதுஷா ரஹ்மத்துல்லாஹிஅலைஹி அவர்கள், சுமார் 3000 தொண்டர்களுடன் இஸ்லாத்தைப் பரப்புவதற்காக இந்தியா வந்தார்கள்.அக்காலத்தில் இந்தியாவின் நுழைவாயிலாக இருந்த சிந்து மாகாணத்தில் தங்கினார்கள்அங்கு தம் தொண்டர்களை பல பிரிவாகப் பிரித்து சிந்து மாகாணத்தின் பொது மன்றங்கள்சந்திப்புகள்சந்தைகள்மக்கள் ஒன்று கூடும் இடங்களெல்லாம் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்ய அனுப்பி வைத்தார்கள்இவர்களின் அன்பான அழைப்பை ஏற்று பலர் இஸ்லாத்தை ஏற்றனர்.அங்கிருந்து சிறு குழுவுடன் குஜராத் சென்று அங்கும் இஸ்லாத்தைப் பரப்பினார்கள்.

அங்கெல்லாம் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்த போது அங்குள்ள அரசர்களால் இழைக்கப்பட்ட இடையூறுகள் ஏராளம்.அவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டு இஸ்லாத்தை வளர்த்தார்கள்.பிறகு குஜராத்திலிருந்து புறப்பட்டு இஸ்லாமியப் பிரச்சாரத்திற்காக தொண்டர்கள் புடைசூழ கன்னனூர்ஆலப்புழைகொச்சிகொல்லம்,கண்ணியாகுமரி வழியாக காயல்பட்டிணம் வந்தனர்.அந்நேரத்தில் நெல்லைப் பகுதியை ஆட்சி செய்த குலசேகரப்பாண்டியன் தனது பகுதிக்கு வந்து தங்கியிருப்பவர்கள் யார் என்று அறிய தூது அனுப்பினான்.அப்போது இப்றாஹீம் ஷஹீத் பாதுஷா அவர்கள் தான் பெருந்திரளாக நாடு பிடிக்க வரவில்லை என்றும்,இஸ்லாமியப் பிரச்சாரம் செய்யவே வந்ததாக தெறிவித்தனர்.பின்பு அங்கிருந்து தொண்டர்கள் புடைசூழ மதுரையை நோக்கி வந்து இஸ்லாமிய பிரச்சாரம் செய்ய அனுமதி கேட்ட போதுமதுரை மன்னன் திருப்பாண்டியன் அதை ஏற்காமல் இவர்களுடன் போர் செய்ய தயாரானான்.இப்போரில் திருப்பாண்டியன் தோல்வியுற்று குடும்பத்துடன் திருப்பதிக்குச் சென்று தஞ்சம் புகுந்தான்.இப்றாஹீம் ஷஹீத்
பாதுஷா அவர்கள் மதுரைக்கு முழுப்பொறுப்பேற்று ஆட்சி நடத்தினார்கள்.13 ஆண்டு கால ஆட்சியில் தென்னிந்தியா முழுவதும் இஸ்லாத்தைப் பரப்பினார்கள்.

பின்பு திருப்பதியில் தஞ்சம் புகுந்த திருப்பாண்டியன் பெரும்படையோடு தமிழகம் நோக்கி வரஷஹீத் அவர்களின் படையில் பெரும்பாலானோர் மக்கா நகருக்கு திரும்பியிருந்தார்கள்எனவே எளிதாக திருப்பாண்டியன் மதுரையை கைப்பற்றி பின்பு ஷஹீத் இப்றாஹீம் பாதுஷா அவர்கள் தங்கியிருந்த இராமநாதபுரத்திற்கு வந்து ஷஹீத் அவர்களை எதிர்கொண்டான்மீதமிருந்த சிறுபடையுடன் போரில் இறங்கினார்கள்.உச்சகட்டமாக ஷஹீத் அவர்களின் குதிரையின் கால்களை பாண்டியமன்னன் வெட்டபதிலுக்கு அவனின் தோள் புஜங்களை ஷஹீத் அவர்கள் வெட்டினார்கள்.மயங்கி விழுந்த அவன் பின்பு தெளிவடைந்து எதிர்பாராத விதமாக ஈட்டியால் ஷஹீத் அவர்களின் மார்பைத் தாக்க,ஷஹீத் இப்றாஹீம் பாதுஷா அவர்கள் வீரமரணம் அடைந்தார்கள்.இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜிஊன்இவர்களின் அடக்கஸ்தலம் ஏர்வாடியில் உள்ளது.ஏர்வாடி தர்ஹாவில் வாழும் இப்புனித ஷுஹதாக்களை நாம் முறையாக ஜியாரத் செய்து அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் பெற்றுக்கொள்வோமாக ஆமீன்.. 

தகவல்காயல்பட்டிணம் முஅஸ்கருர் ரஹ்மான் அரபுக்கல்லூரியின் 15-வது ஆண்டு மலர்வஸ்ஸலாம்..

வெளியீடு-

மன்பயீ ஆலிம்.காம் 
மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்கள்.