Showing posts with label வாழூர் மீலாதுப் பெருவிழா. Show all posts
Showing posts with label வாழூர் மீலாதுப் பெருவிழா. Show all posts

Sunday, December 25, 2016

வாழூரில், பெருமானாரின் 1491 வது மீலாதுப் பெருவிழாவை முன்னிட்டு,மௌலிது ஷரீஃப் மஜ்லிஸ் மிகச்சிறப்பாக நடைபெற்றது !!!

முதஅவ்விதன் ! முபஸ்மிலன் !! முஹம்திலன் !!! முஸல்லியன் !!!! 
வமுஸல்லிமா !!!!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், 
வலமை போல்  அகிலத்தின் அருட்கொடை, நம் உயிரிழும் 
மேலான, நமது கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ 
ஸல்லம் அவர்களின்  பிறந்த புனிதம் நிறைந்த மாதமான,சிறப்பு 
வாய்ந்த ரபீஉல் அவ்வல் மாதம், பன்னிரெண்டு தினங்கள் 
சுந்தர நபிகளாரின் சந்தனப் புகழ்பாடும்,சுப்ஹான 
மவ்லிது ஷரீஃப் மிகச்சிறப்பாக நடைபெற்றது.


13-12-2016 அன்று காலை 8-00 மணியளவில், வாழூர் 
அல் மஸ்ஜிதுர் ரைய்யான் ஜும்ஆப் பள்ளிவாசலில்,
பெருமானாரின் 1491 வது மீலாதுப் பெருவிழாவை 
முன்னிட்டு,மௌலிது ஷரீஃப் ஓதி,சிறப்பு துஆ மஜ்லிஸ் 
மிகச்சிறப்பாக நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.


இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில் ஏராளமான சுற்றுப் புற 
உலமாப் பெருமக்களும்,வாழூர் மற்றும் சுற்றுப்புற 
முஸ்லிம்களும் கலந்து கொண்டு,அல்லாஹ்வின் அன்பையும்,அருளையும்,பெற்றுக்கொண்டனர்.
வஸ்ஸலாம்.

வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.