Showing posts with label 58- வது அனைத்துலக திலாவத்துல் குர்ஆன் போட்டி. Show all posts
Showing posts with label 58- வது அனைத்துலக திலாவத்துல் குர்ஆன் போட்டி. Show all posts

Sunday, May 15, 2016

மலேசியத் திருநாட்டில் 58- வது அனைத்துலக திலாவத்துல் குர்ஆன் போட்டி மிகச்சிறப்பாக நடைபெற்றது !!!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! வமுஸல்லிமா!
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்,
வளம் கொழிக்கும் மலேசியத் திருநாட்டின் தலைநகர்
கோலாலம்பூரில் உள்ள P.W.T.C அரங்கத்தில்,அனைத்துலக
58-வது திருக்குர்ஆன் ஓதும் போட்டியின் இறுதி நிகழ்ச்சி (07-05-2016)  
சனிக்கிழமை மிக விமர்ச்சயாக நடந்து முடிந்தது.

 இதில் நாற்பது நாடுகள் பங்குபெற்றன. உலகத்திலேயே
தொடர்ந்து 58 வருடங்கள் திருக் குர்ஆன் ஓதும் போட்டி
மலேசியாவில் தான் நடந்து வருகிறது அல்ஹம்துலில்லாஹ்.
இதில் ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு வருகிறார்கள்.

ஆண்களில், மலேசியாவைச் சார்ந்த காரீ,முதலிடத்தையும்,
புருனையைச்  சார்ந்த காரீ இரண்டாவது இடத்தையும்,
இந்தோனேசியாவைச் சார்ந்த காரீ மூன்றாவது இடத்தையும்,
ஈரானைச்  சார்ந்த காரீ நான்காவது  இடத்தையும்,
பிலிப்பீனாவைச் சார்ந்த காரீ ஐந்தாம் இடத்ததையும் 
பெற்றுக்கொண்டார்கள். 


பெண்களில் மலேசியாவைச் சார்ந்த காரீயா
முதலிடத்தை யும்,    இந்தோனேசியாவைச் சார்ந்த காரீயா
இரண்டாவது இடத்தையும், புருனையைச் சார்ந்த காரீயா
மூன்றாவது இடத்தையும், மஃரிபியைச் சார்ந்த காரீயா
நான்காவது இடத்தையும்,  பிலிப்பீனாவைச் சார்ந்த காரீயா
ஐந்தாவது இடத்தையும், பெற்றுக்கொண்டனர். 




இதில் திருக்குர்ஆனை மனப்பாடமாக ஓதும் போட்டியில் ஆண்களில் மிசிர் நாட்டைச்  சார்ந்த காரீ,முதலிடத்தையும்,மலேசியாவைச் சார்ந்த காரீ இரண்டாவது இடத்தையும்,அமெரிக்கா நாட்டைச் சார்ந்த காரீ மூன்றாவது இடத்தையும்,பெற்றுக்கொண்டனர்.


பெண்களில் மிசிர் நாட்டைச் சார்ந்த காரீ,முதலிடத்தையும், 
மலேசியாவைச் சார்ந்த காரீ இரண்டாவது இடத்தையும்,
 லெபனான் நாட்டைச் சார்ந்த காரீ மூன்றாவது இடத்தையும்,பெற்றுக்கொண்டனர்.


இதில் பல நாடுகளின் காரீகள் நடுவர்களாக கலந்து கொண்டார்கள். 



இந்த நிகழ்ச்சி மலேசிய மன்னர் தலைமையில்,பிரதமர் மற்றும் 
அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெற்றது.


மலேசியத் தலைவர்கள்  இந்த திருக்குர்ஆன்  போட்டியை,
இஹ்லாசுடன் கியாமத் நாள் வரை தொடர்ந்து நடத்துவதற்கு,
ரப்புல் ஆலமீன் தவ்ஃபீக் செய்வானகவும் ஆமீன். வஸ்ஸலாம்..

வெளியீடு-மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.