Monday, May 5, 2014

ஜாமிஆ அரூஸிய்யா அரபுக் கல்லூரி கல்விச் சேவையில் சுமார் 353 - ஆம் ஆண்டை தொட்டுவிட்ட மார்க்க கல்வியும்,உலகக் கல்வியும் இணைந்த ஓர் பல்கலைக் கழகம் !!!





இஸ்லாமியர்களுக்கு எங்கும் இல்லாத ஓர் அரிய வாய்ப்பு!!! 
சுமார் 354 ஆண்டு கல்விச்சேவையில் அல்ஜாமியத்துல் அரூஸிய்யத்துல் அரபிய்யா அரபிக் கல்லூரி.மார்க்கக் கல்வியையும் உலகக்கல்வியையும் இலவசமாக ஓரே இடத்தில் பயிற்றுவிக்கும் கல்வி நிறுவனம். 
மேலும் விபரங்களுக்கு:9626263212,9443341926.

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

குத்துபுல் ஹிந் ஹஜ்ரத் கரிப நவாஸ் காஜா முயீனுத்தீன் ஜிஸ்தி அஜ்மீரி, ஹஸனுஸ் ஸன்ஜரி (ரலி) அவர்களின் சிறப்பு வாய்ந்த மௌலிது ஷரீஃப்


முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! வமுஸல்லிமா!!

வரலாற்றுச் சிறப்பு மிக்க மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவில் பாரம்பரியமாக தொண்டு தொட்டு,ஒவ்வொரு வருடமும்,நடைபெற்று வரும் குத்துபுல் ஹிந் ஹஜ்ரத் கரிப நவாஸ் காஜா முயீனுத்தீன் ஜிஸ்தி அஜ்மீரி, ஹஸனுஸ் ஸன்ஜரி
 (ரலி) அவர்களின் சிறப்பு வாய்ந்த மௌலிது ஷரீஃப் இவ்வாண்டு,  04--05-2014 ஞாயிற்றுக்கிழமை  மாலை  ரஜப் பிறை 05-- 1435  அன்று மிக விமர்சையாக நடைபெற்றது என்பதை, மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.


அல்ஹம்துலில்லாஹ்.வலமை போல் அஸர் தொழுகைக்குப் பின் மௌலிது ஷரீபும், மஃரிப் தொழுகைக்குப்பின்  யா நபி பைத்து, யாசீன்  மற்றும் சிறப்பு வாய்ந்த துஆ மஜ்லிஸும்,மஸ்ஜித் இந்தியாவின் கண்ணியமிகு இமாம்களான,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா.எஸ்.எஸ்.அஹ்மது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத் கிப்லா,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,எஸ்.முஹம்மது நூருல் அமீன் மிஸ்பாஹி ஹஜ்ரத் ஆகியோரது சீரிய தலைமையில் நடைபெற்றது.மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த மஜ்லிஸில்  ஏராளமானோர் கலந்து கொண்டு,அல்லாஹ்வின் அளப்பெரும்,அன்பையும்,அருளையும்,
பெற்றுக்கொண்டார்கள். வஸ்ஸலாம்....



வெளியீடு ;;- மன்பயீ ஆலிம்.காம்

சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

புனிதம் நிறைந்த ரஜப் மாதம்

02-05-2014 வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயான்.

தலைப்பு ;- புனிதம் நிறைந்த ரஜப் மாதம்  

குத்பா பேருரை ;- 
மௌலானா மௌலவி அல்ஹாஜ் 
எஸ்.எஸ்.அஹ்மது பாக்கவி,ஹஜ்ரத்.
தலைமை இமாம், மஸ்ஜித் இந்தியா,
கோலாலம்பூர், மலேசியா.