Monday, August 11, 2014

ஆரோக்கியத்தின் அவசியங்களும்,ஆலோசனைகளும் பாகம் -இரண்டு


கோடையில் ஒரு முறை உணவு குளிர் காலத்தில் பத்து முறையை விட சிறந்தது.

ஹாரிஸ் சொல்வார் ;- நித்திய ஜீவிதம் என்பது உலகில் யாருக்கும் இல்லை.அப்படி நிரந்தர ஜீவிதமாக வாழ்வது எவருக்கு சந்தோஷ மளிக்கிறதோ அவர் காலையில் சீக்கிரமாக உணவு உட்கொள்ள வும்.இரவு உணவையும் சீக்கிரமே நேரத்தோடு சாப்பிட வேண்டும். மேலாடையை இலேசாக்கிக் கொள்ளட்டும்.மனைவியருடன் கலவையில் ஈடுபடுவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.


பிளாட்டோ சொல்வார் ;- ஐந்து விஷயம் உடலை உறுக்கி விடும். சிலவேளை மரணத்தை சம்பவிக்கும். அவை ;-

1,கையிருப்பு குறைவது.
2,பிரியமானவர்களின் பிரிவு.
3,கோபத்தை உள்ளே விழுங்குவது.
4,அதிர்ச்சியை எதிர் கொள்வது.
5,ஆலோசனை மறுக்கப்படுவது. அறிஞர்களைக் கண்டு அறிஞர்களின் பரிகாசம்.

அப்கராத்தின் வைர வரிகளில் ஒன்று ;- அதிகமானது எல்லாமே இயல்புக்கு – இயற்கைக்கு எதிரானது தான்.

மருத்துவ மேதை ஜாலினூஸிடம் கேட்கப்பட்டது ;- நீங்கள் ஏன் நோயாளியாவதில்லை? அதற்கவர் ;- நான் மட்டமான இரு உணவுகளைக்கு மத்தியில் சேர்த்ததில்லை,உணவின் மீது உணவை நான் திணித்தது இல்லை, பாதிப்பை உண்டாக்கும் எந்த உணவையும் [அதை மலஜலம் கழித்து வெளியேற்றாமல்]  இரைப்பையில் நான் தடுத்து வைத்த தில்லை என்று பதிலளித்தார்.

நான்கு விஷயங்கள் உடலை வியாதிக்குள்ளாக்கும். அவை ;-

1,அதிகமாக தூங்குவது.
2,அதிகமாக திண்பது.
3,அதிகமாக போகம் செய்வது.
4,அதிகமாக பேசுவது.

அதிகமான பேச்சு ;- மூளையின் வீரியத்தை பலவீனப்படுத்தி அதைக் குறைத்து விடும்.

அதிகமான உறக்கம் ;- முகத்தை மஞ்சலாக் [க்கி சோகையாக்]கும், இதயத்தை குருடாக்கும்,கண்ணுக்கு எரிச்சலை உண்டாக்கும், வேலையில் சோம்பேரித்தனத்தை ஏற்படுத்தும்,உடல் பருக்கும், சிரமமான பல வியாதிகளை உண்டாக்கும்.

அதிகமான சம்போகம் ;- உடலை நொறுக்கி விடும்,உடல் வலிமை பலவீனப்படும் – சக்திகளை பலவீனப்படுத்தும்,உடலின் ஈரப்பதம் குறையும்,நரம்பு தளர்ச்சி,மூச்சிரைப்பு ஏற்படும். மொத்தத்தில் இதன் பாதிப்பு உடல் முழுவதும் வியாபிக்கும்.குறிப்பாக மூளையை அதிகமாக பாதிக்கும்.இது மூச்சிரைப்பு உயிர்மூச்சு அதிகமாக வெளியேறுவதால் ஏற்படுகிறது.

நான்கு விஷயங்கள் உடலை தகர்க்கும் ;-

1,துக்கம்.
2,கவலை.
3,பசி.
4,உறக்கமிழப்பு.

நான்கு விஷயங்களைப் பார்ப்பது சந்தோஷமளிக்கும் ;-

1,பசுமை.
2,ஓடும் தண்ணீர்.
3,பிரியமான ஆள்.
4,பழங்கள்.
   
அந்த முகங்களை
பார்த்தோம் மாலை
ஆன்மாக்கள் ஒளிர்ந்தது
அந்த அழகிய காட்சியால்.

பார்வையைப் பாதிக்கும் நான்கு ;-

1,செருப்பின்றி நடப்பது.
2,வெறுப்புற்றவன்,கனமானவன்,விரோதியின் முகத்தில் விழிப்பது. 
3,அதிக அழுகை.
4,சின்ன எழுத்துக்களை அதிகம் கூர்ந்து பார்ப்பது.

உடலுக்கு வலு சேர்க்கும் நான்கு ;-

1,மிருதுவான ஆடை அணிவது.
2,சமச்சீரான காலைக்கடன்.
3,சுவையான இனிப்பான சத்துணவைச் சாப்பிடுதல்.
4,நறுமணங்களை சுவாசிப்பது.

முகத்தின் எழிலையும்,பொலிவையும்,அதன் ஈர நயப்பையும் போக்கி அதை உலர வைக்கும் நான்கு ;-

1,பொய்யுரைப்பது.
2,விசய ஞானமின்றி அதிகம் கேள்வி கேட்பது.
3,வெட்கங்கெட்ட வேலை.
4,போகம் அதிகம் செய்வது.

முகப்பொலிவையும்,செழிப்பையும் பெருக்கும் நான்கு ;-

1,இறையச்சம்,
2,வாய்மை,
3,பெருந்தன்மை,
4,கொடைத்தன்மை.

கோபத்தையும்,வெறுப்பையும் வருத்தும் நான்கு ;-

1,பெருமை,
2,பொறாமை,
3,பொய் சொல்வது,
4,கோள் சொல்வது.

வாழ்வாதாரத்தை வரவழைக்கும் நான்கு ;-

1,இறை வணக்கத்தில் இரவு நிற்பது.
2,சஹர் வேளையில்  [அதிகாலையில்] அதிகம் [இஸ்திக்பார்] பிழை பொறுக்கத்தேடுவது.
3,பகலின் ஆரம்பத்திலும், முடிவிலும் திக்ரு – தியாணம் செய்வது.
4,தர்மம் செய்வது.

இரவிடம் கேட்டேன்,
உன் நெஞ்சில் இரகசியம் உண்டா?
இரசியங்களையும்,செய்திகளையும் மறைப்பவனே!
இரவின் அந்தி வேளையில் சினேகிதர்கள் பேசுவதைப் போல
என் வாழ்வில் ஒரு இரகசியத்தையும் நான் கண்டதில்லை என இரவு சொன்னது.

ரிஜ்கை – வாழ்வாதாரத்தை தடுக்கும் நான்கு ;-

1,காலை உறக்கம்.
2,தொழுகையின்மை.
3,சோம்பேறித்தனம்.
4,மோசடி செய்வது.


نوم الصبحة يمنع الرزق

காலை உறக்கம் இரணத்தைத் தடுக்கும். [நபிமொழி,அஹ்மது 73/1]

பிராங்க்ளின் கூறுகிறார் ;- சீக்கிரம் தூங்கி,சீக்கிரம் விடியற்காலையில் விழித்தெழுவது ஒருவனை ஆரோக்கியமானவனாகவும், செல்வந்த னாகவும், விவேகமானவனாகவும் ஆக்கும்.


عَنْ عَلِيٍّ قَالَ
نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ السَّوْمِ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ



சூரிய உதயத்திற்கு முன்பு உறங்குவதை அல்லாஹ்வுடைய தூதர் நபி [ஸல்] அவர்கள் தடுத்தார்கள் என்று அலி [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள். [நபிமொழி,இப்னு மாஜா]


عن فاطمة بنت محمد صلى الله عليه وسلم قالت : مر بي رسول الله صلى الله عليه وسلم وأنا مضطجعة متصبحة ، فحركني برجله ، ثم قال : « يا بنية قومي اشهدي رزق ربك ، ولا تكوني من الغافلين ، فإن الله يقسم أرزاق الناس ما بين طلوع الفجر إلى طلوع الشمس »

அண்ணல் நபிகள் நாயகம் [ஸல்] அவர்களின் அன்பு மகள் பாத்திமா ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள் ;- ஒரு முறை காலையில் நான் படுத்திருந்தேன்.அப்போது அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் என் அருகில் வந்தார்கள்.தன் காலால் என்னை உசுப்பி விட்டுச் சொன்னார்கள் ;- அருமை மகளே எழுந்திரு! உனது இறைவனின் ரிஜ்கில் [இரணப் பங்கீட்டில்] கலந்து கொள்.இதில் அலட்சியமாக இருப்பவர்களில் [நீயும்] ஆகி விடாதே! ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ், மக்களின் இரணங்களை ஃபஜ்ர் – அதிகாலை உதயத்திற்கும் சூரிய உதயத்திற்குமிடையே தான் பங்கு வைக்கிறான்.


عن علي ، قال : دخل رسول الله صلى الله عليه وسلم على فاطمة بعد أن صلى الصبح

அலியாரின் இன்னொரு அறிவிப்பில் ;- சுபுஹ் தொழுது விட்டு தூங்கிக் கொண்டிருந்த போது நடந்த சம்பவம் என்று வந்துள்ளது. [நபிமொழி,பைஹகி ; 4735,இப்னு மாஜா ;2206]


عن عائشة ، قالت : قال رسول الله صلى الله عليه وسلم : « باكروا طلب الرزق والحوائج ، فإن الغدو بركة ونجاح »

அதிகாலையில் ரிஜ்க்கை – இரணத்தைத் தேடுங்கள்.ஏனெனில் காலைப் பொழுது வெற்றியும் பரக்கத்தும் நிறைந்தது. [பஸ்ஸார் ; 1247]


 عَنْ صَخْرٍ الْغَامِدِيِّ
عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اللَّهُمَّ بَارِكْ لِأُمَّتِي فِي بُكُورِهَا وَكَانَ إِذَا بَعَثَ سَرِيَّةً أَوْ جَيْشًا بَعَثَهُمْ مِنْ أَوَّلِ النَّهَارِ وَكَانَ صَخْرٌ رَجُلًا تَاجِرًا وَكَانَ يَبْعَثُ تِجَارَتَهُ مِنْ أَوَّلِ النَّهَارِ فَأَثْرَى وَكَثُرَ مَالُهُ

யா அல்லாஹ்! எனது உம்மத்திற்கு அவர்களின் அதிகாலையில் பரக்கத் செய் என பெருமானார் [ஸல்] அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.படை அனுப்புவதாக இருந்தால் காலையில் தான் அனுப்புவார்கள். சக்ரு [ரலி] அவர்கள் ஒரு வியாபாரி [இந்த நபிமொழியைப் பின்பற்றி]  தனது வியாபாரக் கூட்டத்தை பகலின் ஆரம்ப வேளையில் அனுப்பி வைப்பார்கள்.அதனால் அவருக்கு பொருள் அதிகமாகி செல்வம் கொழித்தது.  [நபிமொழி,அபூதாவூது ; 2606,திர்மிதி ; 1212, இப்னுமாஜா ; 2236]

இறையருள் இறங்கும் அதிகாலைப் பொழுதில் இரணம் பங்கீடு செய்யப்படும் வைகரைப் பொழுதில் எழுந்து இறைவனை வணங்கி வாழ்வாதாரம் தேடி வளமான, வசதியான வாழ்வுக்கு வகை செய்யும் விதத்தில் தான் தஹஜ்ஜுத் மற்றும் ஃபஜ்ரு தொழுகையும் அதைத் தொடர்ந்துள்ள தியாணங்களும் மார்க்கத்தில் ஏற்படுத்தப் பட்டுள்ளன.

இந்த அரிய சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தும் பொருட்டு அதிகாலை குளித்து வீடு பெருக்கி தெரு கூட்டி தண்ணீர் தெளித்து ரஹ்மத்துடைய மலக்குமார்களை வரவேற்று பெற வேண்டியைப் பெற்று பெருவாழ்வும் பெருமைக்குரிய வாழ்வும் யார் யாரோ வாழ்ந்து அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்த முபாரக்கான வேளையில் எழுந்திருக்க வேண்டிய முஸ்லிம் சமுதாயம் அதற்காகவே கடமை பட்டுள்ள முஸ்லிம் உலகம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து கொண்டிருப்பது வேதனைக்குரியதாகும்.

ஆரோக்கியமான வளமான வாழ்வுக்கு வழிவகுக்கும் வள்ளல் நபி[ஸல்] அவர்கள் அதற்கு ஆரம்ப ஆலோசனையாக அறிவுறுத்துவது அதிகாலை எழுந்திருப்பாகும். 


இன்ஷா அல்லாஹ் தொடரும்......



என்றும் தங்களன்புள்ள.


மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா 
எஸ்.எஸ்.அஹமது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்
( தலைமை இமாம்,மஸ்ஜித் இந்தியா,கோலாலம்பூர்,மலேசியா )

வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்.

சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

ஆரோக்கியத்தின் அவசியங்களும் ஆலோசனைகளும்

وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِين
நான் நோயுற்றால் அவனே [அல்லாஹ்வே] என்னை குணப்படுத்து வான். [அல்குர்ஆன் :26 ; 80]

இது இறைத்தூதர் கலீலுல்லாஹ் – இப்ராஹீம் [அலை] அவர்களின் ஏகத்துவ முகவரியை எடுத்துச் சொல்லும் ஓர் திருமறை வசனம். நோய் என்பது அடியானை அடையாளப்படுத்தும்,அல்லாஹ்வை விட்டும் அவனை வேறுபடுத்தும் ஓர் வேதனைச் சாட்சியம்.

“நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம்” என்பது தமிழ் முதுமொழி.

“ஆரோக்கியமின்றி இந்த உலகை அனுபவிக்க முடியாது” என்பார் பென்ஜான்சன்.

“ஆரோக்கியத்தைக் கட்டிக்காப்பது ஒரு கடமை. உடல் நல அறிவியல் என ஒன்று இருக்கிறது என்பதை அறிந்தவர் சிலரே” எனச் சொல்வார் ஸ்பென்சர்.

இந்த உடல் நல மருத்துவ அறிவியலை விஞ்ஞானம் போதித்த மெஞ்ஞானத் தூதர் மாநபி [ஸல்] அவர்கள் அறிந்து,அறிவித்த திப்பு நபவி – நபி வழி மருத்துவம் என்றே ஒரு அத்தியாயம் நிறைவாகவும், விரிவாகவும் நபிமொழித் தொகுப்புகளில் தனியாகக் காணப்படுகிறது. இதில் ஆரோக்கியத்தின் அவசியங்களும், அதற்கான ஆலோசனை களும் நிறையவே கூறப்பட்டுள்ளது. மருத்துவ வகைகளும்,மருத்துவ வழிமுறைகளும் கூட சொல்லப் பட்டுள்ளது.

உடல் நலத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி பெருமானார் [ஸல்] அவர்கள் வலியுறுத்தியது போன்று அந்த அளவுக்கு வேறு யாரும் அதன் அவசியத்தை எடுத்துக் கூறியதில்லை.

أَنَّ مُعَاذَ بْنَ رِفَاعَةَ أَخْبَرَهُ عَنْ أَبِيهِ قَالَ
قَامَ أَبُو بَكْرٍ الصِّدِّيقُ عَلَى الْمِنْبَرِ ثُمَّ بَكَى فَقَالَ قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ الْأَوَّلِ عَلَى الْمِنْبَرِ ثُمَّ بَكَى فَقَالَ اسْأَلُوا اللَّهَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فَإِنَّ أَحَدًا لَمْ يُعْطَ بَعْدَ الْيَقِينِ خَيْرًا مِنْ الْعَافِيَةِ

இறைத்தூதர் [ஸல்] அவர்கள் ஒரு முறை மிம்பரில் நின்றார்கள். [உணர்வுப்பூர்வமாக பிரசங்கம் செய்தார்கள்] பிறகு அழுது கொண்டே கூறினார்கள் ; அல்லாஹ்விடம் சுகமும்,மன்னிப்பும் கிடைக்கப் பிரார்த்தனை செய்யுங்கள்.ஏனெனில் நிச்சயமாக ஈமானுக்குப் பிறகு சுகத்தை விட சிறந்த [பாக்கியத்] தை எவரும் வழங்கப்பட்டதில்லை. [திர்மிதி ; 3557]

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ
أَنَّ رَجُلًا جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَيُّ الدُّعَاءِ أَفْضَلُ قَالَ سَلْ رَبَّكَ الْعَافِيَةَ وَالْمُعَافَاةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ ثُمَّ أَتَاهُ فِي الْيَوْمِ الثَّانِي فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَيُّ الدُّعَاءِ أَفْضَلُ فَقَالَ لَهُ مِثْلَ ذَلِكَ ثُمَّ أَتَاهُ فِي الْيَوْمِ الثَّالِثِ فَقَالَ لَهُ مِثْلَ ذَلِكَ قَالَ فَإِذَا أُعْطِيتَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَأُعْطِيتَهَا فِي الْآخِرَةِ فَقَدْ أَفْلَحْتَ

நபிகள் நாயகம் [ஸல்] அவர்களிடம் [அல்லாஹ்விடம் கேட்பதற்கு] எந்தப் பிரார்த்தனை சிறந்தது? எனக்கேட்டு ஒருவர் வந்தார். அவருக்கு அண்ணல் பெருமானார் [ஸல்] அவர்கள் கூறினார்கள் ; இம்மையிலும்,மறுமையிலும் உனக்கு சுகம் கிடைக்க உனது இறைவனிடம் பிரார்த்தனை செய் என்றார்கள்.அவர் இரண்டாவது நாளும் மூன்றாவது நாளும் வந்து இதே கேள்வியைக் கேட்ட போதும் இதே பதிலைத்தான் திரும்பத் திரும்ப அவருக்கு அண்ணலார் [ஸல்] அவர்கள் கூறி உனக்கு இம்மையிலும், மறுமையிலும் சுகம் வழங்கப்பட்டு விட்டால் நீ வெற்றி பெற்று விட்டாய் என்று சொன்னார்கள். [திர்மிதி ; 3512]

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الدُّعَاءُ لَا يُرَدُّ بَيْنَ الْأَذَانِ وَالْإِقَامَةِ قَالُوا فَمَاذَا نَقُولُ يَا رَسُولَ اللَّهِ قَالَ سَلُوا اللَّهَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ

பாங்கிற்கும் இகாமத்திற்கும் இடையில் கேட்கப்படும் பிரார்த்தனை மறுக்கப்படாது [ஏற்றுக்கொள்ளப்படும்] என்று சொன்ன சத்திய நபி [ஸல்] அவர்களிடம் அப்போது என்ன பிரார்த்தனை செய்ய வேண்டும் என நபித்தோழர்கள் கேட்டார்கள். அதற்கு ; அல்லாஹ் விடம் இம்மை,மறுமை சுகத்தைக் கேளுங்கள் என்று ஏந்தல் நபி [ஸல்] அவர்கள் பதிலளித்தார்கள். [திர்மிதி]

وكان ابن عباس إذا شرب ماء زمزم قال : « اللهم أسألك علما نافعا ، ورزقا واسعا ، وشفاء من كل داء
ஸம்ஸம் தண்ணீர் என்ன பிரார்த்தனை செய்து அதைக் குடித்தாலும் அது நிறைவேறும் என்பது நபிமொழி. ஸம்ஸம் தண்ணீர் குடிக்கும் போது மார்க்கம் கற்றுக் கொடுத்த பிரார்த்தனை என்ன தெரியுமா? பயனுள்ள கல்வி,வளமான வாழ்வாதாரம்,எல்லா பினியிலிருந்தும் நிவாரணத்தைக் கொடு எனக் கேட்க வேண்டும் என்று.

وَسَمِعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا وَهُوَ يَقُولُ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الصَّبْرَ فَقَالَ سَأَلْتَ اللَّهَ الْبَلَاءَ فَسَلْهُ الْعَافِيَةَ

யா அல்லாஹ்! உன்னிடம் பொறுமையைக் கேட்கிறேன் என்று பிரார்த்தனை செய்ததைக் கேட்டுக் கொண்டிருந்த கருணை நபி [ஸல்] அவர்கள் அவரிடம், [இந்தப் பிரார்த்தனையின் மூலம்] அல்லாஹ்விடம் சோதனையைக் கேட்டு விட்டாய். [அப்போது தானே பொறுமை தேவைப்படும்.அதனால் அப்படி கேட்காதே] நீ அவனிடம் சுகத்தைப் பிரார்த்தனை செய்! என்றுரைத்தார்கள். [திர்மிதி ; 3527]

தினமும் காலை,மாலை நபி [ஸல்] அவர்கள் செய்த பிரார்த்தனை களில் இப்படி ஒரு துஆவும் நபிமொழிகளில் வந்துள்ளது.

قَالَ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي بَكْرَةَ أَنَّهُ قَالَ لِأَبِيهِ
يَا أَبَتِ إِنِّي أَسْمَعُكَ تَدْعُو كُلَّ غَدَاةٍ اللَّهُمَّ عَافِنِي فِي بَدَنِي اللَّهُمَّ عَافِنِي فِي سَمْعِي اللَّهُمَّ عَافِنِي فِي بَصَرِي لَا إِلَهَ إِلَّا أَنْتَ تُعِيدُهَا ثَلَاثًا حِينَ تُصْبِحُ وَثَلَاثًا حِينَ تُمْسِي فَقَالَ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْعُو بِهِنَّ فَأَنَا أُحِبُّ أَنْ أَسْتَنَّ بِسُنَّتِهِ

யா அல்லாஹ்! எனக்கு உடலில் ஆரோக்கியத்தை அளிப்பாயாக! எனது செவியில் ஆரோக்கியத்தை வழங்குவாயாக!எனது பார்வையில் சுகத்தைத் தருவாயாக!இந்த துஆவை மூன்று முறை ஓதுவார்கள். [அபூதாவூது 5090]

عَنْ ابْنِ عُمَرَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا سُئِلَ اللَّهُ شَيْئًا أَحَبَّ إِلَيْهِ مِنْ الْعَافِيَةِ

அல்லாஹ்விடம் கேட்கப்படும் பிராத்தனைகளில் நற்சுகத்தைத் தவிர மிகவும் அவனுக்குப் பிரியமான பிரார்த்தனை வேறு எதுவும் இல்லை. [திர்மிதி 3548]

எனவே தான் நபி பெருமான் [ஸல்] அவர்களிடம் ஹள்ரத் அப்பாஸ் [ரலி] அவர்கள் தனக்கு ஒரு துஆவைக் கற்றுத் தருமாறு கேட்டுக் கொண்ட போது, சச்சா! நீங்கள் இம்மை,மறுமை சுகத்தை அல்லாஹ்விடம் அதிகம் கேளுங்கள் என்றுரைத்தார்கள்.

عَنْ الْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ قَالَ
قُلْتُ يَا رَسُولَ اللَّهِ عَلِّمْنِي شَيْئًا أَسْأَلُهُ اللَّهَ عَزَّ وَجَلَّ قَالَ سَلْ اللَّهَ الْعَافِيَةَ فَمَكَثْتُ أَيَّامًا ثُمَّ جِئْتُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ عَلِّمْنِي شَيْئًا أَسْأَلُهُ اللَّهَ فَقَالَ لِي يَا عَبَّاسُ يَا عَمَّ رَسُولِ اللَّهِ سَلْ اللَّهَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ

கேட்டதில் சுவைத்த செய்தி ; மூஸா நபி [அலை] அவர்கள் அல்லாஹ்விடம், யாஅல்லாஹ்! ஒரு பேச்சுக்காக நீ மூஸாவாக வும்,நான் அல்லாஹ்வாகவும் இருந்தால் நீ என்னிடம் என்ன பிரார்த்திப்பாய்? எனக் கேட்ட போது, நான்  ஆரோக்கியத்தைக் கேட்பேன் என அல்லாஹ் கூறினானாம்.

இந்தளவு வலியுறுத்தப்பட்டுள்ள ஆரோக்கியத்தைப் பெறுவதற்கான ஆலோசனைகளை இனி நாம் பார்ப்போம்.

வாழ்வியலின் எல்லா விதிகளும் குர்ஆனில் இருக்கிறது என்றால் ஆரோக்கியத்திற்கு ஆதாரமாகத் திகழும் மருத்துவ மூல விதி எதுவும் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளதா....  என்று கலீபா ஹாரூன் ரஷீது பாதுஷாவிடம் ஒருமத அறிஞர் கேட்டார். அப்போது அந்த அவையில் வீற்றிருந்த அறிஞர் அலி இப்னு ஹுஸைன் அல்வாகிதீ அவர்கள் எழுந்து உடல் நலத்திற்கான {Golden Rule} தங்க விதியொன்று குர்ஆனில் கூறப்பட்டுள்ளது  என்றார். "அது என்ன....?"

“உண்ணுங்கள் பருகுங்கள் அளவு கடந்து விடாதீர்கள்.” {அத்தியாயம்.7வசனம்.31}   3

இந்த வசனத்தைக் கேட்டதும் அசந்து போன அந்த அறிஞர் நானும் ஒரு மருத்துவர்தான் இது ஒரு அற்புதமான விதி என்பதை ஒப்புக்கொள்கிறேன். இவ்வாறே உங்கள் நபிமொழியில் ஆன்மீக போதனைகள் நிறைந்திருக்கின்ற மாதிரி உடல்நலம் தொடர்பான ஏதாவது மூலவிதிகள் கூறப்பட்டிருகிறதா...? என மீண்டும் கேள்வி எழுப்பினார்.   அதற்கு ஆம்..!  என பதிலளித்த அந்த அரசரவை அறிஞர் அலி இப்னு ஹுஸைன் அவர்கள் ; ஒரு நபிமொழியை அவருக்கு படித்துக்காண்பித்தார்.  “இரைப்பைதான்  எல்லா வியாதிகளுக்கும் அடிப்படை. நீங்கள் உங்களின் உடலுக்கு எது தேவையோ அதைக் கொடுங்கள். பத்தியம் சிகிச்சையை விட மேலானது.” 4 இதைக்கேட்டு அதிசயித்துப்போன அந்த மருத்துவ அறிஞர் உங்களுடைய வேதமும் உங்களுடைய நபியும் மருத்துவமேதை  ஜாலினூஸுக்கு எதையும் விட்டுவைக்கவில்லை எனக் கூறி வியந்தார்.

அறிஞர் அப்கராத் கூறுவார் ; பாதிப்பைக் குறைப்பது பயன்பாட்டை பெருக்குவதை விட மேலானது.களைப்புற்று சோர்வடைவதைத் தவிர்த்தும்,உண்டு,குடித்து வயிறு நிரம்புவதைத் தவிர்த்தும் நிரந்தர ஆரோக்கியத்தைத் தேடிக்கொள்ளுங்கள்.

ஒரு மருத்துவ மேதை கூறுவார் ; எவர் உடல் நலத்தை நாடுவாரோ அவர் தரமான உணவை சுத்தமாக சாப்பிடவும்,தண்ணீர் குடிப்பதைக் குறைத்து தாகத்திற்குக் குடிக்கவும்,உணவு உண்ட பின் நடக்க வேண்டும்,தன்னை உடல் உபாதைக்கு உட்படுத்தும் வரை உறங்க வேண்டாம்.வயிறு நிரம்பிய பின் கழிப்பறை செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

                                      இன்ஷா அல்லாஹ் தொடரும்...............

என்றும் தங்களன்புள்ள.


மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா 
எஸ்.எஸ்.அஹமது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்
( தலைமை இமாம்,மஸ்ஜித் இந்தியா,கோலாலம்பூர்,மலேசியா )

வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

Saturday, August 9, 2014

ஒற்றைக் கண்ணன் தஜ்ஜால்.


8 -08-2014 வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயான்.
தலைப்பு ;-ஒற்றைக் கண்ணன் தஜ்ஜால்.
குத்பா பேருரை ;- 
மௌலானா மௌலவி அல்ஹாஜ் 
எஸ்.எஸ்.அஹ்மது பாக்கவி,ஹஜ்ரத்.
தலைமை இமாம், மஸ்ஜித் இந்தியா,
கோலாலம்பூர் , மலேசியா.