Saturday, January 17, 2015

வாழூரில் பெருமானாரின் மீலாதுப் பெருவிழா சென்னை பிலாலியா அரபுக்கல்லூரி மாணவர்களால் நடைபெற்றது !!!

முதஅவ்விதன்!   முபஸ்மிலன்!     முஹம்திலன்!    முஸல்லியன்!    முஸல்லிமா!
   அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)



 எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம், அவர்கள் பிறந்த புனிதம் நிறைந்த மாதமான, ரபீஉல் அவ்வல் மாதத்தின், பிறை ஒன்றில் இருந்து தினமும் மஃரிப் தொழுகைக்குப் பிறகு,  வாழூர் அல் மஸ்ஜிதுர் ரைய்யான் ஜும்ஆ பள்ளி வாசலில்,  சுந்தர நபிகளாரின் சந்தனப் புகழ் பாடும், சிறப்பான சுப்ஹான மவ்லிது ஷரீஃப்,வாழூர் அல் மஸ்ஜிதுர் ரைய்யான் ஜும்ஆ பள்ளி வாசலின் தலைமை இமாம்,  மௌலானா  மௌலவி K.S. முஹம்மது ஆரிஃப்கான் ஆலிம் நிஜாமி, நூரி ஹஜ்ரத் அவர்கள் தலைமையில்,பதினோரு தினங்கள் இனிதே ஓதப்பட்டு, (03-01-2015) அன்று சனிக்கிழமை,பெருமானாரின் மீலாதுப் பெருவிழா,தமிழகத்தின் தலை சிறந்த அரபுக் கல்லூரிகளில் ஒன்றான, சென்னை பிலாலியா அரபுக்கல்லூரி மாணவர்களால் நடத்தப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.




இந்நிகழ்ச்சி அஸர் தொழுகை முதல் இரவு 11.00 
மணி வரை மிகச்சிறப்பாக நடைபெற்றது.





சுற்றுப்புற மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அல்லாஹ்வின் அன்பையும்,அருளையும் பெற்றுக்கொண்டனர்.வஸ்ஸலாம்.

வெளியீடு --
சித்தார்கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணையதளம்,
சுன்னத் ஜமாஅத் பேரியக்கம் வாழூர் கிளை.
www.chittarkottaisunnathjamath.blogspot.com.

சித்தார் கோட்டையில் பெருமானாரின் 1489 வது மீலாது ஊர்வலம் மிகச் சிறப்பாக நடைபெற்றது !!!!

முதஅவ்விதன்!   முபஸ்மிலன்!     முஹம்திலன்!    முஸல்லியன்!    முஸல்லிமா!
   அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)


 எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம், அவர்கள் பிறந்த புனிதம் நிறைந்த மாதமான, ரபீஉல் அவ்வல் மாதத்தின், பிறை ஒன்றில் இருந்து தினமும் மஃரிப் தொழுகைக்குப் பிறகு, சித்தார் கோட்டையிலுள்ள மூன்று பள்ளி வாசல்கள்,மற்றும் வாழூர் ஜும்ஆ பள்ளி வாசலிலும் சுந்தர நபிகளாரின் சந்தனப் புகழ் பாடும் சிறப்பான சுப்ஹான மவ்லிது ஷரீஃப் பன்னிரெண்டு தினங்கள் இனிதே ஓதப்பட்டு, (03-01-2015) அன்று சனிக்கிழமை 
மீலாது விழா கொண்டாடப்பட்டது.



சனிக்கிழமை காலை 10-00 மணிக்கு, சித்தார்கோட்டை ஜன்னத்துல் பிர்தெளஸ் ஜும்ஆ பள்ளிவாசலில், சுந்தர நபிகளாரின் சந்தனப் புகழ்பாடும் சுப்ஹான மவ்லிது ஷரீஃப், சித்தார் கோட்டையின் மூன்று இமாம்கள்,இன்னும் வாழூர் இமாம், மற்றும் ஜாமிஆ சித்தாரிய்யா அரபுக் கல்லூரியின் ஆசிரியர்கள்,மற்றும் மாணவர்களால் ஓதப்பட்டு,
 இறுதியில் சிறப்பு துஆ மஜ்லிஸ் நடைபெற்றது. 


பிறகு ஊர் மக்கள் அனைவருக்கும் விசேச 
உணவு வாகனங்கள் மூலம் வழங்கப்பட்டது.



மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு 
மதரஸா மல்ஹருஸ் ஸுஅதா மாணவ,மாணவிகளின் 
மீலாது ஊர் வலம் நடைபெற்றது.





இறுதியில் துஆ ஓதப்பட்டு, மீலாது விழா 
இனிதே நிறைவு பெற்றது.இதில் ஏராளமானோர் 
கலந்து கொண்டு அல்லாஹ்வின் அன்பையும்,
அருளையும் பெற்றுக்கொண்டனர்.வஸ்ஸலாம்.


வெளியீடு --
சித்தார்கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணையதளம்,
சுன்னத் ஜமாஅத் பேரியக்கம் வாழூர் கிளை.
www.chittarkottaisunnathjamath.blogspot.com

Friday, January 2, 2015

மலேசியத் தலைநகரில் மாபெரும் மீலாது மாநாடு !!!!

காலம் : ரபீவுல் அவ்வல் 12 [1436 ] சனிக்கிழமை [03-01-2015]
இடம் : தலைநகர் மஸ்ஜித் இந்தியா பள்ளிவாசல்.மலேசியா.

முதல் அமர்வு : கருத்தரங்கம்

அண்ணல் நபி [ஸல்] அவர்கள் அழகிய முன்மாதிரி
நேரம் : காலை 9 : 30 மணி முதல் 12 : 30 வரை.
தலைமை: மவ்லவி அல்ஹாஜ் 
முஹம்மது ஹபீப் மன்பஈ ஹள்ரத் அவர்கள்
முன்னிலை :
கிராஅத் : மவ்லவி அல்ஹாபிழ் முஹம்மது சலீம் மன்பஈ 
உஸ்தாத் இந்தியன் முஸ்லிம் மஸ்ஜித், கம்போங் பண்டான்
வாழ்த்துரை :

கருத்துரையாளர்கள்:
மவ்லவி அல்ஹாபிழ் 
A.U. அபூபக்கர் உஸ்மானி அவர்கள்.
இமாம், பாலவாக்கம், சென்னை.
[வர்த்தகத்தில் வள்ளல் நபி (ஸல்) அவர்களின் முன்மாதிரி]
மவ்லவி அல்ஹாபிழ் முபாரக் ரஷாதி அவர்கள்.
உஸ்தாத், மதரஸா நூருல் முஹம்மதியா, பங்சார்
[ஆளுமைப் பண்பில் அழகிய முன்மாதிரி]
மவ்லவி முஹம்மது ஹஸ்ஸான் நிஜாமி அவர்கள்,
[21- ம் நூற்றாண்டிற்கு இறைத்தூதரின் முன்மாதிரி]

நிறைவுரை : மவ்லவி அல்ஹாபிழ் 
அல்ஹாஜ் s.s. அஹ்மது பாஜில் பாகவி ஹள்ரத் அவர்கள்.
தலைமை இமாம், மஸ்ஜித் இந்தியா, கோலாலம்பூர்.
[இல்லறத்தில் இறைத்தூதரின் இனிய முன்மாதிரி]

இரண்டாம் அமர்வு: பட்டிமன்றம்

நவீனத் தொழில் நுட்பத்தால் அதிகம் விளைந்தது 
நன்மையா ? தீமையா ?
காலம் : மதியம் 2 : 30 மணி.

துவக்கவுரை: மவ்லவி 
அல்ஹாபிழ் நூருல் அமீன் மிஸ்பாஹி அவர்கள்
(துணை இமாம், மஸ்ஜித் இந்தியா, கோலாலம்பூர்)
நடுவர் : மவ்லவி அல்ஹாபிழ் 
அல்ஹாஜ் அபூதாஹிர் பாகவி ஹள்ரத் அவர்கள்.
(பேராசிரியர், நூருல் இஸ்லாம் அரபிக்கல்லூரி, சேலம்.)
நன்மையே !
மவ்லவி அல்ஹாபிழ் அபூபக்கர் ரஷாதி அவர்கள்.
(உஸ்தாத், மதரஸா சலாஹிய்யா, மெலவாத்தி)
மவ்லவி அல்ஹாபிழ் முஹம்மது ஷாஃபி வாஹிதி அவர்கள்.
(உஸ்தாத், மன்பவுல் ஹுதா ஹிப்ளு மதரஸா, சுங்கை புளூ.)
தீமையே !
மவ்லவி அல்ஹாபிழ் சதக்கத்துல்லாஹ் மஸ்லஹி அவர்கள்.
(உஸ்தாத், மதரஸா இமாம் கஸ்ஸாலி (ரஹ்), சிலாயாங்.)
மவ்லவி அல்ஹாபிழ் காதிர் மீரான் மஸ்லஹி அவர்கள்.
(உஸ்தாத், மஸ்ஜித் இந்தியா,சிரம்பான்.)
மூன்றாம் அமர்வு: மீலாது சிறப்பு சொற்பொழிவு
நேரம் : அஸர் தொழுகையைத் தொடர்ந்து
முன்னிலை:
சிறப்புரை : மவ்லவி அல்ஹாபிழ் 
அல்ஹாஜ் s.s.ஹைதர் அலி மிஸ்பாஹி ஹள்ரத் அவர்கள்.
முதல்வர், உஸ்மானிய்யா அரபிக்கல்லூரி,
மேலப்பாளையம்,இந்தியா.
[சத்திய ஸஹாபாக்கள்]
மஃக்ரிபுக்குப் பின்:
மவ்லவி அல்ஹாபிழ் அல்ஹாஜ் 
O.A. முஹ்யித்தீன் ஃபைஜி ஹள்ரத் அவர்கள்,
பேராசிரியர், ஜாமியா ஃபைஜுல் அன்வார் 
அரபிக் கல்லூரி, கடையநல்லூர்.

இஷாவுக்குப்பின் :

மவ்லவி அல்ஹாபிழ் 
அல்ஹாஜ் சைபுத்தீன் ரஷாதி ஹள்ரத் அவர்கள்.
பேராசிரியர்,ஸபீலுர் ரஷாத் அரபிக்கல்லூரி, பெங்களூர்.
[மவ்லிது ரசூலின் மாண்புகள்]

மாநாட்டு நிறைவுப் பேருரை:

மவ்லவி அல்ஹாபிழ் அல்ஹாஜ் 
ஷப்பீர் அலி பாகவி ஹள்ரத் கிப்லா அவர்கள்.
நிறுவனர், மதீனத்துல் இல்ம் அரபிக்கல்லூரி, சென்னை.
[உலகத்து மாந்தரின் இதயத்து வேந்தர்]
நன்றியுரை: 
துஆ 
அனைவரும் வருக! அறிவமுதம் பருக!!