Thursday, June 22, 2017

சென்னை மக்கா பள்ளியின் பொது அறிவிப்பு !!!



சென்னை மக்கா பள்ளியில் பணியாற்றி வந்த மௌலானா 
ஷம்சுதீன் காசிமி அவர்கள், கடந்த 2016 நவம்பர் 18ம் தேதி 
அன்று மக்கா மஸ்ஜித் நிர்வாகத்தால் எல்லா 
பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டார்.

மேலும் அவரின் மானக்கேடான , ஒழுக்கக்கேடான , 
அருவருக்கத்தக்க செயல்களால் இந்த முடிவு கமிட்டியின் 
சார்பாக ஒருமித்தமாக எடுக்கப்பட்டது.

ஆகையால் மௌலானா ஷம்சுதீன் காசிமிக்கும் மக்கா 
மஸ்ஜிதிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை 
என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

தற்போது மௌலானா மன்சூர் காஷிஃபீ அவர்கள் 
புதிய இமாமாக பொறுப்பேற்று உள்ளார்.


இப்படிக்கு ;- மக்கா மஸ்ஜித் நிர்வாகம்.சென்னை.

வெளியீடு ;- சுன்னத் ஜமாஅத் பேரியக்க சித்தார் கோட்டை கிளை.

மழையை இறக்கிடு மன்னானே !!!


*ஆக்கம்:* கீழக்கரையில் மறைந்து வாழும் 
*பல்லாக்குத் தம்பி ஒலியுல்லாஹ்* 
(ரஹ்மதுல்லாஹி அலைஹி)

மழையை இறக்கிடு மன்னானே
மனதைத் துலக்கிடு ஹன்னானே
கஹ்ரை நீக்கிடு வல்லோனே
இறக்கிடு மழை ரப்பி ரஹ்மானே!
அன்ஸில் அன்ஸில் அல்மதரா
அன்ஸில் ஙைதன் ஙzஸீரா
انزل انزل المطرا انزل غيثا غزيرا 
அர்ஹிம் யாரப்பி லில் ஃfபுகரா
இறக்கிடு மழை ரப்பி ரஹ்மானே!
சின்னஞ் சிறியோர் முகம் பாரு
சீதேவி தனத்தை நீ காரு
விண்ணின் வினைகளை நீ காரு
இறக்கிடு மழை ரப்பி ரஹ்மானே!
ஏழைகள் பாவம் பொறுத்திடுவாய்
ஏழைகள் மீதில் இறங்கிடுவாய் 
எங்கும் ரஹ்மத்து செய்திடுவாய் 
இறக்கிடு மழை ரப்பி ரஹ்மானே!
ஆற்றில் ஜலத்தை ஓடிடச் செய்
அழகாய் கண்மாய்கள் நிரம்பிடச் செய்
குண்டு குளங்களும் நிரம்பிடச் செய் 
இறக்கிடு மழை ரப்பி ரஹ்மானே!
தானியம் தவசம் மலிந்திடச் செய்
தகாத அதன் விலை குறைந்திடச் செய் 
தங்கடம் ஏழ்மைகள் நீங்கிடச் செய் 
இறக்கிடு மழை ரப்பி ரஹ்மானே!
நான்கு இமாம்கள் பொருட்டாலும்
நல்ல குதுபுகள் பொருட்டாலும்
நலமாம் அவுலியாக்கள் பொருட்டாலும் 
இறக்கிடு மழை ரப்பி ரஹ்மானே!
எல்லா நபிமார்கள் பொருட்டாலும்
எங்கள் நபியுல்லாஹ் பொருட்டாலும்
குல்லு ஸஹாபாக்கள் பொருட்டாலும் 
இறக்கிடு மழை ரப்பி ரஹ்மானே!
ஆமீன் ஆமீன் யாரஹ்மான் 
ஆமீன் ஆமீன் யாரஹ்மான் 
ஆமீன் ஆமீன் யாரஹ்மான் 
இறக்கிடு மழை ரப்பி ரஹ்மானே!

*இந்த பிரார்த்தனையை பாவம் அறியா சின்னஞ் 
சிறு பாலர்கள் மூலம் வேண்டுவதன் பலனாக 
வல்ல ரஹ்மான் வளமான நலவான 
மழையை இறக்கி அருள்வானாக*

வெளியீடு ;- சுன்னத் ஜமாஅத் பேரியக்க சித்தார் கோட்டை கிளை.

Thursday, June 1, 2017

வாழூரில் ஹிஜ்புல் குர்ஆன் மஜ்லிஸ் துவங்கியது !!!

வாழூர் அல்--மஸ்ஜிதுர் ரைய்யான் சுன்னத் ஜமாஅத் 
ஜும்ஆப் பள்ளிவாசலில்,வலமை போல்,27-05-2017 முதல்
 ( ரமழான் பிறை 1 முதல் )
(ஹிஜ்புல் குர்ஆன்) குர்ஆன் ஓதும் மஜ்லிஸ் துவங்கியது.அல்ஹம்துலில்லாஹ்.

இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸ் தராவீஹ் தொழுகைக்குப் பிறகு ஆரம்பிக்கப்பட்டு,ஒரு நாளுக்கு ஒரு ஜுஸ்வு வீதம் 
ஓதி,பிறை 27 லைலத்துல் கத்ர் இரவு அன்று முடிக்கப்படும்.

இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸ் 40 வருடத்திற்கு மேல் 
சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில்,மதரஸா மதாரிஸுல் அரபிய்யாவின் ஏராளமான முன்னால் இன்னால் மாணவர்கள் கலந்து அல்லாஹ்வின் அன்பையும்,அருளையும் பெற்றுக் கொள்கிறார்கள்.

இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில் பெரியவர்களும், தொடர்ந்து ஓதிவருகிறார்கள்.அல்லாஹ் அவர்களுக்கு எல்லா வித சிறப்பையும் வழங்குவானாக ஆமீன்.

இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸை, கண்ணியம் வாய்ந்த 
உலமாப் பெருமக்கள் அதிகமானோர் வழிநடத்தி உள்ளார்கள்.
அல்லாஹ் அந்த உலமாப் பெருமக்களுக்கு இரு உலகிலும் 
நற்பதவி வழங்குவானாக ஆமீன்.











யாஅல்லாஹ் இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸை,கியாமநாள் 
வரை தொடர்ந்து நடைபெற செய்வாயாக ஆமீன்.

வெளியீடு ;- சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் கிளை.