Thursday, October 25, 2012

தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள்





குர்பானி கொடுப்பதால்

இறைக் கடமை நிறை வேறுகிறது.

மன நிம்மதி நிறைகிறது.

உறவுகள் ஒன்று கூடுகிறது.

ஏழைகள் பசியாறுகிறார்கள்.

பள்ளிமத்ரஸாக்கள் பயனடைகிறது.

இறையருல் இறங்குகிறது.

தியாக உணர்வு உயர்கிறது.

ஜீவ காரூண்யம் நிலைநாட்டப்படுகிறது.

கூட்டுறவு மேம்படுகிறது.

வறியவர்கள் வளம் பெறுகிறார்கள்.

அனாதைகள் பலம் பெறுகிறார்கள்.

முதிர் கன்னிகள் கல்யாணமாலை சூடுகிறார்கள்.

ஆகவே அத்தகைய உயர் தியாகத்தை நாம் அனைவரும்
நிறை வேற்றி அல்லாஹ்வின் அளப்பெரும் அன்பையும்,அருளையும்,பெற்றுக்
கொள்ளுமாறும்,மேலும் அனைத்து நல் உள்ளங்களுக்கும்,சித்தார்கோட்டை அஹ்லுஸ்
சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினர், மற்றும் சுன்னத் வல் ஜமாஅத்  பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளையினர்களும்,தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்களை கூறி,அகமகிழ்ந்து துஆச் செய்கிறார்கள். வஸ்ஸலாம்.....

Tuesday, October 9, 2012

தமிழ் கூறும் நல்லுலகின் ஆலிம்கள் மற்றும் அரபுக் கல்லூரி மாணவர்களுக்கு ஓர் அற்புத வாய்ப்பு !!!



அரபுக் கல்லூரிகளின் அனுபவமிக்க விற்பனர்கள் பயிற்றுவிப்பால் நடத்தப்படும், தப்ஸீர்,ஹதீஸ் இஸ்லாமிய சொத்துரிமைச் சட்டம் மற்றும் இன்ன பிற இஸ்லாமிய ஒருநாள் பயிற்சி வகுப்புகள்.

ஒவ்வொரு கலையும் ஒரே நாள் வகுப்பில்.....

நேரம் ; காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை

தப்ஸீர் (திருக்குர்ஆன் விளக்கவுரை) கலை பயிலரங்கம்

நாள் ; 3-10-2012 புதன் கிழமை -- பயிற்சி அளிப்பவர்கள்
மௌலானா அ.அப்துல் அஜீஸ் ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்
(தலைமை இமாம்,கரும்புக்கடை சுன்னத் வல் ஜமாஅத் பள்ளிவாசல்,கோவை)

அகீதா (கொள்கை விளக்கம்) பயிலரங்கம்

நாள் ; 10-10-2012 புதன் கிழமை -- பயிற்சி அளிப்பவர்கள்.
மௌலானா அ.சையது முஸ்தபா ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்
(முதல்வர், ஜாமிஆ ஸலாஹிய்யா அரபுக் கல்லூரி,திருவனந்தபுரம்,கேரளா)

இஸ்லாமிய சொத்துரிமை (மீராஸ்) பயிலரங்கம்

நாள் ; 17-10-2012 புதன் கிழமை -- பயிற்சி அளிப்பவர்கள்.
மௌலானா ஏ.முஹம்மது இஸ்மாயீல் ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்
(முதல்வர்,ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபுக் கல்லூரி,நீடூர்)
மௌலானா கே.அப்துர் ரஹ்மான் மிஸ்பாஹி ஹஜ்ரத்
(பேராசிரியர்,ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபுக் கல்லூரி,நீடூர்)

வான சாஸ்திர பயிலரங்கம்

நாள் ; 21-10-2012 புதன் கிழமை -- பயிற்சி அளிப்பவர்கள்.
மௌலானா எஸ்.ஏ.காஜா நிஜாமுத்தீன் யூசுஃபி  ஹஜ்ரத்
(பேராசிரியர்,யூசுஃபியா அரபுக் கல்லூரி, திண்டுக்கல்)

ஹதீஸ் கலை பயிலரங்கம்

நாள் ; 28-10-2012 புதன் கிழமை -- பயிற்சி அளிப்பவர்கள்.
மௌலானா ஏ.அபூதாஹிர் ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்
(பேராசிரியர்,நூருல் இஸ்லாம் அரபுக் கல்லூரி,சேலம்)

அன்புடன் அழைக்கிறது....

அரபி மற்றும் மார்க்க கல்வியியல் துறை.
பிலாலியா அரபுக் கல்லூரி,
107,ECR Highway,பெரிய நெம்மேலி,சென்னை-- 603104
9840538681 -- 9788432055
வெளியீடு ;-  மனபயீ ஆலிம் .காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்

Wednesday, September 19, 2012

ஏர்வாடி தர்ஹா ஷரீஃப் வாழும் இஸ்லாத்தின் தீபம்


இஸ்லாத்தைப் பரப்புவதற்காக இந்தியா வந்த ஏர்வாடி ஸஹீத் சையித் இப்றாஹீம் பாதுஷா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள்,நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் 18- வது தலைமுறையில் மதீனாவில் பிறந்த ஏர்வாடி ஷஹீத் சையித் இப்றாஹீம் பாதுஷா ரஹ்மத்துல்லாஹிஅலைஹி அவர்கள், சுமார் 3000 தொண்டர்களுடன் இஸ்லாத்தைப் பரப்புவதற்காக இந்தியா வந்தார்கள்.அக்காலத்தில் இந்தியாவின் நுழைவாயிலாக இருந்த சிந்து மாகாணத்தில் தங்கினார்கள்அங்கு தம் தொண்டர்களை பல பிரிவாகப் பிரித்து சிந்து மாகாணத்தின் பொது மன்றங்கள்சந்திப்புகள்சந்தைகள்மக்கள் ஒன்று கூடும் இடங்களெல்லாம் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்ய அனுப்பி வைத்தார்கள்இவர்களின் அன்பான அழைப்பை ஏற்று பலர் இஸ்லாத்தை ஏற்றனர்.அங்கிருந்து சிறு குழுவுடன் குஜராத் சென்று அங்கும் இஸ்லாத்தைப் பரப்பினார்கள்.

அங்கெல்லாம் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்த போது அங்குள்ள அரசர்களால் இழைக்கப்பட்ட இடையூறுகள் ஏராளம்.அவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டு இஸ்லாத்தை வளர்த்தார்கள்.பிறகு குஜராத்திலிருந்து புறப்பட்டு இஸ்லாமியப் பிரச்சாரத்திற்காக தொண்டர்கள் புடைசூழ கன்னனூர்ஆலப்புழைகொச்சிகொல்லம்,கண்ணியாகுமரி வழியாக காயல்பட்டிணம் வந்தனர்.அந்நேரத்தில் நெல்லைப் பகுதியை ஆட்சி செய்த குலசேகரப்பாண்டியன் தனது பகுதிக்கு வந்து தங்கியிருப்பவர்கள் யார் என்று அறிய தூது அனுப்பினான்.அப்போது இப்றாஹீம் ஷஹீத் பாதுஷா அவர்கள் தான் பெருந்திரளாக நாடு பிடிக்க வரவில்லை என்றும்,இஸ்லாமியப் பிரச்சாரம் செய்யவே வந்ததாக தெறிவித்தனர்.பின்பு அங்கிருந்து தொண்டர்கள் புடைசூழ மதுரையை நோக்கி வந்து இஸ்லாமிய பிரச்சாரம் செய்ய அனுமதி கேட்ட போதுமதுரை மன்னன் திருப்பாண்டியன் அதை ஏற்காமல் இவர்களுடன் போர் செய்ய தயாரானான்.இப்போரில் திருப்பாண்டியன் தோல்வியுற்று குடும்பத்துடன் திருப்பதிக்குச் சென்று தஞ்சம் புகுந்தான்.இப்றாஹீம் ஷஹீத்
பாதுஷா அவர்கள் மதுரைக்கு முழுப்பொறுப்பேற்று ஆட்சி நடத்தினார்கள்.13 ஆண்டு கால ஆட்சியில் தென்னிந்தியா முழுவதும் இஸ்லாத்தைப் பரப்பினார்கள்.

பின்பு திருப்பதியில் தஞ்சம் புகுந்த திருப்பாண்டியன் பெரும்படையோடு தமிழகம் நோக்கி வரஷஹீத் அவர்களின் படையில் பெரும்பாலானோர் மக்கா நகருக்கு திரும்பியிருந்தார்கள்எனவே எளிதாக திருப்பாண்டியன் மதுரையை கைப்பற்றி பின்பு ஷஹீத் இப்றாஹீம் பாதுஷா அவர்கள் தங்கியிருந்த இராமநாதபுரத்திற்கு வந்து ஷஹீத் அவர்களை எதிர்கொண்டான்மீதமிருந்த சிறுபடையுடன் போரில் இறங்கினார்கள்.உச்சகட்டமாக ஷஹீத் அவர்களின் குதிரையின் கால்களை பாண்டியமன்னன் வெட்டபதிலுக்கு அவனின் தோள் புஜங்களை ஷஹீத் அவர்கள் வெட்டினார்கள்.மயங்கி விழுந்த அவன் பின்பு தெளிவடைந்து எதிர்பாராத விதமாக ஈட்டியால் ஷஹீத் அவர்களின் மார்பைத் தாக்க,ஷஹீத் இப்றாஹீம் பாதுஷா அவர்கள் வீரமரணம் அடைந்தார்கள்.இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜிஊன்இவர்களின் அடக்கஸ்தலம் ஏர்வாடியில் உள்ளது.ஏர்வாடி தர்ஹாவில் வாழும் இப்புனித ஷுஹதாக்களை நாம் முறையாக ஜியாரத் செய்து அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் பெற்றுக்கொள்வோமாக ஆமீன்.. 

தகவல்காயல்பட்டிணம் முஅஸ்கருர் ரஹ்மான் அரபுக்கல்லூரியின் 15-வது ஆண்டு மலர்வஸ்ஸலாம்..

வெளியீடு-

மன்பயீ ஆலிம்.காம் 
மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்கள்.