Sunday, June 29, 2014

நோன்பு வைத்தியத்துக்காக அல்ல..வணக்கத்திற்காக!



27 -06-2014  வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயான்.
தலைப்பு ;-
நோன்பு வைத்தியத்துக்காக அல்ல..வணக்கத்திற்காக!

குத்பா பேருரை ;- 
மௌலானா மௌலவி அல்ஹாஜ் 
எஸ்.எஸ்.அஹ்மது பாக்கவி,ஹஜ்ரத்.
தலைமை இமாம், மஸ்ஜித் இந்தியா,
கோலாலம்பூர் , மலேசியா.

நோன்பு நோற்றால் உலகாதாயங்களும் உடல் ஆரோக்கியமும் உண்டு.
ஆனால் அதுவே பிரதான நோக்கமல்ல...
இறை அச்சமும் இறை வணக்கமும்தான்  அசல் நோக்கமாக இருக்கவேண்டும் .இம்மையை விட மறுமையே மனதில் கொண்டு நோன்பு நோற்றால் மறுமையும் கிடைக்கும்; இம்மையும் கிடைக்கும்.

ஷவ்வால் மாத ஆறு நோன்புகள்-Shawwal Six Fasting


நோன்பு என்பது ஒரு வகை வணக்கமாகும். நபிகள் நாயகம்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ரமலான் மாத கடமையான நோன்புகளை நோற்பதோடு மட்டுமல்லாமல், கீழ்கண்ட தினங்களிலும் உபரியாக நோன்பு நோற்பதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்கள். அதை நமது இமாம்கள் சுன்னத்தான நோன்பாக நமக்கு ஆக்கித் தந்திருக்கிறார்கள்.

01. ஷவ்வால் மாத ஆறு நோன்புகள்.

02. பிரதி திங்கள், வியாழக் கிழமைகள் நோன்பு வைப்பது சுன்னத்து முஅக்கதாவாகும்.

03. ஒவ்வொரு மாதத்திலும் மூன்று நாட்கள். அவை அய்யாமுல் பீழ் என்ற வெள்ளை நாட்களாகும்.அதாவது மாதத்தின் 13, 14, 15 ஆகிய மூன்று நாட்கள் மற்றும் ஒவ்வொரு மாதத்திலும் பிறை 27, 28, 29 ஆகிய மூன்று இரவு இருளான (அய்யாமுஸ்ஸூத்) என்ற நாட்களிலும் நோன்பு வைப்பது சுன்னத்தாகும். துல்ஹஜ் மாதம் பதிமூன்றுக்குப் பதிலாக பதினாறில் நோன்பு வைக்க வேண்டும்.

04. ஆஷுரா நாள்: முஹர்ரம் பத்தாம் நாள். மேலும் அதற்கு ஒரு நாள் முந்தி அல்லது ஒரு நாள் பிந்தி சேர்த்து வைப்பது சுன்னத்தாகும்.

05. அரபா நாள்: துல்ஹஜ் மாதம் 9 ஆம் நாள்.

ரஜப், ஷஃபான் மாதங்கள் நோன்பு நோற்பது ஏற்றமானதாகும்.

களாவான ஃபர்ளான நோன்பு நோற்கும்போது சுன்னத்தான நோன்பையும் நோற்பதாக நிய்யத் வைத்துக் கொண்டால் இரண்டும் நிறைவேறி இரண்டிற்குரிய தவாபும் கிடைக்கும். நிய்யத் வைக்கவில்லையெனில் சுன்னத்தான நோன்பு உடைய தவாபு கிடைக்காது.

ஷவ்வால் மாத ஆறு நோன்புகள்.

ரமலான் மாதத்தை அடைந்த நாம் அதைத்தொடர்ந்து வரக்கூடிய ஷவ்வால் மாத ஆறு நோன்புகளைப் பற்றிய சிறப்புகளை அறிந்து அதை நோற்பது அவசியமான ஒன்றாகும்.

அபூ அய்யூப் அல் அன்ஸாரி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் முஹம்மது(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக அறிவிக்கின்றார்கள்:

'யார் ரமலான் மாதத்தின் நோன்பையும் நோற்று பின்னும் அதைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பையும் நோற்கின்றாரோ (அவர்) காலமெல்லாம் நோன்பு நோற்றதற்குச் சமம்' என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம் : முஸ்லிம்)

'ஒரு மாத நோன்பு பத்து மாத நோன்புக்குச் சமமானது அதன் பின்னர் ஆறு நோன்பு இரண்டு மாதங்களுக்குச் சமமானது' என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஃப்வான் (ரலியல்லாஹு அன்ஹு); நூல்: தாரிமி, இப்னுமாஜா, அஹ்மத்

இந்த ஹதீஸின் மூலம் நாம் பெற வேண்டிய படிப்பினை வருடமெல்லாம் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் எவ்வளவு பலனை அடைவாரோ அந்நன்மைகளை ரமலானின் 30 நோன்புகளையும், ஷவ்வாலின் ஆறு நோன்புகளையும் நோற்றால் கிட்டுகின்றது.

இந்த ஆறு நோன்புகளை ஈதுப் பெருநாள் முடிந்ததன் மறுநாளிலிருந்து துவங்கி, தொடர்ச்சியாக ஆறு நாட்கள் நோன்பிருக்க வேண்டும். அதுவே சிறப்பானதாகும் என்பது இமாம் ஷாபிஈ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களது கருத்தாகும்.

ஷவ்வால் மாதத்தின் ஏனைய நாட்களில், அந்த மாதம் முடிவடைவதற்குள் பிரித்து பிரித்துக் கூட 6 நோன்பையும் பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று இமாம் அபூஹனிஃபா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகின்றார்கள்.

ஏனென்றால் இரு பெருநாட்களிலும் நோன்பு நோற்பது ஹராம் என்பதை நாம் பொதுவாக அறிந்த ஒன்றாகும். எனவே சுன்னத்தான ஷவ்வால் மாத ஆறு நோன்புகளை பெருநாளுக்கு பிறகு விரும்பினால் தொடர்ந்தோ அல்லது ஷவ்வால் மாதத்தில் எந்த நாளையிலும் விட்டுவிட்டோ நோற்கலாம். எனவே, இவற்றில் எது தங்களுக்கு இயலுமோ அந்த வகையில் ஷவ்வால் ஆறு நோன்பை நோற்பது சிறந்தது.

இதை அடிப்படையாக வைத்து பெரும்பான்மையான புகஹாக்கள் குறிப்பாக ஹனபி, ஷாபிஈ மற்றும் ஹன்பலி மத்ஹப் இமாம்கள் ஷவ்வால் மாதத்தில் நோன்பு நோற்பதை அறிவுறுத்துகிறார்கள். – ஆதாரம்: ரத்துல் முக்தார், முங்னி அல் முஹ்தாஜ் ஷாஹ் அல் மின்ஹாஜ், கஸாஸஃப் அல் கினா.

ஷாபிஈ மற்றும் ஹன்பலி இமாம்கள் மிகச் சிறந்தது, ஆறு நோன்பு நோற்பதற்கு பெருநாள் கழித்த மறுநாளிலிருந்து நோன்பு நோற்பதுதான் என்று சொல்கிறார்கள். – மின்ஹாஜ், ஹயாத் அல் முன்தஹா.

இதற்குரிய காரணத்தை அல்லாமா கதீப் அல் ஷிர்பினி விவரிக்கிறார்கள், நோன்பு நோற்பதை விரைவுபடுத்துவது மிகவும் நல்லது. சோம்பேறித்தனம் மற்றைய காரணங்களால் இந்த சுன்னத்தை இறுதியில் நிறைவேற்ற முடியாமலாகிவிடும்.  எவ்வாறிருப்பினும் நோன்புப் பெருநாளை தொடர்ந்து தொடர்ச்சியாக அல்லது தொடர்ச்சியில்லாமல் ஷவ்வால் மாதம்ஆறு நோன்புகள் நோற்பதன் மூலம் இந்த சுன்னத்தை நிறைவேற்றிடலாம்;. -முங்னி அல் முஹ்தாஜ்.

இறுதியில் ஹனபி மத்ஹப் இமாம்கள் சொல்கிறார்கள், இரண்டும் அதாவது பெருநாளைத் தொடர்ந்த ஆறு நோன்புகள் அல்லது ஷவ்வால் மாதத்தில் தொடர்ச்சியில்லாமல் விட்டுவிட்டு நோற்கப்படும் ஆறு நோன்புகள் சுன்னத்தைத்தான் பிரதிபலிக்கின்றன. – ரத்துல் முக்தார்.

இருப்பினும் எவர் ஒருவர் சோம்பேறித்தனம், மறதியின்மை மற்றும் பல்வேறு காரணங்களைக் கொண்டு இந்த நோன்பை நோற்க முடியாது என்று பயந்தால், அவர்கள் ஆறு நோன்பு நோற்பதை பெருநாளைத் அடுத்த நாட்களில் விரைவுபடுத்த வேண்டும்.

- ரத்துல் முக்தார் அலா அல் துர்ருல் முக்தார் 2:125, முங்னி அல் முஹ்தாஜ் ஷரஹுல் மின்ஹாஜ் 2:184,185, புஹுதி, கஸஅஸஃப் அல் கினா 2:237,238

நன்றி ;- sufimanzil.org

ஸலாத்துல் ஈதைன் – இரு பெருநாள் தொழுகைகள்-Eid Prayers பெருநாள் தொழுகை (ஹனபி)


ஜும்ஆத் தொழுகை யார் யார் மீது எல்லாம் கடமையாகிறதோ இரு ஈது பெருநாள் தொழுகைகளும் அவர்கள் மீது கடமையாகிறது. ஆனால் ஈது தொழுகை வாஜிபு ஆகும். இம்மாதிரியே ஜும்ஆவில் குத்பா பர்ளு, ஆனால் ஈதில் குத்பா வாஜிபாகும்.

ஜும்ஆவில் குத்பா தொழுகைக்கு முன்னால் ஓதப்படும். ஈதுகளின் குத்பா தொழுகைக்குப் பின்னால் ஓதப்படும்.

பெருநாள் தொழுகையின் நேரமாவது சூரியன் நன்கு உதயமானதிலிருந்து (காலை 7 மணியிலிருந்து) நடுப்பகல் உச்ச நேரத்திற்கு சற்று முன் (11 மணி) வரையிலாகும்.

ஈதுல் பித்ரைவிட ஈதுல் அல்ஹாவைச் சீக்கிரம் தொழுது கொள்வது நல்லது.



தொழுகை முறை:

ஈது பெருநாள் தொழுகை இரண்டு ரக்அத் வாஜிபாகும். ஒவ்வொரு ரக்அத்திலும் மும்மூன்று விகிதம் இரண்டு ரக்அத்துகளில் 6 அதிகப்படியான தக்பீர்கள் உண்டு.

முதலில் நிய்யத்து செய்து அல்லா{ஹ அக்பர் சொல்லி இமாமுடன் ரக்அத் கட்டிக் கொள்ள வேண்டும். பிறகு ஃதனா ஓத வேண்டும். பிறகு இரண்டு முறை 'அல்லா{ஹ அக்பர்' என்று கையை உயர்த்தி கீழே தொங்கவிட்டு விட்டு மூன்றாம் முறை 'அல்லாஹ அக்பர்' சொல்லி (ரக்அத்தில் கை கட்டி கொள்ள வேண்டும்) வழக்கம் போல் இமாம் அல்ஹம்து ஸூராவும் கிராஅத்தும் ஓதுவார். அதைக் கேட்க வேண்டும்.

நோன்புப் பெருநாள் தொழுகை நிய்யத்:

نَوَيْتُ اَنْ اُصَلِّ لِلهِ تَعَااٰى رَكَعَتَيْنِ صَلٰوةَ عِيْدِ الْفِطْرِ اِقْتَدَيْتُ بِهٰذَالْاِمَامِ مُتَوَجِّهًا اِلٰى جِهْةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اللهُ اَكْبَرُ

ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நிய்யத்:

نَوَيْتُ اَنْ اُصَلِّ لِلهِ تَعَااٰى رَكَعَتَيْنِ صَلٰوةَ عِيْدِ الْاَضْحٰى اِقْتَدَيْتُ بِهٰذَالْاِمَامِ مُتَوَجِّهًا اِلٰى جِهْةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اللهُ اَكْبَرُ

இரண்டாவது ரக்அத்தில் ஓத வேண்டியதை ஓதி முடித்து ருகூவுக்கு போகும் முன்னர், முன்போல் 3 தக்பீர் சொல்ல வேண்டும். மூன்று முறை அல்லா{ஹ அக்பர் சொல்லி கையைத் தொங்கவிட்டு விட்டு நாலாவது முறை அல்லா{ஹ சொல்லி ருக்கூவுக்கு போய் வழக்கம் போல் தொழுகையை முடிக்க வேண்டும்.

அதன்பிறகு இமாம் குத்பா ஓதுவார். அதை காது தாழ்த்தி கேட்க வேண்டும். பின்பு துஆ திக்ருகள் ஓதப்படும்.

தக்பீர்:

الله اَكْبَرُ اَللهُ اَكْبَرُ اَللهُ اَكْبَرُ لاَ اِلاَهَ اِلَّا اللهُ وَاَللهُ اَكْبَرُ اَللهُ اَكْبَرُ وَلِلهِ الْحَمْدُ

பெருநாள் தொழுகை (ஷாபிஈ)

பொழுது உதயமானதிலிருந்து ளுஹரின் வக்து வரும் வரை நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைகளின் நேரங்களாகும். இவ்விரு பெருநான் தொழுகைகளும் களாவாகிவிட்டால் தொழுவது சுன்னத்துல் முஅக்கதாவாகும்.  உளுஹிய்யாவை அறுக்க வேண்டியிருப்பதால் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை அதன் ஆரம்ப வக்திலும்இ ஃபித்ரு ஜகாத்தை கொடுத்து முடிப்பதற்காக நோன்புப் பெருநாள் தொழுகையை சற்றுக் காலம் தாழ்த்தியும் தொழுவது சுன்னத் ஆகும்.

ஈத் தொழுகையானது தொழுகையின் எல்லாவித ஃபர்ளு, ஷர்த்துகளைக் கொண்ட இரண்டு ரக்அத் தொழுகை ஆகும். எனினும் முதல் ரக்அத்தில் வஜ்ஹத்து ஓதிய பின் ஏழுமுறை  தக்பீர் கூறுவதும், இரண்டாவது ரக்அத்தில் நிலைக்கு வந்த பின்பு ஐந்து முறை தக்பீர் கூறுவதும் சுன்னத்தாகும். ஒவ்வொரு தக்பீர் கூறும்போதும்  இரு கைகளையும் உயர்த்தி பின்பு அவைகளைக் கட்டிக் கொள்வதும் மற்றும் இந்த தக்பீர்களுக்கிடையில் 'ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலா இலாஹ இல்லல்லா{ஹ வல்லா{ஹ அக்பர்' எனச் சொல்வதும் சுன்னத்துக்களாகும். ஃபாத்திஹா சூராவிற்குப் பின் 'காஃப்'; (50வது) சூரா  அல்லது 'ஸப்பிஹிஸ்ம ரப்பிகல்'; சூராவும் இரண்டாவது ரக்அத்தின் ஆரம்பத்தில் 'ஹல்அதாக' சூராவும் ஓதுவதும் சுன்னத்தாகும்.

நோன்புப் பெருநாள் தொழுகை நிய்யத்:

اُصَلِّى صَلٰةَّ عِيْدِ الْفِطْرِ رَكْعَتَيْنِ لِلهِ تَعَالٰى اَللهُ اَكْبَرْ

`{ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நிய்யத்:

اُصَلِّى صَلٰةَّ عِيْدِ الْاَضْحٰى رَكْعَتَيْنِ لِلهِ تَعَالٰى اَللهُ اَكْبَرْ

இரு பெருநாட்களின் முதல் நாள் மாலை சூரியன் மறைந்தது முதல் பெருநாள் தொழுகை தொழத் தொடங்கும் வரை எல்லாத் தொழுகைகளுக்குப் பின்பும் தெருக்களிலும், வீதிகளிலும், வீடுகுளிலும் நின்ற, அமர்ந்த, படுத்த அமைப்புகளிளெல்லாம் தக்பீர் சொல்லிக் கொண்டே இருப்பது சுன்னத்தாகும். இதற்கு தக்பீர் முர்ஸல் என்று பெயர். ஹஜ்ஜுப் பெருநாளில் அரபா தினத்தின் ஸுப்{ஹத் தொழுகையிலிருந்து அய்யாமுத் தஷ்ரீக் (துல்ஹஜ் பிறை 13) அஸர் வரை எல்லாத் தொழுகைகளுக்கும் பின்பு மட்டும் தக்பீர் சொல்வது சுன்னத்தாகும். இதற்கு தக்பீர் முகய்யத்' என்று பெயர் மேலும் துல்ஹஜ் பிறை 1 முதல் 10 வரை ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய குர்பானிப் பிரயாணிகளைப் பார்க்ககும் போதோ, இவைகளின் சப்தங்களைக் கேட்கும்போதோ தக்பீர் சொல்வது சுன்னத்தாகும்.

தக்பீர்:

اَللهُ اَكْبَرُ اَللهُ اَكْبَرُ اَللهُ اَكْبَرُ لاَ اِلاَهَ اِلَّا اللهُ وَاَللهُ اَكْبَرُ اَللهُ اَكْبَرُ وَلِلهِ الْحَمْدُ…..۲

اَللهُ اَكْبَرُ اَللهُ اَكْبَرُ اَللهُ اَكْبَرُ كَبِيْرًا وَالْحَمْدُ لِلهِ كَثِيْرًا وَسُبْحَانَ اللهِ بُكْرَةً وَّاَصِيْلًا لاَ اِلٰهَ اِلَاَّ اللهُ وَلَا نَعْبُدُ اِلَّا اِيَّاهُ مُخْلِصِيْنَ لَهُ الدِّيْنَ وَلَوْ كَرِهَ الْكَافِرُوْنَ لَااِلٰهَ اِلَاّ اللهُ وَحْدَهْ وَصَدَقَ وَعْدَهْ وَنَصَرَ عَبْدَهْ وَاَعَزَّ جُنْدَهُ وَهَزَمَ الْاَحْزَابَ وَحْدَهْ لَا اِلٰهَ اِلَّا الله وَالله اَكْبَرُ اَللهُ اَكْبَرُ وَلِللهِ الْحَمْدُ .

தொழுகைக்குப் பின்பு குத்பா ஓதுவது சுன்னத்தாகும். ஜும்ஆ குத்பாவின் ஃபர்ளு, ஷர்த்துகளுடன் முதல் குத்பாவை ஒன்பது தக்பீர்களைக் கொண்டும், இரண்டாவது குத்பாவை தொடர்ச்சியான ஏழு தக்பீர்களைக் கொண்டும் தொடங்குவதும் பெருநாள் குத்பாவின் சொற்றொடர்களுக்கு இடையே தக்பீர் கூறுவதும் சுன்னத்தாகும்.

நன்றி ;- sufimanzil.org