Thursday, March 5, 2015

செலாயாங்,அல் மதரஸத்துல் ஜமாலிய்யாவில் நடைபெற்ற சிறப்பு பயான் மஜ்லிஸ் !!!!

விசாலமான ரிஜ்க் ( رزق واسع ) என்ற அழகிய தலைப்பில் 
மேலப்பாளையம் உஸ்மானிய்யா அரபுக் கல்லூரியின் பேராசிரியர்,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் 
P.A.ஹாஜா முயீனுத்தீன் பாக்கவி ஹஜ்ரத் அவர்களின் சிறப்புரை,செலாயாங்,அல் மதரஸத்துல் ஜமாலிய்யாவில்
 01-03-2015 அன்று நடைபெற்றது அல்ஹம்து லில்லாஹ்.


விசாலமான ரிஜ்க் ( رزق واسع ) ஓர் ஆய்வு PART 1


விசாலமான ரிஜ்க் ( رزق واسع ) ஓர் ஆய்வு PART 2



வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

Wednesday, March 4, 2015

வலிகள் கோமான் ஹஜ்ரத் கவ்துல் அஃலம் முஹ்யத்தீன் ஆண்டகையின் நினைவுப் பெருவிழா !!!!


மலேசியத் தலைநகர் selayang இமாம் கஜ்ஜாலி 
மதரஸாவில்,  ( 16-02-2015 ) அன்று திங்கள் கிழமை,
மஃரிபுத் தொழுகைக்குப் பிறகு, வலிகள் கோமான் 
ஹஜ்ரத் கவ்துல் அஃலம் முஹ்யத்தீன் ஆண்டகையின் 
நினைவுப் பெருவிழா நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்..


அது சமயம் சுன்னத் ஜமாஅத் பேரியக்கத்தின் 
தகுதி மிக்கத் தலைவர்,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அபுத்தலாயில்,தாஜுல் உலூம்.
ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி ஹஜ்ரத் கிப்லா 
அவர்கள்,சிறப்புப் பேருரையாற்றினார்கள்.

முஹ்யித்தீன் ஆண்டகை நினைவுப் பெருவிழா PART 1



முஹ்யித்தீன் ஆண்டகை நினைவுப் பெருவிழா PART 2


சிறப்பு கேள்வி பதில் நிகழ்ச்சி !!!!


வலிகள் கோமான் ஹஜ்ரத் கவ்துல் அஃலம் 
முஹ்யத்தீன் ஆண்டகையின் 
நினைவுப் பெருவிழாவின் புகைப்படங்கள்.















வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

Tuesday, March 3, 2015

மலேசியாவில் பல ஆண்டுகள் உஸ்தாதாக பணியாற்றிய மேலப்பாளையம் K.O.முஹம்மது காஸிம் தாவூதி ஃபாஜில் தேவ்பந்தி ஹஜ்ரத் அவர்கள் மலேசியாவில் மறைவு !!!!


 மலேசியாவில் பல ஆண்டுகள் உஸ்தாதாக பணியாற்றிய 
பசீர் லெப்பை தெரு,மேலப்பாளையம்,  மௌலானா அல் ஹாஃபிழ்
K.O.முஹம்மது காஸிம் தாவூதி ஃபாஜில் தேவ்பந்தி 
ஹஜ்ரத் அவர்கள், மலேசியாவில் 27-02-2015 அன்று,தாருல் 
ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்துவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம்  (28.02.2015) அன்று மாலை அஸர் தொழுகைக்குப்பிறகு மலேசியாவில்  நடைபெற்றது .


ஹஜ்ரத் அவர்களுக்காக  01-03-2015 அன்று ஞாயிற்றுக்கிழமை 
மாலை 4-30-மணியளவில்  கோலாலம்பூர் மஸ்ஜித் 
இந்தியாவில், குர்ஆன் திலாவத் மஜ்லிஸும் அஸர் 
தொழுகைக்கு பிறகு துஆ மஜ்லிஸும், மற்றும்
இரங்கல் கூட்டமும் நடைபெற்றது.

எல்லாம் வல்ல அல்லாஹ் ஹழ்ரத் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, அப்பழுக்கற்ற மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மாணவர்கள், ஆலிம் பெருமக்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும்   சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினர்   பிரார்த்தனை செய்கிறார்கள். ஆமீன்!


உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் அன்னாரின் ஹக்கில் துஆ செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். வஸ்ஸலாம்...


வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.