Sunday, May 15, 2016

மலேசியத் திருநாட்டில் 58- வது அனைத்துலக திலாவத்துல் குர்ஆன் போட்டி மிகச்சிறப்பாக நடைபெற்றது !!!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! வமுஸல்லிமா!
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்,
வளம் கொழிக்கும் மலேசியத் திருநாட்டின் தலைநகர்
கோலாலம்பூரில் உள்ள P.W.T.C அரங்கத்தில்,அனைத்துலக
58-வது திருக்குர்ஆன் ஓதும் போட்டியின் இறுதி நிகழ்ச்சி (07-05-2016)  
சனிக்கிழமை மிக விமர்ச்சயாக நடந்து முடிந்தது.

 இதில் நாற்பது நாடுகள் பங்குபெற்றன. உலகத்திலேயே
தொடர்ந்து 58 வருடங்கள் திருக் குர்ஆன் ஓதும் போட்டி
மலேசியாவில் தான் நடந்து வருகிறது அல்ஹம்துலில்லாஹ்.
இதில் ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு வருகிறார்கள்.

ஆண்களில், மலேசியாவைச் சார்ந்த காரீ,முதலிடத்தையும்,
புருனையைச்  சார்ந்த காரீ இரண்டாவது இடத்தையும்,
இந்தோனேசியாவைச் சார்ந்த காரீ மூன்றாவது இடத்தையும்,
ஈரானைச்  சார்ந்த காரீ நான்காவது  இடத்தையும்,
பிலிப்பீனாவைச் சார்ந்த காரீ ஐந்தாம் இடத்ததையும் 
பெற்றுக்கொண்டார்கள். 


பெண்களில் மலேசியாவைச் சார்ந்த காரீயா
முதலிடத்தை யும்,    இந்தோனேசியாவைச் சார்ந்த காரீயா
இரண்டாவது இடத்தையும், புருனையைச் சார்ந்த காரீயா
மூன்றாவது இடத்தையும், மஃரிபியைச் சார்ந்த காரீயா
நான்காவது இடத்தையும்,  பிலிப்பீனாவைச் சார்ந்த காரீயா
ஐந்தாவது இடத்தையும், பெற்றுக்கொண்டனர். 




இதில் திருக்குர்ஆனை மனப்பாடமாக ஓதும் போட்டியில் ஆண்களில் மிசிர் நாட்டைச்  சார்ந்த காரீ,முதலிடத்தையும்,மலேசியாவைச் சார்ந்த காரீ இரண்டாவது இடத்தையும்,அமெரிக்கா நாட்டைச் சார்ந்த காரீ மூன்றாவது இடத்தையும்,பெற்றுக்கொண்டனர்.


பெண்களில் மிசிர் நாட்டைச் சார்ந்த காரீ,முதலிடத்தையும், 
மலேசியாவைச் சார்ந்த காரீ இரண்டாவது இடத்தையும்,
 லெபனான் நாட்டைச் சார்ந்த காரீ மூன்றாவது இடத்தையும்,பெற்றுக்கொண்டனர்.


இதில் பல நாடுகளின் காரீகள் நடுவர்களாக கலந்து கொண்டார்கள். 



இந்த நிகழ்ச்சி மலேசிய மன்னர் தலைமையில்,பிரதமர் மற்றும் 
அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெற்றது.


மலேசியத் தலைவர்கள்  இந்த திருக்குர்ஆன்  போட்டியை,
இஹ்லாசுடன் கியாமத் நாள் வரை தொடர்ந்து நடத்துவதற்கு,
ரப்புல் ஆலமீன் தவ்ஃபீக் செய்வானகவும் ஆமீன். வஸ்ஸலாம்..

வெளியீடு-மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

Sunday, May 1, 2016

சென்னை ஃகைருல் பரிய்யா மகளிர் அரபுக் கல்லூரி 10 வது பட்டமளிப்பு விழா 13 வது ஆண்டு நிறைவு விழா அழைப்பு !!!


இம்மாபெரும் 10 ஆம் ஆண்டு பட்ட மளிப்பு பெருவிழா 
மென் மேலும் சிறக்க, சித்தார் கோட்டை அஹ்லுஸ் 
சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினரும், 
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் 
கிளைகள்,அகமுவந்து துஆச் செய்கிறார்கள்.வஸ்ஸலாம்.

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

புனிதம் வாய்ந்த மிஃராஜ் இரவை முன்னிட்டு சிறப்பு பயான் மற்றும் மாபெரும் அஸ்மாவுல் ஹுஸ்னா திக்ர் மஜ்லிஸ் !!!



முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்! 
முஸல்லியன்! வமுஸல்லிமா !!

வரலாற்றுச் சிறப்பு மிக்க மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் 
மஸ்ஜித் இந்தியாவில் பாரம்பரியமாக தொண்டு தொட்டு,
ஒவ்வொரு வருடமும்,நடைபெற்று வரும் புனிதம் வாய்ந்த மிஃராஜ் 
இரவின்  சிறப்பு பயான் மற்றும் மாபெரும் அஸ்மாவுல் 
ஹுஸ்னா திக்ர் மஜ்லிஸ் இவ்வாண்டு,இன்ஷா அல்லாஹ்
 04--05-2016  புதன் மாலை  -- வியாழன் இரவு  
( ரஜப் பிறை 27-- 1437 ) அன்று மிகச் சிறப்பாக நடைபெற 
உள்ளது.என்பதை, மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அல்ஹம்துலில்லாஹ்.வலமை போல்  இஷாத் தொழுகைக்குப்பின்  
சிறப்பு பயான் -- திக்ர் மஜ்லிஸ் மற்றும் சிறப்பு வாய்ந்த துஆ 
மஜ்லிஸும்,மஸ்ஜித் இந்தியாவின் கண்ணியமிகு தலைமை இமாம்,
மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா.எஸ்.எஸ்.அஹ்மது 
ஃபாஜில் பாக்கவி ஹழ்ரத் கிப்லா ,
மற்றும் துணை இமாம்களான,மௌலானா நூருல் அமீன்  
ஹழ்ரத் ,மௌலானா நிஜாமுதீன்  ஹழ்ரத் ஆகியோரின்,
சீரிய தலைமையில் நடைபெறும்.

இது போன்று மலேசியாவில் உள்ள,பல நூற்றுக் 
கணக்கான மதரஸாக்களிலும்,மற்றும் உலகம் முழுவதும் 
அனைத்து பள்ளி வாசல்களிலும்,புனிதம் வாய்ந்த மிஃராஜ் 
இரவின்  சிறப்பு பயான் மற்றும் திக்ர் மஜ்லிஸ் நடைபெறும்.
மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த மஜ்லிஸில் அனைவரும் தவறாது 
கலந்து கொண்டு,அல்லாஹ்வின் அளப்பெரும்,அன்பையும்,அருளையும்,
பெற்றுக் கொள்ளுங்கள்.வஸ்ஸலாம்....


வெளியீடு ;;- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.