Wednesday, September 19, 2012

ஏர்வாடி தர்ஹா ஷரீஃப் வாழும் இஸ்லாத்தின் தீபம்


இஸ்லாத்தைப் பரப்புவதற்காக இந்தியா வந்த ஏர்வாடி ஸஹீத் சையித் இப்றாஹீம் பாதுஷா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள்,நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் 18- வது தலைமுறையில் மதீனாவில் பிறந்த ஏர்வாடி ஷஹீத் சையித் இப்றாஹீம் பாதுஷா ரஹ்மத்துல்லாஹிஅலைஹி அவர்கள், சுமார் 3000 தொண்டர்களுடன் இஸ்லாத்தைப் பரப்புவதற்காக இந்தியா வந்தார்கள்.அக்காலத்தில் இந்தியாவின் நுழைவாயிலாக இருந்த சிந்து மாகாணத்தில் தங்கினார்கள்அங்கு தம் தொண்டர்களை பல பிரிவாகப் பிரித்து சிந்து மாகாணத்தின் பொது மன்றங்கள்சந்திப்புகள்சந்தைகள்மக்கள் ஒன்று கூடும் இடங்களெல்லாம் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்ய அனுப்பி வைத்தார்கள்இவர்களின் அன்பான அழைப்பை ஏற்று பலர் இஸ்லாத்தை ஏற்றனர்.அங்கிருந்து சிறு குழுவுடன் குஜராத் சென்று அங்கும் இஸ்லாத்தைப் பரப்பினார்கள்.

அங்கெல்லாம் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்த போது அங்குள்ள அரசர்களால் இழைக்கப்பட்ட இடையூறுகள் ஏராளம்.அவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டு இஸ்லாத்தை வளர்த்தார்கள்.பிறகு குஜராத்திலிருந்து புறப்பட்டு இஸ்லாமியப் பிரச்சாரத்திற்காக தொண்டர்கள் புடைசூழ கன்னனூர்ஆலப்புழைகொச்சிகொல்லம்,கண்ணியாகுமரி வழியாக காயல்பட்டிணம் வந்தனர்.அந்நேரத்தில் நெல்லைப் பகுதியை ஆட்சி செய்த குலசேகரப்பாண்டியன் தனது பகுதிக்கு வந்து தங்கியிருப்பவர்கள் யார் என்று அறிய தூது அனுப்பினான்.அப்போது இப்றாஹீம் ஷஹீத் பாதுஷா அவர்கள் தான் பெருந்திரளாக நாடு பிடிக்க வரவில்லை என்றும்,இஸ்லாமியப் பிரச்சாரம் செய்யவே வந்ததாக தெறிவித்தனர்.பின்பு அங்கிருந்து தொண்டர்கள் புடைசூழ மதுரையை நோக்கி வந்து இஸ்லாமிய பிரச்சாரம் செய்ய அனுமதி கேட்ட போதுமதுரை மன்னன் திருப்பாண்டியன் அதை ஏற்காமல் இவர்களுடன் போர் செய்ய தயாரானான்.இப்போரில் திருப்பாண்டியன் தோல்வியுற்று குடும்பத்துடன் திருப்பதிக்குச் சென்று தஞ்சம் புகுந்தான்.இப்றாஹீம் ஷஹீத்
பாதுஷா அவர்கள் மதுரைக்கு முழுப்பொறுப்பேற்று ஆட்சி நடத்தினார்கள்.13 ஆண்டு கால ஆட்சியில் தென்னிந்தியா முழுவதும் இஸ்லாத்தைப் பரப்பினார்கள்.

பின்பு திருப்பதியில் தஞ்சம் புகுந்த திருப்பாண்டியன் பெரும்படையோடு தமிழகம் நோக்கி வரஷஹீத் அவர்களின் படையில் பெரும்பாலானோர் மக்கா நகருக்கு திரும்பியிருந்தார்கள்எனவே எளிதாக திருப்பாண்டியன் மதுரையை கைப்பற்றி பின்பு ஷஹீத் இப்றாஹீம் பாதுஷா அவர்கள் தங்கியிருந்த இராமநாதபுரத்திற்கு வந்து ஷஹீத் அவர்களை எதிர்கொண்டான்மீதமிருந்த சிறுபடையுடன் போரில் இறங்கினார்கள்.உச்சகட்டமாக ஷஹீத் அவர்களின் குதிரையின் கால்களை பாண்டியமன்னன் வெட்டபதிலுக்கு அவனின் தோள் புஜங்களை ஷஹீத் அவர்கள் வெட்டினார்கள்.மயங்கி விழுந்த அவன் பின்பு தெளிவடைந்து எதிர்பாராத விதமாக ஈட்டியால் ஷஹீத் அவர்களின் மார்பைத் தாக்க,ஷஹீத் இப்றாஹீம் பாதுஷா அவர்கள் வீரமரணம் அடைந்தார்கள்.இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜிஊன்இவர்களின் அடக்கஸ்தலம் ஏர்வாடியில் உள்ளது.ஏர்வாடி தர்ஹாவில் வாழும் இப்புனித ஷுஹதாக்களை நாம் முறையாக ஜியாரத் செய்து அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் பெற்றுக்கொள்வோமாக ஆமீன்.. 

தகவல்காயல்பட்டிணம் முஅஸ்கருர் ரஹ்மான் அரபுக்கல்லூரியின் 15-வது ஆண்டு மலர்வஸ்ஸலாம்..

வெளியீடு-

மன்பயீ ஆலிம்.காம் 
மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்கள்.

சித்தாரிய்யா அரபுக் கல்லூரி நிறுவனரின் இல்லத் திருமண விழா



முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! வமுஸல்லிமா!!!!

சித்தாரிய்யா அரபுக் கல்லூரியின் நிறுவனர் மௌலானா மௌலவி அல்ஹாஜ் I.சையிது முஹம்மது புஹாரி ஆலிம் ஃபாஜில் மன்பஈ ஹஜ்ரத் அவர்களின் இல்லத்திருமண விழா

அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 
ஆதிமுதல் அந்தம் வரை அனைத்தையும் படைத்துப் பரிபாலித்து வரும் அல்லாஹ்வின் அருளாலும், அஞ்ஞான இருள்நீக்கி மெஞ்ஞான ஒளிதந்த, அண்ணல் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களின் நல்லாசியாலும்,பனைக்குளம் மகான் பாபா செய்யிது முஹம்மது ஆலிம் வலியுல்லாஹ்,வலிமார்கள்,நாதாக்கள்,நல்லோர்கள் துஆபரக்கத்தாலும், ஹிஜ்ரி 1433ஆம் வருடம் ஷவ்வால் பிறை 21 (9-09-2012) ஞாயிற்றுக்கிழமை காலை 10-30 மணிக்கு முபாரக்கான வேலையில்,

சித்தார்கோட்டை ஜன்னத்துல் பிர்தௌஸ் ஜாமிஆ மஸ்ஜிதில், அல்ஹாஜ் மௌலானா மௌலவி அல்ஹாஜ் I.சையிது முஹம்மது புஹாரி ஆலிம் ஃபாஜில் மன்பஈ அவர்களின் அன்பு மகன் தீன்நிறைச்செல்வன் அல்ஹாஜ் S.முஹம்மது ஹிதாயத்துல்லாஹ்,மௌலானா மௌலவி அஃப்லலுல் உலமா,அல்ஹாஜ் M.சுதானா முஹம்மது ஆலிம் அரூஸி ஃபாஜில் ஜமாலி அவர்களின் அன்பு மகள் தீன்நிறைச்செல்வி S.ஐனுல் மர்லிய்யா ஆகியோரது நிக்காஹ் மஜ்லிஸ் மிகச்சிறப்பாக நடைபெற்றது.


காலை 10-மணிக்கு நடைபெற்ற நிக்காஹ் மஜ்லிஸிற்கு லால்பேட்டை ஜாமிஆ மதரஸா மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் பேராசிரியரும்,தமிழ் நாடு ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவருமான,மௌலானா மௌலவி அல்லாமா,அல்ஹாஜ் A.E.முஹம்மது அப்துர் ரஹ்மான் ஆலிம் மிஸ்பாஹி ஹஜ்ரத் கிப்லா அவர்கள் தலைமை தாங்கி,சிறப்புப்பேருரையாற்றினார்கள். சித்தார் கோட்டை சித்தாரிய்யா அரபுக்கல்லூரியின் முன்னால் முதல்வர்,  அல்லாமா கே.எம்.அஷ்ரஃப் அலி ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத் அவர்கள் நிக்காஹ் குத்பா ஓதினார்கள்.

இராமநாதபுர மாவட்ட ஃபத்வா கமிட்டித் தலைவர் மௌலானா மௌலவி அல் ஹாஃபிழ் காரீ அல்ஹாஜ்,அல்லாமா அஹ்மது இப்றாஹீம் ஃபாஜில் தேவ்பந்தீ ஹஜ்ரத் அவர்கள் மணமக்களை வாழ்த்தி துஆ ஒதினார்கள். சித்தார்கோட்டை ஜன்னத்துல்  ஃபிர்தௌஸ் ஜாமிஆ மஸ்ஜிதின் தலைமை இமாம் மௌலானா மௌலவி அல் ஹாஃபிழ்,காரீ அப்துல் காதிர் ஆலிம் மஹ்ழரி ஹஜ்ரத் அவர்கள் ஈஜாப் கபூல் செய்து வைத்து அனைத்து நிகழ்ச்சிகளையும்,தொகுத்து வழங்கினார்கள்.

ஹிஜ்ரி 1433ஆம் வருடம் ஷவ்வால் பிறை 21 (9-9-2012) ஞாயிற்றுக்கிழமை அஸர் தொழுகைக்குப்பின் முபாரக்கான வேலையில் சித்தார் கோட்டை ஜன்னத்துல் பிர்தௌஸ் ஜாமிஆ மஸ்ஜிதில்,வாழூர் டாக்டர் ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் அன்புமகன் தீன் நிறைச்செல்வன் R.முஹம்மது யூசுப், மௌலானா மௌலவி அல்ஹாஜ் I.சையிது முஹம்மது புஹாரி ஆலிம் ஃபாஜில் மன்பஈ அவர்களின் அன்பு மகள் தீன் நிறைச்செல்வி S.நுஸ்ரத் பாத்திமா ஆகியோரது நிக்காஹ் மஜ்லிஸும் மிகச்சிறப்பாக நடைபெற்றது.மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு நடைபெற்ற நிக்காஹ் மஜ்லிஸில்,சித்தார் கோட்டை சித்தாரிய்யா அரபுக் கல்லூரியின் முன்னால் முதல்வரும்,  அல்லாமா கே.எம்.அஷ்ரஃப் அலி ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத் அவர்கள் நிக்காஹ் குத்பா ஓதினார்கள். சித்தார்கோட்டை ஜன்னத்துல்  ஃபிர்தௌஸ் ஜாமிஆ மஸ்ஜிதின் தலைமை இமாம் மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,காரீ அப்துல் காதிர் ஆலிம் மஹ்ழரி ஹஜ்ரத் அவர்கள் ஈஜாப் கபூல் செய்து வைத்து அனைத்து நிகழ்ச்சிகளையும்,தொகுத்து வழங்கினார்கள்.வாழூர் மஸ்ஜிதுர் ரய்யான் ஜாமிஆ மஸ்ஜிதின் தலைமை இமாம் மௌலானா மௌலவி  K.S.முஹம்மது ஆரிஃப்கான் ஆலிம் நூரி, நிஜாமி அவர்கள், மணமக்களை வாழ்த்தி துஆ ஓதினார்கள். 

இம்மணமக்கள் எல்லா வளமும்,நலமும் பெற்று,நபிமார்கள்,இமாம்கள்,அவ்லியாக்கள்,ஸாலிஹீன்கள் எவ்வாறு வாழ்ந்தார்களோ அது போன்று பல்லாண்டு காலம் வாழ,சித்தார்கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினர் மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர் அகமுவந்து வாழ்த்தி துஆச் செய்கிறார்கள் வஸ்ஸலாம்...

வெளியீடு;- மன்பயீ ஆலிம்,காம்

Thursday, September 6, 2012

நினைவு நாள் அழைப்பிதழ்


முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்!
 வமுஸல்லிமா!!!
பனைக்குளம்.மெய்ஞான மாமேதை,மெய்நிலை கண்ட தவஞானி,அறிவுலகப் பேரொளி அல்ஹாஜ்அல்லாமா,மலிகுல் உலமா,அஷ்ஷெய்குல் காமில்குத்புஸ்ஜமான்மஸீகுல் அனாம்,ஆரிபு பில்லாஹ்ஷெய்குணாசெய்யிதிமாமஹான் பாபா,செய்யிது முஹம்மது ஆலிம் வலியுல்லாஹ் (ரலிஹஜ்ரத் கிப்லா அவர்களின்,46- ம் ஆண்டு நினைவு நாள் விழா,நாள்  11-09-2012 செவ்வாய்,பின்னேரம்.புதன் இரவு 7-00 மணிக்கு
தர்ஹா ஷரீஃபில் அன்னார் பெயரில் குர்ஆன் கானி செய்யப்பட்டு  ஜீரணி வழங்கப்படும்.அது சமயம் கண்ணியம் நிறைந்த உலமாப் பெருமக்களும்,பல அறிஞர் பெருமக்களும், சிறப்பான இந்த மஜ்லிஸில் கலந்துகொண்டு துஆச்செய்ய இருக்கின்றார்கள்.அனைவரும் சிறப்பான இந்த மஜ்லிஸிற்கு வருகை தந்து சிறப்பு வாய்ந்த துஆ மஜ்லிஸில் கலந்து கொண்டு நல்லாசி பெற்று உங்கள் வாழ்விலும், தொழிலிலும்,சிறப்புப் பெற்று,மனம் நிறைந்த நோய் நொடி இல்லாத நல் வாழ்வு வாழ அன்புடன் அழைகின்றோம்.
இப்படிக்கு.
       மௌலானா M. செய்யிது முஹம்மது ஆலிம் மன்பயீ.                 
S/O அல்ஹாஜ் மௌலானா மர்ஹூம் 
M.முஹம்மது முபாரக் ஆலிம் மன்பயீ.
விழாக் குழுவினர், பனைக்குளம்.
இந்த சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில் அனைவர்களும் தவறாது கலந்து கொண்டு,அல்லாஹ்வின் அளப்பெரும்,அன்பையும்,அருளையும்,பெற்றுக் கொள்ளுமாறு,சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினரும்,சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினரும், துஆச்செய்து அகமகிழ்ந்து,அன்புடன் அழைக்கின்றார்கள் வஸ்ஸலாம்.
வெளியீடு- மன்பயீ ஆலிம்.காம்.