Tuesday, July 29, 2014

ஆவூர் அப்துஷ் ஷுக்கூர் ஃபாஜில் மன்பயீ ஹஜ்ரத் கிப்லா அவர்கள் மறைவு!

பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

நாடறிந்த மார்க்க அறிஞரும், அற்புதமான சொல்லாற்றல் மிக்கவரும், மார்க்கப் பணிகளில் மிகப் பெரும் சேவையாற்றி வரும் தமிழ்நாடு மாநில ஜமாஅ(த்)துல உலமா சபை துணைத் தலைவரும், தஞ்சை மாவட்டம் ஆவூர் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலின் தலைமை இமாமுமாகிய மவ்லானா மவ்லவீ அல்ஹாஜ் அஷ்-ஷைஃக் 'செங்கோட்டைச் சிங்கம்' மு. அப்துஷ் ஷக்கூர் ஃபாஜில் மன்பயீ ஹழ்ரத் அவர்கள், 

இன்று (செவ்வாய் 29.07.2014) மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு கோவையில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள். 

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். ஹழ்ரத் அவர்களுக்கு வயது 65.

அன்னாரின் ஜனாஸா தொழுகை மற்றும் நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் நாளை (புதன் 30.07.2014) லுஹர் தொழுகைக்குப் பிறகு தஞ்சை மாவட்டம் ஆவூரில் நடைபெறும்.

சிந்திக்க வைக்கும் சொற்பொழிவுக்கு சொந்தக்காரரான ஆலிம் பெருந்தகையான ஹஜ்ரத் அவர்களின் மரணச் செய்தி ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்தையும் குலுக்கி எடுக்கும் துக்கச் செய்தியாகியுள்ளது.

செங்கோட்டை சிங்கம் என்று உலக தமிழ் முஸ்லிம் மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டவர்கள். அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை பற்றிய தெளிவான விளக்கங்களை மக்களுக்கு விளக்கியவர்கள். சன்மார்க்க விளக்கம் தருவதில் முன்மாதிரியான அறிஞராகவும், சிக்கலான மார்க்க விஷயங்களைக் கூடப் பாமரரும் புரிந்திடும் வகையில் விவரித்துக் கூறுவதில் வல்லவராகவும் திகழ்ந்தவர்கள் ஹஜ்ரத் அவர்கள்.

தமிழகத்தில் மீலாது விழாக்களிலும், ஷரீஅத் மாநாடுகளிலும், கல்லூரி விழாக்களிலும், ஹஜ்ரத் அவர்களின் உரை என்றால் அதனைக் கேட்கும் கூட்டம் தனியே தெரியும். இதயங்களை ஈர்க்கும் இனிய சொல்லரசாக விளங்கினார். ஹஜ்ரத் அவர்களின் சொற்பொழிவுகள் பல்லாயிரக்கணக்கில் ஒளி, ஒலிப் பேழைகளாக உலகம் முழுவதும் பரவியுள்ளன.

மிகச்சிறந்த நாடறிந்த நாவலரும், சுன்னத்து வல் ஜமாஅத் கொள்கை கோட்பாடுகளில் மிக உறுதி மிக்கவருமான கண்ணியத்துக்குரிய ஹஜ்ரத் அவர்கள் மிகவும் அற்புதமான பேச்சாற்றல் கொண்ட நல்ல ஒரு மனிதர். இஸ்லாமிய சரித்திரத்தின் கருவூலத்தை மனக்கண் முன் கொண்டு வரும் ஆற்றல் மிக்க சொல்லின் செல்வர். சொல்லேர் உழவர் அவர்கள். மாற்றுக் கருத்து உள்ளவர்களும் அவர்களின் அற்புதமான பேச்சை கேட்க குழுமியிருப்பார்கள். தமிழும் அரபியும் குர்ஆனும் ஹதீசும் அவர்களுக்கு கை வந்த கலை. கனீரெனும் குரலில் ஹதீஸ்களை சொல்லும் பேச்சாற்றல் மிக்க பெருந்தகை.தமிழக மக்களின் இறைநம்பிக்கை(ஈமான்)யை தகர்த்தெறிந்த நவீன குழப்பவாதிகளின் முகத்திரைகளை கிழித்தெறிந்தார்கள். 

சத்திய மார்க்கத்தை தெளிவான முறையில் எடுத்துரைத்தார்கள். ஃபிக்ஹ் சட்டங்கள் குறித்து எழுந்த முறையற்ற விமர்சனங்களுக்கும், குழப்பவாதிகளால் தவறாக சித்தரிக்கப்பட்ட சட்டங்களுக்கும் ஆதாதங்களுடன் பதில் கொடுத்து குழப்பவாதிகளின் வாய்களை அடைத்தார்கள்.

யாருக்கும் பயப்படாமல், எந்தவித மிரட்டலுக்கும் அஞ்சிவிடாமல் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு மார்க்கப் பணியாற்றினார்கள். உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசும் பழக்கமில்லாத மார்க்க மேதை. எதையும் இதயத்தைத் தொடும்படியாக எடுத்துக் கூறும் இயல்புள்ள அறிஞர். சிந்தனையாளர்களுக்கு தூண்டுகோல், செயல் வீரர்களுக்கு துணைவர். மொத்தத்தில் சமுதாய ஒற்றுமைக்கும், சன்மார்க்க எழுச்சிக்கும் பாடுபட்டு மறைந்துள்ள பண்பட்ட தாயி, அவர்களின் மறைவு, உண்மையில் அறிவுலகத்திற்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பாகும்.
அறிஞரின் மறைவு அகிலத்தின் மறைவு என்னும் பழமொழிதான் இங்கே நினைவுக்கு வருகிறது.

ஹஜ்ரத் அவர்களின் சுருக்கமான வாழ்க்கைக் குறிப்பு:

திருநெல்வேலி மாவட்டம் மேலச்சாலை நகரில் 24.11.1949 அன்று பிறந்த ஹஜ்ரத் அவர்கள், தன்னுடைய மார்க்கக் கல்வியை 1969ம் ஆண்டு லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியில் மவ்லவீ ஆலிம் மன்பயி பட்டத்துடனும், 1971ம் ஆண்டு ஃபாஜில் மன்பயீ பட்டத்துடனும் நிறைவு செய்தார்கள். அதனைத் தொடர்ந்து திருவாருர் மாவட்டம் ஆவூர் நகரில் அமைந்துள்ள ஜாமிஆ மஸ்ஜிதில் தலைமை இமாமாக பொறுப்பேற்றார்கள். அதே ஊரில் அமைந்துள்ள தாருஸ்ஸ‌லாம் அர‌பிக் க‌ல்லூரி முத‌ல்வ‌ராகவும் பணியாற்றியுள்ளார்கள்.

1994ம் ஆண்டு முஸ்லிம் ஜமாஅத்தின் அழைப்பின் பேரில் சிங்கப்பூருக்கும், 1995ம் ஆண்டு புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற ஸவூதி அரேபியாவுக்கும், அதே ஆண்டு இந்திய முஸ்லிம் பேரவையின் அழைப்பின் பேரில் அபூதாபிக்கும், 1997ம் ஆண்டு தேசிய கருத்தரங்கில் உரையாற்ற அரசு விருந்தினராக இலங்கைக்கும், 2009ம் ஆண்டு ஜம்இய்யத்துல் உலமாவின் அழைப்பின் பேரில் துபாய்க்கும், 2012ம்ஆண்டு குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் அழைப்பின் பேரில் குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் சிறப்பு விருந்தினராக 7ம் ஆண்டு மாபெரும் இஸ்ராஃ / மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சிகளில் சிறப்புரையாற்ற குவைத்துக்கும் சென்று வந்துள்ளார்கள்.

இது அல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளுக்கும், தமிழகத்தில் ஹஜ்ரத் அவர்கள் செல்லாத இடங்களே இல்லை எனும் அளவுக்கு பல்வேறு இடங்களுக்கும் சென்று சிறப்புரையாற்றியுள்ளார்கள். இதுவரை ஏறக்குறைய 10,000க்கும் மேற்பட்ட மார்க்க சொற்பொழிவுகளை ஹழ்ரத் அவர்கள் நிகழ்த்தியுள்ளார்கள்.

ஒருங்கிணைந்த தஞ்சை, நாகை மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் செயலாளாராக பத்து ஆண்டுகள், பொருளாளராக பத்து ஆண்டுகள், தலைவராக பத்து ஆண்டுகள் சேவையாற்றியவர்கள். தமிழ்நாடு மாநில ஜமாஅ(த்)துல உலமா சபை துணைத் தலைவராகவும், மன்பயீ ஆலிம்கள் பேரவையின் பொருளாளராகவும் தற்போது பொறுப்புகளை வகித்து வந்தார்கள்.

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் அரபி மொழித்துறையில் பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருக்கும் பிரபல மார்க்க சொற்பொழிவாளர், எழுத்தாளர், இளம் முனைவர் 'செங்கோட்டை இளஞ்சிங்கம்' மவ்லவீ அ. முஹம்மது இஸ்மாயீல் ஹஸனீ M.A., M.Phil., அவர்கள், மர்ஹூம் ஹஜ்ரத் அவர்களின் மகனார் ஆவார்.

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம், ஜூன் 2012, 14 முதல் 18 ஆகிய தேதிகளில் ஏற்பாடு செய்த 7ம் ஆண்டு மாபெரும் இஸ்ராஃ / மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சிகளில் 'அண்ணல் நபியின் விண்ணுலகப் பயணம் - நன்மையே! மண்ணுலகில் வாழும் மானிடருக்கு!' என்ற கருப்பொருளில் தொடர்ந்து ஐந்து நாட்கள் ஐந்து இடங்களில் (4 பெரிய நிகழ்ச்சிகள் மற்றும் 3 உள்ளரங்கு நிகழ்ச்சிகள் என) ஏழு நிகழ்ச்சிகளில் பல்வேறு தலைப்புகளில் சிறப்புரையாற்றிய நிகழ்வுகள் இன்றும் பசுமையாக நினைவில் நிழலாடுகின்றன.

எல்லாம் வல்ல அல்லாஹ் ஹழ்ரத் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, அப்பழுக்கற்ற மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மாணவர்கள், ஆலிம் பெருமக்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும்   சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினர்   பிரார்த்தனை செய்கிறார்கள். ஆமீன்!


உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் அன்னாரின் ஹக்கில் துஆ செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். வஸ்ஸலாம்...

நன்றி ;- கலீல் பாக்கவி ஹஜ்ரத்.

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.

சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

Monday, July 28, 2014

மலேசியத் தலைநகர் மஸ்ஜித் இந்தியாவின் 28-07-2014 நோன்புப் பெருநாள் குத்பா பேருரை.


28-07-2014 நோன்புப் பெருநாள் குத்பா பேருரை.   
குத்பா பேருரை ;- 
மௌலானா மௌலவி அல்ஹாஜ் 
எஸ்.எஸ்.அஹ்மது பாக்கவி,ஹஜ்ரத்.
தலைமை இமாம், மஸ்ஜித் இந்தியா,
கோலாலம்பூர் , மலேசியா.

Saturday, July 26, 2014

மலேசியத் தலைநகர் மஸ்ஜித் இந்தியாவின் 25-07-2014 வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயான்.


25-07-2014  வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயான்.
தலைப்பு ;- பிரியா விடைபெறும் புனித ரமலான்

குத்பா பேருரை ;- 
மௌலானா மௌலவி அல்ஹாஜ் 
எஸ்.எஸ்.அஹ்மது பாக்கவி,ஹஜ்ரத்.
தலைமை இமாம், மஸ்ஜித் இந்தியா,
கோலாலம்பூர் , மலேசியா.

ஈத் முபாரக் ( புனித ஈகைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்.)


முதஅவ்விதன்!! முபஸ்மிலன்!!! முஹம்திலன்!!!  முஸல்லியன் !!!வமுஸல்லிமா!!!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 

அன்பார்ந்த பெரியோர்களே! இளைஞர்களே! அருமைத் தாய்மார்களே! 
சகோதர சகோதரிகளே! பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து வணக்கம் 
செய்தால் உயர் பதவி கிடைக்கும் என்பார்கள்.இம் மூன்றையும் 
கடைபிடிக்கிற நல் வாய்ப்பினை எல்லாம் வல்ல அல்லாஹ் 
இந்த ரமழான் மாதத்திலே நமக்கு வழங்கினான்.

பகலெல்லாம் நோன்பு வைத்து,இரவிலே இருபது ரக்கஅத்துகள் தொழுது, அல்லாஹ்வுடைய அளப்பெரும் அன்பையும், அருளையும் பெற்ற எங்கள் இஸ்லாமிய அன்பு நெஞ்செங்களே! உங்கள் அனைவர்களுக்கும் இனிய நோன்பு பெருநாள் நல் வாழ்த்துக்களையும்,இன்னும் ஆறு நோன்புகள் நோற்க இருக்கின்ற, உயர்ந்த சீதேவிகளுக்கு ஆறு நோன்புப் பெருநாள் நல் வாழ்த்துக்களையும்,சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் 
வல் ஜமாஅத் இணைய தளத்தினர் சார்பாக அகமுவந்து 
தெறிவித்துக் கொள்கிறோம் வஸ்ஸலாம்…..

வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்கள் .

Tuesday, July 22, 2014

மேலப்பாளையம் மாநகரில் உஸ்மானிகள் பேரவை நடத்தும் சமூக தீமைகள் மாநாடு



இச்சிறப்பு மிகு மாபெரும் மாநாடு மென்மேலும் சிறக்க, சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணையதளத்தினர் அகமகிழ்ந்து 
வாழ்த்தி துஆச்செய்கிறார்கள். வஸ்ஸலாம்..

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

Thursday, July 17, 2014

இஸ்லாமிய வரலாற்றில் நிகழ்ந்த மாபெரும் தியாக நிகழ்ச்சியே பத்ர் போர்.


இஸ்லாமிய வரலாற்றில் நிகழ்ந்த மாபெரும் தியாக நிகழ்ச்சியே பத்ர் போர். இது ஹிஜ்ரி 2-ஆம் ஆண்டு ரமழான் பிறை 17-ல் நடந்தது.

பத்ர் தளம்
சுமார் 313 ஸஹாபாக்கள், 1000 பேர் கொண்ட காபிர்களின் யுத்த படையை களத்தில் எதிர் கொண்டு ஈமானின் பலத்தாலும், தியாகத்தாலும் அல்லாஹ்வின் உதவியைப் பெற்று வெற்றிகொண்ட நிகழ்ச்சி அதுவாகும்.

மதீனாவில் இருந்து 80மைல் தொலைவிலுள்ள பத்ர் எனும் இடத்தை ரமழான் 16இல் நபியவர்களும் தோழர்களும் வந்து சேர்ந்தனர். பத்ர் எனும் இடத்தைப் பொறுத்தவரையில் குறைஷியருக்கு சாதகமாக அமைந்திருந்தது. முஸ்லிம்களது அணி இருந்த பிரதேசம் மணற்பாங்கான பிரதேசமாக இருந்தமையால் சில அசெளகரியங்களை முஸ்லிம்கள் எதிர் கொண்டனர். எனினும் அன்றிரவு பெய்த மழை காரணமாக முஸ்லிம்களுக்கு சாதகமாகவும் எதிரிகளுக்கு பாதகமாகவும் அமைந்து விட்டது.
முஸ்லிம்கள்ரமழான் 17இல் போராட்டத்துக்கு முகம் கொடுத்தனர்.போராட்டம் ஆரம்பிக்க முன்னர் நபியவர்கள் பின்வருமாறு பிரார்த்தனை புரிந்தார்கள். இறைவா! உன் தூதரை பொய்யர் என நிரூபிக்க ஆணவத்தோடும் ஆயுதப்பலத்தோடும் குறைஷியர் வந்துள்ளனர். நீ வாக்களித்திருக்கும் உதவியை எனக்குத் தந்து விடு. இன்று இந்த சிறிய கூட்டம் அழிக்கப்பட்டால் பூமியில் உன்னை வணங்குவோர் யாரும் இருக்க மாட்டார்கள்’

நபியவர்களோடு இருந்த முஸ்லிம் போராளிகளில் முஹாஜிர்கள் மிகவும் இக்கட்டான நிலைக்கு உள்ளாயிருந்தனர். அவர்களில் சிலர் தமது பெற்றோருக்கு எதிராகவும் வேறு சிலர் தமது பிள்ளைகளுக்கெதிராகவும் வேறு சிலர் தமது சகோதரர்களுக்கு எதிராகவும் போராடவேண்டி இருந்தனர்.

முஸ்லிம்களின் அணியில் இருந்த அபூபக்கர் ஸித்தீக்(றழி) அவர்கள் காபிர்களின் படையில் இருந்த அவர்களின் மகன் அப்துர்றஹ்மானை எதிர்கொண்டார்கள். அதுபோல் முஸ்லிம்களின் அணியில் இருந்த அபூஹுதைபா(றழி) அவர்கள் காபிர்களின் படையில் இருந்த அவர்களின் தந்தைஉத்பாவை எதிர்கொண்டார்கள்எனினும் அதை அவர்கள் பொருட்படுத்தவில்லை.

இறுதியில் சுமார் 313 முஸ்லிம்கள் 1000 காபிர்களுக்கு முகங்கொடுத்தனர்.எதிரிகளின் ஆயுதபலத்தையும் ஆட்பலத்தையும் பார்க்கின்ற போது முஸ்லிம்கள் பலவீனமானவர்களாக காணப்பட்டனர்.

முஸ்லிம்களிடம் 02 குதிரைகள்,70ஒட்டகைகள்,60போர்கவசங்கள் மட்டுமே இருந்தன. காபிர்களிடம் 100 குதிரைகள் 600போர் கவசங்கள் இருந்தன.

முஸ்லிம்கள் பசித்தவர்களாகவும் தாகித்தவர்களாகவும் இருந்தனர். காபிர்கள் ஒவ்வொருநாளும் சுமார் 10 ஒட்டகைகள் அறுத்து சாப்பிட்டு ஆடல் பாடல்களுடன் யுத்தகளத்தை நோக்கிவந்தனர்.

நபி(ஸல்) அவர்கள் தங்களின் போர்க்கொடியை முஸ்அப் இப்னு உமைர்(றழி) அவர்களிடம் ஒப்படைத்தார்கள். அது வெள்ளை நிறமுடையதாக இருந்தது.மேலும் இரண்டுகொடிகள் நபி(ஸல்) அவர்களின் முன் இருந்தன. அவை இரண்டும் கறுப்பு நிறமுடையவை. அதில் ஒன்று அலீ(றழி) அவர்களிடமும் மற்றது ஸஃத் இப்னு முஆத்(றழி) அவர்களிடமும் இருந்தன.

நபி(ஸல்) அவர்களுடன் பத்ர் போர்களத்தில் இரண்டு குதிரை வீரர்கள் இருந்தனர். வலது பக்கம் ஸுபைர் இப்னுல் அவ்வாம்(றழி) அவர்களும் இடது பக்கம் மிக்தாத் இப்னுல் அஸ்வத்(றழி) அவர்களும் இருந்தனர்.

நபி(ஸல்) அவர்களுக்கு யுத்த களத்தில் ஒரு பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. அதில் அவர்களுடன் அபூபக்ர் ஸித்தீக்(றழி) அவர்கள் இருந்தார்கள்.

யுத்தகளத்தில் மலக்குகள் ஸஹாபாக்களுடன் சேர்ந்து யுத்தம்செய்தனர். வெள்ளை நிற தலைப்பாகை அணிந்தவர்களாக மலக்குகள் காணப்பட்டனர்.

ஜிப்ரீல்(அலை) அவர்கள் போர் ஆயுதங்களுடன் குதிரையில் அமர்ந்திருந்ததை நபி(ஸல்) அவர்கள்ஸஹாபாக்களுக்கு காண்பித்தார்கள்.

அலீ(றழி) அவர்கள் கூறுகின்றார்கள் “மூன்று முறை கடும் காற்று வீசியது. அப்படியான காற்றை நான் முன் எப்போதும் உணரவில்லை.ஜிப்ரீல்(அலை),மீக்காயீல்(அலை), இஸ்றாபீல்(அலை) ஆகியோர் முறையே இறங்கியதன் அடையாளமே அந்த காற்று” என்று கூறுகின்றார்கள்.

ஜிப்ரீல்(அலை) அவர்களும் அபூபக்ர் ஸித்தீக்(றழி) அவர்களும் நபி(ஸல்) அவர்களின் வலப்பக்கமாகவும், மீக்காயீல்(அலை)அவர்களும்அலீ(றழி) அவர்களும் நபி(ஸல்) அவர்களின் இடப்பக்கமாகவும் நின்று போர்செய்தனர். இஸ்றாபீல்(அலை) அவர்கள் முதல் வரிசையில் நின்று போர்செய்தார்கள்.

அல்லாஹ்தஆலாவின் உதவி கிட்டியதன் காரணமாக முஸ்லிம்கள் பத்ர் களத்தில்வெற்றி பெற்றனர்.

6 முஹாஜிர்களும் 8 அன்ஸாரிகளும் பத்ர் களத்தில்ஷஹீதானார்கள். எதிரிகளின் தரப்பில் அபூ ஜஹ்ல், உத்பா, உமையா, ஸம்ஆ, ஆஸ் போன்ற தலைவர்கள் உட்பட 70 பேர் கொலை செய்யப்பட்டனர். இவ்வாறு இந்த யுத்தம் முஸ்லிம்களுக்கு பெரும் வெற்றியாக அமைந்து விட்டது.

இதை அல்லாஹ் தஆலா அல்குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான்.

وَلَقَدْ نَصَرَكُمُ اللَّهُ بِبَدْرٍ وَأَنتُمْ أَذِلَّةٌفَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ ۖ 

3:123. “பத்ரு” போரில் நீங்கள் மிகவும் சக்தி குறைந்தவர்களாக இருந்த போது, அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தான்; ஆகவே நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.

إِذْ تَقُولُ لِلْمُؤْمِنِينَ أَلَن يَكْفِيَكُمْ أَن يُمِدَّكُمْ رَبُّكُم بِثَلَاثَةِ آلَافٍ مِّنَ الْمَلَائِكَةِ مُنزَلِينَ 

3:124. (நபியே!) முஃமின்களிடம் நீர் கூறினீர்: “உங்கள் ரப்பு (வானிலிருந்து) இறக்கப்பட்ட மூவாயிரம் வானவர்களைக் கொண்டு உங்களுக்கு உதவி செய்வது உங்களுக்குப் போதாதா?” என்று.

بَلَىٰ ۚ إِن تَصْبِرُوا وَتَتَّقُوا وَيَأْتُوكُم مِّن فَوْرِهِمْ هَٰذَا يُمْدِدْكُمْ رَبُّكُم بِخَمْسَةِ آلَافٍ مِّنَ الْمَلَائِكَةِ مُسَوِّمِينَ
3:125. ஆம்! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து பொறுமையுடனிருந்தால், பகைவர்கள் உங்கள் மேல் வேகமாக வந்து பாய்ந்த போதிலும், உங்கள் இறைவன் போர்க்குறிகள் கொண்ட ஐயாயிரம் வானவர்களைக் கொண்டும் உங்களுக்கு உதவி புரிவான்.

நன்றி ;- காதிரிய்யா சுன்னத் வல் ஜமாஅத்.

லைலத்துல் கத்ர் இரவு அமல்கள்



அல்ஹாஜ் மௌலானா மௌலவி மர்ஹும் 
S.A.முஹம்மது ஸலாஹுத்தீன் ஆலிம் 
ஃபாஜில் மன்பஈ ஹஜ்ரத் அவர்கள்
(முன்னால் இமாம். வாழூர் மற்றும் சித்தார்கோட்டை )

வெளியீடு ;- மதரஸா மதாரிஸுல் அரபிய்யா, வாழூர்.

அருள் நிறை லைலத்துல் கத்ர் இரவில் அனைவரும் ஆற்ற வேண்டிய அமல்கள்!!!




அருள் நிறை லைலத்துல் கத்ர் இரவில்

அனைவரும் ஆற்ற வேண்டிய அமல்கள்

லைலத்துல் கத்ர் இரவு வணக்கம் பற்றி!!!

அண்ணலார் (ஸல்) அவர்கள் யார் நன்னம்பிக்கையுடனும்,
தூய நிய்யத்துடனும், ''லைலத்துல் கத்ர்'' எனும் இரவில்
விழித்திருந்து இறை வணக்கத்திலே கழிக்கிறாரோ அவரின்
சென்று போன பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.

(1)ரக்கஅத் 4; அல்ஹம்து 1 முறை, அல்ஹாக்கு
முத்தகாதுரு 1 முறை, குல்ஹுவல்லாஹு 3 முறை
ஓதி தொழ வேண்டும்
இதன் பலன்; மரண வேதனை இலேசாக்கப்படும்,
மண்ணரை வேதனை குறைக்கப்படும்.

(2) ரக்கஅத் 4; அல்ஹம்து 1 முறை இன்னா அன்ஜல்னா
1 முறை குல்ஹுவல்லாஹு 27 முறை ஓதி தொழ
 வேண்டும் இதன் பலன் அன்று பிறந்த பாலகனைப்
 போன்று பாவ மற்றவராகிறார்

(3) ரக்கஅத் 4; அல்ஹம்து 1 முறை இன்னா அன்ஜல்னா
3 முறை குல்ஹுவல்லாஹு 50 முறை ஓதி தொழ வேண்டும்.
இத் தொழுகை முடிந்தவுடன் ஸஜ்தாவில் 3-ம் கலிமா ஒரு முறை 
ஓதிய பின் துஆ கேட்டால் துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

(4) இரண்டு இரண்டாக  12 ரக்கஅத்துக்கள் அல்ஹம்து 1 முறை 
இன்னா அன்ஜல்னா 3 முறை, குல்ஹுவல்லாஹு 10 முறை
ஓதி தொழ வேண்டும்.

(5) ரக்கஅத் 2 அல்ஹம்து 1 முறை குல்ஹுவல்லாஹு 7 முறை
தொழுகை முடிந்த பின் அஸ்தஃபிருல்லாஹ வஅத்தூபு இலைஹி
 70 முறை ஓத வேண்டும்.

(6) ரக்கஅத் 2 அல்ஹம்து 1 முறை,இன்னா அன்ஜல்னா
1 முறை குல்ஹுவல்லாஹு 3 முறை ஓதி தொழ வேண்டும்.
இவ்விரவின் நன்மை கிட்டுவதுடன் நோன்புகள் 
ஒப்புக் கொள்ளப்படுகின்றன.

(7) லைலத்துல் கத்ர் இரவின் தொழுகையில் குறைந்தது
2 நடுநிலை 100, அதிகம் 1000 ரக்கஅத்துக்கள் தொழவேண்டும்.

(8) தஸ்பீஹ் நபில் தொழுகை ரக்கஅத் 4 இதற்கு
அபரிமிதமான நன்மைகள் உண்டு.

(9) இஷா தொழுகைக்குப்பின் இன்னா அன்ஜல்னா 
சூராவை 7 முறை ஓதினால் அல்லாஹ் அவனை
அனைத்துச் சோதனைகளை விட்டும் காப்பாற்றுகிறான்
அவனுக்காக 70,000 மலக்குகள் துஆச்செய்கிறார்கள்.

உறங்காது தொழுவோம் உயர்வை பெறுவோம்,
நாயனை தொழுவோம், நன்மை பெறுவோம்.

தொகுத்து வழங்கியவர்கள் ;


அல்ஹாஜ் மௌலானா மௌலவி மர்ஹும் 
S.A.முஹம்மது ஸலாஹுத்தீன் ஆலிம் 
ஃபாஜில் மன்பஈ ஹஜ்ரத் அவர்கள்
(முன்னால் இமாம். வாழூர் மற்றும் சித்தார்கோட்டை )

வெளியீடு ;- மதரஸா மதாரிஸுல் அரபிய்யா, வாழூர்.

Tuesday, July 15, 2014

பத்ர் களத்தில் சஹாபாக்களின் சிறப்பு

வரலாற்று ஆய்வாளரும்,காயல் பட்டிணம் முஅஸ்கருர் ரஹ்மான் 
அரபுக் கல்லூரி முதல்வருமான,  கதீப் ஹஜ்ரத்   மௌலானா மௌலவி
அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் அஹ்மது அப்துல் காதிர் ஆலிம் மஹ்ழரி அவர்களளின் சிறப்புப் பேருரைகள்.

பத்ர் மௌலித் தமிழ் மொழிப்பெயர்ப்பு


Monday, July 14, 2014

புனித பத்ரு ஸஹாபாக்களின் சிறப்பு

லால்பேட்டை,ஜாமிஆ மதரஸா மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் மூத்த பேராசிரியரும்,தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர். மௌலானா மௌலவி அல்லாமா, ஷைகுல் ஹதீஸ், அபுல் பயான்,
ஏ .இ .எம்.அப்துர் ரஹ்மான் மிஸ்பாஹி ஹஜ்ரத் கிப்லாவின்,புனித 
பத்ரு ஸஹாபாக்களின் சிறப்பு பற்றிய சிறப்புப் பேருரை.

புனிதம் வாய்ந்த பத்ரு சஹபாக்களின் நினைவுப் பெருவிழா

நாள்: 15-07-2014 செவ்வாய்க்கிழமை பின்னேரம்
10:30 மணியளவில் தரவீஹுக்கு பின்
தொடங்கி சஹர் வரை
இடம்: நவாப் சஆததுல்லாஹ்கான் சாஹிப்
ஜாமிஆ மஸ்ஜித், சென்னை.




இச்சிறப்பு மிகு பெருவிழா மென்மேலும் சிறக்க, சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணையதளத்தினர் அகமகிழ்ந்து வாழ்த்தி துஆச்செய்கிறார்கள். வஸ்ஸலாம்..

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

Friday, July 11, 2014

அறிஞர் அரங்கம் ( மூன் தொலைக்காட்சியின் சஹ்ர் நேர நிகழ்ச்சி )

மூன் தொலைக்காட்சியில் சஹ்ர் நேரத்தில் 22-07-2012 
முதல் 19-08 2012 வரை ஒளிபரப்பான 
அறிஞர் அரங்கம் என்ற நிகழ்ச்சி

ரமலானில் குர்ஆன்

மூன் தொலைக்காட்சியின் ஹதமுல் குர்ஆன் துஆ என்ற நிகழ்ச்சியில்,
காயல்பட்டிணம்,அல்ஹாஃபிழ்.N.T.ஸதக்கத்துல்லாஹ் 
அவர்கள் துஆச் செய்த வீடியோ காட்சி

Monday, July 7, 2014

புனித நோன்பு சம்பந்தமான தெளிவான உண்மை விளக்கம்

சென்னை, பெரம்பூர் மஸ்ஜிதுர் ரஹ்மான் பெரிய பள்ளி தலைமை இமாமும், சென்னை பல்கலை கழக அரபி, உருது, மற்றும் பாரசீகம் விரிவுரையாளர், டாக்டர் மௌலானா மௌலவி அல்ஹாஜ் அல்லாமா, அ.அன்வர் பாதுஷா ஆலிம் உலவி ஹஜ்ரத் கிப்லா அவர்களின், மூன் தொலைக்காட்சி ஷரீஅத் சட்டம் என்ற நிகழ்ச்சியில்,புனித ரமழான் சம்பந்தமான தெளிவான 
உண்மை விளக்கவுரைகள்.








ஷைகுல் ஃபலக் அல்லாமா ஜவாஹிர் ஹுஸைன் ஆலிம் மன்பயீ ஹஜ்ரத் அவர்களின் . சிறப்புரைகள்.

கிருஷ்னாஜிபட்டிணம்,மௌலானா மௌலவி ஷைகுல் ஃபலக் அல்லாமா ஜவாஹிர் ஹுஸைன் ஆலிம் மன்பயீ ஃபாஜில் பாக்கவி 
ஹஜ்ரத் அவர்களின் .சிறப்புரைகள். ( இருப்பு இலங்கை )

Sunday, July 6, 2014

இஃப்தார் நேர துஆ ( மூன் தொலைக்காட்சியின் இஃப்தாருக்கு முன் இறைஞ்சுவோம் நிகழ்ச்சி )


இப்தார் நேர துஆ - துஆச் செய்பவர்கள்.மௌலானா மௌலவி 
முஹம்மது ராஃபி மஹ்ழரி ஹஜ்ரத் அவர்கள்.