Sunday, August 25, 2013

சித்தார் கோட்டை ஜாமிஆ சித்தாரிய்யா அரபுக் கல்லூரி 11 -ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் ஐந்தாவது ''மௌலவி'' ஆலிம் பட்டமளிப்பு விழா !!!



ஹிஜ்ரி 1434 ஷவ்வால் பிறை 24 ( 01-09-2013)
ஞாயிற்றுக்கிழமை,நேரம் காலை 9-00 மணியளவில்

நிகழ்விடம் ;-

அல்லாமா அமானி ஹஜ்ரத் ( ரஹ் ) அவர்களின் நினைவரங்கம்.

தலைமை ;-

 சித்தார் கோட்டை ஜமாஅத் தலைவர்
ஜனாப் M.தீனுல்லாஹ் கான் அவர்கள்
முன்னிலை வகிப்பவர்கள் ;-

வள்ளல் அல்ஹாஜ் S.தஸ்தகீர் அவர்கள்.

அல்ஹாஜ் S.M.கமருல் ஜமான் A.E.A.A.(Lon)அவர்கள்.

ஜனாப் S.ஆரிஃப்கான் அவர்கள்.

அல்ஹாஜ் வள்ளல் A.முஹம்மது யூசுப் அவர்கள்.

வாழூர் ஜமாஅத் தலைவர்
அல்ஹாஜ் E.காதர் அவர்கள்.

இராமநாதபுர  மாவட்ட காங்கிரஸ் செயலாளர்
ஜனாப் A.R.துல்கீப் அவர்கள்.

ஜனாப் S.T.ஷாஜஹான் அவர்கள் (புருனை)

சித்தார்கோட்டை சுன்னத் வல் ஜமாஅத்
தலைவர் அல்ஹாஜ் H.அஹ்மது இப்றாஹீம்
(வட்டம்) அவர்கள்.

அல்ஹாஜ் M.ஹிதாயத்துல்லாஹ் அவர்கள்.
உறுப்பினர்,சித்தாரிய்யா அரபுக் கல்லூரி.

அல்ஹாஜ் A.பாரூக் ஜீலானி அவர்கள்.
உறுப்பினர்,சித்தாரிய்யா அரபுக் கல்லூரி.


நிகழ்ச்சி தொகுப்பு ;-

பேராசிரியர்.ஜனாப் S.முஹம்மது முஸ்தபா D.T.E.அவர்கள்.
உறுப்பினர்,நிர்வாக ஆலோசனைக்குழு,சித்தாரிய்யா அரபுக் கல்லூரி.

பேராசிரியர்.ஜனாப் S.ஜாஹிர் ஹுஸைன் M.,sc.,M.Ed.,M.Phil அவர்கள்.
உறுப்பினர்,கல்வி ஆலோசனைக்குழு,சித்தாரிய்யா அரபுக் கல்லூரி.

கிராஅத் ;-

அல்ஹாஃபிழ்,அஃப்ஜலுல் உலமா H.சேக் ஃபரீத் அவர்கள்.
தஹ்ஸீல் மாணவர்,சித்தாரிய்யா அரபுக் கல்லூரி.



வரவேற்புரை ;-

மௌலானா மௌலவி அல்ஹாஜ்  I.செய்யிது முஹம்மது
புஹாரி ஆலிம் ஃபாஜில் மன்பயீ ஹஜ்ரத் அவர்கள்.
நிறுவனர், சித்தாரிய்யா அரபுக் கல்லூரி.

துவக்க உரை ;--

சித்தாரிய்யா அரபுக் கல்லூரியின் முதல்வர்,
கீழக்கரை, மௌலானா மௌலவி அல்ஹாஜ் 
S.ஹுஸைன் அப்துல் கரீம் ஆலிம் மன்பயீ ஹஜ்ரத் அவர்கள்.

வாழ்த்துரை ;--

\மௌலானா மௌலவி அல்ஹாஜ் முதுகுளத்தூர்
S.அஹ்மதுபஷீர் சேட் ஆலிம் ஃபாஜில் மன்பயீ ஹஜ்ரத் அவர்கள்
தலைவர்,கல்வி ஆலோசனைக் குழு,சித்தாரிய்யா அரபுக் கல்லூரி.

திரு M.நாகராஜன்.
முதல்வர்,ஃபாத்திமா ஆசிரியர் பயிற்சி நிறுவனம்,
சக்கரக்கோட்டை,இராமநாதபுரம்.

மௌலானா மௌலவி அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் M.S.அப்துல் காதிர் ஆலிம் மஹ்ழரி அவர்கள்.
தலைமை இமாம்,ஜென்னத்துல் ஃபிர்தௌஸ் ஜும்ஆ மஸ்ஜித்,சித்தார் கோட்டை.

மௌலானா மௌலவி அல்ஹாஜ் அல்ஹாஃபிழ்  A.M.முஹம்மது ஆரிஃப் மஸ்லஹி அவர்கள்.
இமாம்,சின்ன பள்ளிவாசல்,சித்தார் கோட்டை.



ஸனது வழங்குதல் ;--

மௌலானா மௌலவி அல்ஹாஜ் முஃப்தி காரி அல்லாமா 
A.நூருல் அமீன் ஹஜ்ரத் கிப்லா அவர்கள்.
முதல்வர்,ஜாமிஆ மன்பவுல் அன்வார்,லால்பேட்டை.

பட்டமளிப்பு விழா பேருரை ;--

மௌலானா மௌலவி அல்ஹாஜ், ஷைகுல் ஹதீஸ்,அபுல் பயான், 
A.E.முஹம்மது அப்துர் ரஹ்மான் ஆலிம் மிஸ்பாஹி ஹஜ்ரத் கிப்லா அவர்கள்.
தலைவர்,தமிழ் நாடு ஜமாஅத்துல் உலமா சபை,பேராசிரியர்,,J.M.A. அரபுக்கல்லூரி,லால்பேட்டை.

மௌலானா மௌலவி அல்ஹாஜ் பேராசிரியர்,அல்லாமா T.J.M.ஸலாஹுத்தீன் ஹஜ்ரத் கிப்லா அவர்கள்.
தலைவர்,நெல்லை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை, 
முதல்வர்,ஹஸனாத்துன் ஜாரிய்யா அரபுக் கல்லூரி,பேட்டை.

மௌலானா மௌலவி அல்ஹாஜ் அல்லாமா, செங்கோட்டைச் சிங்கம்
ஆவூர் அப்துஷ் ஷுக்கூர் ஹஜ்ரத் கிப்லா அவர்கள்.
துணைத் தலைவர்,தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை.


சிறப்பு அழைப்பாளர்கள் ;--

பத்ருல் மில்லத் டத்தோ அல்ஹாஜ் A.அப்துல் அஜீஸ் DPSM.,DJN.,DSM.அவர்கள்.
SUBAIDAH HOLDINGS SDN. BHD, MALAYSIA.

பத்ருல் மில்லத் டத்தோ அல்ஹாஜ் S.ஜவஹர் அலி DIMP.,KMW.,AMP.,ANS.,PJK அவர்கள்.
RESTAURANT ALI MAJU SDN.BHD .MALAYSIA

ஜனாப் S.ஷாஹுல் ஹமீது அவர்கள்.
RESTAURANT NASI KANDAR AL MASHYUR MAJU,PENANG,MALAYSIA


ஜனாப் A.சையிது இப்ராஹிம் அவர்கள்.
HAMEEDIYYA RESTAURANT PENANG,MALAYSIA

மௌலானா Dr.H.நஜீபுர் ரஹ்மான் DIP.E.ENG DIP HD DTS MD SUJOK.,MD,AM அவர்கள்.
FOUNDER,MADRASHA TAHFIZUL QURANUL KARIM BAITUL IRFAN,PENANG,MALAYSIA


ஜனாப் A.முஹம்மது ஆரிஃப் அவர்கள்.
PENANG,MALAYSIA


பனைக்குளம்,  பாபா செய்யிது முஹம்மது
ஆலிம் (வலி) மதரஸாவின் நிறுவனர்
அல்ஹாஜ் S.S.ஹஸன் வதூது பில்லாஹ்
ஆலிம் அவர்கள்.

அல்ஹாஜ் அப்துல் அஜீஸ் அவர்கள்.
நிறுவனர், பாத்திமா கனி ஹஜ் சர்வீஸ்,இராமநாதபுரம்.

அல்ஹாஜ் ஷாஜஹான் அவர்கள்.
மாநில பொருளாளர்,இந்திய யூனியன் முஸ்லீம் லீக்,இராமநாதபுரம்

திரு.சுந்தரம் அவர்கள்.தலைவர்,ஊராட்சி மன்றம் சித்தார்கோட்டை.


நன்றியுரை ;-

மௌலானா மௌலவி அல்ஹாஜ் அஃப்ழலுல் உலமா
M.சுதானா முஹம்மது ஆலிம் அரூஸி ஃபாஜில் ஜமாலி ஹஜ்ரத் அவர்கள்.
சித்தாரிய்யா அரபுக் கல்லூரி தாளாலர், மற்றும் பேராசிரியர், 

மௌலவி ஆலிம் ஸனது பெறுபவர்கள்;-

மௌலவி அஃப்ழலுல் உலமா A.கமாலுத்தீன் ஆலிம் சித்தாரி
S/o.மௌலானா மௌலவி அல்ஹாஜ் M.அபுல் பரக்காத் ஆலிம்.
 கட்டுமாவடி,புதுக்கோட்டை மாவட்டம்.

மௌலவி அஃப்ழலுல் உலமா B.சமியுல்லாஹ்  ஆலிம் சித்தாரி
S/o. M.புர்கானுத்தீன்.வெளிப்பட்டிணம்,இராமநாதபுரம்.

மௌலவி அஃப்ழலுல் உலமா S.உமர் ஃபாரூக் ஆலிம் சித்தாரி
S/O.M.ஷாஜஹான், பனைக்குளம்.மதுரை மாவட்டம்.

மௌலவி S.நிஹால் முஹம்மது ஆலிம் சித்தாரி
S/O.M.ஷுக்கூர் தீன்.பொட்டக வயல்,இராமநாதபுர மாவட்டம்.

மௌலவி  N.யாசிர் அரஃபாத் ஆலிம் சித்தாரி
S/O.B.நூர் ஷம்சுத்தீன்.ஒப்பிலான்,.இராமநாதபுர மாவட்டம்.

மௌலவி  H.அப்துல் பாசித் ஆலிம் சித்தாரி
S/O.M.ஹாஜா முஹையித்தீன். நத்தம்,மதுரை மாவட்டம்.



மாபெரும் இவ்விழா சிறக்கவும்,
இவ்வாண்டு பட்டம் பெறும் இளம்
மௌலவிகளின் தீன் பணி சிறக்கவும்,
இவ்விழாவிற்க்கு வருகை தரும்
அனைவர்களையும், சுன்னத் வல் ஜமாஅத்
பேரியக்க வாழூர், மற்றும்
மலேசியக் கிளையினர் வரவேற்று, வாழ்த்தி
அகமகிழ்ந்து துஆச்செய்கிறார்கள். வஸ்ஸலாம்

வெளியீடு;- மன்பயீ ஆலிம்.காம்.

நினைவு நாள் அழைப்பிதழ் !!!


முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! வமுஸல்லிமா!!!

பனைக்குளம்.மெய்ஞான மாமேதை,மெய்நிலை கண்ட தவஞானி,அறிவுலகப் பேரொளி அல்ஹாஜ், அல்லாமா,மலிகுல் உலமா,அஷ்ஷெய்குல் காமில், குத்புஸ்ஜமான், மஸீகுல் அனாம்,ஆரிபு பில்லாஹ், ஷெய்குணா, செய்யிதி, மாமஹான் பாபா,செய்யிது முஹம்மது ஆலிம் வலியுல்லாஹ் (ரலி) ஹஜ்ரத் கிப்லா அவர்களின்,47- ஆம் ஆண்டு நினைவு நாள் விழா,
நாள்  ( 31-08-2013 ) சனி,பின்னேரம்.ஞாயிறு இரவு 7-00 மணிக்கு


தர்ஹா ஷரீஃபில் அன்னார் பெயரில் குர்ஆன் கானி செய்யப்பட்டு  ஜீரணி வழங்கப்படும்.அது சமயம் கண்ணியம் நிறைந்த உலமாப் பெருமக்களும்,பல அறிஞர் பெருமக்களும், சிறப்பான இந்த மஜ்லிஸில் கலந்துகொண்டு துஆச்செய்ய இருக்கின்றார்கள்.அனைவரும் சிறப்பான இந்த மஜ்லிஸிற்கு வருகை தந்து சிறப்பு வாய்ந்த துஆ மஜ்லிஸில் கலந்து கொண்டு நல்லாசி பெற்று உங்கள் வாழ்விலும், தொழிலிலும்,சிறப்புப் பெற்று,மனம் நிறைந்த நோய் நொடி இல்லாத நல் வாழ்வு வாழ அன்புடன் அழைகின்றோம்.

இப்படிக்கு.

மௌலானா M. செய்யிது முஹம்மது ஆலிம் மன்பயீ.                 

S/O அல்ஹாஜ் மௌலானா மர்ஹூம் M.முஹம்மது முபாரக் ஆலிம் மன்பயீ.

விழாக் குழுவினர், பனைக்குளம்.


  
இந்த சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில் அனைவர்களும் தவறாது கலந்து கொண்டு,அல்லாஹ்வின் அளப்பெரும்,அன்பையும்,அருளையும்,பெற்றுக் கொள்ளுமாறு,சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினரும்,சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினரும், துஆச்செய்து அகமகிழ்ந்து,அன்புடன் அழைக்கின்றார்கள் வஸ்ஸலாம்.

வெளியீடு- மன்பயீ ஆலிம்.காம்.

Saturday, August 24, 2013

சித்தார்கோட்டை மர்ஹூம் ஃபாத்திமா பீவி மகளிர் அரபுக் கல்லூரியின் பதினெட்டாவது பட்டமளிப்பு விழா அழைப்பிதழ் !!!


அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளால்
நிகழும் ஹிஜ்ரி 1434-ஆம் ஆண்டு  ஷஅபான்
பிறை 17-  ( 27-06-2013 )  ஞாயிறு மாலை,
திங்கள் இரவு  7-00 மணியளவில் மஃரிபு
தொழுகைக்குப்  பிறகு,  முஹம்மதியா  மேல்
நிலைப்பள்ளி விளையாட்டு அரங்கில், 18- வது
பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
அவ்வமயம் உலமாப்  பெருமக்கள்
சிறப்புரையாற்றினார்கள்.

நிகழ்ச்சி நிரல் ;-

தலைமை ;-

ஜனாப் தீனுல்லாஹ் கான் அவர்கள்.
தலைவர்- முஸ்லிம் தர்மபரிபாலன சபா

அல்ஹாஜ் வள்ளல் சீ. தஸ்தகீர் அவர்கள்.
தலைவர்-  முஹம்மதியா  பள்ளிகள்

அல்ஹாஜ் S.M.கமருஜமான் AE.A.A (Lon) அவர்கள்.
புரவலர் –முஹம்மதியா பள்ளிகள்.

ஜனாப் ஆரிப்கான் அவர்கள்
புரவலர்- முஹம்மதியா பள்ளிகள்.

சித்தார்கோட்டை சுன்னத் வல் ஜமாஅத்
தலைவர் அல்ஹாஜ் வட்டம் M.அஹ்மது
இபுராஹீம் அவர்கள்.

அல்ஹாஜ், பேராசிரியர் P.A.S
அப்பாஸ் அவர்கள். தாளாலர்
முஹம்மதியா மேல் நிலைப் பள்ளி.

வரவேற்புரை ;-

ஜனாப் A.பக்கீர் நெய்னா முஹம்மது Bsc.அவர்கள்.
டிரஸ்டி, ஃபாத்திமா பீவி மகளிர் அரபுக் கல்லூரி

ஸனது வழங்கி சிறப்புரை;-

மௌலானா மௌலவி   
ஷாஹுல் ஹமீதுஆலிம்  ஷாஹிப் அவர்கள்
ஹத்தீப் -- மஸ்ஜிதுல் மன்பயீ பள்ளிவாசல்
வடக்குத் தெரு,கீழக்கரை.

வாழ்த்துரை ;-

மௌலானா மௌலவி அல்ஹாஜ் அல்ஹாஃபிழ்
காரீ M.அப்துல் காதிர் ஆலிம் மஹ்ழரி அவர்கள்.
தலைமை இமாம், சித்தார் கோட்டை.

சிறபுப் பேருரை ;-

மௌலானா மௌலவி அல்ஹாஜ் 
A.முஹம்மது  ஹபீப் ஆலிம் மன்பயீ ஹஜ்ரத் அவர்கள்.
முதல்வர், தாவூதிய்யா 
அரபுக் கல்லூரி, பினாங்கு,மலேசியா.

பெண்கள் நிகழ்ச்சிகள் ;-

இடம் ;- 

ஃபாத்திமா பீவி மகளிர் அரபுக் கல்லூரி சித்தார்கோட்டை.

காலம் ';--
( 27-06-2013 ) 2.00-மணியளவில் நடைபெற்றது.

தலைமை மற்றும் பரிசளிப்பு ;-
ஆலிமா M.பரிதா பானு ஃபாத்திமிய்யா அவர்கள்.
முதல்வர்-ஃபாத்திமா பீவி மகளிர் அரபுக் கல்லூரி

கிராஅத் ;- M.லுபைனா  பானு  அவர்கள்.

வரவேற்புரை  ;-  K.நிஹ்மத் நிஸா அவர்கள்.

சிறப்புரை ;-

ஆலிமா  K.செய்யது அலி ஃபாத்திமா ஃபாத்திமிய்யா அவர்கள்.

ஆலிமா M.நிலோபர் ஜஹான்  ஃபாத்திமிய்யா அவர்கள்.

ஆலிமா  F. ஹம்து நிஸா ஆயிஷா சித்திக்கிய்யா அவர்கள். 

ஆலிமா  S.செய்யது அலி ஃபாத்திமா ஃபாத்திமிய்யா அவர்கள்.

நன்றியுரை- M. ஆயிஷா பர்வீன் அவர்கள்.

2013 -ஆம் ஆண்டு பட்டம் பெற்ற மாணவிகள்.

ஆலிமா K. நிஹ்மத் நிஸா ஃபாத்திமிய்யா அவர்கள்.
D/o. A.கமால்தீன்,பிரப்பன் வலசை.

ஆலிமா M.ஆயிஷா பர்வீன் ஃபாத்திமிய்யா அவர்கள்.
D/o. M.முஹம்மது ஹனீஃபா,கழுகேர்கடை.

ஆலிமா S.ரம்ஜான் பேகம் ஃபாத்திமிய்யா அவர்கள்.
D/o.J.சீனி மீராசா,தேவிபட்டிணம்.

ஆலிமா M.லுபைனா பானு ஃபாத்திமிய்யா அவர்கள்.
D/o. S.முஹைதீன், பெரியபட்டிணம்.

ஆலிமா A.அனீஸ் பாத்திமா ஃபாத்திமிய்யா அவர்கள்.
D/o M.அக்பர் அலி,தெற்கு விஷவனூர்.



இவ்வருடம் பட்டம் பெற்ற இளம் ஆலிமாக்களின்
தீன் பணி சிறக்க, சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க
வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்  அகமுவந்து 
வாழ்த்தி துஆச் செய்கின்றார்கள். மேலும் இந்த
மதரஸாவை  வக்ஃபு  செய்தவர்கள்  எந்த
நோக்கத்திற்காக  வக்ஃபு செய்தார்களோ அதன்
படி கியாமத் நாள் வரை நடை பெற, அல்லாஹ்
பேருதவி செய்வானாகவும் ஆமீன். வஸ்ஸலாம்….

வெளியீடு-- மன்பஈ ஆலிம்.காம்.

Friday, August 23, 2013

புனித மிகு நபிமார்களின் வாரிசுகளை உருவாக்கும் சிறப்பு வாய்ந்த அரபுக் கல்லூரிகள் துவங்கியது !!!




முதஅவ்விதன்! முபஸ்மிலன்!! முஹம்திலன்!! முஸல்லியன்!! வமுஸல்லிமா!!!

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையால்அரபுக் கல்லூரிகள்,புனிதம் வாய்ந்த ரமழான் மாத விடுமுறைக்குப் பிறகு ஆரம்பம் ஆகிவிட்டது. மார்க்கக் கல்வியை தேடிப் பெறுவது முஸ்லிமான ஆண்கள், பெண்களின் மீது கட்டாய கடமை என எம்பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஆனால், முஸ்லிமான நம்மவர்கள் சமீப காலமாக தங்களது குழந்தைகளுக்கு மார்க்க கல்வியை வழங்காமல்,அதாவது காலை மதரஸாக்களுக்கு கூட ( மக்தப் ) அனுப்பாமல் உலகக் கல்வியை மட்டும் வழங்குவதில் அதிக கவனம் எடுத்துக்கொண்டு அழிவிலே இருக்கிறார்கள். 

மார்கக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்காத காரணத்தினால் இன்று இஸ்லாமிய சமுதாயத்தில் வழிகெட்ட, கொலைகார கும்பல்களின் குழப்பங்கள், அனாச்சாரங்கள்,தீமைகள், அதிகமான பிரச்சினைகள் காணப்படுகிறது.சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னால் வரை மார்கக் கல்வியுடன் உலகக் கல்வியையும் நமது இஸ்லாமிய பெற்றோர்கள் தனது பிள்ளைகளுக்கு வழங்கினார்கள்.இதன் காரணமாக தங்களது பிள்ளைகளை கண்ணிய மிகுஆலிம்களாகவும், கண்ணியமிகு ஹாஃபிழ்களாகவும்,பட்டதாரிகளாகவும், உருவாக்கினார்கள்.

இஸ்லாமிய சமுதாயம் ஒற்றுமையாகவும், அமைதியாகவும்.தீமைகளைவிட்டும் விலகி வாழ்ந்தார்கள். ஆகவே சீனா தேசம் சென்றாலும் மார்க்க கல்வியை தேடிப் பெற்றுக் கொள்ளுங்கள். என நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.அதன் அடிப்படையில் இஸ்லாமிய பெற்றோர்களே! தங்களது சிறு பிள்ளைகளுக்கு (மக்தப்) இஸ்லாமிய ஆரம்பக் கல்வியையும்.பருவம் அடைந்த பிள்ளைகளுக்கு அரபுக் கல்லூரிகளில், ஏழு ஆண்டுகள்,அல்லது உலகக்கல்வியுடன் ஐந்து ஆண்டுகள், அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையின் படி,மார்க்க கல்வியை வழங்கினால், இன்ஷா அல்லாஹ் பெருமானாரின் ஷஃபாஅத்தையும், வல்ல நாயனின் அன்பையும்,அருளையும், பெற்றுக்கொள்வீர்கள். நமது இஸ்லாமிய பெற்றோர்களை தனது குழந்தைகளுக்கு உலகக் கல்வியுடன் மார்க்க கல்வியை வழங்கிய உயர்ந்த பெற்றோர்களாக வல்ல அல்லாஹ் ஆக்குவானாக ஆமீன். இன்ஷா அல்லாஹ் அரபுக் கல்லூரிகள்; ஷவ்வால் பிறை 15-ல் துவங்க இருக்கிறது பயணடைந்து கொள்வீர்களாக! எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு 
நல் உதவி செய்வானகவும் ஆமீன்.. வஸ்ஸலாம்.

வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம்

சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

Tuesday, August 6, 2013

இனிய ஈகைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்


  • முதஅவ்விதன்!! முபஸ்மிலன்!!! முஹம்திலன்!!! முஸல்லியன் !!! வமுஸல்லிமா!!!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 

அன்பார்ந்த பெரியோர்களே! இளைஞர்களே! அருமைத் தாய்மார்களே! சகோதர சகோதரிகளே! பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து வணக்கம் செய்தால் உயர் பதவி கிடைக்கும் என்பார்கள்.இம் மூன்றையும் கடைபிடிக்கிற நல் வாய்ப்பினை எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த ரமழான் மாதத்திலே நமக்கு வழங்கினான்.பகலெல்லாம் நோன்பு வைத்து,இரவிலே இருபது ரக்கஅத்துகள் தொழுது, அல்லாஹ்வுடைய அளப்பெரும் அன்பையும், அருளையும் பெற்ற எங்கள் இஸ்லாமிய அன்பு நெஞ்செங்களே! உங்கள் அனைவர்களுக்கும் இனிய நோன்பு பெருநாள் நல் வாழ்த்துக்களையும்,இன்னும் ஆறு நோன்புகள் நோற்க இருக்கின்ற, உயர்ந்த சீதேவிகளுக்கு ஆறு நோன்புப் பெருநாள் நல் வாழ்த்துக்களையும்,சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினர் சார்பாக அகமுவந்து தெறிவித்துக் கொள்கிறோம் வஸ்ஸலாம்…..

வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம்

சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்கள் .

Friday, August 2, 2013

துபாய் சர்வதேச திருக்குர்ஆன் விருது போட்டி: முதல் பரிசை தட்டிச் சென்ற சவுதி அரேபிய இளைஞர்

துபாய்: துபாயில் ரமலான் மாதம் 1 முதல் 20 தேதி வரை 17வது ஆண்டாக நடைபெற்ற சர்வதேச திருக்குர்ஆன் விருது வழங்கும் போட்டியில் சவுதி அரேபியாவின் ஆதில் முஹம்மது அல் கெய்ர் முதல் பரிசை பெற்றார். அவர் 250,000 திர்ஹமை பரிசுத் தொகையாக பெற்றார். இதனை ஷேக் மக்தூம் பின் முஹம்மது வழங்கினார். இரண்டாம் இடத்தை பெற்ற சாட் நாட்டைச் சேர்ந்த அல்ஹாஜ் மஹம்மத் டிஜிட்டா 200,000 திர்ஹம் பரிசையும், மூன்றாம் இடத்தை பிடித்த லிபியாவின் அப்துல் பாரி ஆர் அலி பிசுப்சு 150,000 திர்ஹம் பரிசுத் தொகையையும் பெற்றனர். 



அதனைத் தொடர்ந்து பெல்லோ அமதா மஹ்மத் (நைஜீரியா), உமர் முஹம்மது ஆதம் கோட் (சூடான்), ஜமாலுதீன் எல் கிக்கி (ஆஸ்திரேலியா), சையத் அலி உமர் பல்கதிஷ் அல் ஜாபரி (ஐக்கிய அரபு அமீரகம்), அஹமது அலி தாஹா (லெபனான்), அப்துல்லா அரிபி (அல்ஜீரியா), பட்டேல் வசில் (பிரான்ஸ்) ஆகியோர் நான்கு முதல் 10 இடங்களைப் பெற்றனர். இவர்களுக்கு 65 ஆயிரம் திர்ஹத்திலிருந்து ஒவ்வொரு தரத்திற்கும் ஐயாயிரம் குறைத்து 35,000 திர்ஹம் வரை வழங்கப்பட்டது. மிகவும் அழகான முறையில் கிராஅத் ஓதிய ஐவருக்கு சிறப்புப் பரிசு வழங்கப்பட்டது. 



அவர்களது விபரம் வருமாறு: 

முஹம்மது நஜ்முஸ் சாகிப் ரும்மான் (வங்கதேசம்) இப்ராஹிம் சயீத் (ஏமன்) முஹம்மது அஷ்ரஃப் (எகிப்து) உலுல் அம்ரி ஜெய்னுதீன் (இந்தோனேசியா) அஹ்மது ஹரிர் (ஆப்கானிஸ்தான்) இவர்கள் முறையே திர்ஹம் 5000, 4000, 3000, 2000 மற்றும் 1,000 பரிசு பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் அமீரக அமைச்சர்கள், ஷேக்குகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.