Sunday, May 31, 2015

லால்பேட்டை ஜாமிஆ மன்பஉல் அன்வார் அரபுக் கல்லூரியின் 71 - ஆம் ஆண்டு பட்டமளிப்பு பெருவிழா !!!

லால்பேட்டை ஜாமிஆ மன்பஉல் அன்வார் அரபுக் கல்லூரியின் 152 - ஆம் ஆண்டு விழா மற்றும் 71 - ஆம் ஆண்டு பட்டமளிப்பு  பெருவிழா

மாபெரும் இப்பெருவிழா சிறக்கவும்,
இவ்வாண்டு பட்டம் பெறும் இளம்
மௌலவிகளின் தீன் பணி சிறக்கவும்,
இவ்விழாவிற்கு வருகை தரும்
அனைவர்களையும், மன்பயீ ஆலிம்.காம்.
இணையதளத்தினர்  வரவேற்று, வாழ்த்தி
அகமகிழ்ந்து துஆச்செய்கிறார்கள். வஸ்ஸலாம்

வெளியீடு;- மன்பயீ ஆலிம்.காம்.

Wednesday, May 27, 2015

வீரசோழன் ஜாமிஆ கைராத்துல் இஸ்லாம் அரபுக் கல்லூரியின் பட்டமளிப்பு பெருவிழா !!!

மாபெரும் இப்பெருவிழா சிறக்கவும்,
இவ்வாண்டு பட்டம் பெறும் இளம்
மௌலவிகளின் தீன் பணி சிறக்கவும்,
இவ்விழாவிற்கு வருகை தரும்
அனைவர்களையும், சுன்னத் வல் ஜமாஅத்
பேரியக்க வாழூர், மற்றும்
மலேசியக் கிளையினர் வரவேற்று, வாழ்த்தி
அகமகிழ்ந்து துஆச்செய்கிறார்கள். வஸ்ஸலாம்

வெளியீடு;- மன்பயீ ஆலிம்.காம்.

Monday, May 25, 2015

வாழூரில் லைலத்துல் இஸ்ரா மிஃராஜ் மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சி !!!

முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! முஸல்லிமா!

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்
ஹிஜ்ரி 1436 ரஜப் பிறை 27 (16-05-2015) சனிக்கிழமை பின்னேரம்,
ஞாயிறு இரவு மஃரிபு தொழுகைக்குப் பின்பு
லைலத்துல் இஸ்ரா மிஃராஜ் மார்க்கச் சொற்பொழிவு,மற்றும்
திக்ரு மஜ்லிஸ்,வாழூர் அல் மஸ்ஜிதுர் ரய்யான் ஜும்ஆப் பள்ளிவாசலில்,வாழூர் அல் மஸ்ஜிதுர் ரய்யான் ஜும்ஆப் பள்ளிவாசல்,தலைமை இமாம்
மௌலானா மௌலவி முஹம்மது ஆரிஃப் கான் நூரி நிஜாமி 
அவர்கள் தலைமையில் நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்..

இதுபோன்று மலேசியத் திருநாட்டில் உள்ள இருநூற்றுக்கும்
மேற்பட்ட மதரஸாக்களிலும், இலங்கை, வளைகுடா நாடுகள்,
மற்றும் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும்,மேலும் உலகம் முழுவதும்,புனிதமிகு மிஃராஜ் இரவு சிறப்பு வணக்கங்கள், மிகச்
சிறப்பாக நடைபெற்றது . இந்த சிறப்பான மஜ்லிஸ்களில்
லட்சக்கணக்கான பாக்கியவான்கள் கலந்துகொண்டு
அல்லாஹ்வின் அன்பையும்,அருளையும் பெற்றுக்கொண்டார்கள்.வஸ்ஸலாம்.ஆமீன்..

சித்தார் கோட்டையில் லைலத்துல் இஸ்ரா மிஃராஜ் மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சி !!!

முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! முஸல்லிமா!

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்
ஹிஜ்ரி 1436 ரஜப் பிறை 27 (16-05-2015) சனிக்கிழமை பின்னேரம்,
ஞாயிறு இரவு மஃரிபு தொழுகைக்குப் பின்பு
லைலத்துல் இஸ்ரா மிஃராஜ் மார்க்கச் சொற்பொழிவு,மற்றும்
திக்ரு மஜ்லிஸ்,சித்தார் கோட்டை  ஜன்னத்துல் பிர்தௌஸில், சித்தார் கோட்டை  ஜன்னத்துல் பிர்தௌஸ்,தலைமை இமாம்
மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ், அப்துல் காதிர் மஹ்ழரி
அவர்கள் தலைமையில் நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்..

இதுபோன்று மலேசியத் திருநாட்டில் உள்ள இருநூற்றுக்கும்
மேற்பட்ட மதரஸாக்களிலும், இலங்கை, வளைகுடா நாடுகள்,
மற்றும் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும்,மேலும் உலகம் முழுவதும்,புனிதமிகு மிஃராஜ் இரவு சிறப்பு வணக்கங்கள், மிகச்
சிறப்பாக நடைபெற்றது . இந்த சிறப்பான மஜ்லிஸ்களில்
லட்சக்கணக்கான பாக்கியவான்கள் கலந்துகொண்டு
அல்லாஹ்வின் அன்பையும்,அருளையும் பெற்றுக்கொண்டார்கள்.வஸ்ஸலாம்.ஆமீன்..

சித்தார் கோட்டை மர்ஹூம் ரஷாது கான்,மர்ஹூமா தாஜுன் நிஸா ஆகியோரின் நினைவு புதிய சத்துணவுக்கூடத் திறப்புவிழா

முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! வமுஸல்லிமா!
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்,
சித்தார் கோட்டை மர்ஹூம் ரஷாது கான்,மர்ஹூமா தாஜுன் நிஸா ஆகியோரின் நினைவாக, அன்னாரின் பிள்ளைகளால் கட்டப்பட்ட, முஹம்மதியா மேல் நிலைப்பள்ளியின் புதிய 
சத்துணவுக்கூடத் திறப்புவிழா 10-05-2015 அன்று
 டாக்டர் ஃபாத்திமா சின்னத்துரை அவர்களால்,
திறக்கப் பட்டு,முஸ்லிம் தர்ம பரிபாலன சபாவிற்கு வக்ஃபு செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ் !!!!

மலேசியாவில் நடைபெற்ற 58 ஆம் ஆண்டு தேசிய அளவிலான திருக்குர்ஆன் ஓதும் போட்டி !!!

முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! வமுஸல்லிமா!
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்,

மலேசியாவில் 58 ஆம் ஆண்டு,தேசிய அளவிலான 
திருக்குர்ஆன் ஓதும் போட்டி, சென்ற ஏப்ரல்
 20-04-2015 முதல் 25-04-2015 வரை மிகச் சிறப்பாக 
நடைபெற்றது. அல்ஹம்து லில்லாஹ்.
இதில் ஆண்கள் பிரிவில் கிளந்தான் மாநிலத்தைச்சேர்ந்த, 
உஸ்தாத் அய்னுதீன் பின்  அப்துலாஹ் முதல் நிலை வெற்றியாளராகவும்,பெண்கள் பிரிவில் பாஹாங் 
மாநிலத்தைச் சேர்ந்த,  சித்தி ஹுஸ்னா ஹாஸன் 
அவர்களும் வெற்றியாளர்களாக தேர்வு பெற்றனர்.முதல் 
பரிசாக ஒரு லட்சம் மதிப்புள்ள கார்,30 ஆயிரம் ரொக்கம்,
புனித ஹஜ் பேக்கேஜ்,சான்றிதழ்கள் ஆகியவை வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.இதில் தேர்வு பெற்றவர்கள்,
 இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் ஜூன் மாதம் 9 ஆம் தேதி 
முதல் 14 ஆம் தேதிவரை  தலைநகர் புத்ரா வாணிப 
மையத்தில் நடைபெறும் உலகலாவிய திருக்குர்ஆன் போட்டியில், மலேசியாவை பிரதிநித்து கலந்து கொள்வார்கள்.வஸ்ஸலாம்.

மலேசியாவில் சர்வதேச ஸுன்னத் ஜமாஅத் மார்க்க அறிஞர்களின் மாபெரும் மாநாடு நடைபெற்றது !!!

முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! முஸல்லிமா!
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்,
சர்வதேச ஸுன்னத் ஜமாஅத் மார்க்க அறிஞர்களின் மாநாடு 
மலேசியாவில் புத்ரா ஜெயா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்,
மே மாதம் 06-05-2015 ஆம் தேதி முதல் 08-05-2015  ஆம் தேதி வரை
மிகச்சிறப்பாக நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.
.
.உலகில் பல நாடுகளில் இருந்து ஏராளமான இஸ்லாமிய மார்க்க 
அறிஞர்கள், புத்திஜீவிகள் கலந்து கொண்டனர். இந்தியாவில் 
இருந்து,புனித கஃபாவின் உட்பகுதிக்கு சென்று வந்த பாக்கியசாலி,காந்தபுரம்,கமருல் உலமா,அல்லாமா அஷ்ஷைகு 
A.P.அபூபக்கர் முஸ்லியார் பாக்கவி ஹஜ்ரத் அவர்களும் கலந்து உரையாற்றினார்கள்.வஸ்ஸலாம்.