Tuesday, May 30, 2017

தராவீஹ் தொழுகையின் சிறப்புகள் !!!


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். நஹ்மதுஹு 
வநுஸல்லி அலா ரசூலிஹில் கரீம்.*

புனித ரமலானில் ஒவ்வொரு நாளும் நோன்பாளிகள் 
தராவீஹ் தொழுவதால் கிடைக்கும் நன்மைகள் :*

*முதலாம் தராவீஹ் தொழுதவர்...*
*அன்று பிறந்தப் பாலகனைப் போல் ஆகிவிடுகிறார்.*

*2 ம் நாள் தொழுதவருக்கு...*
*அவரின் பெற்றோரின் பாவமும், அவரின் 
பாவமும் மன்னிக்கப் படுகின்றன.*

*3 ம் நாள் தொழுதவருக்கு...*
*அர்ஷை சுமக்கும் மலக்குமார்கள் பாவ 
மன்னிப்புக் கேட்கிறார்கள்.*

*4 ம் நாள் தொழுதவருக்கு...*
*தவ்ராத்,ஜபூர், இன்ஜீல், குர்ஆன் ஓதிய 
நன்மைகள் வழங்கப்படுகின்றன.*

*5 ம் நாள் தொழுதவருக்கு...*
*புனித கஃபாவிலும், மஸ்ஜித் நவபி, மஸ்ஜிதுல் 
அக்ஸாவிலும்,தொழுத நன்மைகள் கிடைக்கும்.*

*6 ம் நாள் தொழுதவருக்கு...*
*பைத்துல் மஃமூரை தவாப் செய்த நன்மையும், 
அவருக்காக அனைத்து வஸ்துகளும் 
பிழை பொறுக்கத் தேடுகின்றன.*

*7 ம் நாள் தொழுதவருக்கு...*
*ஹள்ரத் நபி மூஸா* *(அலைஹிஸ்ஸலாம்) 
அவர்களின் சிறப்பு வழங்கப்படுகிறது.*

*8 ம் நாள் தொழுதவருக்கு...* 
*ஹள்ரத் நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) 
அவர்களுக்கு வழங்கிய உயர்வு வழங்கப்படுகிறது*

*9 ம் நாள் தொழுதவருக்கு...*
*நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு* *அலைஹி வஸல்லம்) 
அவர்கள் இபாதத் செய்த நன்மைகள் கிடைக்கும்.*

*10 ம் நாள் தொழுதவருக்கு...*
*துன்யா, ஆகிரத் இரண்டிலும் நல்ல 
வசதிகள் வழங்கப்படுகிறது.*

*11 ம் நாள் தொழுதவருக்கு...*
*தாயின் வயிற்றிலிருந்து வெளி வந்த பாவமற்ற 
பாலகனைப்போல் துன்யாவிலுருந்து 
வெளியேறும் சிறப்புக் கிடைக்கின்றது.*

*12 ம் நாள் தொழுதவருக்கு...*
*மறுமையில் 14ம் இரவு பவுர்ணமி நிலவைப் 
போல் பிரகாசமாக ஆக்கப்படும் பேறு கிடைக்கும்.*

*13ம் நாள் தொழுதவருக்கு...*
*அனைத்து தீங்குகளை விட்டு பாதுகாக்கப்பட்டு 
நிம்மதி பெற்றவராகும் பேறு கிடைக்கும்.*

*14ம் நாள் தொழுதவருக்கு...*
*மலக்குமார்கள் இவரைக் கேள்வி கணக்கு இல்லாமல் 
சொர்கம் நுழையுங்கள் என்று சோபனச் செய்தி கிடைக்கும்.*

*15 ம் நாள் தொழுதவருக்கு...*
*அர்ஷ், குர்ஷியை சுமக்கும் மலக்குகளும், அவருடன் 
சேர்ந்து தொழும் பாக்கியம் கிடைக்கும்.*

*16ம் நாள் தொழுதவர்...*
*நரகிலிருந்து விடுதலைப்பெற்று சொர்கம் 
நுழைவிக்கப்படுவர்.*

*17 ம் நாள் தொழுதவருக்கு...*
*நபிமார்களுடைய நன்மைகள் வழங்கப்படுகிறது.*

*18 ம் நாள் தொழுதவருக்கு...*
*உம்மையும், உம் பெற்றோர்களையும் அல்லாஹ் 
பொருந்திக் கொண்டான் என்று மலக்குகள் 
நற் சோபனம் கூறுகிறார்கள்.*

*19 ம் நாள் தொழுதவருக்கு...*
*உயர்வான பிர்தவ்ஸ் எனும்*
*சொர்க்கம் வழங்கப்படுகிறது.*

*20 ம் நாள் தொழுதவருக்கு...*
*ஷுஹதாக்கள், ஸாலிஹீன்களின் 
நன்மைகள் வழங்கப்படுகிறது.*

*21ம் நாள் தொழுதவருக்கு...*
*சொர்க்கத்தில் பேரொளியால் ஆன 
மாளிகையை வழங்கப்படுகிறது.*

*22 ம் நாள் தொழுதவருக்கு...*
*மறுமையில் துக்கம்,கவலை 
சிரமங்களை விட்டுப் பாதுகாக்கப்படுவர்.*

*23 ம் நாள் தொழுதவருக்கு...*
*சொர்க்கத்தில் அழகிய பட்டணம் உருவாக்கப்படுகிறது.*

*24 ம் நாள் தொழுதவருக்கு...*
*(24வகையான) கோரிக்கைகளை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான்.*

*25 ம் நாள் தொழுதவருக்கு...*
*கப்ரில் ஏற்படும் வேதனைகளை அல்லாஹ் நீக்கி விடுகிறான்.*

*26 ம் நாள் தொழுதவருக்கு...*
*(40 வருடம்) வணங்கிய நன்மைகள் வழங்கப்படுகிறது.*

*27 ம் நாள் தொழுதவருக்கு...*
*மறுமையில் சிராத்துல் முஸ்தகீன் பாலத்தை மின்னல் 
வேகத்தில் கடக்கும்படி செய்யப்படுகிறார்.*

*28 ம் நாள் தொழுதவருக்கு...*
*அல்லாஹ் சொர்க்கத்தில் ஆயிரம் அந்தஸ்துகளை வழங்குகிறான்.*

*29 ம் நாள் தொழுதவருக்கு...*
*ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆயிரம் ஹஜ்ஜுகள் 
செய்த நன்மைகள்* *எழுதப்படுகிறது.*

*30 ம் நாள் தொழுதவரைப் பார்த்து...* 
*அல்லாஹு த ஆலா, அடியானே! சொர்க்கக் கனியைச்*
 *சாப்பிடுவாயாக! ஹவ்துல் கவ்தர் நீரை அருந்துவாயாக! 
நீயே என் அடிமை, நான் உனது ரப்பு எனச் சோபனம் கூறுகிறான்.*
*அறிவிப்பாளர் :*
*ஹள்ரத் அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்.*
*ஆதாரம் :*
*தன்பீஹுல் காபிலீன்.*

0 comments:

Post a Comment