Friday, July 26, 2013

அருள் நிறை லைலத்துல் கத்ர் இரவில் அனைவரும் ஆற்ற வேண்டிய அமல்கள்!!!





அருள் நிறை லைலத்துல் கத்ர் இரவில்

அனைவரும் ஆற்ற வேண்டிய அமல்கள்

லைலத்துல் கத்ர் இரவு வணக்கம் பற்றி!!!

அண்ணலார் (ஸல்அவர்கள் யார் நன்னம்பிக்கையுடனும்,
தூய நிய்யத்துடனும், ''லைலத்துல் கத்ர்'' எனும் இரவில்
விழித்திருந்து இறை வணக்கத்திலே கழிக்கிறாரோ அவரின்
சென்று போன பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.

(1)ரக்கஅத் 4; அல்ஹம்து 1 முறைஅல்ஹாக்கு
முத்தகாதுரு 1 முறைகுல்ஹுவல்லாஹு 3 முறை
ஓதி தொழ வேண்டும்
இதன் பலன்மரண வேதனை இலேசாக்கப்படும்,
மண்ணரை வேதனை குறைக்கப்படும்.

(2) ரக்கஅத் 4; அல்ஹம்து 1 முறை இன்னா அன்ஜல்னா
முறை குல்ஹுவல்லாஹு 27 முறை ஓதி தொழ
 வேண்டும் இதன் பலன் அன்று பிறந்த பாலகனைப்
 போன்று பாவ மற்றவராகிறார்

(3) ரக்கஅத் 4; அல்ஹம்து 1 முறை இன்னா அன்ஜல்னா
முறை குல்ஹுவல்லாஹு 50 முறை ஓதி தொழ வேண்டும்.
இத் தொழுகை முடிந்தவுடன் ஸஜ்தாவில் 3-ம் கலிமா 
ஒரு முறை ஓதிய பின் துஆ கேட்டால் துஆக்கள் 
ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

(4) இரண்டு இரண்டாக  12 ரக்கஅத்துக்கள் அல்ஹம்து 1 முறை 
இன்னா அன்ஜல்னா 3 முறைகுல்ஹுவல்லாஹு 10 முறை
ஓதி தொழ வேண்டும்.

(5) ரக்கஅத் 2 அல்ஹம்து 1 முறை குல்ஹுவல்லாஹு 
முறைதொழுகை முடிந்த பின் அஸ்தஃபிருல்லாஹ 
வஅத்தூபு இலைஹி 70 முறை ஓத வேண்டும்.

(6) ரக்கஅத் 2 அல்ஹம்து 1 முறை,இன்னா அன்ஜல்னா
முறை குல்ஹுவல்லாஹு 3 முறை ஓதி தொழ வேண்டும்.
இவ்விரவின் நன்மை கிட்டுவதுடன் நோன்புகள் 
ஒப்புக் கொள்ளப்படுகின்றன.

(7) லைலத்துல் கத்ர் இரவின் தொழுகையில் குறைந்தது
நடுநிலை 100, அதிகம் 1000 ரக்கஅத்துக்கள் தொழவேண்டும்.

(8) தஸ்பீஹ் நபில் தொழுகை ரக்கஅத் 4 இதற்கு
அபரிமிதமான நன்மைகள் உண்டு.

(9) இஷா தொழுகைக்குப்பின் இன்னா அன்ஜல்னா 
சூராவை 7 முறை ஓதினால் அல்லாஹ் அவனை
அனைத்துச் சோதனைகளை விட்டும் காப்பாற்றுகிறான்
அவனுக்காக 70,000 மலக்குகள் துஆச்செய்கிறார்கள்.

உறங்காது தொழுவோம் உயர்வை பெறுவோம்,
நாயனை தொழுவோம்நன்மை பெறுவோம்.

தொகுத்து வழங்கியவர்கள் ;-

அல்ஹாஜ் மௌலானா மௌலவி மர்ஹும்
 S.A.முஹம்மது ஸலாஹுத்தீன் ஆலிம் 
ஃபாஜில் மன்பஈ,ஹஜ்ரத் அவர்கள்.

வெளியீடு
மதரஸா மதாரிஸுல் அரபிய்யாவாழூர்.

Wednesday, July 17, 2013

தமிழ்நாடு அரசு இராமநாதபுர மாவட்ட காஜியின் அறிவிப்பு!!!


   


தமிழ்நாடு அரசு இராமநாதபுர மாவட்ட காஜியின் அறிவிப்பு!!!

ஷரீஅத் அறிவிப்பு.

அன்புடையீர்!

                அஸ்ஸலாமு அலைக்கும்  (வரஹ்)

ஹிஜ்ரி 1434- ஸஃபான்  பிறை 29, (09-07-2013) ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று மாலை ரமலான் பிறை தென்படாததினால் ஆங்கில மாதம் (11-07-2013) ஆம் தேதி வியாழக்கிழமை ரமழான் மாத முதல் பிறை என்று ஷரீஅத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.  எனவே  எதிர் வரும் (05-08-2013) ஆம் தேதி திங்கட் கிழமை பின்னேரம் செவ்வாய்க் கிழமை இரவு லைலத்துல் கத்ரு இரவாக கொண்டாடப்படும் என்பதை, கீழக்கரை அரூஸிய்யா அரபுக் கல்லூரி முதல்வரும், தமிழ்நாடு அரசு இராமநாதபுர மாவட்ட காஜி மௌலானா மௌலவி அல்ஹாஜ் V.V.A. ஸலாஹுத்தீன் ஆலிம் ஜமாலி ஃபாஜில் உமரி அவர்கள் (10-07-2013) -அன்று தெரிவித்தார்கள். 

ஸதக்கத்துல் ஃபித்ரு

ஷாஃபி மத்ஹபின்படி நடுத்தரமான அரிசி 2.400 கிலோகிராம்.
ஹனஃபி மத்ஹபின்படி நடுத்தரமான கோதுமை 1.600 கிலோகிராம் அல்லது அதன் கிரயமாக ரூ.50/-- ரூபாய் ஐம்பது மட்டும் கொடுக்கவேண்டும்.

வஸ்ஸலாம்...


வெளியீடு -- மன்பஈ ஆலிம்.காம்

சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

புனிதம் நிறைந்த ரமலான் மாதம்

              

புனிதம் நிறைந்த ரமலான் மாதம்

   பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம்

  அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அல்லாஹ்வின் நல் அடியார்களே! சங்கையான,புனிதம் நிறைந்த மாதத்தை நாம் அடைந்திருக்கிறோம். அல்ஹம்து லில்லாஹ். இம் மாதத்தில் நாம் அதிகமான நல் அமல்கள் செய்ய வேண்டும்.1-இமாம் ஜமாஅத்துடன் ஐங்காலத் தொழுகைகளை, தக்பீர் தஹ்ரீமாவுடன் தொழ வேண்டும். 2- குர்ஆன் ஷரீஃப் அதிகமாக ஓத வேண்டும். 3- 20-ரகஅத்துகள் முழுமையாக தராவீஹ் தொழுகையை நிறைவேற்ற வேண்டும். 4- இந்த வருடத்தின் ரமலான் மாதத்தின் ஃபர்ளான நோன்பை நாளை பிடிக்க நிய்யத்து செய்கிறேன், என்று நிய்யத் வைத்து நோன்பு வைக்க வேண்டும். 5- தொலைக்காட்சி அறவே பார்க்கக்கூடாது. 6- பரக்கத்தான ஸஹர் உணவை சாப்பிட்டு நோன்பு வைக்க வேண்டும். 7-அல்லாஹ்விடத்தில் துஆச் செய்த பிறகே நோன்பு திறக்க வேண்டும். 8-ஷரீஅத் முறைப்படி எந்தெந்த பொருட்களுக்கு ஜகாத் கொடுக்க வேண்டுமோ அத்தகய பொருட்களை  கணக்கிட்டு தனது குடும்பத்தில் உள்ள ஏழை எளியவர்கள், அல்லது தனது ஊரில் உள்ள ஏழை எளியவர்களுக்கு ஜக்காத்து கொடுக்க வேண்டும். 9- இப் புனிதம் நிறைந்த மாதத்தின் கடைசிப் பத்து நாட்கள்,  ஆண்கள் பள்ளி வாசல்களிலும், பெண்கள் வீடுகளிலும், இஃதிகாஃப் இருக்க வேண்டும்.10- ரமலான் பிறை 27 லைலத்துல் கத்ரு இரவில் விழித்து ஸுப்ஹு வரை நல் அமல்கள் அதிகமாக செய்ய வேண்டும். அல்ஹம்து லில்லாஹ் குறைந்த பட்சம் மேல் கூறப்பட்டுள்ள அமல்களை பரிபூரணமாக, உலக முஸ்லிம்கள் அனைவர்களும் நிறைவேற்றி, புனிதம் நிறைந்த ரமலானின் முழுமையான, நன்மைகளை, உலக முஸ்லிம்கள் அனைவர்களும் பெறுவதற்கு, எல்லாம் வல்ல அல்லாஹ் பெருங்கிருபை  செய்வானாக என்றும், உலக முஸ்லிம்கள் அனைவர்களுக்கும் ரமலான் முபாரக் என்ற நல் வாழ்த்தினைக்கூறியும், சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினரும், சுன்னத் ஜமாஅத்  பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினரும் வாழ்த்தி, அகமகிழ்ந்து துஆச் செய்கிறார்கள்.  
   குறிப்பு ;- புனித ரமலான் பற்றி தெளிவான விளக்கத்திற்கு www.jamalinet.com மற்றும்
www.tmislam.com ஆகிய இணையதளத்தை பார்த்து பரிபூரண விளக்கம் பெறவும்
வஸ்ஸலாம்..

வெளியீடு -- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.