Friday, March 28, 2014

Don't upset துன்பம் கண்டு துவண்டு விடாதீர்!

மரணமும் இரணமும் தேடி வரும்
எங்கிருந்தாலும் இறைவனின் விதி அடைந்தே தீரும்
துன்பம் கண்டு துவண்டு விடவேண்டாம்
ஜும்ஆ உரை (28-03-2014)

Wednesday, March 26, 2014

நமது நாயகம் நாகூர் அல் குத்துபுல் மஜீத் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் ( ரலி) அவர்களின் புனித வரலாறு

நாகூர் ஷரீஃப் ஷுஃபி முச்சுடர்கள் பாடிய பாடல் THE NAGOR SAINTS

நமது நாயகம்  நாகூர் அல் குத்துபுல் மஜீத் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் ( ரலி) அவர்கள் மீது நாகூர் ஷுஃபி முச்சுடர்கள் பாடிய பாடல் 

NAGOR SESSIONS - THE SAINT

நாகூர் ஷரீஃப் ஷுஃபி முச்சுடர்கள் பாடிய பாடல் THE NAGOR SAINTS

நாகூர் அல் குத்துபுல் மஜீத் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் ( ரலி) அவர்களின் சிறப்பு வாய்ந்த மௌலிது ஷரீஃப்

முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! வமுஸல்லிமா!!

வரலாற்று சிறப்பு மிக்க மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவில் பாரம்பரியமாக தொண்டு தொட்டு நடைபெற்று வரும் நாகூர் அல் குத்துபுல் மஜீத் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் ( ரலி) அவர்களின் சிறப்பு வாய்ந்த மௌலிது ஷரீஃப் இவ்வாண்டு,இன்ஷா அல்லாஹ் 1 -04-2014 திங்கட்கிழமை மாலை செவ்வாய் இரவு ( ஜமாதுல் ஆகிர் பிறை 1- 1435 ) மிக விமர்சையாக ஆரம்பமாக இருக்கிறது என்பதை, மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.அல்ஹம்துலில்லாஹ்.தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் மௌலிது ஷரீஃப்  -10-4-2014 (ஜமாதுல் ஆகிர் பிறை 10-1435 ) வியாழக்கிழமையோடு நிறைவு பெறும்.ஒவ்வொரு நாளும் அஸர் தொழுகைக்குப் பின் மௌலிது ஷரீபும், மஃரிப் தொழுகைக்குப்பின் சிறப்பு வாய்ந்த துஆ மஜ்லிஸும்,மஸ்ஜித் இந்தியாவின் கண்ணியமிகு இமாம்,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா.எஸ்.எஸ்.அஹ்மது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத் கிப்லா,அவர்களின் சீரிய தலைமையில் நடைபெறும்.மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த மஜ்லிஸில் அனைவரும் தவறாது கலந்து கொண்டு,அல்லாஹ்வின் அளப்பெரும்,அன்பையும்,அருளையும்,
பெற்றுக்கொள்ளுங்கள்.வஸ்ஸலாம்

வெளியீடு

மன்பயீ ஆலிம்.காம்

சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

நமது நாயகம் நாகூர் குத்துபு ஷாஹுல் ஹமீது வலி அவர்கள் மீது கீழக்கரை மாதிஹுர் ரஸூல் இமாம் ஷைகு ஸதக்கத்துல்லாஹ் அப்பா அவர்கள் புகழ்ந்து பாடிய பைத்து

                                               யாஸய்யிதீ ஷைகீ பைத்து

இது  நமது நாயகம் நாகூர் குத்துபு  ஷாஹுல் ஹமீது  வலி அவர்கள் மீது கீழக்கரை மாதிஹுர் ரஸூல் இமாம் ஷைகு ஸதக்கத்துல்லாஹ் அப்பா அவர்கள் புகழ்ந்து பாடிய பைத்து

  1. என்தலைவரே! என்குருநாதரே! தலைவர்களுக்கெல்லாம்  தலைவரே! கல்விகளின் புதையலே!அற்புத ஞானக் கலையின் சின்னமே!
  2. சர்வ வல்லமையும், சிறப்பும் வாய்ந்த இறைவனின் திருப்திக்குள்ளானவரே! தலைவர்களுக் கெல்லாம் தலைவரே! அப்துல் காதிரே!
  3. கைசேதப்படுபவர்களுக்கும்,கலங்கிய உள்ளம் உடையவர்களுக்கும்,பாதுகாப்பளிக்கும் அடைக்கலமே! தங்களை நாடி வருபவர்களின் நாட்டத்திற்குப் பிணையேற்று,உடலாலும்,பொருளாலும்,பலஹீன மடைந்தவர்களுக்கு ஒதுங்கும் பீடமே!!
  4. சமுத்திரத்தில் வழி தவறிச் சென்றவர்களுக்கு உதவி புரியும் ரட்சகரே! தலைவர்களுக்கெல்லாம் தலைவரான அப்துல் காதிரே!
  5. தங்களிடமிருந்து எத்தனையோ அற்புதங்கள் பார்ப்பவர்களுக்குத் தென்பட்டன.தங்கள் சமூகத்தில் நடைமுறைக்கு நேரடியாக வழமைக்கு மாற்றமான புதுமைகள் எத்தனையோ வெளிப்பட்டன.
  6. செழிப்பான முகத்தில் சம்பூரண இன்பங்கள் எல்லாம் தங்களுக்கென்றே நிறைவாய் அமைந்துள்ளன என் தலைவரே! குருநாதரே! அப்துல் காதிரே!
  7. சர்வ சக்திகளுமுடைய இறைவனின் திருத் தூதர் (ஸல்) அவர்களின் சந்ததியில் முஹ்யித்தீன் அப்துல் காதிர் அவர்களின் வழித் தோன்றலில் உதித்தவர்கள்.
  8. குருநாதர்களுக் கெல்லாம் உதவி புரிபவர்,பரிபூரணச் சந்திரனின்  ஜோதி, தூய்மை நிறைந்தவரே! அப்துல் காதிரே!
  9. பரிசுத்த உள்ளத்தோடும் தூயசிந்தை கொண்டும் அனைத்தையும் படைத்து அருளுதவி புரியும் இறைவன் பாதையில் தண்டித்தீர்கள்.
  10. மேலும் சிறந்த அமல்களைக் கைக்கொண்டும்,வடித்த கண்ணீர் துளிகளைக் கொண்டும் தண்டித்தீர்கள்.ஒ! இறைநெருக்கத்தைத் தரும் வணக்கங்களைத் தேர்ந்தெடுத்தவரே! அப்துல் காதிரே!
  11. இன்னும் திருமணம் செய்யாமலும் இறையச்சத்தாலும் உலகாசையை இதயத்தால் வெறுக்கும் பற்றற்ற தன்மையாலும் (இறைவழியில் தண்டித்தீர்கள்)
  12. இன்னும் அதிக ஆவலுடன் இறைவனை நேசித்தீர்கள்,உயர்ந்த அந்தஸ்துகளை அடையப் பெற்ற அப்துல் காதிரே!
  13.  தங்களின் சந்நிதானத்தில் எத்தனையோ கண்ணியமிகுந்த மார்க்கஅறிஞர்கள், சிறப்புக்குரியவர்கள்,பெரியோர்கள்,வர்த்தகர்கள் யாவரும் வந்து தரிசிக்கின்றனர்.
  14. கிறிஸ்துவர்கள் இன்னும் நஷ்டமடைந்த பிராமணர்கள் உள்பட ( எத்தனையோ பேர்கள் வருகின்றனர் ) நோய்கள் கஷ்டங்களை நீக்கக்கூடிய அப்துல் காதிரே!
  15. நாகூர் வாழும் எஜமானே! தாங்கள் என் பார்வை தெளிவடையவும்,என் உறுப்புகள்,காதுகள் விஷயத்தில் எனக்கு உதவியாக இருங்கள்.
  16. இன்னும் என் வாழ்வு குறைவின்றி நீடித்த ஆயுளுக்கும், ( உதவியாக இருங்கள் ) பெரும் நன்மையான காரியங்களை ஒன்று திரட்டிய அப்துல் காதிரே!
  17. இம்மை மறுமையின் நெருக்கடிகள் என்னைத் தாக்காமல் பெருமையாளனின்,( அல்லாஹ்வின் ) பெருமித நாளில் ( மஹ்ஷரில் ) எனக்கு ஒதுங்கும் தலமாக ஆகுங்கள்.
  18. உயர்ந்த அந்தஸ்துகளைப் பெற்ற நீங்கள் எனக்கு மறுமைநாளில் தங்கரிய சொத்தாக ஆகிவிடுங்கள் அப்துல் காதிரே!
  19. தங்கரியம் செய்ய நினைப்பவருக்கு எவர்களை நினைவுகூர்வது சொத்தாக அமையுமோ அப்படிப்பட்ட பரிசுத்த நபியின் மீதும்,அவர்களது குடும்பத்தார் மீதும் அளவற்ற அருளாளனான அல்லாஹ் ஸலவாத் எனும் கருணையைப் பொழிந்தருள் வானாக!
  20. இன்னும் அன்னாரின் தோழர்கள் மீதும் மதிப்பிற்குரிய அவர்களைப் பின்பற்றியவர்கள் மீதும்,மஹானே!அப்துல் காதிரே! நாயகமே! தங்கள் மீதும் இறைவன் கருணைபுரிவானாக! ஆமீன்!

வெளியீடு

மன்பயீ ஆலிம்.காம்

சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

இறைநேசச் செல்வர் மஹாராஜா டத்தோ ஷைகு அப்துல் ஜலீல் (ரலி) அவர்களின் வருடாந்திர கந்தூரிப் பெருவிழா

இச்சிறப்பு மிகு மாபெரும் பெருவிழா  மென்மேலும் சிறக்க,
சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் 
இணையதளத்தினர் அகமகிழ்ந்து வாழ்த்திதுஆச் செய்கிறார்கள். வஸ்ஸலாம்..

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

Saturday, March 22, 2014

WE PRAY CONTINUOUSLY தொடர்ந்து பிரார்த்திப்போம்

21 -03 -2014  வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயான்.
 தலைப்பு ;- மாயமான மலேசிய விமானம்: பல நாட்களாகியும் மர்மமாகவே உள்ளது. மக்கள் சடைந்துவிட வேண்டாம்-

 குத்பா பேருரை ;- மவ்லானா அல்ஹாஜ் எஸ்.எஸ்.அஹ்மது பாகவி,
தலைமை இமாம், மஸ்ஜித் இந்தியா,
கோலாலம்பூர், மலேசியா.

Friday, March 21, 2014

இலங்கை கடற்கரைப் பள்ளி நாகூர் ஆண்டகை தர்ஹாவில் மாபெரும் மீலாத் பெருவிழா !

இச்சிறப்பு மிகு மாபெரும் மாநாடு மென்மேலும் சிறக்க, சித்தார் கோட்டை 
அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணையதளத்தினர் அகமகிழ்ந்து 
வாழ்த்தி துஆச் செய்கிறார்கள். வஸ்ஸலாம்..

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

உஸ்மானிகள் பேரவை மற்றும் மஸ்ஜிதே முஹம்மதிய்யா & மதரஸா பள்ளிவாசல் இணைந்து நடத்தும் மாபெரும் ஷரீஅத் விளக்க மாநாடு !

இச்சிறப்பு மிகு மாபெரும் மாநாடு மென்மேலும் சிறக்க, சித்தார் கோட்டை 
அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணையதளத்தினர் அகமகிழ்ந்து 
வாழ்த்தி துஆச் செய்கிறார்கள். வஸ்ஸலாம்..

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

Wednesday, March 12, 2014

கப்ரு ஜியாரத் பற்றிய தெளிவான ஆதாரங்கள் !!!

♣ நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
கப்ருகளை ஸியாரத் செய்யுங்கள். ஏனெனில் நிச்சயமாக அது இவ்வுலகத்தில் பற்றற்ற நிலையை உண்டாக்கி மறுவுலக வாழ்வைப் பற்றிய நினைவையும் ஏற்படுத்த வல்லது.

இப்னு மாஜா - 1569, மிஷ்காத் - 154

♣ கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
உங்களை (முதலில்) கப்ருகளை ஸியாரத் செய்ய தடை செய்திருந்தேன். (தடை நீக்கப்பட்டது இனிமேல்) அவைகளை ஸியாரத் செய்யுங்கள்.

புரைதா ரலியல்லாஹு அன்ஹு
ஸஹிஹுல் முஸ்லிம், திர்மிதி, ஹாகிம், அபூதாவூத், இப்னு ஹிப்பான்.

♣ நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஒவ்வொரு ஆண்டின் ஆரம்பத்திலும் ஷுஹதாக்களின் கப்ருகளை ஸியாரத் செய்பவர்களாக இருந்தார்கள். மேலும் அபூபக்கர், உமர், உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹுமா) ஆகியோரும் அப்படியே செய்பவர்களாக இருந்தார்கள்.

தபரானி 3 - 241

♣ கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
என் தாயின் கப்ரை ஸியாரத் செய்ய என் இறைவனிடம் அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதியளித்துள்ளான். எனவே, நீங்களும், கப்ருகளை ஸியாரத் செய்யுங்கள். ஏனெனில், அது மரணத்தை நினைவுபடுத்தும்.

அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு
ஸஹிஹுல் முஸ்லிம், திர்மிதி, அபூதாவூது, நஸயீ.

♣ நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் தமது மனைவிமார்களில் ஆயிஷா நாயகி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் முறை வரும் பொழுதெல்லாம் நள்ளிரவின் கடைசிப் பகுதியில் (தஹஜ்ஜது நேரத்தில்) ஜன்னத்துல் பகீஉக்குச் சென்று ஸியாரத் செய்து அங்கு அடங்கியிருக்கக் கூடியவர்களுக்கு பிழை பொறுக்கத்தேடி விட்டு வரும் பழக்கத்தை கொண்டர்வர்களாக இருந்தார்கள்.

ஸஹிஹுல் முஸ்லிம் 1 - 313, மிஷ்காத் 154

♣ கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
எவர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் தனது பெற்றோர்களில் இருவரையோ அல்லது ஒருவரையோ ஸியாரத் செய்து வந்தால் அவரின் பாவங்கள் பொறுக்கப்படுவதுடன் நல்லவர் என்றும் எழுதப்படும்.

பைஹகி, மிஷ்காத் - 154

♣ நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் மதீனாவில் உள்ள கப்ருகளுக்கு அருகே சென்றார்கள். அப்பொழுது தங்களின் திரு முகத்தை கொண்டு கப்ருவாசிகளின் மீது முன்னோக்கி ஸலாம் கூறினார்கள்.

மிஷ்காத் 2 – 407

♣ நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் தனது தாயாரின் கப்ரை ஸியாரத்து செய்தார்கள். மேலும் அவ்விடத்திலே அழுதார்கள். அவர்களின் அழுகையை பார்த்து சூழ இருந்த ஸஹாபாக்கள் கண்ணீர் சொரிந்தார்கள்.

ஸஹிஹுல் முஸ்லிம், மிஷ்காத் - 154

♣ நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
எவராவது கப்ருஸ்தானக்களுக்கு சென்று சூரா யாசீன் ஓதினால் கப்ராளிகளை தொட்டும் வேதனை லேசாக்கப்படுகிறது. மேலும் ஓதியவருக்கு அந்த கப்ராளிகளின் எண்ணிக்கையளவு நன்மைகள் கிடைக்கின்றன.

அனஸ் ரலியல்லாஹு அன்ஹு
மிஷ்காத் 4 – 382

♣ ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் புனித ரவ்லா ஷரீஃப் சென்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களையும், அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களையும் பர்தா அணியாமலேயே ஸியாரத் செய்பவர்களாக இருந்தார்கள். பின்னர் உமர் ரலியல்லாஹு அன்ஹு அதில் அடக்கம் செய்யப்பட்டபோது பர்தா அணிந்து ஸியாரத்து செய்பவர்களாக இருந்தார்கள்.

மிஷ்காத் – 154

♣ அன்னை பாத்திமா நாயகி ரலியல்லாஹு அன்ஹா ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் ஹம்ஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்களை ஸியாரத் செய்து வந்ததார்கள்.

முஸ்னத் அப்துர் ரஸ்ஸாக் 3-572, முஸ்தத்ரக் 1-377

♣ மக்காவில் அடங்கப்பட்டிருக்கும் அப்துர் ரஹ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அன்னவர்கள் மக்காவுக்கு சென்று ஜியாரத் செய்து வருபவர்களாக இருந்தார்கள்.

அபி முலைகா ரலியல்லாஹு அன்ஹு
மிஷ்காத் - 149, முஸ்னத் அப்துர் ரஸ்ஸாக் 3 - 5079 -

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

இஸ்லாமியப் பாடகர்,இராமநாதபுரம்,மௌலானா மௌலவி மர்ஹூம் எஸ்.எஸ்.அப்துல் வாஹித் ஆலிம் அவர்கள் பாடிய பாடல்கள்.

நல் வழி தந்தார்கள் சொன்னார்கள் வென்றார்கள் !

இஸ்லாமியப் பாடகர்,இராமநாதபுரம்,மௌலானா மௌலவி மர்ஹூம் எஸ்.எஸ்.அப்துல் வாஹித் ஆலிம் அவர்கள் பாடிய பாடல்.

)

அல்லாஹ்வின் அருள் ஜோதியே !

இஸ்லாமியப் பாடகர்,இராமநாதபுரம்,மௌலானா மௌலவி மர்ஹூம் எஸ்.எஸ்.அப்துல் வாஹித் ஆலிம் அவர்கள் பாடிய பாடல்.

)

இறையோனின் தூதே !

)

உங்கள் வாசல் வந்தோர் !

இஸ்லாமியப் பாடகர்,இராமநாதபுரம்,மௌலானா மௌலவி மர்ஹூம் எஸ்.எஸ்.அப்துல் வாஹித் ஆலிம் அவர்கள் பாடிய பாடல்.

)

உலக மக்கள் யாவரும் !

இஸ்லாமியப் பாடகர்,இராமநாதபுரம்,மௌலானா மௌலவி மர்ஹூம் எஸ்.எஸ்.அப்துல் வாஹித் ஆலிம் அவர்கள் பாடிய பாடல்.

)

விண்ணும் மண்ணும் படைத்த !

இஸ்லாமியப் பாடகர்,இராமநாதபுரம்,மௌலானா மௌலவி மர்ஹூம் எஸ்.எஸ்.அப்துல் வாஹித் ஆலிம் அவர்கள் பாடிய பாடல்.

)

சந்தனத் சுக தீபக் காற்றே !

இஸ்லாமியப் பாடகர்,இராமநாதபுரம்,மௌலானா மௌலவி மர்ஹூம் எஸ்.எஸ்.அப்துல் வாஹித் ஆலிம் அவர்கள் பாடிய பாடல்.

)

வான் புவி ஆளும் ! ( KARNATIC SONG )

இஸ்லாமியப் பாடகர்,இராமநாதபுரம்,மௌலானா மௌலவி மர்ஹூம் எஸ்.எஸ்.அப்துல் வாஹித் ஆலிம் அவர்கள் பாடிய பாடல்.

)

தாஹா ரஸூல் !

இஸ்லாமியப் பாடகர்,இராமநாதபுரம்,மௌலானா மௌலவி மர்ஹூம் எஸ்.எஸ்.அப்துல் வாஹித் ஆலிம் அவர்கள் பாடிய பாடல்.

)

ஆண்டவன் தூதுவன் !

இஸ்லாமியப் பாடகர்,இராமநாதபுரம்,மௌலானா மௌலவி மர்ஹூம் எஸ்.எஸ்.அப்துல் வாஹித் ஆலிம் அவர்கள் பாடிய பாடல்.

)

அரபிக் கடல் இக்கரையில் !

இஸ்லாமியப் பாடகர்,இராமநாதபுரம்,மௌலானா மௌலவி மர்ஹூம் எஸ்.எஸ்.அப்துல் வாஹித் ஆலிம் அவர்கள் பாடிய பாடல்.

)

யா நபி மஹ்மூதே !

இஸ்லாமியப் பாடகர்,இராமநாதபுரம்,மௌலானா மௌலவி மர்ஹூம் எஸ்.எஸ்.அப்துல் வாஹித் ஆலிம் அவர்கள் பாடிய பாடல்.

)

தியாகத் திருவிளக்கே!

இஸ்லாமியப் பாடகர்,இராமநாதபுரம்,மௌலானா மௌலவி மர்ஹூம் எஸ்.எஸ்.அப்துல் வாஹித் ஆலிம் அவர்கள் பாடிய பாடல்.

)

இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் !

இஸ்லாமியப் பாடகர்,இராமநாதபுரம்,மௌலானா மௌலவி மர்ஹூம் எஸ்.எஸ்.அப்துல் வாஹித் ஆலிம் அவர்கள் பாடிய பாடல்.

இஸ்லாத்தில் இரண்டு பிரிவுகளும் !

இஸ்லாமியப் பாடகர்,இராமநாதபுரம்,மௌலானா மௌலவி மர்ஹூம் எஸ்.எஸ்.அப்துல் வாஹித் ஆலிம் அவர்கள் பாடிய பாடல்.

)

ஏகனாக எங்கும் நிறைந்த இறையே !

இஸ்லாமியப் பாடகர்,இராமநாதபுரம்,மௌலானா மௌலவி மர்ஹூம் எஸ்.எஸ்.அப்துல் வாஹித் ஆலிம் அவர்கள் பாடிய பாடல்.

)

எங்கள் இறைவன் !

இஸ்லாமியப் பாடகர்,இராமநாதபுரம்,மௌலானா மௌலவி மர்ஹூம் எஸ்.எஸ்.அப்துல் வாஹித் ஆலிம் அவர்கள் பாடிய பாடல்.

)

யா நபி ஸலாம் அலைக்கும் !

இஸ்லாமியப் பாடகர்,இராமநாதபுரம்,மௌலானா மௌலவி மர்ஹூம் எஸ்.எஸ்.அப்துல் வாஹித் ஆலிம் அவர்கள் பாடிய பாடல்.

)