Friday, October 24, 2014

ஹிஜ்ரி சகாப்தம் 1436 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!


''நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்ததும் நிகழ்வுகளுக்கு தேதி குறிப்பிடும்படி உத்தரவிட்டார்கள்.நபியவர்கள் ரபீவுல் அவ்வல் மாதத்தில் மதீனா வந்தார்கள்.மக்கள் நபியின் மதீனா வருகையிலிருந்து தேதி குறித்தனர். முதன் முதலாக பதிவுகளில் தேதி குறித்தவர் யமனில் இருந்த யஃலா பின் உமைய்யா வாகும் '' (முஸ்தத்ரக் ஹாகிம் ; 479/3 முர்ஸலான அதாவது அறிவிப்பாளர் வரிசைத்தொடரில் நபித்தோழர் பெயர் கூறப்படாத -- ஹதீஸ் அறிவிப்பாளர் -- அம்ரு பின் தீனார்)

இஸ்லாத்தில் முதன் முதலாக (தபால் மற்றும் அரசு சார்ந்த -- சாராத பதிவுகளுக்கு) தேதி குறிக்க உத்தரவிட்டவர் கலீபா உமர் (ரலி) அவர்களாகும்.'' எனக்கூறப்படுகிறது. (தாரிகுத்தபரி 3/2)

பிரபலமான இந்தக்கூற்றுப்படி நாயகம் (ஸல்) அவர்கள் மறைந்து ஆறு வருடம் கழித்து ஹள்ரத் உமர் (ரலி) அவர்கள் ஆட்சிக்காலத்தில் (கி.பி.639) இஸ்லாமிய ஆண்டை ஆரம்பிக்க வேண்டிய அவசியம் உணரப்பட்டது.நிறைவான இஸ்லாமியச் சகாப்தம் மலருவதற்கு முன்பு,அரபிகள் தங்களது ஆண்டுகளைத் தங்கள் பொது வாழ்வில் நிகழ்ந்த முக்கிய நிகழ்ச்சியிலிருந்து கணக்கிட்டு வந்தார்கள். அனுமதி ஆண்டு, நில அசைவு ஆண்டு, யாணை ஆண்டு என பல ஆண்டுகளை நடைமுறையில் வைத்திருந்தனர்.

பின்னர் இரண்டாம் கலிபா உமர் (ரலி) அவர்கள் குறிப்பு ஒன்றை தயாரித்து அதில் ஷஃபான் மாதம் என்று குறிப்பிட்டார்கள்.இதனை பின்னர்தான் பார்ப்பின் எந்த ஆண்டின் ஷஃபான் மாதம் என்று விளங்குவது? என தனக்குத்தானே கேள்விக் கேட்டுக் கொண்டார்கள்.இந்த நிலையில், கலீபாவிடமிருந்து தங்களுக்கு தேதி குறிப்பிடாமல் கடிதங்கள் வருகிறது.என மாநில ஆளுனர்களிடமிருந்து முறையீடுகள் வந்தன.குறிப்பாக அபூ மூஸல் அஷ்அரி (ரலி) அவர்கள் தேதி குறிப்பிடாத தாங்களின் கடிதம் கிடைத்தது'' என நறுக்கென்று எழுதினார்கள்.இதனைத்தொடர்ந்து கலீபா அவர்களின் அவையில் ஆலோசனை நடைபெற்றது.இஸ்லாமிய ஆண்டை ஆரம்பிப்பது என முடிவானது.எதனை அடிப்டையாக வைப்பது என்பதில் பல்வேறு கருத்துக்கள் ஆராயப்பட்டது.

நபி(ஸல்) பிறந்தது,நபித்துவம் கிடைத்தது முதலிய பலதையும் பரிசீலிக்கப்பட்டு இறுதியாக நபி (ஸல்) அவர்கள் திரு மக்காவிலிருந்து திரு மதீனாவுக்கு புலம் பெயர்ந்து வந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஹிஜ்ரத்தை அடிப்படையாகக்கொண்டு இஸ்லாமிய ஆண்டை ஆரம்பிப்பது என ஏக மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.ஏனெனில் நபித்துவம் பிறப்பின் மூலம் தொடங்கினாலும், அது துலங்கியது ஹிஜ்ரத்தின் மூலமேயாகும்.நபித்துவம் தொடங்கியது மக்காவில். ஆனால் அது தொடர்ந்தது மதீனாவில். இறைத்தூது வெளிப்பட்டது மக்காவில். ஆனால் அது வெளிச்சத்தில் வந்ததும்,வளர்ச்சி பெற்றதும் மதீனாவில்தான்.

இந்த வகையில் இஸ்லாம் புத்துணர்ச்சியோடு புதுப்பொழிவு பெற்று,உலகமெல்லாம் பரவியதற்கு காரணம் ஹிஜ்ரத்.ஏகத்துவம் இந்த ஜெகமெங்கும் ஜொலிக்க காரணமான ஹிஜ்ரத், நபி (ஸல்) அவர்களின் சரித்திரத்தில் திருப்பு முனையாக அமைந்த அழகான அற்புதமான ஒரு நிகழ்வு.இஸ்லாத்தின் குரல் தரையில் கூட ஒலிக்க விடாமல் ஒடுக்கப்பட்டபோது,அது அகிலமெங்கும் ஜெட் வேகத்தில் பறந்து சென்று பரப்ப இறக்கை கட்டிக் கொடுத்தது ஹிஜ்ரத்தாகும்.

ஹிஜ்ரத்திற்கு முன்னர் சொற்பமாக இருந்த முஸ்லிம்கள்,ஹிஜ்ரத்திற்குப்பிறகு பல்கிப்பெருகினர். ஹிமுவில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் இருந்த முஸ்லிம்கள்,ஹிஜ்ரி 6-- ல் நபி (ஸல்) அவர்களோடு உம்ராவுக்கு வந்தவர்கள் 1400-- பேராகவும், ஹிஜ்ரி 8 -- ல் மக்கா வெற்றிக்கு வந்தவர்கள் 12,000 பேராகவும்,ஹிஜ்ரி 10--ல் நபியோடு இறுதி ஹஜ்ஜூ செய்த முஸ்லிம்கள் 1,24,000 மாகவும் உயர்ந்தார்கள்.

இந்த நபித்தோழர்கள் மூலம் உலகமெங்கும் இஸ்லாம் பரவி இன்று உலக மக்கள் தொகையில் 2.1 PILLIAN (210-- கோடி) முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் என்றால் இவ்வளவு பெரிய வெற்றிக்கு வித்திட்டது ஹிஜ்ரத் அல்லவா! அதனால் தான் இன்று உலகில் நடைமுறையில் உள்ள ஆண்டு அடிப்படையில் ஹிஜ்ரத்தைப்போல அழுத்தமான தாக்கத்தை தரக்கூடியது எதுவும்மில்லை என வரலாற்று ஆய்வாளர்கள் வியக்கின்றார்கள்.

ஹிஜ்ரத் என்பது அச்சமுள்ள குஃப்ரு (இறை மறுப்பு) ஸ்தானத்தை விட்டு புலம்பெயர்ந்து,அச்சமற்ற ஆதரவுள்ள தலத்திற்கு சென்று விடுவதற்குப்பெயர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நபித்துவத்தின் 13 -- வது ஆண்டு ரபீவுல் அவ்வல் மாதம் முதல் தேதி வியாழக்கிழமை மக்காவிலிருந்து ஹிஜ்ரத் புறப்பட்டார்கள்.ரபீவுல் அவ்வல் 12 --ஆம் நாள் (28 ஜூன் கி.பி.622) திங்கள் கிழமை லுஹர் நேரம்,தங்களது 53 --வது வயதில் மதீனா நகர் வந்துசேர்ந்தார்கள்.

ஸவ்ர் குகையிலிருந்து பெருமானார் (ஸல்) அவர்கள் புறப்பட்டதிலிருந்து 69--நாட்கள் முன்பாயிருந்த முஹர்ரம் மாதம் முதல் நாளே ஹிஜ்ரி ஆண்டின் தொடக்கமாகக் கொள்ளப்பட்டது.காரணம் ஹஜ்ஜு முடிந்து வாணிபம் தொடங்கப்பெறும் மாதமாக முஹர்ரம் இருந்தது.இதல்லாமல் முஹர்ரம் மாதம் பல்வேறு சிறப்புகளைப்பெற்று திகழ்கிறது.

(1) ஷஹ்ருல்லாஹ் அல்லாஹ்வுடைய மாதம் (2) ரமலானுக்குப்பிறகு நோன்பு பிடிக்க சிறந்த மாதம்.(நபிமொழி-- முஸ்லிம் 1163) (3) முஹர்ரமில் ஒரு நாள் நோன்பு பிடித்தால் ஒரு நாளுக்கு முப்பது நாள் (நன்மை) உண்டு (நபிமொழி -- தபரானி மஜ்மவுல் ஹைஸமி --190/3) (4) முஹர்ரமில் ஒரு சமூகத்தாருக்கு தௌபா (மன்னிப்பு) வழங்கினான்.மற்ற சமூகத்தாருக்கும் (கேட்டால்) இதில் தௌபா வழங்க இருக்கிறான். (திர்மிதி-- 741) (5) இதில் தான் கஃபாவின் திரைத்துணி மாற்றி புதியது அணிவிக்கப்படும். (தாரிகுத்தபரி -- 4/2)

ஹிஜ்ரத் என்பது இடம் பெயர்வது மட்டுமல்ல.ஷிர்க் (இறைவனுக்கு இணை வைப்பு) குஃப்ரு (இறை நிராகரிப்பு) ஃபிஸ்க் (பாவ காரியங்கள்) அனைத்தையும் விட்டு விலகி விடுவதுதான் உண்மையான ஹிஜ்ரத். '' அல்லாஹ் விலக்கிய அனைத்தையும் விட்டு விலகி விடுவதே ஹிஜ்ரத்'' என்ற (புகாரி --10) நபிமொழியை ஹிஜ்ரத் சிந்தனையாக உங்களின் உள்ளங்களில் விதைத்து எல்லா மக்களுக்கும் எனது இனிய மஅல் ஹிஜ்ரா புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.அல்லாஹ்வின் பேரருள் நம்மனைவர் மீதும் பொழியட்டுமாக! ஆமீன்!!
                      என்றும் தங்களன்புள்ள.
மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா 
எஸ்.எஸ்.அஹமது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்
( தலைமை இமாம்,மஸ்ஜித் இந்தியா,கோலாலம்பூர்,மலேசியா )

வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

ஜமாஅத்துல் உலமா சென்னை மாவட்டம். ஹிஜ்ரத் விளக்க பொதுக்கூட்டம் மற்றும் காஷ்மீர் மக்களுக்கான நிதியளித்தல்.


இடம்: மஸ்ஜிதே ஹக்கானி வடபழனி.
நாள்: 28: 10: 2014 காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை.

தலைமை:
மௌலானா அல்ஹாஜ் A.E.M.அப்துர் ரஹ்மான் ஹஜ்ரத் கிப்லா 
(தலைவர் தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை).
வரவேற்புரை : 
மௌலவி A.காஜா ஜமாலி
 (பொதுச்செயலாளர் ஜ.உ.ச சென்னை மாவட்டம்) .
தொடக்கவுரை: 
மௌலானா G.M தர்வேஷ் ரஷாதி 
(தலைவர் ஜ.உ.ச சென்னை மாவட்டம்).
சிறப்புரை: 
மௌலானா A.முஹம்மது ரிழா பாஜில் பாக்கவி 
(பொதுச்செயலாளர் தமிழ்நாடு ஜ.உ.ச),

மௌலானா இலியாஸ் ரியாஜி
(இமாம் மந்தவெளி சென்னை).

வாழ்த்துரை: 
மௌலானா அப்துல் அஹத் 
(தலைவர் ஜ.உ.ச காஞ்சிபுரம் மாவட்டம்),

நன்றியுரை: 
மௌலானா அபூதாஹிர் சிராஜி
(பொருளாளர் ஜ.உ.ச சென்னை மாவட்டம்).


குறிப்பு: இந்நிகழ்ச்சியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட காஷ்மீர் மக்களுக்கு வசூலிக்கப்பட்ட தொகையை உரியவரிடம் ஒப்படைக்கப்படும். 
நிதியை வழங்குபவர்;-
ஜமாஅத்துல் உலமா மாநில தலைவர் ஹஜ்ரத் கிப்லா.
நிதிைய பெற்றுக்கொள்பவர்;- 
Dr. ஜபருல் இஸ்லாம் கான் (ஆசிரியர் தி மில்லி கெஜட் ஆங்கில செய்தித்தாள்,தலைவர் மஜ்லிஸே முஷ்வரா).
அனைவரும் வருக!!!
அல்லாஹ்வின் அன்பையும்,அருளையும் பெறுக!!!

ஆஷுரா நோன்பின் சிறப்பு, ஆஷுரா நோன்பு உண்டானது எப்படி, ஆஷுரா நாளில் செய்ய வேண்டியவை பற்றிய பயான்.


சுன்னத் ஜமாஅத் பேரியக்கத்தின் தகுதி மிக்கத் தலைவர்,
மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அபுத்தலாயில்,
தாஜுல் உலூம்.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி ஹஜ்ரத் கிப்லா அவர்களின், ஆஷுரா நோன்பின் சிறப்பு, ஆஷுரா 
நோன்பு உண்டானது எப்படி, ஆஷுரா நாளில் 
செய்ய வேண்டியவை பற்றிய பயான்.


தூத்துக்குடி மாநகரத்தில் மாபெரும் இஸ்லாமிய பிறை விளக்கப் பொதுக்கூட்டம் !!!




சிறப்பு மிகு   இஸ்லாமிய பிறைவிளக்க மாநாடு 
மென்மேலும் சிறக்க, சித்தார் கோட்டை 
அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணையதளத்தினர் 
அகமகிழ்ந்து வாழ்த்தி துஆச்செய்கிறார்கள். வஸ்ஸலாம்..

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

இஜ்திமா -யே -அஹ்லே சுன்னத் வல் ஜமாஅத் ( வெற்றிகரமான 4 --ஆம் ஆண்டு மாநாடு அழைப்பு )



சிறப்பு மிகு  ஸுன்னத் வல் ஜமாஅத்தின் மாபெரும் கொள்கை 
விளக்க மாநாடு மென்மேலும் சிறக்க, சித்தார் கோட்டை 
அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணையதளத்தினர் 
அகமகிழ்ந்து வாழ்த்தி துஆச்செய்கிறார்கள். வஸ்ஸலாம்..

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

Thursday, October 23, 2014

( தஃப்ஸீர் سورة طه ) சூரத்துத் தாஹா மூன்றாவது வசனம்

  
18-10-2014  சனிக்கிழமை ( தஃப்ஸீர் ) குர்ஆன் விரிவுரை. 

 தலைப்பு ;- ( தஃப்ஸீர் سورة طه ) சூரத்துத் தாஹா மூன்றாவது வசனம் 
சிறப்புப்பேருரை ;- 
selayang மதரஸா, இமாம் கஜ்ஜாலியின் தலைமை இமாம்,,மௌலானா மௌலவி,அல்ஹாஃபிழ், ஸதக்கத்துல்லாஹ் ஆலிம் மஸ்லஹி ஃபாஜில் தேவ்பந்தி ஹஜ்ரத் அவர்கள்.

வேண்டாமே வீண்விரயம் !!!!


17-10-2014 வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பா பேருரை ;- 

தலைப்பு ;- வேண்டாமே வீண்விரயம் !!!! 

மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,
எஸ்.முஹம்மது நூருல் அமீன் மிஸ்பாஹி ஹஜ்ரத்
துணை இமாம், மஸ்ஜித் இந்தியா,
கோலாலம்பூர், மலேசியா.

17-10-2014 வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயான்.


17-10-2014 வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயான்.

மௌலானா மௌலவி அல்ஹாஜ் 
எஸ்.எஸ்.அஹ்மது பாக்கவி,ஹஜ்ரத்.
தலைமை இமாம், மஸ்ஜித் இந்தியா,
கோலாலம்பூர் , மலேசியா.

Tuesday, October 14, 2014

இலங்கையில் ஸுன்னத் வல் ஜமாஅத்தின் மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் !!!!

     
   



சிறப்பு மிகு  ஸுன்னத் வல் ஜமாஅத்தின் மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்  மென்மேலும் சிறக்க, சித்தார் கோட்டை 
அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணையதளத்தினர் 
அகமகிழ்ந்து வாழ்த்தி துஆச்செய்கிறார்கள். வஸ்ஸலாம்..

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

இலங்கை,காத்தான்குடியில் ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாக்களின் மாநாடு !!!


சிறப்பு மிகு  இலங்கை,காத்தான்குடி ஸுன்னத் வல் ஜமாஅத் 
உலமாக்களின் மாநாடு மென்மேலும் சிறக்க, சித்தார் கோட்டை 
அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணையதளத்தினர் 
அகமகிழ்ந்து வாழ்த்தி துஆச்செய்கிறார்கள். வஸ்ஸலாம்..

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

Monday, October 13, 2014

மதரஸா இமாம் கஜ்ஜாலி ( ரஹ் ) தஃப்ஸீர் வகுப்பு

selayang மதரஸா, இமாம் கஜ்ஜாலியின்
11 -10 -2014  சனிக்கிழமை 
( தஃப்ஸீர்  سورة طه ) திருக்குர்ஆன்   விரிவுரை. 

திருக்குர்ஆன் விரிவுரையாளர் ;-

மௌலானா மௌலவி அல்ஹாஜ் 
எஸ்.எஸ்.அஹ்மது பாக்கவி,ஹஜ்ரத்.
தலைமை இமாம், மஸ்ஜித் இந்தியா,
கோலாலம்பூர் , மலேசியா.

Friday, October 10, 2014

ஹாஜிகளிடம் நாம் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும்? ஹாஜிகள் இனிமேல் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும்?


10-10-2014 வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பா பேருரை ;-
தலைப்பு ;-  ஹாஜிகளிடம் நாம் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும்? 

குத்பா பேருரை ;- 
மௌலானா மௌலவி அல்ஹாஜ் அல்லாமா
எஸ்.எஸ்.அஹ்மது பாக்கவி,ஹஜ்ரத்.கிப்லா அவர்கள்
தலைமை இமாம், மஸ்ஜித் இந்தியா,கோலாலம்பூர் , மலேசியா.

பாசிப்பட்டினம் முஹ்யித்தீன் ஜும்ஆப் பள்ளிவாசல் புதிய கட்டட திறப்பு விழா அழைப்பிதழ்







சிறப்பு மிகு  பாசிப்பட்டினம் முஹ்யித்தீன் ஜும்ஆப் பள்ளிவாசல் புதிய கட்டட திறப்பு விழா,மென்மேலும் சிறக்க, 
சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் 
இணையதளத்தினர் அகமகிழ்ந்து 
வாழ்த்தி துஆச்செய்கிறார்கள். வஸ்ஸலாம்..

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

Sunday, October 5, 2014

பெருநாட்களில் தக்பீர் சொல்வது ஏன்?



05-10-2014 ஞாயிற்றுக்கிழமை 
ஹஜ்ஜுப் பெருநாள்  சிறப்புப்பேருரை 

.தலைப்பு ;-  பெருநாட்களில் தக்பீர் சொல்வது ஏன்?
மௌலானா மௌலவி அல்ஹாஜ் 
எஸ்.எஸ்.அஹ்மது பாக்கவி,ஹஜ்ரத்.
தலைமை இமாம், மஸ்ஜித் இந்தியா,
கோலாலம்பூர் , மலேசியா.

தியாகத் திருநாள் குத்பா பேருரை


05-10-2014 ஞாயிற்றுக்கிழமை 
ஹஜ்ஜுப் பெருநாள் குத்பா.பேருரை.

மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,
எஸ்.முஹம்மது நூருல் அமீன் மிஸ்பாஹி ஹஜ்ரத்
துணை இமாம், மஸ்ஜித் இந்தியா,
கோலாலம்பூர், மலேசியா.

Saturday, October 4, 2014

புனிதம் வாய்ந்த தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள்.!!!

குர்பானி கொடுப்பதால்
இறைக் கடமை நிறை வேறுகிறது.
மன நிம்மதி நிறைகிறது.
உறவுகள் ஒன்று கூடுகிறது.
ஏழைகள் பசியாறுகிறார்கள்.
பள்ளி, மத்ரஸாக்கள் பயனடைகிறது.
இறையருல் இறங்குகிறது.
தியாக உணர்வு உயர்கிறது.
ஜீவ காரூண்யம் நிலைநாட்டப்படுகிறது.
கூட்டுறவு மேம்படுகிறது.
வறியவர்கள் வளம் பெறுகிறார்கள்.
அனாதைகள் பலம் பெறுகிறார்கள்.
முதிர் கன்னிகள் கல்யாணமாலை சூடுகிறார்கள்.

ஆகவே அத்தகைய உயர் தியாகத்தை நாம் அனைவரும் நிறை வேற்றி அல்லாஹ்வின் அளப்பெரும் அன்பையும்,அருளையும்,பெற்றுக் கொள்ளுமாறும்,மேலும் அனைத்து நல் உள்ளங்களுக்கும்,
சித்தார்கோட்டை அஹ்லுஸ்சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினர், மற்றும் சுன்னத் வல் ஜமாஅத்  பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்களும்,தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்களை கூறி,அகமகிழ்ந்து துஆச் செய்கிறார்கள். வஸ்ஸலாம்.....

www.sunnath jamath valoor blogspot.com.