Friday, September 22, 2017

வாழூர் மர்ஹூம் ஹாஜி அப்துர் ரஹ்மான் அவர்களின் மகனார் ஷாஹுல் ஹமீது அவர்கள் மறைவு !!!


வாழூர் மர்ஹூம் ஹாஜி அப்துர் ரஹ்மான் அவர்களின் 
மகனும்,ஜாஹிர் அலி மாமனாருமான ஷாஹுல் ஹமீது 
அவர்கள் 22-09-2017 இன்று அதிகாலை தாருல் ஃபனாவை 
விட்டும் தாருல் பகாவை அடைந்துவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

 அன்னாரின் நல்லடக்கம் இன்று காலை 10-00 மணியளவில் 
வாழூர் கப்ருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் 
நல்லறங்களை, ஏற்றுக் கொண்டு, குற்றங்களை 
மன்னித்து தன்னுடைய 'ஜ‌ன்ன‌த்துல் பிர்தௌஸ்' எனும் 
சுவனபதியில் நுழைய வைப்பானாக 
என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் 
குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் 
அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய 
பொறுமையை தந்தருளவும்,சுன்னத் ஜமாஅத் 
பேரியக்க சித்தார் கோட்டை கிளையினர் துஆச் 
செய்கிறார்கள். ஆமீன் ஆமீன்.

வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க 
வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்கள்.

Wednesday, September 20, 2017

அழகன்குளம் அஷ்ஷைகு வருசை முஹம்மது வலியுல்லாஹ் !!!




அழகன்குளம் அடையப்பெற்ற ஆன்மீகச் சுடர்
அஷ்ஷைகு வருசை முஹம்மது வலியுல்லாஹ் (ரஹ்)

இவர்களின் 248 வது நினைவு நாள் விழா 16.09.2017 அன்று அஸருக்குப் பின் கொடியேற்றப்பட்டு அன்று மஃரிபிற்குப் பின் அவர்களின் மவ்லீது ஷரீப் ஆரம்பமானது. 25.09.2017 வரை மவ்லீது நடைபெறும். 2.10.2017 முஹர்ரம் பிறை 11 அஸர் தொழுகைக்குப் பின் கொடி இறக்கம் நடைபெறும்.

இவர்களும் பனைக்குளம் ஜும்ஆ மஸ்ஜிதில் கிழக்குப் பக்கம் அடங்கப் பெற்றுள்ள அஷ்ஷைகு ஆலியார் ஷைகு அப்பா (ரஹ்) அவர்களும் சமகாலத்தில் வாழ்ந்தவர்கள்.

இவர்களைப் பற்றிய சிறப்பு மவ்லீது கீழக்கரை ஞானக்கடல் அல்லாமா மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களால் எழுதப்பட்டுள்ளது. அந்த மவ்லீது ஷரீபையே நினைவு நாளில் ஓதப்படுகிறது.

அல்லாஹ் இத்தகைய சங்கைமிகு ஞானவான்களின் துஆ பரக்கத்தால் நமது இம்மை மறுமை வாழ்வை சிறப்பாக்கித் தருவானாக ஆமீன்.

நன்றி ;-பனைக்குளம் மதனீ ஆலிம்.

வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க 
வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்கள் 

Sunday, September 10, 2017

சுன்னத் ஜமாஅத் மாணவரமைப்பு ( SSF ) சார்பாக இரண்டு நாள் நடைபெற்ற மாபெரும் மாணவ பிரதிநிதிகள் மாநாடு !!!

சுன்னத் ஜமாஅத் மாணவரமைப்பு ( SSF ) சார்பாக 
கீழக்கரையில் தமிழகம் தழுவிய இரண்டு நாள் 
மாபெரும் மாணவ பிரதிநிதிகள் மாநாடு
(-STUDENTS DELEGATES CONFERENCE -) 
மிகச்சிறப்பாக நடைபெற்றது 
அல்ஹம்துலில்லாஹ்.







வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்கள் 

சித்தாரிய்யா அரபுக் கல்லூரி நிறுவனர் மௌலானா I.செய்யது முகம்மது புகாரி ஆலிம் புனித ஹஜ்ஜை நிறை வேற்றி, தாயகம் திரும்பினார்கள் !!!

முதஅவ்விதன்! முபஸ்மிலன்!! முஹம்திலன்!! 
முஸல்லியன்!! வமுஸல்லிமா!!

அன்புடையீர் ! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இராமநாதபுரம் மாவட்டம் சித்தார் கோட்டை,சித்தாரியா 
அரபுக் கல்லூரியின் நிறுவனர் மௌலானா மௌலவி 
அல்ஹாஜ் I.சைய்யிது முஹம்மது புஹாரி ஆலிம் ஃபாஜில் 
மன்பயீ ஹழரத் அவர்கள், 10-09-2017  இன்று தன்னுடைய 21 வது 
புனித ஹஜ்ஜை நிறைவேற்றி  ஊர்வந்த அவர்கள், இன்று காலை 
சுப்ஹு தொழுகைக்குப்பிறகு, பெரிய பள்ளிவாசலில் சிறப்பு பயான் 
செய்து அனைவருக்காகவும் சிறப்பு பிரார்த்தனை செய்தார்கள்.

அல்ஹாஜ் மௌலானா மௌலவி 
I.செய்யது முகம்மது புகாரி ஆலிம் பாஜில் மன்பயீ ஹழ்ரத் 
அவர்கள் நமது சுன்னத் ஜமாஅத்  பெரிய பள்ளிவாசலில்,
இன்று காலை சிறப்பு பிரார்த்தனை செய்த போது


அல்ஹாஜ் மௌலானா மௌலவி 
I.செய்யது முகம்மது புகாரி ஆலிம் பாஜில் மன்பயீ 
ஹழ்ரத் அவர்கள் நமது சுன்னத் ஜமாஅத்  பெரிய 
பள்ளிவாசலில்,இருந்து இல்லம் திரும்பிய போது

 
                                         
                                             அல்ஹாஜ் மௌலானா மௌலவி 
I.செய்யது முகம்மது புகாரி ஆலிம் பாஜில் மன்பயீ 
ஹழ்ரத் அவர்களின் இல்லத்தில் ஜமாஅத்தார்கள்,பேராசிரியர்கள்,மாணவர்கள்.


வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்கள் 

Tuesday, September 5, 2017

வாழூர் அல் - மஸ்ஜிதுர் ரைய்யான் சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசலில்,தியாகத் திருநாள் தொழுகை மிகச்சிறப்பாக நடைபெற்றது !!!

முதஅவ்விதன்!!   முபஸ்மிலன்!!!  முஹம்திலன்!!!   
முஸல்லியன் !!!வமுஸல்லிமா!!!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 

வாழூர் அல் - மஸ்ஜிதுர் ரைய்யான் சுன்னத் ஜமாஅத் 
பள்ளிவாசலில்,வலமை போல் தியாகத் திருநாள் 
தொழுகை மிகச்சிறப்பாக நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்.







வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்கள் .