Friday, August 24, 2018

MALABAR MASJID -SELAYANG KUALA LUMPUR

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் அமைந்துள்ள மிகப் பிரமாண்டமான 
  கேரள முஸ்லிம்களின் பள்ளிவாசல்

                                       
































Tuesday, August 21, 2018

புனித தியாகத் திருநாள் ஹஜ்ஜுப் பெருநாள் நல் வாழ்த்துக்கள் !!!

 

குர்பானி கொடுப்பதால்
இறைக் கடமை நிறை வேறுகிறது.
மன நிம்மதி நிறைகிறது.
உறவுகள் ஒன்று கூடுகிறது.
ஏழைகள் பசியாறுகிறார்கள்.
பள்ளி, மத்ரஸாக்கள் பயனடைகிறது.
இறையருல் இறங்குகிறது.
தியாக உணர்வு உயர்கிறது.
ஜீவ காரூண்யம் நிலை நாட்டப்படுகிறது.
கூட்டுறவு மேம்படுகிறது.
வறியவர்கள் வளம் பெறுகிறார்கள்.
அனாதைகள் பலம் பெறுகிறார்கள்.
முதிர் கன்னிகள் கல்யாணமாலை சூடுகிறார்கள்.

ஆகவே அத்தகைய உயர் தியாகத்தை நாம் அனைவரும்
 நிறை வேற்றி அல்லாஹ்வின் அளப்பெரும் அன்பையும்,
அருளையும்,பெற்றுக் கொள்ளுமாறும்,மேலும் அனைத்து நல் உள்ளங்களுக்கும்,வாழூர் அஹ்லுஸ் சுன்னத் 
வல் ஜமாஅத் இணைய தளத்தினர், 
தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்களை கூறி,அகமகிழ்ந்து 
துஆச் செய்கிறார்கள். வஸ்ஸலாம்.....

www.sunnath jamath valoor blogspot.com.

Wednesday, June 27, 2018

துவங்கியது தாருல் உலமாவில் மதரஸா தாருல் அர்க்கம் ஹிஃப்ழு மதரஸா !!!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

மதுரை மாநகரில் அமைந்துள்ள தமிழ்நாடு மாநில 
ஜமாஅத்துல் உலமா சபையின் தலைமையகம் தாருல் 
உலமாவில் தாருல் அர்க்கம் ஹிஃப்ழு மதரஸாவில் 
பாடத் துவக்க விழா  இன்று அதிகாரப்பூர்வமாக நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.




மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் நிர்வாகிகள் 
மற்றும் மூத்தஆலிம்கள் கலந்துகொண்டனர்.







(தீனின் பிரச்சாரத்தின் தொடக்கமாக இருந்தது 
அர்க்கம் ரளியல்லாஹுஅன்ஹூ வீடு.)
(தாருல் உலமாவில் தொடங்கப்பட்ட ஹிஃப்ழு 
மதரஸாவின் பெயர் தாருல் அர்க்கம்.)

வல்லஅல்லாஹு இம் மத்ரஸாவை கியாமத் வரை 
சிறப்பாக செயல்பட செய்வானாக! ஆமீன்.வஸ்ஸலாம்.

Sunday, June 24, 2018

போலி மதகுரு விபச்சாரன் பீ.ஜேவை கைது செய்யக் கோரி சென்னையில் மாபெரும் ஆர்பாட்டம் !!!



கைது செய்! கைது செய் !!சமூக விரோதியை கைது செய்.




புனித ஈகைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்


முதஅவ்விதன்!!   முபஸ்மிலன்!!!  முஹம்திலன்!!!   முஸல்லியன் !!!வமுஸல்லிமா!!!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 

அன்பார்ந்த பெரியோர்களே! இளைஞர்களே! 
அருமைத் தாய்மார்களே! சகோதர சகோதரிகளே! 
பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து 
வணக்கம் செய்தால் உயர் பதவி கிடைக்கும் என்பார்கள்.இம் மூன்றையும் கடைபிடிக்கிற நல் வாய்ப்பினை எல்லாம் வல்ல 
அல்லாஹ் இந்த ரமழான் மாதத்திலே நமக்கு வழங்கினான்.

பகலெல்லாம் நோன்பு வைத்து,இரவிலே இருபது ரக்கஅத்துகள் 
தொழுது, அல்லாஹ்வுடைய அளப்பெரும் அன்பையும், 
அருளையும் பெற்ற எங்கள் இஸ்லாமிய அன்பு நெஞ்செங்களே! 
உங்கள் அனைவர்களுக்கும் இனிய நோன்பு பெருநாள் நல் வாழ்த்துக்களையும்,இன்னும் ஆறு நோன்புகள் நோற்க இருக்கின்ற, 
உயர்ந்த சீதேவிகளுக்கு ஆறு நோன்புப் பெருநாள் நல் வாழ்த்துக்களையும்,
வாழூர்அஹ்லுஸ்  சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினர் சார்பாக அகமுவந்து தெறிவித்துக் கொள்கிறோம் வஸ்ஸலாம்…..

வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்கள் .

Tuesday, May 15, 2018

புனித நிறைந்த ரமலான் மாதம் !!!



அல்லாஹ்வின் நல் அடியார்களே! சங்கையான,புனிதம் 
நிறைந்த மாதத்தை நாம் அடைய இருக்கிறோம்.. 
அல்ஹம்து லில்லாஹ். இம் மாதத்தில் நாம் அதிகமான 
நல் அமல்கள் செய்ய வேண்டும்.1-இமாம் ஜமாஅத்துடன் 
ஐங்காலத் தொழுகைகளை, தக்பீர் தஹ்ரீமாவுடன் 
தொழ வேண்டும். 2- குர்ஆன் ஷரீஃப் அதிகமாக 
ஓத வேண்டும். 3- 20-ரகஅத்துகள் முழுமையாக தராவீஹ் 
தொழுகையை நிறைவேற்ற வேண்டும். 4- இந்த வருடத்தின் 
ரமலான் மாதத்தின் ஃபர்ளான நோன்பை நாளை பிடிக்க 
நிய்யத்து செய்கிறேன், என்று நிய்யத் வைத்து நோன்பு 
வைக்க வேண்டும். 5- தொலைக்காட்சி அறவே 
பார்க்கக்கூடாது. 6- பரக்கத்தான ஸஹர் உணவை சாப்பிட்டு 
நோன்பு வைக்க வேண்டும். 



7-அல்லாஹ்விடத்தில் துஆச் செய்த பிறகே நோன்பு 
திறக்க வேண்டும். 8-ஷரீஅத் முறைப்படி எந்தெந்த 
பொருட்களுக்கு ஜகாத் கொடுக்க வேண்டுமோ அத்தகய 
பொருட்களை  கணக்கிட்டு தனது குடும்பத்தில் 
உள்ள ஏழை எளியவர்கள், அல்லது தனது ஊரில் உள்ள 
ஏழை எளியவர்களுக்கு ஜக்காத்து கொடுக்க வேண்டும்.
9- இப் புனிதம் நிறைந்த மாதத்தின் கடைசிப் பத்து நாட்கள்,  
ஆண்கள் பள்ளி வாசல்களிலும், பெண்கள் வீடுகளிலும், 
இஃதிகாஃப் இருக்க வேண்டும்.10- ரமலான் பிறை 27 லைலத்துல்
 கத்ரு இரவில் விழித்து ஸுப்ஹு வரை நல் 
அமல்கள் அதிகமாக செய்ய வேண்டும். 


அல்ஹம்து லில்லாஹ் குறைந்த பட்சம் மேல் கூறப்பட்டுள்ள 
அமல்களை பரிபூரணமாக, உலக முஸ்லிம்கள் அனைவர்களும் 
நிறைவேற்றி, புனிதம் நிறைந்த ரமலானின் முழுமையான, 
நன்மைகளை, உலக முஸ்லிம்கள் அனைவர்களும் பெறுவதற்கு, 
எல்லாம் வல்ல அல்லாஹ் பெருங்கிருபை  செய்வானாக என்றும், உலக முஸ்லிம்கள் அனைவர்களுக்கும் ரமலான் முபாரக் என்ற நல் வாழ்த்தினைக்கூறியும், சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினரும், சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் கிளையினரும் வாழ்த்தி, அகமகிழ்ந்து துஆச் செய்கிறார்கள்.  

   
குறிப்பு ;- புனித ரமலான் பற்றி தெளிவான விளக்கத்திற்கு 
www.jamalinet.com மற்றும் www.tmislam.com 
ஆகிய இணையதளத்தை பார்த்து பரிபூரண 
விளக்கம் பெறவும்.வஸ்ஸலாம்..