Thursday, February 14, 2019

தமிழ் பேசும் உலகின் முதலாவது அரபு மதரஸா !!!


தமிழ் பேசும் உலகின் முதலாவது அரபு மதரஸா தென் இந்தியா தமிழ்நாடு கீழக்கரை அரூஸிய்யா மத்ரஸா مدرسة العروسية‎ 
மறைக்கப்பட்ட வரலாறு

தமிழ் நாட்டிலும், இலங்கையிலும் வாழ்ந்த தமிழ் முஸ்லிம்கள் தமிழ்துறைக்கு ஆற்றிய பங்களிப்புக்கள் எவ்வாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டதோ அதேபோன்று தான் இஸ்லாத்திற்கு வழங்கிய பங்களிப்புக்களும் மூடிமறைக்கப்பட்டுள்ளன. 

போர்த்துக்கேயரின் வருகையின் பின்னர் தமிழ் முஸ்லிம்களுக்கிடையில் பாரிய சமூக சமயப் புணர் நிர்மாணப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது. இதனை செவ்வனே நிறைவேற்றிய அறிஞராக செய்ஹ் ஸதகதுல்லாஹ் காஹிரி றஹிமஹூல்லாஹ் (ஸதகதுல்லாஹ் அப்பா) வரலாற்றில் இடம்பிடித்திருக்கிறார்கள். 

முகலாய மன்னர் அவுரங்கஸீப் அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய செய்ஹ் ஸதகதுல்லாஹ் காஹிரி றஹிமஹூல்லாஹ் அவர்கள் "பத்வா ஏ ஆலம்கீரி" சட்டவாக்க நூலை தொகுக்கும் குழுவிற்கு பொறுப்பாக இருந்தார்கள்.இமாம் அவர்களின் பரிந்துரைக்கு அமைய மன்னர் அவுரங்கஸீப் அவர்கள், சீதக்காதி அவர்களை மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுனராகவும் நியமித்தார்கள். 

செய்ஹ் ஸதகதுல்லாஹ் காஹிரி றஹிமஹூல்லாஹ் அவர்கள் மக்கா, மதீனா, டமஸ்கஸ், பலஸ்தீன் உட்பட பல இடங்களுக்கும் விஜயம் செய்தார்கள். மஸ்ஜிதுன் நபவியில் இமாம் இப்னு ஹஜர் அல் ஹைதமி ரஹிமஹூல்லாஹ் அவர்களின் மாணவர்களும் செய்ஹ் ஸதகதுல்லாஹ் காஹிரி றஹிமஹூல்லாஹ் அவர்களிடம் கற்றதாக வரலாறு கூறுகிறு. 

துருக்கியின் சுல்தான் முராத் அவர்களோடும் தொடர்புகளைப் பேணிவந்தார்கள். இவ்வாறான பயணங்களின் பின்னரே கீழக்கரையில் கி.பி 1671ல் அரூஸிய்யா மத்ரஸாவை உருவாக்கினார்கள்.

கீழக்கரை அரூஸிய்யா மத்ரஸா பல சிந்தனையாளர்களை உருவாக்கியிருக்கிறது. இந்த மத்ரஸாவிற்கு ஆர்காடு நவாபுகள் ஆரம்பம் முதல் உதவி வழங்கிவந்தார்கள். செய்யித் முஹம்மத் மாப்பிள்ளை மாப்பிள்ளை லெப்பை ஆலிம், முதல் அரபு - தமிழ் Dictionary ஐ தொகுத்த செய்யித் ஜமாலிய்யா யஸீன் மௌலானா, அமெரிக்காவின் Pacific Colombia பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் கலாநிதி தைக்கா சுஐப் ஆலிம் போன்றவர்கள் முக்கியமானவர்கள்.

வேலூர் அல்பாகியாதுஸ் ஸாலிஹாத்

ஆனால் வேலூர் அல் பாகியாதுஸ் ஸாலிஹாத் மத்ரஸாவே முதலாவது தமிழ் அரபு மத்ரஸா என்ற கருத்து தெரிந்தோ தெரியாமலோ சமூகமயப்படுத்தப்படிருப்பதை அவதானிக்க முடியும். அஹ்லா ஹஸ்ரத் என்று அழைக்கப்படும் வேலூர் ஷா அப்துல் வஹாப் ஸாஹிப் அவர்களே வேலூர் அல் பாகியாதுஸ் ஸாலிஹாதின் ஸ்தாபகராவார். 

இந்த மத்ரஸா உருவாக்கப்படுவதற்கு சுமார் 186 வருடங்களுக்கு முன்னரே கீழக்கரை அரூஸிய்யா மத்ரஸா உருவாக்கப்பட்டது. மற்றுமொரு விடயத்தை நாம் இங்கு அவதானிப்பது அவசியமாகும் அஹ்லா ஹஸ்ரத் என்று அழைக்கப்படும் வேலூர் ஷா அப்துல் வஹாப் ஸாஹிப் அவர்களின் தந்தை அதாஉல் ஹாபீஸ அப்துல் காதிர் லெப்பை ஆலிம் (1784-1866) அவர்கள் கீழக்கரை தைக்கா சாஹிப் றஹிமஹூல்லாஹ் அவர்களிடம் அரூஸிய்யா மத்ரஸாவில் கற்றவராவார்.

அல் பாகியாதுஸ் ஸாலிஹாத் மத்ரஸாவில் இருந்து 1930 ம் ஆண்டில் வெளியிடப்பட்ட "அல் பாகியாதுஸ் ஸாலிஹாதின் அழகிய சரிதை" என்ற சிறப்பு மலரில் இந்த வரலாறு மறைக்கப்பட்டிருந்தாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தமிழ் ஆய்வுத்துறையின் முன்னாள் பேராசிரியர் P.M அஜ்மல் ஹான் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

வட இந்தியர்கள் தமிழ் முஸ்லிம்கள் செய்த உதவிகளை ஒர் ஆவணத்திலேனும் பதிவு செய்யவில்லை. குறிப்பாக தாருல் உலூம் தேவ்பந்த், ஸஹ்ரான்பூர், முபாரக்பூர் போன்ற தேவ்பந்த் மத்ரஸாக்களுக்கு பொருளாதார ரீதியில் செய்யத உதவிகளைக் கூட நன்றியுடன் நினைவுகூற மறந்துவிட்டார்கள். இவ்வாறு தான் தமிழ் நாட்டில் பேசும் முஸ்லிம்களின் வரலாறுகள் மெதுமெதுவாக மறைய ஆரம்பித்துவிட்டன. விரும்பியோ விரும்பாமலே மறைக்கப்பட்ட எமது வரலாற்றை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்.

படம் -- கீழக்கரை அரூஸிய்யா மத்ரஸா

பஸ்ஹான் நவாஸ்

செய்தி ஆசிரியர் 
இலங்கை வானொலி 
கொழும்பு.

Tuesday, January 29, 2019

இந்தியாவின் 70 வது குடியரசு தின விழா !!!


70 வது குடியரசு தின விழா இனிதே நடைபெற்றது. 
தேசியக் கொடி உயர்ந்து, அவிழ்ந்து, பூமாரி பொழிந்து பட்டொளி வீசிப் பறக்கிற போது இந்தியன் என்ற பெருமிதத்தில் எல்லா சிரமங்களையும் கடந்து நெஞ்சு புடைக்கத்தான் செய்கிறது.

1947 ஆகஸ்ட் 15 தேதி சுதந்திரம் பெற்றோம். மூன்றாண்டுகள் நமது தேசத்தின் அறிவாற்றலும் தியாக உணர்வும் மிக்க நேரு , அம்பேத்கர் காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப் போன்ற மூத்த தலைவர்கள் பாடுபட்டு உருவாக்கிய அரசியல் சாசணம் நடைமுறைக்கு வந்தது 1950 ஜனவரி 26 ம் தேதி. அன்றைய தினம் இந்தியா மக்களாட்சி தத்துவத்தை ஏற்றுக் கொண்ட குடியரசாக மலர்ந்தது. 

இங்கிலாந்து அமெரிக்க உள்ளிட்ட நாடுகளின் அரசியல் சாசணங்களை முன்னோடிகளாக கொண்டு இந்திய அரசியல் சாசணம் உருவாக்கப் பட்டது என்றாலும் உலகில் உள்ள அனைத்து அரசியல் சாசணங்களையும் விட இந்திய அரசியல் சாசணம் பெரியது. குடிமக்களுக்கு அதிக உரிமைகளை தரக் கூடியது. எந்த ஒரு குடுமபமோ அதிகார பீடமோ அரசியல் சாசனத்தை விட உயர்ந்தது அல்ல. 

இந்தியக் குடியரசு, நாட்டு மக்களுக்கு அதிக உரிமைகளை தந்துள்ளது. இந்தக் குடியரசை காப்பாற்ற மக்கள் செய்ய வேண்டிய முக்கியக் கடமை தேர்தல்களில் வாக்களிப்பதாகும். நம் நாட்டில் வாக்களிப்பு சதவீதம் 60 % குறைவாகவே உள்ளது. இது கவலைக்குரியது. பிரம்மாண்டமாக கொடியேற்றி வைப்பதை விட தேர்தலில் வாக்களிப்பதே உண்மையில் ஒரு குடியரசுக்கு நாம் செய்கிற கடமையாகும். உள்ளாட்சித் தேர்தலோ நாடாளுமன்றத் தேர்தலோ குடியரசுக் கான சோதனைகளம் அது தான். அந்த வாக்களிக்கும் கடமையை எந்தச் சூழலிம் தவற மாட்டோம் என உறுதியேற்போம் என உரையாற்றினேன். 

நேற்றிரவு நீண்ட நேரமாக தப்லீக் ஜமாத்தில் ஏற்பட்ட பிளவுக்ள குறித்து படித்துக் கொண்டிருந்த்ததில் மெளலானா சஃது சாஹிப் பற்றிய அதிர்ச்சியளித்த குற்றச் சாட்டுக்களில் ஒன்று நினைவுக்கு வந்தது. 
மெளலானா சஃது சாஹிப் தேர்தல்களில் ஓட்டுப் போடக் கூடாது என்று கூறுகிறார். 

ஒட்டுப் போடும் போது விரல்களில் வைக்கப் படுகிற மை யினால் ஓளு கூடாது என்கிறார். 
சஃது மெளலானாவின் பத்வாவை எந்தக் குப்பை தொட்டியில் வீசுவது ? 
சஃது மெளலானா 50 கோடி மதிப்பில் பண்ணை வீடு வைத்திருக்கிறார். மோடியின் நணபருடன் சேர்ந்து மிகப் பெரிய இறைச்சிக் கூடம் வைத்திருக்கிறார் என்றெல்லாம் அவர் மீது கூறப்படுகிற குற்றச் சாட்டுக்களை அது வெறுப்பில் பேசப்படக் கூடியது அல்லது தனிநபர் சார்ந்ட்து என்று நாம் ஒதுக்கி விடலாம். ஆனால் அவருடைய இந்தக் கருத்து அப்படி ஒது க்கி விடக் கூடியதா ? 
ஒரு குடியரசு தினத்தில் திருச்சியில் கூடியிருக்கிற 50 இலட்சம் பேருக்கு இந்த வழிகாட்டுதல்கள் வழங்கப் படுமானால் எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் நமது நிலை என்ன வாகும் ? 
அவருக்கு எவ்வளவு தடவை புரியவைத்தும் எத்தனை பெரிய மனிதர்கள் புரிய வைத்தும் அவர் புரிந்து கொள்ளாமல் பிடிவாதம் பிடிக்கிறார் என்று அழுகையோடு புலம்புகிறார் ஷூரா பிரிவின் முக்கிய தலைவர் அஹ்மது லாட் சாஹிப். 

இதற்கெல்லாம் பதிலளிக்காமல், அல்லது எங்களது தலைவர் இப்படி எல்லாம் பேசவில்ல என்று விளக்கம் தராமல் , மார்க்க தீர்ப்புக்களை கடந்து தனி நபர் துதி பாடுதலில் அல்லது அமைப்பை தூக்கிப் பிடிப்பதில் கவனமாக இருக்கிற தமிழ ஆலிம்கள் இது வரை தேவ்பந்த் – மற்றும் பாக்கியாத்தின் பத்வாக்கள் குறித்து வாய் திறவாமல் இருப்பது என்ன நியாயம் என்று அல்லது என்ன தைரியம் என்று எனக்கு இது வரை புரியவில்லை. நான் இதைக் கள்ள மெளனம் என்று சொனால் அதை கண்ணியமில்லாத வார்த்தை வழக்காட வந்து விடுகிறார்கள். 

குறைந்த பட்சம் அவர்களது அரபுக்கல்லூரிகளிலிருந்து சஃது மெள்லானாவின் மீதான குற்றச் சாட்டுக்களை மறுத்தே அல்லது அவரது கருத்துக்கள் அனைத்தோடும் தங்களுக்கு உடன்பாடு இல்லை “தாவத்” உடைய வேலைகளில் மட்டும்தான் தங்களுக்கு தொடர்பு என்றோ எந்த விளக்கமும் தராமல் இருப்பது நாட்டில் நடைபெறும் கொடூரங்கள் குறித்து வாய் திறக்காத மோடியை விட பெரிய மெளனிகளாக அவர்களை காட்டுகிறது. 

தமது தரப்பை நியாயப் படுத்தி ஒரு மதரஸாவின் சார்பாகவேணும் பத்வா வெளியிடாமல் இத்தகை பெரிய மக்கள் கூட்டத்தை கூட்டுவது தமிழக முஸ்லிம் சமுதாயத்திற்கு எந்த விதமான சிக்னல்களை தரக்கூடியது ? 

ஏ கியா ஹோராஹே பாய் !
மன்னிக்கனும். மறந்து விட்டேன். 
இனிய குடியரசுதின வாழ்த்துக்கள்.

தீனைக் குலைக்கும் பிளவுகள் !!!

திருச்சியில் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப் பட்ட தப்லீக் இஜ்திமா குறித்து தொடர்ந்து விசாரிக்கப் படுகிறது. அதில் மார்க்கத்தின் அடிப்படையில் தெளிவை தேடி இந்தக் கட்டுரை- தப்லீக் ஜமாத்தின் பெயரில் நமது எண்ணத்தை புரிந்து கொள்ளாமல் பிரச்சனை செய்கிற மூடர்கள் இருப்பார்கள் எனில் இத்தகைப்பில் திருச்சி இஜிதிமா குறித்த செய்தியை ஆலிம்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டுகிறேன். நாம் உண்மையை சொல்லப் போய் அது சர்ச்சையாகி விடக்கூடாது அல்லவா ? )


இஸ்லாம் மகத்தான சமூக ஒற்றுமையை நிலை நாட்டிய மார்க்கம்.
தலை முறை தலைமுறையாக சண்டையிட்டுக் கொண்டிருந்த அரபுக் கோத்திரத்தார் லாயிலாக இல்லல்லாஹ்வின் குடையின் கீழ் பரஸ்பரம் அன்பு கொண்ட சகோதர்ர்களாக ஒன்றினைந்தனர்.

لَوْ أَنفَقْتَ مَا فِي الْأَرْضِ جَمِيعًا مَّا أَلَّفْتَ بَيْنَ قُلُوبِهِمْ وَلَٰكِنَّ اللَّهَ أَلَّفَ بَيْنَهُمْ ۚ إِنَّهُ عَزِيزٌ حَكِيمٌ (63
)
அஸ் அது பின் ஜராரா ரலி அவர்கள் தான் மதீனாவிலிருந்து பெருமானார் (ஸல்) அவர்களைச் சந்தித்து இஸ்லாமை தழுவிய முதல் நபித்தோழர்.
முதலாம் அகபா உடன்படிக்கையின் போது பெருமானாரை முதன் முதலில் சந்தித்த ஆறுபேரில் ஒருவர். பெருமானாரின் தஃவா வை கேட்ட பிறகு மற்றவர்கள் தயங்கி நின்ற போது குதித்துக் கொண்டு முன்னால் வந்து பெருமானாரிடம் பை அத் செய்து கொடுத்தவர்.  அவர் மதீனாவின் கஜ்ரஜ் குடும்பத்தைச் சார்ந்தவர்.
أنه أول من بايع ليلة العقبة
இரண்டாம் மூன்றாம் அகபா உடன்படிக்கைகளின் போது இடம் பெற்றவர்.  மூன்றாம் அகபா உடன்படிக்கையின் போது பெருமானாரை மதீனாவிற்கு வந்து விடுமாறு அழைப்பு விடுத்தவரும் அவர் தான்.
நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து வந்து குபாவில் தங்கியிருந்தார்கள். ‘குபாவில் பெருமானார் பனூ அம்ரு பின் அவ்பு களின் குடும்பத்தாரின் ன் வீடுகளில் தங்கியிருந்தார்கள் . அந்தக் குடும்பம் அவ்ஸ் களின் ஒரு உட்பிரிவு.
அஸ் அது ரலி அவர்களுக்கு குபாவிற்கு பெருமானார் (ஸல்) அவர்கள் வந்து சேர்ந்து விட்டார்கள் என்று தெரிந்தது. பெருமானாரைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் மேலிட்டது.  ஆனால் என்ன செய்வது பெருமானார்  அவ்ஸ்களின் குடும்பத்தில் அல்லவா தங்கியிருக்கிறார்கள். அங்கு சென்றால் அஸ் அதை அவர்கள் பழைய பகையில் கொன்று விடுவார்களே! அஸ் அது ரலி தயங்கித் தயங்கி நின்றார். ஒருகட்டத்தில்  பெருமானாரைச் சந்திக்கும் ஆவலை அடக்க முடியாமல் இரவு நேரத்தில் ஒரு யாருக்கும் தெரியாதவாறு ஒரு போர்வையை எடுத்துப் போர்த்துக் கொண்டு ரகசியமாக பெருமானார் (ஸல்) அவர்களைச் சந்தித்து விட்டு வைகறையிலேயே புறப்பட்டுச் சென்றார்.
சற்று நேரத்தில் குபா வாசிகளில் மூன்று பேர் பெருமானாரை வந்து சந்தித்தார்கள். அவர்களிடம் அஸ் அது வந்து சென்றதை பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அம்மூவரும் ஆச்சரியமடைந்தனர். அவர் இங்கு வந்தாரா என்றனர். பெருமானார் (ஸல்) அவர்கள் அவர்களிடம் அவர் இப்போது தான் சென்றிருக்கிறார். அதிக தூரம் சென்றிருக்க முடியாது அவரைச் சந்தித்து அழைத்து வாருங்கள் என்றார்கள். அஸ் அது ஒரு மரத்தின் அடியில் தங்கியிருந்தார். அவரைச் சந்தித்த அம்மூவரும் அவருக்கு நிம்மதியளிக்கும் வார்த்தைகளை கூறி அவரை ஆரத்தழுவிக் கொண்டார்கள்.
இஸ்லாம் ஏற்படுத்திய சகோதரத்துவத்தின் முதல் அடையாளம் இது. ஒருவரின் ஆடு இன்னொருவரின் தோட்ட்த்தில் மேய்ந்து விட்ட்து என்பதற்காக 400 ஆண்டுகள் சண்டையிட்ட பகைவர்களாக இருந்த குடும்பத்தினர். ஒரு தாய் மக்களைப் போல மாறினர்.
இதே சகோதரத்துவத்தையும் ஒற்றுமையையும் இஸ்லாம் பரவிய தேசமெங்கும் ஏற்படுத்தியது.
மால்கம் எக்ஸ் தன்னுடைய வரலாற்றில் வெள்ளையர்களை சைத்தான்கள் என்றே கருதியதாக கூறுகிறார். ஹஜ்ஜுக்கு வந்த போதுதான் தனது மனநிலையில் மாற்றம் ஏற்பட்ட்து வெள்ளையர்களை சகோதரர் களாக கருதத் தொடங்கியதாக கூறுகிறார்.
அன்றிலிருந்து இன்று வரை இஸ்லாம் மனிதர்களை ஒன்றினைப்பதில் மற்றதையும் விட மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறது.
மிக ஆச்சரியமான முறையில் வெளிப்பட்ட ஒற்றுமை
கர்பலா மைதானத்தில் ஹுசைன் ரலி அவர்கள் தனது குடும்பத்துடன் தங்கியிருந்தார்கள். அவரை எதிர்ப்பதற்காக இராக்கின் ஆளுந்தர் இப்னு ஜியாத் அப்துர் ரஹ்மான் உமர் பின் சஃது என்பவரை 4000 பேர்களுடன் அனுப்பி வைத்தார். அவர் ஹுசைன் ரலி அவர்களோடு பேச்சு வார்த்தை நடத்தினார். அவர் மென்மையாக நடந்து கொண்டார். லுஹர் தொழுகையின் நேரம் வந்த போது இரு அணியினரும் ஹுசைன் ரலி அவர்களின் தலைமையில் ஒன்றாக இணைந்து தொழுதனர்.
இந்த ஒற்றுமையை தவறாக சித்தரித்து இப்னு ஜியாத் அனுப்பிய படைத்தளபதி ஹுசை ன் ரலி அவர்களுடன் குலாவிக் கொண்டிருப்பதாக கோள் சொன்ன சம்ருப் பின் தில் ஜோஷன் தான் பிறகு படைக்குப் பொறுப்பேற்று ஹுசைன் ரலி அவர்களைக் கொன்றான். அவரின் தலையை தனி வெட்டி எடுத்தான்.

முஸ்லிம்களுக்கிடையே இருக்கும் ஒற்றுமையை குலைப்பதுதான் சைத்தானின் பிரதான வேலையாக இருக்கும் என முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மிகத் தெளிவாக எச்சரித்துள்ளார்கள்.
عن جابر قال قال النبي صلى الله عليه وسلم إن الشيطان قد يئس أن يعبده المصلون ولكن في التحريش بينهم

ومعناه : أيس أن يعبده أهل جزيرة العرب ، ولكنه سعى في التحريش بينهم بالخصومات والشحناء والحروب والفتن ونحوها .

ஒருமுறை சஹாபாக்களிடையே ஒரு சர்ச்சை எழுந்தது மதீனத்து அன்சாரிகள் முந்தைய காலகட்டத்தில் பாடிக் கொண்ட ஒரு பழியுணர்வூட்டு கவிதையை ஒருவர் படித்தார். இன்னொருவர் அதை எதிர்த்துப் படித்தார். இறுதியில் ஒவ்வொரு குடும்பத்தினரும் மற்றவர்களுக்க்கு எதிராக அணிதிரளத் தொடங்கினர்.

பெருமானார் (ஸல்) அவர்கள் எனக்குப் பின்னரும் ஜாஹிலிய்யாவின் எச்சங்களா என்று மிக கடுமையாக கண்டித்துக் கூறினார்கள்

 لا تَرْجِعُوا بَعْدي كُفَّاراً، يَضْرِبُ بَعْضُكُمْ رِقابَ بَعْض ))
(( كُلُّ المُسْلِمِ على المُسْلِمِ حَرَامٌ: دَمُهُ ومَالُهُ وَعِرْضُهُ ))
(رواه مسلم عن أبي هريرة)

 அதன் பின் அப்படி ஒரு நிகழ்வு தன் வாழ்நாளில் ஏற்படாமல் பார்த்துக் கொண்டார்கள்.

لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِّنْ أَنفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيصٌ عَلَيْكُم بِالْمُؤْمِنِينَ رَءُوفٌ رَّحِيمٌ (128

என்ற வசனம் அந்த சந்தர்ப்பத்தில் இறங்கியது என்று கூறப்படுவதுண்டு.

حَرِيصٌ عَلَيْكُم என்ற வார்த்தைக்கு உங்களது ஒற்றுமையில் பேராசை கொண்டவர் என்றும் விளக்கம் சொல்லப்படுகிறது.

எனவே சமுதாயத்தில் பிளவுகள் குழப்பங்களை ஏற்படுத்துவதிலிருந்து மக்களை பெருமளவில் எச்சரித்தார்கள்.

وعن أَبي أُمَامَة الباهِليِّ t قَالَ: قَالَ رَسُولُ اللَّه ﷺ: أَنا زَعِيمٌ ببَيتٍ في ربَضِ الجنَّةِ لِمَنْ تَرَكَ المِرَاءَ وَإِنْ كَانَ مُحِقًّا،

عن أبي الدرداء - رضي الله عنه - قال: قال رسول الله - صلى الله عليه وسلم -: " عليكم بالجماعة (1) فإنما يأكل الذئب القاصية

عن النعمان بن بشير - رضي الله عنه - قال: قال رسول الله - صلى الله عليه وسلم -: " الجماعة رحمة، والفرقة عذاب

عن أبي هريرة - رضي الله عنه - قال: قال رسول الله - صلى الله عليه وسلم -: " من خرج من الطاعة , وفارق الجماعة , ثم مات، مات ميتة جاهلية

عن ابن عباس - رضي الله عنهما - قال: قال رسول الله - صلى الله عليه وسلم -: (" من رأى من أميره شيئا يكرهه فليصبر) (فإنه ليس أحد من الناس خرج من السلطان شبرا فمات عليه , إلا مات ميتة جاهلية

عن بشير بن عمرو قال: شيعنا  ابن مسعود - رضي الله عنه - حين خرج , فقلنا له: اعهد إلينا , فإن الناس قد وقعوا في الفتن , ولا ندري هل نلقاك أم لا , فقال: اتقوا الله واصبروا , حتى يستريح بر , أو يستراح من فاجر , وعليكم بالجماعة , فإن الله لا يجمع أمة محمد على ضلالة.

மினாவில் எத்தனை ரக அத் என்பதில் கருத்துவேறு பாடு கொண்டிருந்த போதும் உஸ்மான் ரலி அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுத இப்னு மஸ்வூத்

عن عبد الرحمن بن يزيد قال: (صلى بنا عثمان بن عفان - رضي الله عنه - بمنى أربع ركعات , فقيل ذلك لعبد الله بن مسعود - رضي الله عنه - فاسترجع , ثم قال: صليت مع النبي - صلى الله عليه وسلم - بمنى ركعتين , وصليت مع أبي بكر - رضي الله عنه - بمنى ركعتين , وصليت مع عمر بن الخطاب - رضي الله عنه - بمنى ركعتين) (ومع عثمان صدرا من إمارته) (ثم تفرقت بكم الطرق , فلوددت أن لي من أربع ركعات , ركعتين متقبلتين) (ثم قام فصلى أربعا , فقيل له: استرجعت ثم صليت أربعا؟ , قال: الخلاف شر)

கறுத்து வேறுபாடுகளில் பிளவுகள் ஏற்படுமானால் அது தான் சமுதாயத்திற்கு ஏற்படக்கூடிய மிகப் பெரிய ஆபத்து என பெருமானார் எச்சரித்துள்ளார்கள்

இத்தக்க கட்டத்தில் பிளவு பட்டுக் கிடக்கிற எந்தப் பக்கத்திலும் சாராமல் ஒது ங்கியிருக்கவே மார்க்க ம் அறிவுறுத்தியது.

நம்முடைய விருப்பம் – கோபம் அளவு கடந்த ஆர்வம் ஏதாவது ஒரு பக்கத்திற்கு சார்பாக நிற்க தூண்டும்.  சற்று நிதானத்தை கடைபிடித்தால் சாதாரணமாகவே ஒரு அணி இல்லாமல் போய்விடும் . எது சத்தியமோ அது நிலைக்கும். ஓவ்வொரு வரும் தமது விருப்பத்திற்குரிய அணியை தேர்ந்தெடுக்கிற போது குழப்பம் அதிகரித்துக் கொண்டே செல்லும்.

உஸ்மான் ரலி அவர்கள் கொல்லப் பட்ட பிறகு இஸ்லாமிய உலகில் முஸ்லிம்களுக்கு இடையே குழப்ப மேகம் சூழ்ந்த போது அப்போதிருந்த சஹாபாக்களில் மிகச் சிலர் மட்டுமே ஏதேனும் ஒரு அணியின் ஆதரவாளராக இருந்தார்கள். பலர் ஒதுங்கியே இருந்தார்கள் என்பது தான் வரலாறு.



وقد روى ابن بطة عن بكير بن الأشج قال إما إن رجالا من أهل بدر لزموا بيوتهم بعد قتل عثمان فلم يخرجوا إلا إلى قبورهم

حدثنا أيوب يعني السختياني عن محمد بن سيرين قال هاجت الفتنة وأصحاب رسول الله صلى الله عليه وسلم عشرة آلاف فما حضرها منهم مائة بل لم يبلغوا ثلاثين وهذا الإسناد من أصح إسناد على وجه الأرض

சஃது பின் அபீவக்காஸ் ரலி அவர்களை பலரும் நிர்பந்தித்த போது முஃமினை வெட்டாத காபிரை மட்டுமே வெட்டுகிற வாள் இருக்குமானால் கொடுங்கள் ! நான் ஏதாவது ஒரு அணியில் சேர்ந்து கொள்கிறேன் என்று கூறினார்.
ஏதேனும் ஒரு அணியை ஆதரித்தவர்கள் அதிலிருந்து விடுபடா முடியாத நிர்பந்த சூழலில் பிளவுக்கு பலியானார்கள்.
அலி ரலி அவர்களுக்கு எதிரணியில் தல்ஹா ரலி இருந்தார்கள் .  யுத்த களத்தில் அவரைச் சந்தித்த அலி அவர்கள் நம்மிருவருக்கும் பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்ன எச்சரிக்கையை நினைவூட்டவா என்று கேட்டு நினைவூட்டினார்கள். தல்ஹா ரலி யுத்தத்தை விட்டு வெளியேறினார்.
عن إسماعيل بن أبي حازم قال : قال علي للزبير : أما تذكر يوم كنت أنا و أنت في سقيفة قوم من الأنصار فقال لك رسول الله صلى الله عليه و سلم : " أتحبه فقلت : و ما يمنعني ؟ قال : إنك ستخرج عليه و تقاتله و أنت ظالم" قال فرجع الزبير" أخرجه الحاكم
ஆனால் அவரை பின்  தொடர்ந்து சென்றவர்கள் ஒரு ஆற்றின் கரையில் அவரை வெட்டிக் கொன்றார்கள்.
என்வே சமூகத்தில் ஏதேனும் ஒரு இடத்தில் பிளவுகள் ஏற்படும் போது . இரண்டு தரப்பிலும் நியாயங்கள் முழுமையாக வெளிப்படாத போது பிளவுகளுக்குள் சிக்கிக் கொள்ளாமல் ஒதுங்கியிருப்பதே முஸ்லிம்கள் கடை பிடிக்க வேண்டிய நெறியாகும்.
பிளவுகள் பல்வேறு தீய குழப்பங்களை உண்டாக்கும். ஏன் மார்க்த்தை திருத்திக் கூற வைக்கும்.
உமய்யாக்களின் ஆட்சிக் காலத்தில் உமையாக்களின் குடும்ப அரசியலின் பாகுபாட்டை எதிர்த்து அப்பாஸிகள் புரட்சியை ஆரம்பித்த போது புரட்சியாளர்களுக்கு சாதகமாக பேசுவதற்கு வீறு கொண்டு வந்த கராஷ் என்ற பட்டப் பெயர் கொண்ட ஒருவர் தொழுவதை விட நோன்பு வைப்பதை விட அப்பாஸிகளை பாதுகாப்பது முஸ்லிம்களின் கடமை என்றார்.
நல்ல வேளையாக அப்போதிருந்த அப்பாஸிகளின் தலைவர் முஹம்மது பின் அலி இந்த தீமையை  புரிந்து அவரை வெறுத்து ஒதுக்கினார்.
தபிலீக் அமைப்பு இரண்டு பிரிவாக உடைந்துள்ளது. துரதிஷ்ட வசமாக அவர்களுக்குள் நடக்கும் போட்டி பள்ளிவாசல்கள் இஜ்திமாக்களின் கடும் சண்டை வரை சென்றுள்ளது. பங்களாதேஷில் சிலர் படுகொலை செய்யப் பட்டுள்ளனர். நாட்டின் நீதிமன்றங்கள் பலவற்றிலும் இரு பிரிவினரின் பல வழக்குள் உள்ளன்.


இந்நிலையில் தப்லீக்கின் பாரம்பரிய அமைப்பான தில்லி மர்கஜ் அமைப்புக்கு எதிராக மெளாலான் சாது சாஹிப் என்ற அரசியல் பின்புலம் உள்ள ஒரு அமீரின் கீழ் நடை பெறூம் .ப்லீக் அமைப்பில் நாளை திருச்சியில் தொடங்குவதாக பெரிய அளவில் பிரம்மாண்டப் படுத்தப் பட்டுள்ள இஜிதிமா ஏற்பாட்டை கவனத்தீர்கள் என்றார்கள் பிளவுகள் ஏற்படுடும் போது ஒரு பிரிவு தன்னை நிலை நாட்டிக் கொள்ள என்னென்னெ யுத்திகளி கையாளுமோ அந்த ஆர்ப்பாட்ட உத்திகளை கையாள்வதை கவனிக்கலாம்.

தில்லி தாருல் உலூம் அரபுக்கல்லூரி. வேலூ அல்பாக்கியாதுஸ் ஸாலிஹாத் அரபுக்கல்லூரி ஆகிய இரு பெரும் இந்திய மார்க்க கேந்திரங்கள் இந்தப் பிரிவினர் குறித்து அதிருப்தி வெளியிட்டிருக்கிற நிலையிலும் தமிழகத்தில்  இந்த கூட்டத்திற்கான திரளுதல்களும் ஏற்பாடுகளும் ஆச்சரியத்தை தருகிறது.  குழப்பங்களில் விழுவதற்கு மக்கள் எவ்வளவு விரைந்து செல்கிறார்கள் ?.

எனவே பிளவுகளை உயர்த்திப் பிடிக்கிற இத்தகைய மாநாடுகளை தவிர்த்துக் கொள்வதே சிறந்த வழியாகும்.
 إِنَّ الَّذِينَ فَرَّقُوا دِينَهُمْ وَكَانُوا شِيَعًا لَّسْتَ مِنْهُمْ فِي شَيْءٍ ۚ إِنَّمَا أَمْرُهُمْ إِلَى اللَّهِ ثُمَّ يُنَبِّئُهُم بِمَا كَانُوا يَفْعَلُونَ (159)
فهو بريء من محمد صلى الله عليه وسلم، ومحمد منه بريء
என்ற அல்லாஹ்வின் வார்த்தையை நினைவில் கொண்டு ஆடம்பரத்திற்கும் ஆர்ப்பாட்டமான வசதி வாய்ப்புக்களை பிரம்மாண்டங்களையும் கண்டு வாய்பிளந்து விடாமல் நான் இதில் இல்லை என்று ஒதுங்கியிருப்பதே இன்றைய முஸ்லிம்களின் கடமையாகும்.
எல்லோரும் போகிறார்கள் அல்லது என்னதான் நடக்கிறது என்று பார்த்து விட்டு வருகிறேன் என்ற எண்ணத்தில் ஒரு சாராரின் கூட்டங்களுக்கு செல்வது குழப்பம் தலைதூக்கியிருக்கிற காலத்தில் பொறுப்பற்ற செயலாகும்.
அல்லாஹ் முஸ்லிம் உம்மத்தை பிளவு படுத்தும் சக்திகளிடமிருந்து பாதுகாப்பானாக!
மௌலானா மௌலவி கோவை 
அ,அப்துல் அஜீஸ் பாகவி ஹழ்ரத்

திருச்சி தப்லீக் இஜ்திமாவிற்கு ஏன் போக கூடாது. .......????


மெளலானா மௌலவி தாஜுல் உலூம் அல்ஹாஜ் 
M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A ஹழ்ரத்
துணைத் தலைவர் மஜ்லிஸூல் உலமா சபை மல்லிப்பட்டினம்
சுன்னத் ஜமாத் பேரியக்கம் 
சார்பாக ஒர் சுற்றறிக்கை வெளியிட பட்டுள்ளது ...
வாசகர்களுக்கு பார்வைக்கு.