70 வது குடியரசு தின விழா இனிதே நடைபெற்றது.
தேசியக் கொடி உயர்ந்து, அவிழ்ந்து, பூமாரி பொழிந்து பட்டொளி வீசிப் பறக்கிற போது இந்தியன் என்ற பெருமிதத்தில் எல்லா சிரமங்களையும் கடந்து நெஞ்சு புடைக்கத்தான் செய்கிறது.
1947 ஆகஸ்ட் 15 தேதி சுதந்திரம் பெற்றோம். மூன்றாண்டுகள் நமது தேசத்தின் அறிவாற்றலும் தியாக உணர்வும் மிக்க நேரு , அம்பேத்கர் காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப் போன்ற மூத்த தலைவர்கள் பாடுபட்டு உருவாக்கிய அரசியல் சாசணம் நடைமுறைக்கு வந்தது 1950 ஜனவரி 26 ம் தேதி. அன்றைய தினம் இந்தியா மக்களாட்சி தத்துவத்தை ஏற்றுக் கொண்ட குடியரசாக மலர்ந்தது.
இங்கிலாந்து அமெரிக்க உள்ளிட்ட நாடுகளின் அரசியல் சாசணங்களை முன்னோடிகளாக கொண்டு இந்திய அரசியல் சாசணம் உருவாக்கப் பட்டது என்றாலும் உலகில் உள்ள அனைத்து அரசியல் சாசணங்களையும் விட இந்திய அரசியல் சாசணம் பெரியது. குடிமக்களுக்கு அதிக உரிமைகளை தரக் கூடியது. எந்த ஒரு குடுமபமோ அதிகார பீடமோ அரசியல் சாசனத்தை விட உயர்ந்தது அல்ல.
இந்தியக் குடியரசு, நாட்டு மக்களுக்கு அதிக உரிமைகளை தந்துள்ளது. இந்தக் குடியரசை காப்பாற்ற மக்கள் செய்ய வேண்டிய முக்கியக் கடமை தேர்தல்களில் வாக்களிப்பதாகும். நம் நாட்டில் வாக்களிப்பு சதவீதம் 60 % குறைவாகவே உள்ளது. இது கவலைக்குரியது. பிரம்மாண்டமாக கொடியேற்றி வைப்பதை விட தேர்தலில் வாக்களிப்பதே உண்மையில் ஒரு குடியரசுக்கு நாம் செய்கிற கடமையாகும். உள்ளாட்சித் தேர்தலோ நாடாளுமன்றத் தேர்தலோ குடியரசுக் கான சோதனைகளம் அது தான். அந்த வாக்களிக்கும் கடமையை எந்தச் சூழலிம் தவற மாட்டோம் என உறுதியேற்போம் என உரையாற்றினேன்.
நேற்றிரவு நீண்ட நேரமாக தப்லீக் ஜமாத்தில் ஏற்பட்ட பிளவுக்ள குறித்து படித்துக் கொண்டிருந்த்ததில் மெளலானா சஃது சாஹிப் பற்றிய அதிர்ச்சியளித்த குற்றச் சாட்டுக்களில் ஒன்று நினைவுக்கு வந்தது.
மெளலானா சஃது சாஹிப் தேர்தல்களில் ஓட்டுப் போடக் கூடாது என்று கூறுகிறார்.
ஒட்டுப் போடும் போது விரல்களில் வைக்கப் படுகிற மை யினால் ஓளு கூடாது என்கிறார்.
சஃது மெளலானாவின் பத்வாவை எந்தக் குப்பை தொட்டியில் வீசுவது ?
சஃது மெளலானா 50 கோடி மதிப்பில் பண்ணை வீடு வைத்திருக்கிறார். மோடியின் நணபருடன் சேர்ந்து மிகப் பெரிய இறைச்சிக் கூடம் வைத்திருக்கிறார் என்றெல்லாம் அவர் மீது கூறப்படுகிற குற்றச் சாட்டுக்களை அது வெறுப்பில் பேசப்படக் கூடியது அல்லது தனிநபர் சார்ந்ட்து என்று நாம் ஒதுக்கி விடலாம். ஆனால் அவருடைய இந்தக் கருத்து அப்படி ஒது க்கி விடக் கூடியதா ?
ஒரு குடியரசு தினத்தில் திருச்சியில் கூடியிருக்கிற 50 இலட்சம் பேருக்கு இந்த வழிகாட்டுதல்கள் வழங்கப் படுமானால் எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் நமது நிலை என்ன வாகும் ?
அவருக்கு எவ்வளவு தடவை புரியவைத்தும் எத்தனை பெரிய மனிதர்கள் புரிய வைத்தும் அவர் புரிந்து கொள்ளாமல் பிடிவாதம் பிடிக்கிறார் என்று அழுகையோடு புலம்புகிறார் ஷூரா பிரிவின் முக்கிய தலைவர் அஹ்மது லாட் சாஹிப்.
இதற்கெல்லாம் பதிலளிக்காமல், அல்லது எங்களது தலைவர் இப்படி எல்லாம் பேசவில்ல என்று விளக்கம் தராமல் , மார்க்க தீர்ப்புக்களை கடந்து தனி நபர் துதி பாடுதலில் அல்லது அமைப்பை தூக்கிப் பிடிப்பதில் கவனமாக இருக்கிற தமிழ ஆலிம்கள் இது வரை தேவ்பந்த் – மற்றும் பாக்கியாத்தின் பத்வாக்கள் குறித்து வாய் திறவாமல் இருப்பது என்ன நியாயம் என்று அல்லது என்ன தைரியம் என்று எனக்கு இது வரை புரியவில்லை. நான் இதைக் கள்ள மெளனம் என்று சொனால் அதை கண்ணியமில்லாத வார்த்தை வழக்காட வந்து விடுகிறார்கள்.
குறைந்த பட்சம் அவர்களது அரபுக்கல்லூரிகளிலிருந்து சஃது மெள்லானாவின் மீதான குற்றச் சாட்டுக்களை மறுத்தே அல்லது அவரது கருத்துக்கள் அனைத்தோடும் தங்களுக்கு உடன்பாடு இல்லை “தாவத்” உடைய வேலைகளில் மட்டும்தான் தங்களுக்கு தொடர்பு என்றோ எந்த விளக்கமும் தராமல் இருப்பது நாட்டில் நடைபெறும் கொடூரங்கள் குறித்து வாய் திறக்காத மோடியை விட பெரிய மெளனிகளாக அவர்களை காட்டுகிறது.
தமது தரப்பை நியாயப் படுத்தி ஒரு மதரஸாவின் சார்பாகவேணும் பத்வா வெளியிடாமல் இத்தகை பெரிய மக்கள் கூட்டத்தை கூட்டுவது தமிழக முஸ்லிம் சமுதாயத்திற்கு எந்த விதமான சிக்னல்களை தரக்கூடியது ?
ஏ கியா ஹோராஹே பாய் !
மன்னிக்கனும். மறந்து விட்டேன்.
இனிய குடியரசுதின வாழ்த்துக்கள்.