Thursday, November 29, 2012

ஸலாமை -- சமாதானத்தை பரப்புங்கள்!




ஹளரத் அப்துல்லாஹ் பின் ஸலாம் (யூத மத அறிஞராக இருந்து இஸ்லாத்தை தழுவியவர்.இவர் இஸ்லாமை ஏற்பதற்கு முன் நிகழ்ந்த ஒரு நிகழ்வை அறிவிக்கின்றார்கள்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திரு மதினா நகர் வந்து சேர்ந்தபொழுது அவர்களைக்காண நான் வந்தேன். திரு நபி (ஸல்) அவர்களின் திருமுகத்தை நான் தெளிவாக பார்த்த போது அந்த முகம் பொய் முகமன்று என விளங்கிக்கொண்டேன்.


அவர்கள் வந்ததும் பேசிய முதல் பேச்சு, '' மக்களே! ஸலாமை பரப்புங்கள்.உணவளியுங்கள். உறவினர்களை சேர்த்துக்கொள்ளுங்கள்.மக்களெல்லாம் உறங்கிக்கொண்டிருக்கையில் இரவில் எழுந்து  தொழுங்கள்.(ஒரு பாதிப்பும் இல்லாமல்) ஸலாமத்தான முறையில் (பத்திரமாக) சொர்க்கம் பிரவேசிப்பீர்கள் '' (திர்மிதி ; 2485 இப்னுமாஜா ; 3251)

அல்லாஹ்வின் தூதர் புனித மக்காவிலிருந்து புனித மதினாவுக்கு ஹிஜ்ரத் செய்து வந்த போது அங்குள்ள மக்கள் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர்கள் எல்லோரும் சேர்ந்து நபிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தார்கள். இந்த வரவேற்பை ஏற்று,ஏற்புரை நிகழ்த்திய போது தான் மேற்கண்டவாறு பேசினார்கள்.இது நபி (ஸல்) அவர்களின் கண்ணிப்பேச்சு, திரு மதினாவுக்கு மட்டுமல்ல,இந்த உலகிற்கு தான் வந்தது, நபியாக அனுப்பப்பட்டது எதற்கு என்பதையும் தான் இந்தப்பேச்சு தெளிவுபடுத்துகிறது.

அவர்கள் சொன்ன முதல் விஷயம் '' ஸலாமை பரப்புங்கள் ''   சாந்தி சமாதானத்தைப் பரப்புங்கள், இஸ்லாமிய சமயத்தைப் பரப்புங்கள், ஸலாம் சொல்வதை பரவலாக்குங்கள் என்றெல்லாம் இதன் பொருள் விரியும்.நான் இலகிற்கு வந்தது அச்சத்தைப்போக்கி அமைதியை நிலைநாட்டத்தான் என்பதை தனது முதல் உரையில் தெளிவுபடுத்தினார்கள்.

அரபு நாட்டில் அந்தக்காலத்தில் யாருக்கு யாரால் எப்பொழுது எந்த தீங்கு விளையுமோ என்ற பயம் இருந்தது. ஒருவர் எதிர்பட்டால் '' இவரால் நமக்கு என்ன ஆபத்து ஏற்படபோகிறதோ தெரியவில்லையே ! என பயந்து நடுங்கிக்கொண்டிருந்த கால கட்டத்தில் தான் '' என்னால் எந்த துன்பமும் உனக்கு நேராது என்ற உத்தரவாதத்தை அஸ்ஸலாமு அலைக்கும் எனக்கூறுவது மூலம் தெரிவித்து விடுங்கள்.அவரும் ''என்னாலும் உனக்கு எந்த ஆபத்தும் வராது'' என பதில் வாக்கு மூலத்தை வஅலைக்கு முஸ்ஸலாம் என்பதன் வழி தெரிவித்து விடட்டும் என இஸ்லாம் கற்பித்தது.

பல இன மக்கள் வசித்த மதினாவுக்கு நபி (ஸல்) அவர்கள் வந்து, முதன் முதலாக அவர்கள் பேசிய இந்த பேச்சு, என்னால் நான் கொண்டு வந்த மார்க்கத்தால்,என்னை ஏற்றுக்கொள்ளாத மக்களுக்கு எந்த ஆபத்தும் வராது.நான் கொண்டுவந்துள்ள இஸ்லாமிய மார்க்கம், எல்லா இன மக்களுக்கும் சாந்தி சமாதானம் நல்கும் சத்திய இஸ்லாமாகும்.என நம்பிகையூட்டுவதாக அமைந்திருந்தது.இந்த உலகில் யாரும் சண்டை சச்சரவு செய்யாமல், சமாதானமாக வாழவேண்டும் என்றால், இந்த உலகில் அமைதி நிலவ வேண்டு மென்றால்,இஸ்லாமிய மார்க்கத்தை எல்லா தளத்திலும் பரப்ப வேண்டும்.

மக்கள் ஒருவருக்கொருவர் சந்திக்கும் போது தங்களுக்கிடையில் ஸலாம் சொல்வதை அதிகப்படுத்த வேண்டும்.அறிமுகமானவர், அறிமுகமில்லாதவர்,பெரியவர்,சிறியவர் என்று பாகுபாடு பாராமல் அதிகமாக ஸலாம் சொல்லவேண்டும்.இந்த முகமனை பகலிலும்,இரவிலும்,மங்கலமான,அமங்கலமான எல்லா இடத்திலும், எல்லா கால கட்டத்திலும் சொல்லலாம்.

ஒருவன் காலையில் சாலை விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறான்.வேதனையோடும்,வலியோடும்,சோகமாக சோர்ந்திருக்கும் அவனிடம் '' குட் மார்னிங் '' உனக்கு நல்ல காலை என்று கூற முடியுமா? ஒருவன் மாலையில் நோயுற்று படுத்திருக்கும் போது,அவனை நோய் விசாரிக்க சென்றால் '' குட் ஈவினிங் '' நல்ல மாலை என்று அவனுக்கு சொல்ல முடியுமா? ஒரு மரண வீட்டுக்கு சென்று குட் மார்னிங் என்றோ, குட் ஈவ்னிங் என்றோ கூற முடியுமா? ஆனால் எல்லா இடத்திலும் அஸ்ஸலாமு அலைக்கும் உனக்கு சுகம் உண்டாகட்டும்.உனது மனம் சாந்தியடையட்டும்.உனக்கு சமாதானம் கிடைக்கட்டும் எனக்கூறி வாழ்த்தலாம்.

ஸலாம் என்பது அர்த்தப்புஷ்டியான ஒருசொல்.எல்லாவகையான,வியாதி,வேதனை,இடையூறு,துன்பம்,சிக்கல் நஷ்டம்,கஷ்டம்,இந்த உலகிலும் மறு உலகிலும் ஏற்படுவதை விட்டும் உனக்கு பாதுகாப்பு சுகம் கிடைக்க வாழ்த்தும் ஒரு அதி அற்புதமான மந்திரச்சொல்.அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொல்வது எல்லா வகையான அசுகத்தை விட்டும் அல்லாஹ் உனக்கு குணமளிப்பானாக! என வாழ்த்துவதாகும்.சொர்க்கத்திற்கு தாருஸ்ஸலாம் (சாந்தியும் சமாதானமும் அளிக்கும் வீடு) என்று பெயர்.அல்லாஹ் தாருஸ்ஸலாமிற்கு (சொர்க்கத்திற்கு) வருமாறு அழைக்கின்றான்''  (அல் குர்ஆன் 10 ; 25) 

இந்த வகையில் அஸ்ஸலாமு அலைக்கும் என்று முகமன் கூறுவது உனக்கு சொர்க்கம் கிடைக்கட்டும் என வாழ்த்துவதாகும். '' அஸ்ஸலாமு '' அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களில் ஒரு திருநாமமாகும்.இதன் படி பார்த்தால்,அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூறுவது உனக்கு அல்லாஹ்வே கிடைக்கட்டுமாக! என்று வாழ்த்துவதாகும்.இதைவிட பெரிய வாழ்த்து வேறு என்னவாக இருக்க முடியும்.உலகில் நடைமுறையில் உள்ள முகமன் சொற்களில் இந்த ஸலாத்தைப்போல அர்த்தமுள்ள கருத்துச் செறிவுள்ள முகமன் வேறு எதுவும் உண்டா? இப்படி எல்லா வகையிலும் சிறந்த இந்த இஸ்லாமிய முகமனை அதிகமதிகம் சொல்லி இந்த உலகில் ஸலாமை பரப்புங்கள்! நம் எல்லோருக்கும் ஸலாம் -- சாந்தி சமாதானம் உண்டாகட்டுமாக! ஆமின்!!! வஸ்ஸலாம்.....




என்றும் தங்களன்புள்ள
மௌலானா மௌலவி அல் ஹாஃபிழ் S.S.அஹ்மது ஃபாஜில் பாக்கவி
(தலைமை இமாம்,மஸ்ஜித் இந்தியா.கோலாலம்பூர்,மலேசியா)

வெளியீடு ;;-- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்

Thursday, November 15, 2012

ஹிஜ்ரி சகாப்தம் 1434 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!



''நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்ததும் நிகழ்வுகளுக்கு தேதி குறிப்பிடும்படி உத்தரவிட்டார்கள்.நபியவர்கள் ரபீவுல் அவ்வல் மாதத்தில் மதீனா வந்தார்கள்.மக்கள் நபியின் மதீனா வருகையிலிருந்து தேதி குறித்தனர். முதன் முதலாக பதிவுகளில் தேதி குறித்தவர் யமனில் இருந்த யஃலா பின் உமைய்யா வாகும் '' (முஸ்தத்ரக் ஹாகிம் ; 47913  முர்ஸலான அதாவது அறிவிப்பாளர் வரிசைத்தொடரில் நபித்தோழர் பெயர் கூறப்படாத -- ஹதீஸ் அறிவிப்பாளர் -- அம்ரு பின் தீனார்)

இஸ்லாத்தில் முதன் முதலாக தபால் மற்றும் அரசு சார்ந்த -- சாராத பதிவுகளுக்கு) தேதி குறிக்க உத்தரவிட்டவர் கலீபா உமர் (ரலி) அவர்களாகும்.'' எனக்கூறப்படுகிறது. தாரிகுத்தபரி 312)

பிரபலமான இந்தக்கூற்றுப்படி நாயகம் (ஸல்) அவர்கள் மறைந்து ஆறு வருடம் கழித்து ஹள்ரத் உமர் (ரலி) அவர்கள் ஆட்சிக்காலத்தில் (கி.பி.639) இஸ்லாமிய ஆண்டை ஆரம்பிக்க வேண்டிய  அவசியம் உணரப்பட்டது.நிறைவான இஸ்லாமியச் சகாப்தம் மலருவதற்கு முன்பு,அரபிகள் தங்களது ஆண்டுகளைத் தங்கள் பொது வாழ்வில் நிகழ்ந்த முக்கிய நிகழ்ச்சியிலிருந்து கணக்கிட்டு வந்தார்கள். அனுமதி ஆண்டு, நில அசைவு ஆண்டு, யாணை ஆண்டு என பல ஆண்டுகளை நடைமுறையில் வைத்திருந்தனர்.

பின்னர் இரண்டாம் கலிபா உமர் (ரலி) அவர்கள் குறிப்பு ஒன்றை தயாரித்து அதில் ஷஃபான் மாதம் என்று குறிப்பிட்டார்கள்.இதனை பின்னர்தான் பார்ப்பின் எந்த ஆண்டின் ஷஃபான் மாதம் என்று விளங்குவ்து? என தனக்குத்தானே கேள்விக் கேட்டுக் கொண்டார்கள்.இந்த நிலையில், கலீபாவிடமிருந்து தங்களுக்கு தேதி குறிப்பிடாமல் கடிதங்கள் வருகிறது.என மாநில ஆளுனர்களிடமிருந்து முறையீடுகள் வந்தன.குறிப்பாக அபூ மூஸல் அஷ்அரி (ரஹ்) அவர்கள் தேதி குறிப்பிடாத தாங்களின் கடிதம் கிடைத்தது'' என நறுக்கென்று எழுதினார்கள்.இதனைத்தொடர்ந்து கலீபா அவர்களின் அவையில் ஆலோசனை நடைபெற்றது.இஸ்லாமிய ஆண்டை ஆரம்பிப்பது என முடிவானது.எதனை அடிப்டையாக வைப்பது என்பதில் பல்வேறு கருத்துக்கள் ஆராயப்பட்டது.

நபி(ஸல்) பிறந்தது,நபித்துவம் கிடைத்தது முதலிய பலதையும் பரிசீலிக்கப்பட்டு இறுதியாக நபி (ஸல்) அவர்கள் திரு மக்காவிலிருந்து திரு மதீனாவுக்கு புலம் பெயர்ந்து வந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஹிஜ்ரத்தை அடிப்படையாகக்கொண்டு இஸ்லாமிய ஆண்டை ஆரம்பிப்பது என ஏக மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.ஏனெனில் நபித்துவம் பிறப்பின் மூலம் தொடங்கினாலும், அது துலங்கியது ஹிஜ்ரத்தின் மூலமேயாகும்.நபித்துவம் தொடங்கியது மக்காவில். ஆனால் அது தொடர்ந்தது மதீனாவில். இறைத்தூது வெளிப்பட்டது மக்காவில். ஆனால் அது வெளிச்சத்தில் வந்ததும்,வளர்ச்சி பெற்றதும் மதீனாவில்தான்.

இந்த வகையில் இஸ்லாம் புத்துணர்ச்சியோடு புதுப்பொழிவு பெற்று,உலகமெல்லாம் பரவியதற்கு காரணம் ஹிஜ்ரத்.ஏகத்துவம் இந்த ஜெகமெங்கும் ஜொலிக்க காரணமான ஹிஜ்ரத், நபி (ஸல்) அவர்களின் சரித்திரத்தில் திருப்பு முனையாக அமைந்த அழகான அற்புதமான ஒரு நிகழ்வு.இஸ்லாத்தின் குரல் தரையில் கூட ஒலிக்க விடாமல் ஒடுக்கப்பட்டபோது,அது அகிலமெங்கும் ஜெட் வேகத்தில் பறந்து சென்று பரப்ப இறக்கை கட்டிக் கொடுத்தது ஹிஜ்ரத்தாகும்.

ஹிஜ்ரத்திற்கு முன்னர் சொற்ப்பமாக இருந்த முஸ்லிம்கள்,ஹிஜ்ரத்திற்குப்பிறகு பல்கிப்பெருகினர். ஹிமுவில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் இருந்த முஸ்லிம்கள்,ஹிஜ்ரி 6-- ல் நபி (ஸல்) அவர்களோடு உம்ராவுக்கு வந்தவர்கள் 1400-- பேராகவும், ஹிஜ்ரி 8 -- ல் மக்கா வெற்றிக்கு வந்தவர்கள் 12,000 பேராகவும்,ஹிஜ்ரி 10--ல் நபியோடு இறுதி ஹஜ்ஜூ செய்த முஸ்லிம்கள் 1,24,000 மாகவும் உயர்ந்தார்கள்.

இந்த நபித்தோழர்கள் மூலம் உலகமெங்கும் இஸ்லாம்  பரவி இன்று உலக மக்கள் தொகையில் 2.1 PILLIAN  (210-- கோடி) முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் என்றால் இவ்வளவு பெரிய வெற்றிக்கு வித்திட்டது ஹிஜ்ரத் அல்லவா! அதனால் தான் இன்று உலகில் நடைமுறையில் உள்ள ஆண்டு அடிப்படையில் ஹிஜ்ரத்தைப்போல அழுத்தமான தாக்கத்தை தரக்கூடியது எதுவும்மில்லை என வரலாற்று ஆய்வாளர்கள் வியக்கின்றார்கள்.

ஹிஜ்ரத் என்பது அச்சமுள்ள  குஃப்ரு (இறை மறுப்பு) ஸ்தானத்தை விட்டு புலம்பெயர்ந்து,அச்சமற்ற ஆதரவுள்ள தலத்திற்கு சென்று விடுவதற்குப்பெயர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நபித்துவத்தின் 13 -- வது ஆண்டு ரபீவுல் அவ்வல் மாதம் முதல் தேதி வியாழக்கிழமை மக்காவிலிருந்து ஹிஜ்ரத் புறப்பட்டார்கள்.ரபீவுல் அவ்வல் 12 --ஆம் நாள் (28 ஜூன் கி.பி.622) திங்கள் கிழமை லுஹர் நேரம்,தங்களது 53 --வது வயதில் மதீனா நகர் வந்துசேர்ந்தார்கள்.

ஸவ்ர் குகையிலிருந்து பெருமானார் (ஸல்) அவர்கள் புறப்பட்டதிலிருந்து 69--நாட்கள் முன்பாயிருந்த முஹர்ரம் மாதம் முதல் நாளே ஹிஜ்ரி ஆண்டின் தொடக்கமாகக் கொள்ளப்பட்டது.காரணம் ஹஜ்ஜு முடிந்து வாணிபம் தொடங்கப்பெறும் மாதமாக முஹர்ரம்  இருந்தது.இதல்லாமல் முஹர்ரம் மாதம் பல்வேறு சிறப்புகளைப்பெற்று திகழ்கிறது.

 (1) ஷஹ்ருல்லாஹ் அல்லாஹ்வுடைய மாதம் (2) ரமலானுக்குப்பிறகு நோன்பு பிடிக்க சிறந்த மாதம்.(நபிமொழி-- முஸ்லிம் 1163) (3) முஹர்ரமில் ஒரு நாள் நோன்பு பிடித்தால் ஒரு நாளுக்கு முப்பது நாள் (நன்மை) உண்டு (நபிமொழி -- தபரானி மஜ்மவுல் ஹைஸமி --19013)  (4) முஹர்ரமில் ஒரு சமூகத்தாருக்கு தௌபா (மன்னிப்பு) வழங்கினான்.மற்ற சமூகத்தாருக்கும் (கேட்டால்)  இதில் தௌபா  வழங்க இருக்கிறான். (திர்மிதி-- 741) (5) இதில் தான் கஃபாவின் திரைத்துணி மாற்றி புதியது அணிவிக்கப்படும். (தாரிகுத்தபரி -- 412)

ஹிஜ்ரத் என்பது இடம் பெயர்வது மட்டுமல்ல.ஷிர்க் (இறைவனுக்கு இணை வைப்பு) குஃப்ரு (இறை நிராகரிப்பு) ஃபிஸ்க் (பாவ காரியங்கள்) அனைத்தையும் விட்டு விலகி விடுவதுதான் உண்மை ஹிஜ்ரத். '' அல்லாஹ் விலக்கிய அனைத்தையும் விட்டு விலகி விடுவதே ஹிஜ்ரத்'' என்ற  (புகாரி --10)  நபிமொழியை ஹிஜ்ரத் சிந்தனையாக உங்களின் உள்ளங்களில் விதைத்து எல்லா மக்களுக்கும் எனது இனிய மஅல் ஹிஜ்ரா  புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.அல்லாஹ்வின் பேரருள் நம்மனைவர் மீதும் பொழியட்டுமாக! ஆமீன்!!



என்றும் தங்களன்புள்ள
மௌலானா மௌலவி அல் ஹாஃபிழ் S.S.அஹ்மது ஃபாஜில் பாக்கவி
(தலைமை இமாம்,மஸ்ஜித் இந்தியா.கோலாலம்பூர்,மலேசியா)

வெளியீடு ;;-- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்

Thursday, November 8, 2012

M.I.S. CERTIFICATE COURSE மர்கஸுல் அல் இஸ்லாஹ் வழங்கும் ஒரு வருட ( Master in Islamic Studies) படிப்பு





உலமாக்கள் தங்கள் தகுதிகளை மேலும் மேம்படுத்திக்கொள்ள அறிய வாய்ப்பு!

இமாம்களுக்கு கிறாஅத் -- பயான்களில் சிறப்புப்பயிற்சிகள் மிக குறுகிய காலத்தில் குர்ஆன், தீனிய்யாத்தைகற்ப்பிக்கும் வழிகாட்டல் மற்றும் ஜமாஅத்தார்களுக்கு ஆற்றிட வேண்டிய மார்க்க தொடர்பிலான அனைத்து சேவைகளுக்கும் மிகச்சிறந்த வழிகாட்டல் பயிற்றுவிப்புகள்.

கம்யூட்டரை இயக்கிட  தேவையான பயிற்சிகளும்,கம்யூட்டரில் பதிவு செய்யப்பட்டிருக்கும் தப்ஸீர், ஹதீஸ்,ஃபிக்ஹ்,தஸவ்வுஃ,தாரீக் ஆகியவற்றிலிருந்து தீன் கித்மத்திற்கு அவசியமானவற்றை புதிய பாணியில் பயிற்றுவித்து சிறந்த முறையில் மார்க்க சேவைகளை ஆற்றிடும் வழிகாட்டல்கள்.

மூத்த உலமாக்கள்,இஸ்லாமிய (Professors) பேராசிரியர்கள்,ஓய்வுபெற்ற அதிகாரிகள் மூலம் நுணுக்கமான மார்க்க தகவல்கள், வாழ்வியல் வழிகாட்டல்களை அறிந்துகொள்ள விசேஷ வகுப்புகள்.

சிறுபான்மையோருக்கான அரசாங்க ஒதுக்கீட்டிலிருந்து வசதியற்ற  வயோதிகர்கள் -- விதவைகள் -- கல்வி -- திருமணம் ஆகியவற்றுக்கான உதவிகளை பெற்றுத்தரும் வழிமுறை பற்றிய வழிகாட்டல்கள்.

கம்யூட்டர் தொழில் சார்ந்த பயிற்றுவிப்புகள் மூலம் Typewriting, Microsoft -- DTP. போன்றவற்றை உலமாக்கள் கற்றுக்கொள்ளவும் அதன் மூலம் அவர்களின் ஹலாலான பொருளாதார மேம்பாட்டுக்கும்,சுதந்திரமான மார்க்க சேவைகளுக்கும் சிறந்த வ்ழிகாட்டல்கள்.

இன்னும் பலனுள்ள பல பயிற்றுவிப்புகள்...........



மார்க்க தகவல்கள் பதிவு செய்யப்பட்ட கணினி (DESKTOP COMPUTER) வருட முடிவில் இலவசமாக வழங்கப்படும்.

உணவு,இருப்பிடம்,மார்க்க சேவைக்கு அத்தியாவசியமான நூல்கள் இலவசம்.

ஒருவருட பயிற்சி பயிற்சிக்குப் பின் MIS  தகுதிச் சான்றிதழ் (CERTIFICATE) வழங்கப்படும்.

தனித் தனித் துறைகளை சார்ந்த பிரத்யேக தேர்விர்கான சான்றிதழ்களும் வழங்கப்படும்

இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள ஆலிம்களை அன்புடன் அழைகின்றோம்!!!

தகுதி -- தஹ்ஸீல் வகுப்பின் ஸனது, (வயது வரம்பு இல்லை) வகுப்பு ஆரம்பம் இன்ஷா அல்லாஹ் ஹிஜ்ரி --1434 முஹர்ரம் பிறை 2  (17-11-2012) காலை --11-00 மணி

விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி தேதி 14--11--2012

குறிப்பு -- இமாமத் சேவையில் இருப்பவர்களுக்குறிய நாற்பது நாள் குருகியகால 8 வது பயிற்சி வகுப்பு  5--11--2012 ல் துவங்கப்பட்டுள்ளது

தொடர்புக்கு -- மார்க்கஜ் அல் இஸ்லாஹ் 186, நேரு விதீ, பாண்டிச்சேரி - 605001,

0413-2334152 -- 9442207864 -- 9442992712 -- 9443957471. 

  
வெளியீடு -- மன்பஈ ஆலிம் .காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர்  மற்றும் மலேசியக்கிளைகள்

WWW.Chittarkottai sunnath jamath.blogspot.com

Saturday, November 3, 2012

புனித ஷெய்கு மார்களின் முக்கியமான நினைவு தினங்கள் (மறைவு நாட்கள்)




1. முஹர்ரம்

பிறை 9,10 -- தாஸூஆ ஆஸூரா நோன்பு தினங்கள்

பிறை 10 -- ஆஸூரா தினம் இமாம் ஹுஸைன் (ரலி) அவர்கள் ஷஹீதான தினம்.

2. ஸஃபர்

பிறை 5 -- ஷைகு ஸதக்கத்துல்லாஹ் அப்பா (ரலி)

பிறை 13 -- ஷைகு நாயகம் தைக்கா அஹ்மது அப்துல் காதிர் (ரலி)

பிறை 14 -- ஷைகு (காயல்பட்டினம்) தைக்கா ஸாஹிப் காஹிரீ (ரலி)

கடைசி புதன் (ஒடுக்கத்துப் புதன்)

3. ரபீஉல் அவ்வல்

பிறை 12 -- ஈருலக இரட்சகர் நாயகம் ரஸூல் (ஸல்) அவர்களின் ஜனன தினம்.

4. ரபீஉல் ஆகிர்

பிறை 11, (பிறை 18) -- ஃகவ்துல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரலி)

பிறை 26 -- பல்லாக்கு வலியுல்லாஹ் (ரலி)

5. ஜமாதுல் அவ்வல்

பிறை 2 -- பெரிய ஷைகு நாயகம் அவர்களின் மனைவியார் மர்யம் ஆயிஷா (ரலி)

பிறை 10 -- முத்துப்பேட்டை ஷைகு தாவூது வலீ (ரலி)

6. ஜமாதுல் ஆகிர்

பிறை 10 -- நாகூர் ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகம் (ரலி)

பிறை 14 -- இமாம் கஸ்ஸாலி (ரலி)

7. ரஜப்

பிறை 5 -- இமாமுல் அரூஸ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (ரலி)

பிறை 6 -- அஜ்மீர் காஜா முஃயீனுத்தீன் சிஷ்தி (ரலி)

பிறை 22 -- இமாம் ஜஃபர் அஸ் ஸாதிக் (ரலி)

பிறை 25 -- இமாம் மூஸல் காளிம் (ரலி)

பிறை 27 -- ஷைகு ஜுனைதுல் பக்தாதி (ரலி)

பிறை 27 -- புனித மிஃராஜ் இரவு

8. ஷஃபான்

பிறை 15 -- பராஅத் இரவு

9. ரமளான்

பிறை 12 -- அன்னை ஸித்தி ஃபாத்திமா நாயகி (ரலி)

பிறை 17 -- பத்ரு ஸஹாபாக்கள் (ஸுஹதா) தினம்

பிறை 20 -- ஸய்யிதுனா அலி (ரலி)

10. ஷவ்வால்

பிறை 3 -- கண்ணனூர் ஷைகு ஸய்யிது முஹம்மது புஹாரீ தங்ஙள் (ரலி)

பிறை 3 -- ஷைகு (கீழக்கரை) தைக்கா ஸாஹிப் கிர்கரி (ரலி)

பிறை 22 -- கல்வத்து நாயகம் ஸய்யிது அப்துல் காதிர் (ரலி)

11. துல்கஃதா

பிறை 8 -- இமாம் ஹத்தாது நாயகம் (ரலி)

பிறை 13 -- ஷாஹுல் ஹமீது ஜல்வத்து நாயகம் (ரலி)

பிறை 14 -- ஷைகு உமர் வலீயுல்லாஹ் காஹிரி (ரலி)

பிறை 23 -- ஏர்வாடி சுல்தான் ஸய்யிது இப்றாஹீம் ஷஹீது (ரலி)

12. துல் ஹஜ்

பிறை 9 -- அரஃபாத்  தினம் (ஹஜ்ஜில் இல்லாதவர்களுக்கு அரஃபாத் நோன்பு)


வெளியீடு ;-  மன்பயீ ஆலிம் .காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்

www chittarkottai sunnathjamath blogspot.com