கீழக்கரை குத்பா கமிட்டி முன்னால் தலைவரும்,கீழக்கரை பேரூராட்சி மன்றத்தின் முன்னால் தலைவரும்,இராமநாதபுர மாவட்ட ஷரீஅத் கோர்ட்டின் தலைவர்,கீழக்கரை முதுபெரும் மார்க்க அறிஞர் மௌலானா மௌலவி அல்லாமா K.S.M. ஷாஹுல் ஹமீது ஜமாலி ஹஜ்ரத் கிப்லா அவர்கள்,வயது 92 (3-02-2013) ஞாயிற்றுக்கிழமை காலை சென்னையில் காலமானார்கள்.இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் (4-02-2013) திங்கட்கிழமை காலை 10 மணியளவில் சென்னை ராயப்பேட்டை அமீருன்னிஸா பேகம் கபரஸ்தானில் நடைபெற்றது.
தமிழ் நாட்டில் இன்று வாழும் மார்க்க மேதைகளில் மிகச் சிறந்த அறிஞரும்,ஷரீஅத் கவுன்சில் உருவாக்குவதில் முன்னோடியாக திகழ்ந்தவரும், மஙானீ (மார்க்க சட்டக் கருவூலம்) போன்ற மிகப்பெரிய கிரதங்களை வெளியிட்டு,மார்க்க சேவைக்கு பெரிதும் பாடுபட்ட மௌலானா மௌலவி அல்லாமா K.S.M. ஷாஹுல் ஹமீது ஜமாலி ஹஜ்ரத் கிப்லா அவர்களின் மறைவு தமிழக முஸ்லிம் சமுதாயத்திற்க்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
சென்னையில் சுலைமான் ஆலிம் டிரஸ்ட் நிறுவி பல்வேறு உதவிகளை செய்து வந்த பெருமைக்குரியவர்,கீழக்கரை மாப்பிள்ளை லெப்பை ஆலிம்,ஸதக்கத்துல்லாஹ் அப்பா போன்ற பெரிய மகான்களின் வழித்தோன்றல்களாக திகழ்ந்தவர்.
அவரது மறைவால் வாடுகின்ற அவர்களது குடும்பத்தினருக்கு,சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினர் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறார்கள்.மறைந்த மௌலானா மௌலவி அல்லாமா K.S.M. ஷாஹுல் ஹமீது ஜமாலி ஹஜ்ரத் கிப்லா அவர்களின் மஃபிரத்திற்காக அனைவரும் துஆச்செய்வோமாக.ஆமீன் !வஸ்ஸலாம்..
வெளியீடு ;- மன்பஈ ஆலிம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.
0 comments:
Post a Comment