Saturday, March 2, 2013

சித்தார் கோட்டையில் வலிகள் கோமான் ஹஜ்ரத் கவ்துல் அஃலம் முஹ்யித்தீன் ஆண்டகையின் கந்தூரிப் பெருவிழா!!





வலிகள் கோமான் ஹஜ்ரத் கவ்துல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் புனித மிகு மௌலிது ஷரீஃப், சித்தார் கோட்டை ஜன்னத்துல் பிர்தௌஸ் ஜும்ஆப்பள்ளி,மற்றும் சின்னப்பள்ளி வாசலில்  ரபியுல் ஆகிர் முதல் பிறையிலிருந்து பதினோரு தினங்கள்  சிறப்பாக ஓதப்பட்டு,
(23-02-2013) சனிக்கிழமை காலை 9-30 மணியளவில் சித்தார் கோட்டை ஜன்னத்துல் பிர்தௌஸ் ஜும்ஆப்பள்ளி வாசலில்,  சித்தார் கோட்டை ஜன்னத்துல் பிர்தௌஸ் ஜும்ஆப்பள்ளி தலைமை இமாம்,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் காரீஅப்துல் காதிர் ஆலிம் மஹ்ழரி ஹஜ்ரத் அவர்கள்  தலைமையில், மதரஸா மல்ஹருஸ் ஸுஅதா மாணவர்களால் மௌலிது ஷரீஃப் ஓதப்பட்டு, சிறப்பு துஆ மஜ்லிஸ் நடைபெற்றது.

இறுதியில் கந்தூரி விசேச உணவு ,ஊர் மக்கள் அனைவர்களுக்கும் வழங்கப்பட்டது. சித்தார்கோட்டையில் பகுதாதில் வாழும் தவஞானி வலிகள் கோமான், குத்புல் அக்தாப், ஹஜ்ரத் முஹ்யத்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் கந்தூரிப் பெருவிழா இனிதே நிறைவடைந்தது.  இது போன்று தமிழக முழுவதும்மலேசியா,இலங்கைமற்றும் உலகமெங்கும் அதிகமான இடங்களில் பகுதாதில் வாழும் தவஞானி,வலிகள் கோமான் குத்புல் அக்தாப்,ஹஜ்ரத் முஹ்யித்தீன் ஆண்டகையின் கந்தூரிப் பெருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றதுவஸ்ஸலாம்ஆமீன்..

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

0 comments:

Post a Comment