Thursday, June 20, 2013

லால் பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வாரின் 69 ஆம் ஆண்டு பட்டமளிப்பு பெருவிழா அழைப்பிதழ்!!!


23--06--2013  ஞாயிற்றுக்கிழமை 
(காலை 9-30 மணிமுதல் மதியம் 1-30 வரை)

மார்க்க மேதைகளின் மாண்புயர் அரங்கம்
பட்டமளிப்பு விழா

தலைமை;

பெங்களூர் ஷபீலுர் ரஷாத் அரபுக் கல்லூரி முதல்வர்
மௌலானா மௌலவி,ஹாஃபிழ்,அல்ஹாஜ்
'' அமீரே ஷரீஅத் ''
முஹம்மது அஷ்ரஃப் அலீ ஹள்ரத் தாமத் பரகாத்துஹு

முன்னிலை ;

மூத்த மன்பயீ உலமாப் பெருந்தகைகள்.
ஜாமிஆவின் பேராசிரியப் பெருந்தகைகள்.
மக்தப்களின் முஅல்லிம்கள் மற்றும்
ஜாமிஆவின் அலுவலர்கள்.

தொடக்கவுரை ;

பள்ளிக்கொண்டா,மௌலானா,மௌலவி,அல்ஹாஜ்
மஸ்ஊது அஹ்மது அஸ்னவி மன்பயீ ஹள்ரத் அவர்கள்.

வரவேற்புரை ;

மௌலவி,அல்ஹாஜ்,தளபதி.
ஷபீகுர் ரஹ்மான் மன்பயீ ஹள்ரத் அவர்கள்.

வாழ்த்துரை ;

மாநில ஜமாஅத்துல் உலமா  துணைத் தலைவர்
மௌலானா, மௌலவி.
ஆவூர்.அப்துஷ் ஷக்கூர் மன்பயீ ஹள்ரத் அவர்கள்

வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் பேராசிரியர்.
மௌலானா, மௌலவி.
மஹ்மூதுல் ஹஸன் ரஷாதி ஹள்ரத் அவர்கள்.

சிந்தாமணிப்பட்டி தாருல் உலூம் ஸஊதிய்யா முதல்வர்.
மௌலானா, மௌலவி.
சிராஜுத்தீன் அஹ்மது  ரஷாதி ஹள்ரத் அவர்கள்.

ஸனது வழங்குதல் ;

ஷைகுல் ஜாமிஆ,,ஸத்ருல் முதர்ரிஸீன்.
முஃப்தீ, அல்லாமா, காரீ.
அல்ஹாஜ் A.நூருல் அமீன் ஹள்ரத் அவர்கள்.

பட்டமளிப்பு பேருரை ;

மௌலானா,,மௌலவி ''ஷைகுல் ஹதீஸ் ''
அல்ஹாஜ் A.E.M.அப்துர் ரஹ்மான் ஹள்ரத் அவர்கள்.

ஜாமிஆவின் மூத்த பேராசிரியர்,மௌலானா,முஃப்தீ.
அல்ஹாஜ்.S.A.அப்துர் ரப் ஹள்ரத் அவர்கள்.

சிறப்புரை ;

நெல்லை மாவட்ட ஜமாஅத்துல் உலமாத்  தலைவர்.
மௌலானா,மௌலவி
T.J.M.ஸலாஹுத்தீன் ஹள்ரத் அவர்கள்.

சென்னை,அடையாறு பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம்.
M.ஸதீதுத்தீன் ஹள்ரத் அவர்கள்.

நீடூர்,ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபுக் கல்லூரி முதல்வர்.
மௌலானா,மௌலவி.
முஹம்மது இஸ்மாயீல் ஹள்ரத் அவர்கள்.

சிறப்பு விருந்தினர்கள் ;

அல்ஹாஜ்,மாலேக் M.முஹம்மது ஹாஸிம் அவர்கள்.
பொதுச்செயலாளர்
பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்,அரபுக் கல்லூரி,வேலூர்.

அல்ஹாஜ் அப்துல் பாரி அவர்கள்.
ஒயிட் ஹவுஸ்,சென்னை.

அல்ஹாஜ் ஷாஹுல் ஹமீது அவர்கள்.
நோபில் மரைன்,அபுதாபி.

நன்றியுரை ;

மௌலானா மௌலவி
M.Y.முஹம்மது அன்சாரி மன்பயீ ஹள்ரத் அவர்கள்.

நிறைவு துஆ ;

மதுரை ஜே.எம்.எஸ்.அரபுக் கல்லூரி முதல்வர்.
அஷ்ஷைகு,அல்லாமா.
M.முஹிப்புல்லாஹ் ஃபாஜில் ஹள்ரத் கிப்லா.
தாமத் பரகாத்துஹு அவர்கள்.


ஹிஜ்ரி 1434 ரஜப்  (2013 மே) மாதத்தில்
நடைபெற்ற இறுதித்தேர்வில் 
வெற்றி  பெற்றவர்கள் ;

தவ்ரத்துல் ஹதீஸ் மௌலவி ஃபாஜில்
ஸனது பெறுபவர்கள் ;

மௌலவி,ஃபாஜில்,ஹாஃபிழ்.
N.ஜாஃபர் ஸாதிக் மன்பயீ,
திருவண்ணாலை

மௌலவி,ஃபாஜில்,
S.மதார் ஷாஹ் மன்பயீ,
சக்கிமங்கலம்,மதுரை மாவட்டம்.

மௌலவி,ஃபாஜில்.
M.அன்வர்தீன் மன்பயீ,
பண்ருட்டி,கடலூர் மாவட்டம்.

மௌலவி,ஃபாஜில்,ஹாஃபிழ்.
M.அப்துஸ்ஸமது மன்பயீ,
லால்பேட்டை,கடலூர் மாவட்டம்.

மௌலவி,ஃபாஜில்.
M.முஹம்மது ஸாலிஹ் மன்பயீ.
பூலாம்பட்டி,சிவகங்கை மாவட்டம்.

மௌலவி,ஃபாஜில்.
J.ஸாதிக் மீரான் மன்பயீ,
நந்திய பாக்கம்.திருவள்ளூர் மாவட்டம்.

மௌலவி,ஃபாஜில்,ஹாஃபிழ்.
K.ஹிளுர் முஹம்மது மன்பயீ.
லால்பேட்டை,கடலூர் மாவட்டம்.

மௌலவி,ஃபாஜில்,ஹாஃபிழ்
A.உபைதுல்லாஹ் மன்பயீ,
லால்பேட்டை,கடலூர் மாவட்டம்.

மௌலவி ஃபாஜில்,
M.அப்துல் கரீம் மன்பயீ,
கம்பம்,தேனி மாவட்டம்.

மௌலவி,ஃபாஜில்
K.A.ஸமீஉல்லாஹ் மன்பயீ,
சங்ககிரி,சேலம் மாவட்டம்.

மௌலவி ஆலிம் ஸனது பெறுபவர்கள்.

மௌலவி,ஆலிம்,ஹாஃபிழ்
Y.சதாம் ஹுஸைன் மன்பயீ,
கல்மேல் குப்பம்,வேலூர் மாவட்டம்.


மௌலவி,ஆலிம்,ஹாஃபிழ்
S.ஜாஃபர் ஸாதிக் மன்பயீ,
மேலப்பாளையம்,நெல்லை மாவட்டம்.

மௌலவி,ஆலிம்.ஹாஃபிழ்
K.முஹம்மது ரியாஸ் மன்பயீ,
கல்மேல் குப்பம்,வேலூர் மாவட்டம்.

மௌலவி,ஆலிம்.
S.முஹம்மது இல்யாஸ் மன்பயீ,
கருங்கல் பாளையம்.ஈரோடு.

மௌலவி,ஆலிம்,ஹாஃபிழ்
M.S.அப்துர் ரஹீம் மன்பயீ,
விளாச்சேரி,மதுரை மாவட்டம்.


மௌலவி,ஆலிம்,ஹாஃபிழ்
M.ஷேக் அப்துல்லாஹ் மன்பயீ,
மாடம் பாக்கம்,காஞ்சிபுரம் மாவட்டம்.


மௌலவி,ஆலிம்,ஹாஃபிழ்
K.A.குதுரதுல்லாஹ் மன்பயீ,
நவாப் பேட்டை,ஆந்திரா மாநிலம்.

மௌலவி,ஆலிம்,
R.அப்துல் கனி மன்பயீ,
மேலஅனுப்பாளடி, மதுரை மாவட்டம்.

மௌலவி,ஆலிம்,
A.ஃபயாஸ் அஹ்மது மன்பயீ,
ஜா -- நகர் வடக்கு குளக்குடி,
லால்பேட்டை,கடலூர் மாவட்டம்.

மௌலவி,ஆலிம்,
A.சைய்யது அபூதாஹிர் மன்பயீ,
B.துலுக்கப்பட்டி,தேனி மாவட்டம்.

மௌலவி,ஆலிம்,ஹாஃபிழ்
M.அஹ்மது ஸலீம் மன்பயீ,
T.M.P.நகர்,பாடி,சென்னை.

மௌலவி,ஆலிம்,ஹாஃபிழ்
J.ஜாஹிர் ஹுஸைன் மன்பயீ,
ஜா -- நகர் வடக்கு குளக்குடி,
லால்பேட்டை,கடலூர் மாவட்டம்.

மௌலவி,ஆலிம்,ஹாஃபிழ்
S.அஹ்மது கபீர் மன்பயீ,
பரமக்குடி,இராமநாதபுரம் மாவட்டம்.

மௌலவி,ஆலிம்,
B.முஹம்மது யூசுஃப் மன்பயீ,
விருத்தாச்சலம்,கடலூர் மாவட்டம்.

மௌலவி,ஆலிம்,ஹாஃபிழ்
N.அபுல் பைஸல் மன்பயீ,
லால்பேட்டை,கடலூர் மாவட்டம்.

இவண் ;
தங்களை அன்புடன் அழைத்து மகிழும்
நிர்வாகக் குழு மற்றும்
150 ஆம் ஆண்டு விழாக் குழு
ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரி
லால்பேட்டை,608303 கடலூர் மாவட்டம்
போன் ; 04144 --269079

இம்மாபெரும் 150 ஆம் ஆண்டு பெருவிழா மென் மேலும் சிறக்க, சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினரும், சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்,
அகமுவந்து துஆச்செய்கிறார்கள்.
வஸ்ஸலாம்.

குறிப்பு ;
இரண்டு நாட்கள் நடைபெறும் இம்மாபெரும் 150 ஆம் ஆண்டு பெருவிழா,  lalpet express,lalpet net,
ஆகிய இணைய தளங்களில், நேரடி ஒளிபரப்புச் செய்யப்படுகிறது. பார்த்து பயனடையவும்.




வெளியீடு ; மன்பயீ ஆலிம்.காம்.

Wednesday, June 19, 2013

நம் வாழ்வில் ஒரு முறை..... 150 -- ஆம் ஆண்டு விழா!


நம் வாழ்வில் ஒரு முறை.....

150 -- ஆம் ஆண்டு விழா!

லால்பேட்டையின் புகழுக்கு புகழ் சேர்க்கும்...
'' ஜாமிஆ மன்பவுல் அன்வாரின் '' 150 --ஆம் ஆண்டு விழா!
இந்திய அரபுக் கல்லூரிகளில் 150 -ஆம் ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடும் ''முதல் அரபுக் கல்லூரி '' எனும் நற்பேற்றினை பெறும் '' ஜாமிஆ மன்பவுல் அன்வாரின் '' 150 -ஆம் ஆண்டு விழா!
தமிழ் முஸ்லிம் சமுதாயத்திற்கு புத்துணர்வூட்டும் பெருவிழா!

இன்ஷா அல்லாஹ்....
வரும் ஜூன் மாதம் 22,23 --ஆம் தேதிகளில் சனி,ஞாயிற்றுக்கிழமைகளில்

லால்பேட்டையில் நடைபெறவிருக்கிறது
இந்தியாவின் மிகப்பெரும் பேரறிஞர்களும்,தமிழக முஸ்லிம் சமுதாயத்தின் மொத்தப் பிரதிநிதிகளும்,உரையாற்றவிருக்கும் லால்பேட்டையின் இந்த 150 ஆவது ஆண்டு விழாவில் 
இன்ஷா அல்லாஹ் கலந்து சிறப்பிக்க....

இன்றே தயாராகுவோம்! இப்போதே ஆயத்தமாகுவோம்!

லால்பேட்டை  '' ஜாமிஆ மன்பவுல் அன்வாரின் '' முன்னால் மாணவர்களே!
லால்பேட்டையிலிருந்து ''மன்பயீ ஆலிம் ''பட்டம் பெற்றவர்களே!
லால்பேட்டையிலிருந்து ''மன்பயீ ஃபாஜில் '' ஸன்னது  பெற்றவர்களே!
லால்பேட்டையிலிருந்து ''ஹாஃபிழ் ஸன்னது  பெற்றவர்களே!
அவர்களைப் பெற்றெடுத்த பெருமைக்குரியவர்களே!
அவர்களோடு பிறந்த பேறு பெற்றவர்களே!
அவர்களோடு இணைந்த பெருமக்களே!
அவர்களின் சன்மார்க்கப் பணியால் சமுதாய சீலர்களாக வாழ்பவர்களே!

வாருங்கள்! வாருங்கள்!

அல்லாஹ் நமக்கு அளித்த வயதில் ஒரு முறையாவது.....
சத்திய சன்மார்க்கத்திற்காக இதய சுத்தியோடு உருவாக்கப்பட்ட 
ஓர் அரபுக் கல்லூரியின் 150 --வது ஆண்டு விழாவில்
இன்ஷா அல்லாஹ் கலந்து சிறப்படைவோம்! மனம் மகிழ்ச்சியடைவோம்!
மிக்க அன்புடன் ;சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் கிளை மற்றும் மலேசியக் கிளைகள்.


வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்.

லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் 150 ஆம் ஆண்டு பெருவிழா & 69 ஆம் ஆண்டு பட்டமளிப்பு பெருவிழா அழைப்பிதழ் !!!


அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ 
அல்லாஹ் தஆலாவின் பேரருளால் நிகழும் ஹிஜ்ரி 1434 ஷஅபான் பிறை 12,13, 
(22,23,06.2013) சனி,ஞாயிற்றுக்கிழமைகளில்,காலை 9.00 மணி முதல் 
ஜாமிஆவின் ஈத்காஹ் மைதானத்தில் இன்ஷா அல்லாஹ் 150 --ஆம் ஆண்டு பெருவிழாவும்,
69 ஆம் ஆண்டு பட்டமளிப்பு பெருவிழாவும் நடைபெறவிருக்கிறது.

150 ஆம் ஆண்டு மாநாடு
22-06-2013 சனிக்கிழமை முதல் அமர்வு
(நேரம் காலை 9-00 மணிமுதல் பகல் 1-30 மணிவரை)

மாநாட்டுத் தலைவர் ;

ஜாமிஆவின் தலைவர்,அல்ஹாஜ்
P.M.முஹம்மது ஆதம் அவர்கள்.

முன்னிலை ;

ஜாமிஆவின் மூத்த பேராசிரியர் 
 ஷைகுல் ஃபிக்ஹ்,மௌலானா,முஃப்தி,அல்ஹாஜ்
S.A.அப்துர் ரப் ஹள்ரத் தாமத் பரகாத்துஹூ

நிகழ்வுகள்.

வரவேற்புரை ;

ஜாமிஆவின் பொருளாலர்,அல்ஹாஜ்
S.ஜாஃபர் அலீ B.Sc...அவர்கள்

தொடக்கவுரை ;

ஆயங்குடி,யன்பூஉல் கைராத்,மௌலவி,அல்ஹாஜ்
P.A.ஜாபர் அலீ மன்பயீ ஹள்ரத் அவர்கள்

வாழ்த்துரை & சிறப்புரை ;

காயிதே மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர்
அல்ஹாஜ் M.அப்துர் ரஹ்மான் M.A.,M.P.. அவர்கள்.

இந்திய தேசிய லீக்கின் தேசியத் தலைவர்
பேராசிரியர் முஹம்மது சுலைமான் அவர்கள்.(U.P)

முன்னால் அமைச்சர்
திரு M.R.K.பன்னீர் செல்வம் B.A.B.L அவர்கள்.

மனித நேய  மக்கள் கட்சி பொதுச்செயலாளர்
ஜனாப் M.தமீமுல் அன்ஸாரி M.B.A  அவர்கள்.

ஷோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் 
தமிழ் நாடு மாநிலத் துணைத்தலைவர்
ஜனாப் S.M.ரபீக் அஹ்மது அவர்கள்.

பெரியகுளம் நாடாளுமன்ற உறுப்பினர்.
ஜனாப் J.M.ஹாரூன் M.P  அவர்கள்.

சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர்
திரு.தொல்.திருமாவளவன் M.A.B.L.M.P.,அவர்கள்.

ராஜிவ் காந்தி கல்வி அறக்கட்டளைத் தாளாளர்
மனித நேய பண்பாளர் திரு.K.I.மணிரத்தினம் அவர்கள்.

நன்றியுரை ;

ஜனாப். S.M.ரியாஜுல்லாஹ் அவர்கள்.
EXELANT TRAVELS.

22-06-2013 சனிக்கிழமை இரண்டாம்  அமர்வு
(அஸருக்குப்பின் மஃரிப் வரை)

சிறப்பு கருத்தரங்கம்

தலைப்பு ; இஸ்லாமே தீர்வு

தலைவர் ;

இளையான்குடி,ரஷீதிய்யா அரபுக் கல்லூரியின் முதல்வர்,
மௌலானா,ஹாஃபிழ்,அஃப்ழலுல் உலமா.
முஹம்மது ராஜூக் மன்பயீ ஹள்ரத் அவர்கள்.

கருத்தாளர்கள் ;

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் 
மனித நேய மக்கள் கட்சித் தலைவர்
மௌலவி J.S.ரிஃபாயீ ரஷாதீ அவர்கள்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர்.
அல்ஹாஜ் K.A.M.அபூபக்கர் B.Sc.,அவர்கள்.


ஷோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் 
தமிழ் நாடு மாநிலத் தலைவர்.
மௌலவி K.S.M.தெஹ்லான் பாக்கவீ அவர்கள்.

22-06-2013 சனிக்கிழமை மூன்றாம்  அமர்வு
(இரவு 7-00 மணி முதல்  10.30 மணிவரை)

சமூக ஒற்றுமை மற்றும் 
150 ஆம் ஆண்டு மலர் வெளியீட்டுஅரங்கம்.

தலைவர் ;

'' குர்ஆனின் குரல் '' மாத இதழின் ஆசிரியர்,
மௌலானா,மௌலவீ,முஃப்தீ, '' அஸ்அதுல் மில்லத் '' அல்ஹாஜ்
அ.முஹம்மது அஷ்ரப் அலீ மன்பயீ ஹள்ரத் அவர்கள்.

முன்னிலை உலமாப் பெருமக்கள்.

இன்ஷா அல்லாஹ் 150 ஆம் ஆண்டு மலர் முதல் பிரதியை 
வெளியிடுபவர்கள்.

ஜாமிஆவின் தலைவர்
அல்ஹாஜ்  P.M.முஹம்மது ஆதம் அவர்கள்.

ஜாமிஆவின் முதல்வர்,மௌலானா ஹாஃபிழ்,காரீ,
அல்ஹாஜ் A.நூருல் அமீன் மன்பயீ ஹள்ரத் அவர்கள்.

முதல் பிரதியை பெறுபவர்.

இந்திய தேசியலீக் மாநிலத் தலைவர் '' சமுதாயப் புரட்சியாளர் ''
அல்ஹாஜ் M.பஷீர் அஹ்மது M.A.அவர்கள்.


சிறப்புரையாளர்கள் ;

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியப் பொதுச்செயலாளர் & 
தமிழகத் தலைவர் '' முனீருல் மில்லத் ''
அல்ஹாஜ் K.M.காதர் மொஹிதீன் Ex.M.P., அவர்கள்.

மனித நேய  மக்கள் கட்சியின் சட்ட மன்ற கட்சி தலைவரும்,
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 
மூத்த தலைவருமான முனைவர்.
M.H.ஜவாஹிருல்லாஹ் M.B.A.,M.Phil.,Ph.D.,M.L.A.,அவர்கள்.

தமிழக பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
வக்ஃப் வாரிய அமைச்சர்.
மாண்புமிகு  A.முஹம்மது ஜான் அவர்கள்.

தமிழக சுற்றுச்சூழல் மற்றும்
மாசுக்கட்டுப்பாட்டுத்துறை அமைச்சர்.
மாண்புமிகு M.C.சம்பத் M.Sc.,அவர்கள்.

இந்திய தேசிய லீக் மாநிலப் பொதுச் செயலாளர்.
'' கவிமாமணி '' தி.மு. அப்துல் காதர் அவர்கள்.

பாப்புலர்  ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் 
தமிழ் நாடு மாநிலத் தலைவர்.
ஜனாப். A.S.இஸ்மாயீல் அவர்கள்.

காட்டு மன்னார்குடி சட்ட மன்ற உறுப்பினர்.
திரு.N.முருகுமாறன் B.Sc(Agri).,M.L.A அவர்கள்.

நன்றியுரை ;

ஜாமிஆவின் செயலாளர்
அல்ஹாஜ் P.A.முஹம்மது எஹ்யா அவர்கள்.




வெளியீடு ;மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

Wednesday, June 5, 2013

மிஃராஜ் விண்ணேற்றப் பயணம் !!!



سُبۡحَـٰنَ ٱلَّذِىٓ أَسۡرَىٰ بِعَبۡدِهِۦ لَيۡلاً۬ مِّنَ ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِ إِلَى ٱلۡمَسۡجِدِ ٱلۡأَقۡصَا ٱلَّذِى بَـٰرَكۡنَا حَوۡلَهُ ۥ لِنُرِيَهُ ۥ مِنۡ ءَايَـٰتِنَآ‌ۚ إِنَّهُ ۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلۡبَصِيرُ 


(அல்லாஹ்) மிகப் பரிசுத்த மானவன் அவன் முஹம்மது ( ஸல் ) என்னும் தன் அடியாரைக் ( கஅபாவாகிய ) சிறப்புற்ற பள்ளியிலிருந்து ( வெகு தூரத்தில் இருக்கும் பைத்துல் முகத்தஸிலிலுள்ள ) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஒரே இரவில் அழைத்துச் சென்றான்.அவ்வாறு அழைத்துச் சென்ற ) நாம் அதனைச்சூழவுள்ளவை சிறப்புற்று ஓங்க அபிவிருத்தி அடையச் செய்திருக்கிறோம். நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப் பதற்காகவே (அங்கு) அழைத்துச் சென்றோம்.நிச்சயமாக ( உங்களது இறைவன்) செவியுறுபவனாகவும் உற்று நோக்கினவனாகவும் இருக்கின்றான்.(அல்குர்ஆன் -17-1 )

மிஃராஜ் -- விண்ணகப் பயணம் உலக வரலாற்றிலும்,சமைய வரலாற்றிலும்,அது வரை நடந்திராத அது மாதிரி இது வரையும் நடக்காத அதி அற்புத பயணம்.நபிமார்களின் சரித்திரத்திலும் நிகழாத அதிசயமான ஒரு சம்பவம்.யாரும் அடையாத சிகரத்தை இதன் மூலம் நபி நாயகம் ( ஸல் ) அடைந்தார்கள். இதனால் மிஃராஜ் பற்றி சொல்ல வந்த அல்லாஹ் ஆச்சரியமானதைக்குறிக்கும் சுப்ஹானவைக் கொண்டு தொடங்குகின்றான்.

நாம் வாழும் இப்பூ பாகத்திலிருந்து சூரியன் 9 கோடியே 30 லட்சம் மைல் தொலைவில் உள்ளது.அங்கிருந்து நமது பூமிக்கு சூரிய ஒளி 8 நிமிடத்தில் வந்து சேருகிறது.ஒளியின் வேகம் ஒரு செகண்டுக்கு ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 282 மைல் தூரமாகும்.இந்த ஒளி வேகத்தில் நமக்கு அருகிலிருக்கும் நட்சத்திரத்தின் ஒளி பூமிக்கு வர 4 1/2   (நாளரை) வருடமாகிறது.மணிக்கு பத்தாயிரம் மைல் வேகத்தில் பயணிக்கும் ஒரு ராக்கெட் அருகிலிருக்கும் அந்த நட்சத்திரம் வரை போய் சேர எழுபதாயிரம் வருடம் வரை ஆகும். இந்த நட்சத்திரத்தை மட்டுமல்ல தூரமாக இருக்கும் எல்லா நட்சத்திரங்களையும்,ஏழு வானங்களையும் கடந்து சித்ரத்துல் முன்தஹாவை அடைந்து அங்கிருந்து மேலும் முன்னேறி அல்லாஹ்வை அடைந்து கண்டு அலவலாவி வந்த நமது நாயகம் (ஸல்) அவர்களின் இந்த விண்ணேற்றப் பயணம் ஒரு அதிசயம் இல்லாமல் வேறு என்ன? இவ்வளவு தூரத்தில் சென்று இவ்வளவு உயரத்தில் உயர்ந்து நரகம் கண்டு,சொர்க்கம் சுற்றிப் பார்த்து முன்னதாக,பைத்துல் முகத்தஸிலும்,வானத்திலும்,நபிமார்களை,மலக்குமார்களை கண்டு,அவர்களுடன் உரையாடி,அவர்களுக்கு இமாமத் செய்து தொழ வைத்து,நிறைவாக இறை தரிசனம் பெற்று திரும்பிய இந்த சம்பவம் நீண்ட நெடிய நேரமோ,மாதக்கணக்கில,வருடக்கணக்கிலோ நடந்த நிகழ்வல்ல.ஒரு இரவின் கொஞ்ச நேரத்தில் நடந்ததாக  '' லைலன் '' என்ற பதப்பிரயோகம் மூலம் குர்ஆன் தெளிவு படுத்துகிறது. '' லைலன் '' நக்கிரவாகும். ( பொதுப் பெயர்ச் சொல்லாகும் )  இது இரவின் சொற்ப சமையம் என்னும் பொருளை இங்கே தருகிறது.

படுத்த படுக்கையின் சூடு கூட ஆறவில்லை.ஒழுச்செய்த தண்ணீரின் சலனம் கூட அடங்கவில்லை.கதவின் தாழ்பாலின் அசைவுகள் கூட நிற்கவில்லை.அவ்வளவு சீக்கிரம் நடந்து முடிந்த சம்பவம் என்று ஹதீஸ் விவரிக்கிறது. '' ஒளியின் வேகத்தில் பயணிக்கிறவர்களுக்கு காலம் என்பது இயங்குவதில்லை '' என்று 19- ஆம் நூற்றாண்டில் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் சொன்னான்.உதாரணத்திற்கு -- ஒரு நண்பருக்கு 35 வயது.அவருடைய மனைவிக்கு 30 வயது.அவர் மட்டும் தனியே ஒளிவேகத்தில் பயணிக்கும் ஊர்தியில் கிளம்பிப் போகிறார்.ஒரே ஒரு நாள் மட்டும் ஒளியின் வேகத்தில்,விண்வெளியில் பயணிக்கிறார்.மறு நாள் ஊர் திரும்புகிறார் நண்பர்.அப்போது அவரை வரவேற்க வந்த மனைவிக்கு வயது 90.ஆனால் நண்பருக்கோ 35 வயதிலிருந்து ஒரே ஒரு நாள் மட்டும் கூடியிருக்கிறது.ஒளியின் வேகத்தில் பயணிக்கிறவர்களுக்கு இது மாதிரியான வினோதங்கள் சகஜம்.

ஹளரத் உம்மு ஹானி (ரலி) அவர்களின் வீட்டுக்கூரையைப் பிய்த்துக்கொண்டு இறங்கிய ஜிப்ரயீல் (அலை) அவர்கள் அங்கே படுத்திருந்த பெருமானாரை எழுப்பி அழைத்துக்கொண்டு கஃபாவிற்கு வருகிறார்கள்.அங்கே நபி (ஸல்) அவர்களின் நெஞ்சை பிளந்து இதயத்தை தனியாக எடுத்து சொர்க்கத்திலிருந்து தான் கொண்டு வந்திருந்த தங்க கிண்ணத்தில் வைத்து ஸம் ஸம் நீரால் கழுவினார்கள்.இன்று இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெறுவதற்கு இந்த  ஹதீஸ் நல்ல முன்னுதாரணம்.சொர்க்கத்து நீரான மாவுல் கவ்ஸரையோ,தஸ்னிம் ஓடைத் தண்ணீரையோ ஜிப்ரயீல் (அலை) அவர்கள் கொண்டு வந்து கழுவாமல் ஸம் ஸம் நீரால் கழுவியது ஸம் ஸமின் சிறப்பை பறைசாட்ட போதுமான சான்று.கழுவிய நீரை ஸம் ஸம் கிணற்றில் ஊற்றப்பட்டதால் ஸம் ஸம் கிணறும் வற்றாமல் வளம் குறையாமல் குடிக்கும்போது நாடிய நாட்டத்தை நிறைவேற்றும் அற்புத ஜலமாக நோயைக்குணப்படுத்தும் புனித தீர்த்தமாக இருக்கிறது.இதன் மூலம் ஸம் ஸம் தன்னைக் கழுவி சுத்தப்படுத்திக்கொண்டது.

மிஃராஜ் பயணத்திற்கு முன்பு பெருமானார் (ஸல்) அவர்களின் இதயம் ஏன் கழுவப்பட்டது ? விண்வெளி வீரர்களைப் பார்த்தால் அவர்கள் தங்களது விண்வெளி பயணத்திற்கென பிரத்யேக விஷேச ஆடை அணிந்திருப்பார்கள். அதன் எடை மட்டும் 200 பவுண்ட் இருக்கும்.சுவாசிப்பதற்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் தன்னுடன் சேர்த்து பொறுத்தியிருப்பர்.காற்று  மண்டலத்தை தாண்டி நெருப்பு மண்டலத்தை கடந்து சென்ற நாயகம் ( ஸல் ) அவர்கள் இது மாதிரியான எந்த ஒரு ஆடையையும்,சுவாசிப்பதற்கு தேவையான எந்த ஆக்ஸிஜன் சிலிண்டரையும் தன்னுடன் இணைத்துக் கொள்ளவில்லை.விண்வெளி ஓடத்தில் வீரர்களுக்கு என்று விஷேசமான இருக்கைகள் இருக்கும்.வெளியில் ஏற்படும் எந்த குலுக்கத்திற்கும் அவர்கள் குலுங்கமாட்டார்கள்.கலத்தை உந்திச் செலுத்தும் ராக்கெட் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு சென்ற பிறகு அதன் ஒரு பகுதி கழற்றி விடப்படும்.அப்போது ஏற்படும் சப்தம் சாதாரணமாக யாரும் கேட்டால் இறந்து விடுவர்.இதுமாதிரியான எந்தப் பாதிப்பும்,விண்வெளிவீரருக்கு வராத விதத்தில் கலத்தின் உள்வடிவம் கவர் செய்யப்பட்டிருக்கும். ஆனால் நபியவர்கள் சென்ற புராக் வாகனம் வெளியே கவர் செய்யப்படாத ஒரு வெளிப்புற வாகனம்.இவ்வளவு வேகத்தில் காற்றோடு உரசிக்கொண்டு சென்றபோதும்,நெருப்பு மண்டலத்தை தாண்டிச் சென்ற போதும் நெருப்பு பிடிக்கவில்லை.காற்றழுதத் தாழ்வு மண்டலத்தை தாண்டி சென்ற சர்தார் நபி (ஸல்) மூச்சு விடுவதில் எந்த சிரமமும் படவில்லை.

ஏனென்றால்,நபியின் இதயம் கழுவப்பட்டது.அதாவது இதயம் எல்லா இடத்திலும் எல்லா காலத்திலும்,எல்லா சமையத்திலும் இயங்குவதற்கு தோதுவாக இதயமே மாற்றப்பட்டது.ஆக்ஸிஜன் இல்லாமலும் சுவாசிப்பதற்கு தோதுவாக,வசதியாக அவர்களின் இதயம் ஸம் ஸமில் கழுவி மாற்றப்பட்டது.நம்மைப்போல மூச்சுவிடுவதற்கு அவர்களுக்கு ஆக்ஸிஜன் அவசியம் இல்லை.அது இருந்தாலும் இல்லாவிட்டாலும்,அவர்களால் சுவாசிக்கமுடியும்.நெருப்பைக் கடந்து போனாலும் நெருப்பு அவர்களைத் தீண்டாது.நபி இப்ராஹீம் (அலை) அவர்களை தீயில் போட்டபோது அது குளிர்ந்த பூஞ்சோலையாக மாற்றப்பட்டது.என்று குர்ஆன் ( 21 ; 69 ) கூறுகிறது.ஆனால் நமது நாயகம் (ஸல்) அவர்களுக்கு நெருப்பு பூஞ்சோலையாக மாறவில்லை மாறவேண்டிய அவசியமும் இல்லை.நெருப்பு நெருப்பாக கொழுந்துவிட்டு எரிந்தாலும்,அதிலும் அவர்களின் இதயம் இயங்கும்.சுகமாக சுவாசிப்பார்கள்.அவர்கள் உடல் எரிந்து போகாது ஈமானாலும்,ஞானத்தாலும் நிரப்பப்பட்டு அந்த இதயம் திரும்ப நபி (ஸல்) அவர்களின் நெஞ்சில் வைத்து தைக்கப்பட்டது.'' என்று புஹாரி ஷரிபு உள்ளிட்ட ஹதீஸ் கிரந்தங்கள் விவரிக்கிறது.சக்தி வாய்ந்த ஈமான் ஞானத்தால் நிரப்பப்பட்ட நெஞ்சம் அமைந்த அந்த புனிதமான உடலை நெருப்பு தொடாது என்பது மட்டுமல்ல அவர்களின் உடல் பட்ட எந்த வஸ்துவையும் கூட தீ தீண்டாது.தீண்டியதும் இல்லை.

பத்து வருடம் பணிவிடை செய்த நபித்தோழர் ஹள்ரத் அனஸ் (ரலி) அவர்களிடம் ஒரு சுப்ரா -- 
(உணவு விரிப்பு )ஒன்று இருக்கிறது.அது அழுக்கானால் தண்ணீரால் கழுவாமல் அதை தீயில் எடுத்துப் போட்டு விடுவார்கள். தீ அந்த சுப்ராவைச் சுடாமல் சுத்தப்படுத்தி பளபளப்பாக்கும் என்ற ஹதீஸை மௌலானா ஜலாலுத்தீன் ரூமி (ரஹ்) தனது மஸ்னவி ஷரீஃபில் பாடுவார்கள்.சுப்ராவை ஏன் நெருப்புச் சுடவில்லை? என்றால் அது அண்ணலார் (ஸல்)அவர்கள் பயன்படுத்தியது அவர்களின் புனித கரம் அதில் பட்டிருப்பதால் தீயின் ஜூவாலை அதை எரிக்கவில்லை என்று மௌலானா ரூமி தமது மஷ்னவி ஷரீஃபின் பாடலை முடிப்பார்கள்.ஒரு முறை அன்னை பாத்திமா (ரலி) அவர்கள் தனது கையால் மாவு பிசைந்து அதைத் தட்டி பரத்தி ரொட்டிச் சுட்டுக்கொண்டிருந்தார்கள்.தனது அன்பு மகளுக்கு உதவலாம் என்று தானும் தனது கரத்தால் மாவைத் தட்டி நபியவர்கள் கொடுக்க அதை வாங்கி அடுப்பில் வைத்தார்கள் பாத்திமா (ரலி) அவர்கள்.ஆனால் ரொம்ப நேரம் ஆகியும் மாவு வேகாமல் இருந்தது.அதை திரும்ப திரும்ப திருப்பி திருப்பி அடுப்பில் வைத்தும் அது வேகவே இல்லை.தான் தட்டிய மாவு வெந்து ரொட்டியானது ஆனால் அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தட்டிய மாவு வேகவில்லையே என கவலையுடன்.கண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் கனிவாக கூறியபோது மகளே! கவலை வேண்டாம்.எனது கரம் பட்டது பற்றி எரியாது என்பது உனக்குத் தெரியாதா? நான் தட்டி கொடுத்த மாவை  நெருப்பு சுட்டால்தானே ரொட்டி வேகும்.நெருப்பே சுடவில்லையெனில் எப்படி வேகும் எனக்கேட்டார்கள்.நாயகம் (ஸல்)அவர்கள் இந்த விண்வெளிப் பயணத்தில் காற்று மண்டலத்தைத் தாண்டி வெட்ட   வெளிக்குச் செல்கிறபோதும், அவ்வாறே திரும்பும் போதும், வெட்ட வெளியிலிருந்து காற்று மண்டலத்தில் பிரவேசிக்கும் போதும் ஏற்படும் உராய்வினால், உஸ்னம் அதிகமாகி நெருப்புப்பிடிக்கும். ஆனால் நாயகத்  திருமேனியை நெருப்புத் தொடவில்லை.என்பதால்தான் இந்த மிஃராஜ் பயணம் இந்த வகையிலும் அதிசயமாக இருக்கிறது.

                                                என்றும் தங்களன்புள்ள.



மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா 
எஸ்.எஸ்.அஹமது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்
( தலைமை இமாம்,மஸ்ஜித் இந்தியா,கோலாலம்பூர்,மலேசியா )


வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

Saturday, June 1, 2013

புனிதம் வாய்ந்த மிஃராஜ் இரவை முன்னிட்டு சிறப்பு பயான் மற்றும் திக்ர் மஜ்லிஸ் !!!



முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! வமுஸல்லிமா !!

வரலாற்றுச் சிறப்பு மிக்க மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவில் பாரம்பரியமாக தொண்டு தொட்டு,ஒவ்வொரு வருடமும்,நடைபெற்று வரும் புனிதம் வாய்ந்த மிஃராஜ் இரவின்  சிறப்பு பயான் மற்றும் திக்ர் மஜ்லிஸ்  இவ்வாண்டு,இன்ஷா அல்லாஹ் 05--06-2013  புதன் மாலை  -- வியாழன் இரவு  
( ரஜப் பிறை 27-- 1434 ) அன்று மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது.என்பதை, 
மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அல்ஹம்துலில்லாஹ்.வலமை போல்  இஷாத் தொழுகைக்குப் பின்  சிறப்பு பயான் -- திக்ர் மஜ்லிஸ் மற்றும் சிறப்பு வாய்ந்த துஆ மஜ்லிஸும்,மஸ்ஜித் இந்தியாவின் கண்ணியமிகு இமாம்,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா.எஸ்.எஸ்.அஹ்மது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத் கிப்லா, அவர்களது  சீரிய தலைமையில் நடைபெறும்.இது போன்று மலேசியாவில் உள்ள நூற்றுக் கணக்கான மதரஸாக்களிலும்,மற்றும் உலகம் முழுவதும் அனைத்து பள்ளி வாசல்களிலும்,புனிதம் வாய்ந்த மிஃராஜ் இரவின்  சிறப்பு பயான் மற்றும் திக்ர் மஜ்லிஸ் நடைபெறும்.மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த மஜ்லிஸில் அனைவரும் தவறாது கலந்து கொண்டு,அல்லாஹ்வின் அளப்பெரும்,அன்பையும்,அருளையும்,பெற்றுக் கொள்ளுங்கள்.வஸ்ஸலாம்....





வெளியீடு ;;- மன்பயீ ஆலிம்.காம்

சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.