நம் வாழ்வில் ஒரு முறை.....
150 -- ஆம் ஆண்டு விழா!
லால்பேட்டையின் புகழுக்கு புகழ் சேர்க்கும்...
'' ஜாமிஆ மன்பவுல் அன்வாரின் '' 150 --ஆம் ஆண்டு விழா!
இந்திய அரபுக் கல்லூரிகளில் 150 -ஆம் ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடும் ''முதல் அரபுக் கல்லூரி '' எனும் நற்பேற்றினை பெறும் '' ஜாமிஆ மன்பவுல் அன்வாரின் '' 150 -ஆம் ஆண்டு விழா!
தமிழ் முஸ்லிம் சமுதாயத்திற்கு புத்துணர்வூட்டும் பெருவிழா!
இன்ஷா அல்லாஹ்....
வரும் ஜூன் மாதம் 22,23 --ஆம் தேதிகளில் சனி,ஞாயிற்றுக்கிழமைகளில்
லால்பேட்டையில் நடைபெறவிருக்கிறது
இந்தியாவின் மிகப்பெரும் பேரறிஞர்களும்,தமிழக முஸ்லிம் சமுதாயத்தின் மொத்தப் பிரதிநிதிகளும்,உரையாற்றவிருக்கும் லால்பேட்டையின் இந்த 150 ஆவது ஆண்டு விழாவில்
இன்ஷா அல்லாஹ் கலந்து சிறப்பிக்க....
இன்றே தயாராகுவோம்! இப்போதே ஆயத்தமாகுவோம்!
லால்பேட்டை '' ஜாமிஆ மன்பவுல் அன்வாரின் '' முன்னால் மாணவர்களே!
லால்பேட்டையிலிருந்து ''மன்பயீ ஆலிம் ''பட்டம் பெற்றவர்களே!
லால்பேட்டையிலிருந்து ''மன்பயீ ஃபாஜில் '' ஸன்னது பெற்றவர்களே!
லால்பேட்டையிலிருந்து ''ஹாஃபிழ் ஸன்னது பெற்றவர்களே!
அவர்களைப் பெற்றெடுத்த பெருமைக்குரியவர்களே!
அவர்களோடு பிறந்த பேறு பெற்றவர்களே!
அவர்களோடு இணைந்த பெருமக்களே!
அவர்களின் சன்மார்க்கப் பணியால் சமுதாய சீலர்களாக வாழ்பவர்களே!
வாருங்கள்! வாருங்கள்!
அல்லாஹ் நமக்கு அளித்த வயதில் ஒரு முறையாவது.....
சத்திய சன்மார்க்கத்திற்காக இதய சுத்தியோடு உருவாக்கப்பட்ட
ஓர் அரபுக் கல்லூரியின் 150 --வது ஆண்டு விழாவில்
இன்ஷா அல்லாஹ் கலந்து சிறப்படைவோம்! மனம் மகிழ்ச்சியடைவோம்!
மிக்க அன்புடன் ;சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் கிளை மற்றும் மலேசியக் கிளைகள்.
வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்.
0 comments:
Post a Comment