அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
பதினாறு பதினேழாம் நூற்றாண்டுகளில் தாகித்துக் கிடந்த தமிழ் மண்ணிற்கு பதினெட்டாயிரம் பாடல்களால் தீன் பாசனம் பாய்ச்சிய ஞானச்சுனை - 'பீரப்பா' என தமிழ் உலகம் நேசிக்கும் தக்கலையின் தவஞானி - அறிவுலகம் போற்றுகின்ற மெய்ஞ்ஞான மாமேதை ஷெய்குனா வமுற்ஷிதினா வஹாதீனா அஷ்ஷெய்குல் காமில் பீர்முஹம்மது ஸாஹிபு ஒலியுல்லாஹ் (ரலி) அவர்களின் நினைவுப் பெருவிழா, நிகழ்ச்சி நிரலில் உள்ளபடி இன்ஷா அல்லாஹ் இவ்வாண்டும் இனிதாய் நடைபெற இருக்கின்றது. அனைவரும் கலந்து அருளன்பு பண்பை அளவற்று பெற அன்புடன் அழைக்கிறோம்.
இச்சிறப்பு மிகு மாபெரும் நினைவுப்பெருவிழா
மென்மேலும் சிறக்க, சித்தார் கோட்டை
அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணையதளத்தினர் அகமகிழ்ந்து
வாழ்த்தி துஆச் செய்கிறார்கள். வஸ்ஸலாம்..
வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.
0 comments:
Post a Comment