கோடையில் ஒரு முறை உணவு குளிர் காலத்தில் பத்து முறையை விட சிறந்தது.
ஹாரிஸ் சொல்வார் ;- நித்திய ஜீவிதம் என்பது உலகில் யாருக்கும் இல்லை.அப்படி நிரந்தர ஜீவிதமாக வாழ்வது எவருக்கு சந்தோஷ மளிக்கிறதோ அவர் காலையில் சீக்கிரமாக உணவு உட்கொள்ள வும்.இரவு உணவையும் சீக்கிரமே நேரத்தோடு சாப்பிட வேண்டும். மேலாடையை இலேசாக்கிக் கொள்ளட்டும்.மனைவியருடன் கலவையில் ஈடுபடுவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
பிளாட்டோ சொல்வார் ;- ஐந்து விஷயம் உடலை உறுக்கி விடும். சிலவேளை மரணத்தை சம்பவிக்கும். அவை ;-
1,கையிருப்பு குறைவது.
2,பிரியமானவர்களின் பிரிவு.
3,கோபத்தை உள்ளே விழுங்குவது.
4,அதிர்ச்சியை எதிர் கொள்வது.
5,ஆலோசனை மறுக்கப்படுவது. அறிஞர்களைக் கண்டு அறிஞர்களின் பரிகாசம்.
அப்கராத்தின் வைர வரிகளில் ஒன்று ;- அதிகமானது எல்லாமே இயல்புக்கு – இயற்கைக்கு எதிரானது தான்.
மருத்துவ மேதை ஜாலினூஸிடம் கேட்கப்பட்டது ;- நீங்கள் ஏன் நோயாளியாவதில்லை? அதற்கவர் ;- நான் மட்டமான இரு உணவுகளைக்கு மத்தியில் சேர்த்ததில்லை,உணவின் மீது உணவை நான் திணித்தது இல்லை, பாதிப்பை உண்டாக்கும் எந்த உணவையும் [அதை மலஜலம் கழித்து வெளியேற்றாமல்] இரைப்பையில் நான் தடுத்து வைத்த தில்லை என்று பதிலளித்தார்.
நான்கு விஷயங்கள் உடலை வியாதிக்குள்ளாக்கும். அவை ;-
1,அதிகமாக தூங்குவது.
2,அதிகமாக திண்பது.
3,அதிகமாக போகம் செய்வது.
4,அதிகமாக பேசுவது.
அதிகமான பேச்சு ;- மூளையின் வீரியத்தை பலவீனப்படுத்தி அதைக் குறைத்து விடும்.
அதிகமான உறக்கம் ;- முகத்தை மஞ்சலாக் [க்கி சோகையாக்]கும், இதயத்தை குருடாக்கும்,கண்ணுக்கு எரிச்சலை உண்டாக்கும், வேலையில் சோம்பேரித்தனத்தை ஏற்படுத்தும்,உடல் பருக்கும், சிரமமான பல வியாதிகளை உண்டாக்கும்.
அதிகமான சம்போகம் ;- உடலை நொறுக்கி விடும்,உடல் வலிமை பலவீனப்படும் – சக்திகளை பலவீனப்படுத்தும்,உடலின் ஈரப்பதம் குறையும்,நரம்பு தளர்ச்சி,மூச்சிரைப்பு ஏற்படும். மொத்தத்தில் இதன் பாதிப்பு உடல் முழுவதும் வியாபிக்கும்.குறிப்பாக மூளையை அதிகமாக பாதிக்கும்.இது மூச்சிரைப்பு உயிர்மூச்சு அதிகமாக வெளியேறுவதால் ஏற்படுகிறது.
நான்கு விஷயங்கள் உடலை தகர்க்கும் ;-
1,துக்கம்.
2,கவலை.
3,பசி.
4,உறக்கமிழப்பு.
நான்கு விஷயங்களைப் பார்ப்பது சந்தோஷமளிக்கும் ;-
1,பசுமை.
2,ஓடும் தண்ணீர்.
3,பிரியமான ஆள்.
4,பழங்கள்.
அந்த முகங்களை
பார்த்தோம் மாலை
ஆன்மாக்கள் ஒளிர்ந்தது
அந்த அழகிய காட்சியால்.
பார்வையைப் பாதிக்கும் நான்கு ;-
1,செருப்பின்றி நடப்பது.
2,வெறுப்புற்றவன்,கனமானவன்,விரோதியின் முகத்தில் விழிப்பது.
3,அதிக அழுகை.
4,சின்ன எழுத்துக்களை அதிகம் கூர்ந்து பார்ப்பது.
உடலுக்கு வலு சேர்க்கும் நான்கு ;-
1,மிருதுவான ஆடை அணிவது.
2,சமச்சீரான காலைக்கடன்.
3,சுவையான இனிப்பான சத்துணவைச் சாப்பிடுதல்.
4,நறுமணங்களை சுவாசிப்பது.
முகத்தின் எழிலையும்,பொலிவையும்,அதன் ஈர நயப்பையும் போக்கி அதை உலர வைக்கும் நான்கு ;-
1,பொய்யுரைப்பது.
2,விசய ஞானமின்றி அதிகம் கேள்வி கேட்பது.
3,வெட்கங்கெட்ட வேலை.
4,போகம் அதிகம் செய்வது.
முகப்பொலிவையும்,செழிப்பையும் பெருக்கும் நான்கு ;-
1,இறையச்சம்,
2,வாய்மை,
3,பெருந்தன்மை,
4,கொடைத்தன்மை.
கோபத்தையும்,வெறுப்பையும் வருத்தும் நான்கு ;-
1,பெருமை,
2,பொறாமை,
3,பொய் சொல்வது,
4,கோள் சொல்வது.
வாழ்வாதாரத்தை வரவழைக்கும் நான்கு ;-
1,இறை வணக்கத்தில் இரவு நிற்பது.
2,சஹர் வேளையில் [அதிகாலையில்] அதிகம் [இஸ்திக்பார்] பிழை பொறுக்கத்தேடுவது.
3,பகலின் ஆரம்பத்திலும், முடிவிலும் திக்ரு – தியாணம் செய்வது.
4,தர்மம் செய்வது.
இரவிடம் கேட்டேன்,
உன் நெஞ்சில் இரகசியம் உண்டா?
இரசியங்களையும்,செய்திகளையும் மறைப்பவனே!
இரவின் அந்தி வேளையில் சினேகிதர்கள் பேசுவதைப் போல
என் வாழ்வில் ஒரு இரகசியத்தையும் நான் கண்டதில்லை என இரவு சொன்னது.
ரிஜ்கை – வாழ்வாதாரத்தை தடுக்கும் நான்கு ;-
1,காலை உறக்கம்.
2,தொழுகையின்மை.
3,சோம்பேறித்தனம்.
4,மோசடி செய்வது.
نوم الصبحة يمنع الرزق
பிராங்க்ளின் கூறுகிறார் ;- சீக்கிரம் தூங்கி,சீக்கிரம் விடியற்காலையில் விழித்தெழுவது ஒருவனை ஆரோக்கியமானவனாகவும், செல்வந்த னாகவும், விவேகமானவனாகவும் ஆக்கும்.
عَنْ عَلِيٍّ قَالَ
نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ السَّوْمِ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ
சூரிய உதயத்திற்கு முன்பு உறங்குவதை அல்லாஹ்வுடைய தூதர் நபி [ஸல்] அவர்கள் தடுத்தார்கள் என்று அலி [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள். [நபிமொழி,இப்னு மாஜா]
عن فاطمة بنت محمد صلى الله عليه وسلم قالت : مر بي رسول الله صلى الله عليه وسلم وأنا مضطجعة متصبحة ، فحركني برجله ، ثم قال : « يا بنية قومي اشهدي رزق ربك ، ولا تكوني من الغافلين ، فإن الله يقسم أرزاق الناس ما بين طلوع الفجر إلى طلوع الشمس »
عن علي ، قال : دخل رسول الله صلى الله عليه وسلم على فاطمة بعد أن صلى الصبح
عن عائشة ، قالت : قال رسول الله صلى الله عليه وسلم : « باكروا طلب الرزق والحوائج ، فإن الغدو بركة ونجاح »
عَنْ صَخْرٍ الْغَامِدِيِّ
عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اللَّهُمَّ بَارِكْ لِأُمَّتِي فِي بُكُورِهَا وَكَانَ إِذَا بَعَثَ سَرِيَّةً أَوْ جَيْشًا بَعَثَهُمْ مِنْ أَوَّلِ النَّهَارِ وَكَانَ صَخْرٌ رَجُلًا تَاجِرًا وَكَانَ يَبْعَثُ تِجَارَتَهُ مِنْ أَوَّلِ النَّهَارِ فَأَثْرَى وَكَثُرَ مَالُهُ
இறையருள் இறங்கும் அதிகாலைப் பொழுதில் இரணம் பங்கீடு செய்யப்படும் வைகரைப் பொழுதில் எழுந்து இறைவனை வணங்கி வாழ்வாதாரம் தேடி வளமான, வசதியான வாழ்வுக்கு வகை செய்யும் விதத்தில் தான் தஹஜ்ஜுத் மற்றும் ஃபஜ்ரு தொழுகையும் அதைத் தொடர்ந்துள்ள தியாணங்களும் மார்க்கத்தில் ஏற்படுத்தப் பட்டுள்ளன.
இந்த அரிய சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தும் பொருட்டு அதிகாலை குளித்து வீடு பெருக்கி தெரு கூட்டி தண்ணீர் தெளித்து ரஹ்மத்துடைய மலக்குமார்களை வரவேற்று பெற வேண்டியைப் பெற்று பெருவாழ்வும் பெருமைக்குரிய வாழ்வும் யார் யாரோ வாழ்ந்து அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்த முபாரக்கான வேளையில் எழுந்திருக்க வேண்டிய முஸ்லிம் சமுதாயம் அதற்காகவே கடமை பட்டுள்ள முஸ்லிம் உலகம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து கொண்டிருப்பது வேதனைக்குரியதாகும்.
ஆரோக்கியமான வளமான வாழ்வுக்கு வழிவகுக்கும் வள்ளல் நபி[ஸல்] அவர்கள் அதற்கு ஆரம்ப ஆலோசனையாக அறிவுறுத்துவது அதிகாலை எழுந்திருப்பாகும்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்......
என்றும் தங்களன்புள்ள.
மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா
எஸ்.எஸ்.அஹமது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்
( தலைமை இமாம்,மஸ்ஜித் இந்தியா,கோலாலம்பூர்,மலேசியா )
வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.
0 comments:
Post a Comment