Monday, June 1, 2015

லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் 71வது பட்டமளிப்பு பெருவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது !!!

20150531_125137

லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் 
152 ஆம் ஆண்டு விழா 71 வது பட்டமளிப்பு விழா, நேற்று
காலை 9.30 மணியளவில் ஜாமிஆவின் தாருல் 
தப்ஸீர் கலைக்கூடத்தில் மிகச்சிறப்பாக நடைப்பெற்றது.
ஜாமிஆத் தலைவர் ஹாஜி அப்துல் ஹமீது தலைமை 
தாங்கினார் ஜாமிஆ செயலாளர் அப்துல் சமது வரவேற்றார்.
வேலூர் பாக்கியாதுஸ் ஸாலிஹாத் அரபுக் கல்லூரி 
முன்னாள் முதல்வர் அல்லாமா ஜைனுல் ஆபீதீன் ஹள்ரத், 

சென்னை அடையார் மவுலவி சதீதுத்தீன் ஹள்ரத், ஆயங்குடி 
மவுலவி ஜாபர் அலி ஹள்ரத், ஜாமிஆ பேராசிரியர் 
அப்துஸ் ஸமது ஹள்ரத், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
தவ்ரத்துல் ஹதீஸ் மவ்லவி ஃபாஜில், மவ்லவி ஆலிம், 
ஹாஃபிழ் ஆகியோருக்கு ஜாமிஆ முதல்வர் மவுலவி 
நூருல் அமீன் ஹள்ரத் ”ஸனது” பட்டம் வழங்கி வாழ்த்தினார்கள். 
ஜாமிஆ பொருளாளர் சார்பில் காசிம் ஹள்ரத் நன்றி கூரினார்.
இறுதியாக ஜாமிஆ மூத்த பேராசிரியர் மவுலவி 
அப்துர் ரப் ஹள்ரத் துஆ உடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது 
அல்ஹம்துலில்லாஹ்.

20150531_124912

20150531_125019

20150531_125022

20150531_125024

20150531_125033

20150531_125042

20150531_125112

20150531_125115

20150531_125120

20150531_125147

jm

jma

jmm

jmma

jmmmm

0 comments:

Post a Comment