Friday, August 17, 2012

ஷஅபான் பிறை 10 முதல் -- ஷஅபான் பிறை 28 வரை நடைபெற்ற சிறப்பு வாய்ந்த மஜ்லிஸ்கள்

முதஅவ்விதன்!முபஸ்மிலன்!!முஹம்திலன்!!! முஸல்லியன் !!!வமுஸல்லிமா!!!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)  
ஆலிம்களின் சிறப்பு பயிற்சி முகாம் 13-06-2012 அன்று புதன் கிழமை காலை 9 மணிமுதல்  2 மணி வரை சென்னை-இராயபுரம் போலிஸ் ஸ்டேசன் எதிரில் உள்ள,ஜெய் பேலஸ் திருமண மண்டபத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இம்முகாமில் கூட்டு துஆ,கழாத் தொழுகை,தராவீஹ் தொழுகை,தற்கொலை செய்து கொண்டவர்களுக்கு ஜனாஸா தொழுகை,தொழுகையில் விரல் அசைத்தல்,தொழுகையில் நெஞ்சின்மீது கை கட்டுதல்,பெருநாளில் திடல் தொழுகை,தொழுகைக்காக பெண்கள் பள்ளிவாசலுக்கு செல்லுதல்,பெருநாள் தொழுகையில் தக்பீர் எண்ணிக்கை,பராஅத் இரவு, மேற்கண்ட தலைப்புகளில் நமது நிலைப்பாட்டிற்கான குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்கள் என்ன? வஹ்ஹாபிகள் அவர்களின் நிலைப்பாட்டிற்கு எதை சான்றாக காட்டுகிறார்கள்?அவற்றிற்கு நமது தரப்பின் பதில் என்ன? இவைகளை உள்ளடக்கிய புத்தக வடிவிலான ஏடு ஒன்று உலமாப் பெருமக்களுக்கு வழங்கப்பட்டு,சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்கத்தின் தலைவர் மௌலானா மௌலவி அல் ஹாஃபிழ் அபுத்தலாயில் எம்.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி MA ஹஜ்ரத் அவர்களால் மிகத் தெளிவான விளக்கமும் அளிக்கப்பட்டது.இதில் ஏராளமான உலமாப் பெருமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். இம் முகாமினை மாநில சுன்னத் ஜமாஅத் பேரியக்கத்தினர்கள்  மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.

காயல் பட்டினம் முஅஸ்கருர் ரஹ்மான் மகளிர் அரபுக் கல்லூரியின்  வெள்ளி விழா மற்றும்  மாணவியர் விடுதி திறப்பு விழா ஜூலை 1 ஆம் தேதி, காயல் பட்டினத்தில் புனித மஜ்லிஸுல் புஹாரிஷ் ஷரீஃப் ஸபையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.இலங்கை மேல் மாகாண கவர்னர் மாண்பு மிகு அல்ஹாஜ் அஸ்ஸெய்யிது அலவி மௌலானா அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.இலங்கை மேல் மாகாண கவர்னரின் தனிச்செயலாளர் அல்ஹாஜ் அஸ்ஸெய்யிது அஹ்மது நகீப் மௌலானா விடுதியை திறந்து வைத்தார்கள்.சென்னை பல்கலைக்கழக,அரபித்துறை பேராசிரியர்,டாக்டர்,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் வி.எஸ்.அன்வர் பாதுஷா உலவி ஹஜ்ரத் அவர்கள் சிறப்புப்பேருரையாற்றினார்கள்.

ஈரோடு பெரிய அக்ரஹாரம் பெரிய பள்ளிவாசல் புதுப்பிக்கப்பட்ட பள்ளி வளாக திறப்பு விழா ஜூலை 6 ஆம் தேதி நடைபெற்றது.ஈரோடு தாவூதியா அரபுக்கல்லூரியின் துணை முதல்வர் மௌலானா பி.எம்.ஜியாவுத்தீன் பாக்கவி ஹஜ்ரத் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.பெங்களூர் ஸபீலுர்  ரஷாத் அரபுக்கல்லூரியின் முதல்வர் மௌலானா மௌலவி முஃப்தி ஏ.முஹம்மது அஷ்ரஃப் அலி பாக்கவி ஹஜ்ரத் அவர்கள் பள்ளி வளாகம்,ஹவுழ் மற்றும் கணினி அறையை திறந்து வைத்து,சிறபுப்பேருரையாற்றினார்கள்.

முஸ்லிம் மாணவர் பேரவை சார்பாக மாநிலம் தழுவிய மாணவ மாணவரிடையே நடைபெற்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த நாள் கட்டுரைப் போட்டி, பரிசளிப்பு விழா ஜூலை 14-ஆம் தேதியில் சென்னையில் நடைபெற்றது.தாய்ச் சபைத் தலைவர்,பேராசிரியர் கே.எம்.காதிர் முஹைதீன் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.இஸ்லாமிய தமிழ் இலக்கிய கழகத்தின் பொதுச்செயலாளர்,பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.சென்னை-அடையாறு பெரிய பள்ளிவாசலின் தலைமை இமாம் மௌலானா மௌலவி சதீதுத்தீன் பாக்கவி ஹஜ்ரத் அவர்கள் சிறப்புப்பேருரையாற்றினார்கள்.

சென்னை-வியாசர்பாடியில் காயிதே மில்லத் ஜும்ஆ மஸ்ஜித்தின்  அடிக்கல் நாட்டு விழா ஜூலை 9 ஆம் தேதி நடைபெற்றது.வீரசோழன்-ஹைராத்துல் இஸ்லாம் அரபுக் கல்லூரியின் முதல்வர் மௌலானா மௌலவி ஓ.எம். அப்துல் காதிர் பாக்கவி ஹஜ்ரத் கிப்லா அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.

தஞ்சை மாவட்டம்-முஹ்யித்தீன் ஆண்டகை ஹனஃபி புதிய பள்ளிவாசல் திறப்பு விழா ஜூலை 13 ஆம் தேதி நடைபெற்றது.கரம்பக்குடி அல் பத்ரிய்யா அரபுக்கல்லூரியின் முதல்வர் மௌலானா எஸ்.ஸதகத்துல்லாஹ் ஆலிம்,ஆலிம் கவிஞர் மௌலானா மௌலவி தேங்கை  ஷரபுத்தீன் மிஸ்பாஹி ஹஜ்ரத் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.தஞ்சாவூர்-ஆற்றங்கரை ஜும்ஆப் பள்ளி தலைமை இமாம் மௌலானா மௌலவி எம்.சைய்யது அஹ்மது மிஸ்பாஹி ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.வேலூர்  தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்,அல்ஹாஜ் எம்.அப்துர் ரஹ்மான் எம்.பி அவர்கள் புதிய இறை இல்லத்தை திறந்து வைத்தார்கள். அய்யம் பேட்டை மௌலானா மௌலவி பி.எம்.ஜியாவுத்தீன் பாக்கவி ஹஜ்ரத் அவர்கள் ஜும்ஆ குத்பா பேருரை வழங்கி,தொழுகை வைத்தார்கள்.

ராத்திபத்துல் ஜலாலிய்யா கிதாபு & கேரள முறை திக்ரு மஜ்லிஸ் குறுந்தகடு வெளியீட்டு விழா ஜூலை 14 ஆம் தேதி சென்னை-நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றது.முனீருல் மில்லத்,பேராசிரியர் காதிர் முஹைதீன் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.மௌலானா மௌலவி எம். ரஃபீக் அஹ்மது உலவி ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். மூன் டி.வி தலைமை நிகழ்ச்சி ஆலோசகர்,மௌலானா அல்ஹாஃபிழ்  எம். சுலைமான் லெப்பை மஹ்ழரி ஹஜ்ரத் அவர்கள்,புதிய பொலிவுடன் ராத்திபத்துல் ஜலாலிய்யா கிதாபு & டிவிடியின் அறிமுகவுரை வழங்கினார்கள்.

தஞ்சை-விளார் பைபாஸ்,கிரீன் சிட்டி அல் குர்ஆன் ராஹத் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா ஜூலை 20 ஆம் தேதி நடைபெற்றது.தஞ்சை-ஆற்றங்கரை ஜும்ஆப் பள்ளி தலைமை இமாம்,மௌலானா எம்.சைய்யது அஹ்மது மிஸ்பாஹி ஹஜ்ரத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.தாய்ச் சபைத்தலைவர்,பேராசிரியர்  கே.எம்.காதிர் முஹைதீன் அவர்கள் விழா நிறைவுரையாற்றினார்கள்.அய்யம் பேட்டை சுபுலுஸ் ஸலாம் அரபுக் கல்லூரியின் முதல்வர்,மௌலானா மௌலவி பி.எம்.ஜியாவுத்தீன் பாக்கவி ஹஜ்ரத் அவர்கள் சிறப்புப்பேருரையாற்றினார்கள்.

வெளியீடு--மன்பஈ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

0 comments:

Post a Comment