மலேசியத் திருநாட்டில் பெருமானாரின் மீலாதுப் பெருவிழா மற்றும் வலிகள் கோமான் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் நினைவு விழா,புத்ரா ஜெயா, மஸ்ஜிது மிஜான் ஜைனல் ஆபிதீனில், ஹிஜ்ரி 1434 ஜமாத்துல் அவ்வல் பிறை 4,மார்ச் 16 ஆம் தேதி சனிக்கிழமை, மிகச்சிறப்பாக நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.இந்நிகழ்ச்சி மாலை அஸர் தொழுகைக்குப்பின் துவங்கியது.4-45 மணிக்கு மார்க்க மேதைகளான பேச்சாளர்களும்,பொதுமக்களும்,விசேச அழைப்பாளர்களும்,ஒன்று கூடினார்கள்.5.00 மணிக்கு, பங்களா தேசைச் சேர்ந்த காரீ,ஷைஹ் அஹ்மது பின் யூசுஃப் அல் --அஜ்ஹரி அவர்கள் திருமறை ஓதி, ஆன்மீக மாநாட்டை துவக்கி வைத்தார்கள்.இந்த ஆன்மீக மாநாட்டினை,மலேசிய அரசாங்கமும், அமானா -- அல் வாரிஸீன் என்ற அமைப்பும், மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.
5-10 மணிக்கு அமானா -- அல் வாரிஸீனின் தலைவர்,மரியாதைக்குரிய,ஷைஹ் மௌலானா அஃபீஃபுதீன் அல் ஜைலானி அவர்கள், துஆ ஓதி ஆரம்பித்து வைத்தார்கள். 5-15 மணிக்கு யாயாஸான் அல் --ஜென்டேரமி,மலேசியாவின் ஆலோசகர்,மரியாதைக்குரிய,ஷைஹ் முஹம்மது ஹஃபீஜ் பின் ஹாஜி ஸலாமத் அவர்கள் சிறப்புறையாற்றினார்கள். 5-25 மணிக்கு, மஸ்ஜித் மைதீன் சிங்கப்பூரைச் சேர்ந்த மரியாதைக்குரிய, ஸுஃப்யான் பின் முஹம்மது யாதி அவர்கள்,கஸீதா பாடினார்கள். 5-35 மணிக்கு.ஆஸ்திரேலியாவின் பெரிய முஃப்தி,மரியாதைக்குரிய,பேராசிரியர்,டாக்டர்,இப்ராஹீம் ஸலீம் அவர்கள் ஆங்கில மொழியில் உரை நிகழ்த்த,மரியாதைக்குரிய,ஹபீப் அஹ்மது பின் யூனுஸ் அல் -- மஹ்தர் அவர்கள், மலாய் மொழியில் மொழிபெயர்ப்பு செய்தார்கள்.
6-00 மணிக்கு இந்தோனேசியாவைச் சேர்ந்த, மரியாதைக்குரிய,ஷைஹ் ஹபீப் முஹம்மது ரிஜீக் சிஹாப் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.6-10 மணிக்கு மிஸ்ரு நாட்டைச் சேர்ந்த,மரியாதைக்குரிய,காரீ ஷைஹ் ரில்வான் ஜுமா அல் --அஜ்ஹரி அவர்கள்,கஸீதா பாடினார்கள்.6-30 மணிக்கு,இராக் நாட்டின் பெரிய முஃப்தி,மரியாதைக்குரிய, ஷைஹ்,டாக்டர் ரஃபீ அல் -- அனி அவர்கள்,அரபியில் உரை நிகழ்த்த,மரியாதைக்குரிய,உஸ்தாத் நஜ்முதீன் அல் --கீரிட் அவர்கள்,.மலாய் மொழியில் மொழிபெயர்ப்பு செய்தார்கள்.
7-00 மணிக்கு, அமெரிக்காவைச் சேர்ந்த,ஷைஹ் அஹ்மது திஜானி பின் உமர் அவர்கள், கஸீதா பாடினார்கள்.
7-15 மணிக்கு, அமெரிக்காவைச் சேர்ந்த,மரியாதைக்குரிய, உஸ்தாத் உஸாமா கேனான் அவர்கள்,சிறப்புரையாற்றினார்கள், 7-27 மணிக்கு மஃரிப் தொழுகை நடைபெற்றது.7-45 மணிக்கு,யுனைடெட் கிங்டோமைச் சேர்ந்த,மரியாதைக்குரிய, ஷைஹ் அப்துல் அஜீஸ் ஃப்ரிடெரிக்ஸ் அவர்கள்,சிறப்புரையாற்றினார்கள். 8-00 மணிக்கு,மஸ்ஜித் பா அலாவியின் பெரிய இமாம்,சிங்கப்பூரைச் சேர்ந்த,மரியாதைக்குரிய,ஹபீப் ஹஸன் பின் முஹம்மது ஸலீம் அல் -- அத்தாஸ் அவர்கள்,மௌலிது பைத்துகளைப் பாடினார்கள். 8-35 மணிக்கு இஷாத் தொழுகை நடைபெற்றது. 8-40 மணிக்கு,மக்காவைச் சேர்ந்த உலமா,மரியாதைக்குரிய,
ஷைஹ் உமர் பின் ஹாமிது அல் -- ஜைலானி அவர்கள்,அரபியில் உரை நிகழ்த்த,மரியாதைக்குரிய,உஸ்தாத் ஹபீப் அலி ஜைனல் ஆபிதீன் அவர்கள், மலாய் மொழியில் மொழிபெயர்ப்பு செய்தார்கள்.
ஷைஹ் உமர் பின் ஹாமிது அல் -- ஜைலானி அவர்கள்,அரபியில் உரை நிகழ்த்த,மரியாதைக்குரிய,உஸ்தாத் ஹபீப் அலி ஜைனல் ஆபிதீன் அவர்கள், மலாய் மொழியில் மொழிபெயர்ப்பு செய்தார்கள்.
இந்த சிறப்பு வாய்ந்த ஆன்மீக மாநாட்டிற்கு,சிறப்பு அழைப்பாளர்கள்,உலக முழுவதிலிருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.இந்தியாவிலிருந்து,சிறப்பு அழைப்பாளராக,கேரள மாநிலம்,காந்தபுரம்,கமருல் உலமா,அல்லாமா A.P.அபூபக்கர் முஸ்லியார் பாக்கவி ஹஜ்ரத் கிப்லா அவர்கள் கலந்துகொண்டார்கள். 9-10 மணிக்கு, அமானா -- அல் வாரிஸீனின் தலைவர்,மரியாதைக்குரிய,ஷைஹ் மௌலானா அஃபீஃபுதீன் அல் ஜைலானி அவர்கள், நன்றியுரை மற்றும் துஆ ஓதி,சிறப்பு வாய்ந்த இந்த ஆன்மீக மாநாட்டினை
நிறைவு செய்து வைத்தார்கள்.சிறப்பு வாய்ந்த இந்த
ஆன்மீக மாநாட்டில் பல்லாயிரக் கணக்கானோர் கலந்து கொண்டு,அல்லாஹ்வின்,அளப்பெரும்,அன்பையும்,அருளையும்,அடைந்து கொண்டார்கள்.வஸ்ஸலாம்.ஆமீன்....
நிறைவு செய்து வைத்தார்கள்.சிறப்பு வாய்ந்த இந்த
ஆன்மீக மாநாட்டில் பல்லாயிரக் கணக்கானோர் கலந்து கொண்டு,அல்லாஹ்வின்,அளப்பெரும்,அன்பையும்,அருளையும்,அடைந்து கொண்டார்கள்.வஸ்ஸலாம்.ஆமீன்....
வெளியீடு
மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.
0 comments:
Post a Comment