Saturday, December 28, 2013

சேலம் மழாஹிருல் உலூம் அரபு கல்லூரி முன்னாள் பேராசிரியர் சித்தயன் கோட்டை,மௌலானா மௌலவி அல்ஹாஜ் N.ஷாஹுல் ஹமீத் பாகவி ஹழ்ரத் அவர்கள் மறைவு !!!





பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

சேலம் மழாஹிருல் உலூம் அரபு  கல்லூரி முன்னாள் பேராசிரியர் சித்தயன் கோட்டை,மௌலானா மௌலவி அல்ஹாஜ் N.ஷாஹுல் ஹமீத் ஹழ்ரத் பாகவி என்ற சீனிஹஜ்ரத் அவர்கள் திண்டுக்கல்லில் 23-12-2013  மாலை தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். 

அன்னாரின் ஜனாஸா தொழுகை ,24-12-2013 செவ்வாய்க்கிழமை லுஹர் தொழுகைக்குப்பின் திண்டுக்கல் N.G.O.காலணி ஹவ்வா மஸ்ஜித் கபரஸ்தானில் நடைபெற்றது.

  10 நாட்களுக்கு முன்புவரை இவர்களை எனக்கு அறிமுகமில்லை. 18-12-13 புதன்கிழமை அன்று P.S.P ஹழ்ரத் அவர்களின் வகுப்பு என் பள்ளியில் நடப்பது அறிந்து என் பள்ளிக்கு வந்தார்கள். ஹழ்ரத் அவர்களின் வகுப்பில் 2 மணி நேரம் முழுமையாக ஒரு மாணவனைப்போல் அமர்ந்திருந்தார்கள். 
வகுப்பு முடிந்து அனைவரும் சென்றுவிட்ட பின்னரும்,ஹழ்ரத் அவர்களின் கட்டிலில் படுத்திருந்து 1:30 மணிக்கு லுஹர் தொழுத பின்னரே சென்றார்கள். அப்போதுதான் தான் சேலம் மழாஹிருல் உலூமில் 40 வருடங்கள் பேராசிரியராக பணியாற்றியதை சொன்னார்கள். பிறகு பாக்கியாத்தின் விழாவுக்கு வெள்ளிக்கிழமையே வந்துவிட்டார்கள். 

30 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரிந்த பாகவிகள் சிறப்பிக்கப்பட்டதில் இவர்களும் ஒருவர். தான் புறப்படும் முன் மேடை ஏறி எல்லோரிடமும் சொல்லிவிட்டு படிகளில் நின்றபடியே அப்துல் ஹமீது ஹழ்ரத் அவர்களை கட்டியணைத்து அழுது விடை பெற்றார்கள். வீடு சேரும் முன்னரே வஃபாத்தாகி விட்டார்கள். 5நாட்களுக்குள் பழகி மிக விரைவில் அவர்களை இழந்தது மனதுக்கு அதிக வேதனையைத் தருகிறது என்று ஹஜ்ரத் அவர்களைப்பற்றி சென்னை மௌளானா மௌலவி ஃபக்ருத்தீன் பாக்கவி இவ்வாறு கூறினார்கள்.

எல்லாம் வல்ல அல்லாஹ் ஹழ்ரத் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, அப்பழுக்கற்ற மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜ‌ன்ன‌த்துல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மாணவர்கள், ஆலிம் பெருமக்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும்   சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினர்   பிரார்த்தனை செய்கிறார்கள். ஆமீன்!


உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் அன்னாரின் ஹக்கில் துஆ செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். வஸ்ஸலாம்...

நன்றி ;- சென்னை மௌளானா மௌலவி ஃபக்ருத்தீன் பாக்கவி

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
                                                                                                                                                           சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

0 comments:

Post a Comment