பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
எம்பெருமானார் நபிகள் நாயகத்தின்ﷺ அவர்களின் பரம்பரையில் வந்தவரும் சமஸ்த கேரளா ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவரும் ஆன்மீக குருவும் ஆன கண்ணியத்திற்குரிய தாஜுல் உலமா அஸ் செய்யத் அப்துர்ரஹ்மான் அல் புஹாரி தங்கள் (உள்ளால் தங்கள்) அவர்கள் நேற்று மதியம் வஃபாத் ஆகிவிட்டார்கள் அன்னாரது ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று காலை கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் வைத்து நடைபெறவுள்ளது அனைவரும் கலந்து துஆச் செய்யுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.
அறிஞரின் மறைவு அகிலத்தின் மறைவு என்னும்
பழமொழிதான் இங்கே நினைவுக்கு வருகிறது.
எல்லாம் வல்ல அல்லாஹ் ஹழ்ரத் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, அப்பழுக்கற்ற மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜன்னதுல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மாணவர்கள், ஆலிம் பெருமக்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினர் பிரார்த்தனை செய்கிறார்கள். ஆமீன்!
உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் அன்னாரின் ஹக்கில் துஆ செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். வஸ்ஸலாம்...
வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.
0 comments:
Post a Comment